Friday, 28 November 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


Posted: 28 Nov 2014 06:05 AM PST


இன்றைய உண்மைகள்.. ------------------------------------------------- 1. பக்கத்துக...

Posted: 28 Nov 2014 04:14 AM PST

இன்றைய உண்மைகள்..
-------------------------------------------------
1. பக்கத்துக்கு வீட்டில்
இருப்பவரிடம் முகம்
கொடுத்து பேசுவதில்லை.
பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ
வாய்ப்பு இருக்கா என்ற
ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய
கடிகாரம். அதில்
மணி பார்ப்பதற்கு கூட நேரம்
இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய
பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும்
வளர்ச்சி. நோயாளிகள்
எண்ணிக்கை நாளுக்கு நாள்
அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய.
பொது அறிவும் உலக அறிவும்
மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய்
நிறையச் சிரிப்பில்லை.
மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான
அறிவாளித் தனமான விவாதங்கள்
அதிகம். உணர்வுப் பூர்வமான
உரையாடல்களும், சின்ன சின்ன
பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு.
குடிதண்ணீர் குறைவாய் தான்
இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட
முகநூல் நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள்
எல்லா இடங்களிலும்
நிறைந்து இருக்கின்றனர்.
மனிதம் ஆங்காங்கே சில
இடங்களில் மட்டும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment