Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- பசுமை நிறைந்த பாதை... பிடித்தவர்கள் லைக் பண்ணணுங்க... (y)
- அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று....!! குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு......
- பொது இடங்களில் மறைந்திருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி? - தெரிந்துகொள்வோம்...
- தேன் கூட்டில் இனிப்பது தேனல்ல "உழைப்பு" கூட்டைப் பிளந்து வெளியே வருவது குஞ்சுகளல...
- அப்பா: "என்ன புக் படிக்கிறாய்"?. குழந்தை: "குழந்தை வளர்ப்பது எப்படி என்ற புத்தக...
- நம்பிக்கைதான் வாழ்க்கை !!
- :) Relaxplzz
- :) Relaxplzz
- :P :P
- நாம் முன்னேறாமல் இருக்க காரணம் நம்ம நாட்டுக்காரர் ஒருவன் ஜப்பானுக்கு சுற்றுலா ச...
- கணவரின் மருத்துவ செலவுக்காக மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து வெற்றி பெற்ற 61 வய...
- மீன் குஞ்சுகளை தன் வாயில் வைத்திருக்கும் தாய் மீன் .. பிடித்தவர்கள் லைக் பண்ணணு...
- நாம்பளும்தான் பஸ்ஸிலே போறோம்... இப்படி ஒரு ஐடியா வந்ததா ;-) ;-)
- :) Relaxplzz
- :) Relaxplzz
- <3 காதல் துளிகள் <3 சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப...
- ஒரு குட்டிப்பொண்ணு தாத்தாவோட பேசிட்டு நடந்து போச்சாம். அவரோட கை சுருக்கங்களைப் ப...
- இரை தேடி பறந்த பறவைகள் இப்போது இடம் தேடியும் பறக்கவேண்டியிருக்கிறது..
- (y) Relaxplzz
- அப்பா <3
- நான் உங்களுக்கு 5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன்,வெரி ஸ்வீட் கேர்ள்ஸ். ஜாலியா...
- என் நண்பன் அவள்..!!! யார் கண்ணிலும் படாமல் பாதுகாத்த சாவிக்கொத்தொன்று அம்மா கை...
- பள்ளிக்காலங்களில் இந்த அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- புரிந்தவர்கள் லைக் செய்யலாம் (y)
- :) Relaxplzz
- அடப்பாவீங்களா, யாரு பாத்த வேலைடா இது.... :O :O
- உப்பும் ,,,,,தேனும் ,,,,,நோயும் .......... நாம் தினமும் பயன் படுத்தும் உப்பை பற...
- ஏதோ தப்பு நடந்துட்டுது ;-) ;-)
- சிறிய உதவி செய்தாலும், பெறுபவர் முகத்தில் தோன்றும் நன்றியுணர்வும், புன்னகையும் க...
Posted: 29 Nov 2014 09:30 AM PST |
Posted: 29 Nov 2014 09:20 AM PST |
Posted: 29 Nov 2014 09:10 AM PST அப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று....!! குழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு... குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை. - சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்) சிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம். குழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம். எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் மீனாட்சி. அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும். எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமை யுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக் கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும். அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்). அப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக் கிறது. தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது. அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும். படிப்பு, விளை யாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். எது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான் - தீர்க்கமாகச் சொல்கிறார் மீனாட்சி... Relaxplzz |
Posted: 29 Nov 2014 09:00 AM PST பொது இடங்களில் மறைந்திருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி? - தெரிந்துகொள்வோம் கேமரா தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அதன் பயன்பாடு அனைவரையும் கவர்ந்ததோடு, அதன் தேவையும் அதிகரித்து. தற்போது இருக்கும் விஞ்ஞான உலகில் கேமராக்களில் பல முன்னேற்றங்களை நாம் கடந்து வந்து விட்டோம். ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் இருந்து தற்போது கடுகளவு வரை கேமராக்களின் அளவு குறைந்துவிட்ட நிலையில் அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரிக்கின்றது. மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று பார்க்கலாம். • தேடுதல் முதலில் உங்க இருப்பிடத்தில் இருக்கும் வினோதமான பொருட்களை கூர்ந்து கவனிக்கவும். சில கேமராக்கள் செயல்படும் போது குறைந்த அளவு சத்தம் கொடுக்கும். இருள் அறையில் இருக்கும் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விளக்குகள் இருக்கும், இதன் மூலம் கேமராக்களை கண்டறிவது சுலபமாகிறது. • டார்ச் லைட் மூலம் அறையில் இருக்கும் கண்ணாடிகளில் பார்க்கவும். பின்ஹோல் கேமரா பின்ஹோல் கேமராக்களில் சிசிடி இருக்கும், அதனால் டைர்ச் லைட் கொண்டு தேடும் போது எங்காவது வெளிச்சம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கும். • RF சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற்சி செய்யலாம் • செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டிறிய உங்க செல்போனையும் பயன்படுத்தலாம். உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், க்ளிக் சத்தம் உங்களுக்கு கேட்டால் அங்கு கேமரா இருப்பதாக அர்த்தம். • ஓட்டை உங்க அறையில் இருக்கும் சிறிய ஓட்டைகளை நன்கு ஆராய்ந்து பார்க்கலாம். • சில சமயங்களில் பெரிய கட்டிடங்களிலும் கேமராக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம். • டிடெக்டர் இணையங்களில் கிடைக்கும் வயர்லெஸ் கேமரா டிடெக்டர்களை பயன்படுத்தலாம், இதுவும் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களை கண்டிறியும். Relaxplzz ![]() |
Posted: 29 Nov 2014 08:50 AM PST |
Posted: 29 Nov 2014 08:45 AM PST அப்பா: "என்ன புக் படிக்கிறாய்"?. குழந்தை: "குழந்தை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன்".. அப்பா: "அதை ஏன் நீ படிக்கிறாய்".? குழந்தை: "நீங்கள் ஒழுங்காக என்னை வளர்க்கிறீர்களான்னு செக் பண்ணுகிறேன்"... .!!! ;-) ;-) |
Posted: 29 Nov 2014 08:40 AM PST |
Posted: 29 Nov 2014 08:30 AM PST |
Posted: 29 Nov 2014 08:30 AM PST |
Posted: 29 Nov 2014 08:20 AM PST |
Posted: 29 Nov 2014 08:10 AM PST நாம் முன்னேறாமல் இருக்க காரணம் நம்ம நாட்டுக்காரர் ஒருவன் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றார். அப்போது, ஒரு ரெயிலில் பயணத்தின் போது பழக்க தோஷத்தில் எதிரே உள்ள சீட்டின் மீது கால் போட்டு சொகுசாக அமர்ந்த படி பயணம் செய்தார். இதை கண்ட ஒரு ஜப்பானியர் அவர் சீட்டை விட்டு எழுந்து வந்து, நம்ம ஆளின் காலை சீட்டிலிருந்து எடுத்து தன் மடி மேல் வைத்து கொண்டார். நம்ம ஆளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உடனே நம்ம ஆள், ஏன் இப்படி செய்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ஜப்பானியர் சொன்னார், "நீங்கள் எங்கள் நாட்டின் சொத்தை அவமதிப்பது போல் கோவமாக இருந்தது. இருந்தாலும் நீங்கள் எங்கள் நாட்டின் விருந்தினர். அதனால் உங்கள் செளகரியத்துக்காக என் மடிமேல் வைத்துக்கொண்டேன்" என்று சொன்னார். நம்ம ஆள் கூனிக்குறுகி அவரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். அதற்கு அந்த ஜப்பானியர், இங்கு மட்டுமல்ல உங்கள் நாட்டிற்கு சென்றாலும் பொது சொத்துக்களை சேதப்படுத்தவோ அல்லது அடுத்தவருக்கு இடையூறு கொடுக்காமலும் நடந்து கொள்ளும்படி சிரித்த முகத்துடன் அறிவுறுத்தினார். இப்ப சொல்லுங்க நாம் ஏன் முன்னேற முடியவில்லை...?? Relaxplzz |
Posted: 29 Nov 2014 08:00 AM PST கணவரின் மருத்துவ செலவுக்காக மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்து வெற்றி பெற்ற 61 வயது பாட்டி...! என் கணவருக்கு, இருதய கோளாறு. மகாராஷ்டிர மாநிலம், பிம்ப்லி என்ற இடத்தில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி இல்லாததால், தனியார் மருத்துவமனையில் தான், ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கு, 5,000 ரூபாய் கட்டணம் தேவைப்பட்டது. விவசாய கூலி வேலை மூலம், தினம், 100 ரூபாய் சம்பாதிக்கும் என்னிடம், என் கணவரின் சிகிச்சைக்கு பணம் இல்லை. அப்போது தான், மராத்தான் போட்டி பற்றி அறிந்தேன். வேகமாகக் கூட நடந்ததில்லை நான். கணவருக்காக, பந்தயத்தில் ஓடி, பரிசை வெல்ல தீர்மானித்தேன். காலில் செருப்பு கிடையாது; 9 முழ சேலையை வரிந்து கட்டி, பந்தயத்தில் ஓடி, வெற்றி பெற்றேன். கணவரை காப்பாற்ற, இதற்கு மேல், எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். - மராத்தான் போட்டியில் வென்ற 61 வயதான லதா பேக்வான் Relaxplzz ![]() |
Posted: 29 Nov 2014 07:50 AM PST |
Posted: 29 Nov 2014 07:40 AM PST |
Posted: 29 Nov 2014 07:30 AM PST |
Posted: 29 Nov 2014 07:20 AM PST |
Posted: 29 Nov 2014 07:10 AM PST ♥ காதல் துளிகள் ♥ சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன், ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..? ♥ ♥ ♥ அவள் துணி காய போட வருவதை பார்த்து கொடியை சற்று உயர்த்திக் கட்டிவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தேன்... #துணிகளை என்னிடம் கொடுத்துவிட்டு புன்னகையோடு நகர்ந்தாள்..! ♥ ♥ ♥ சொட்டும் நீர் உறிஞ்சா பாலிஸ்டர் துணி ,இருந்தும் அதில் தலை துவட்டவே ஆசை... #அவளின் முந்தானை.! ♥ ♥ ♥ உன் சட்டையை அணிந்து கொள்ளட்டுமா என்றாள் , அந்த சட்டைக்குள் நானும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு சம்மதித்தேன்.!!! ♥ ♥ ♥ கோபத்தில் அவளைத் திட்டியதற்காய் ஒரு முத்தமிட்டு மன்னிப்புக் கேட்டேன், அன்று முதல் என்னைக் கோபப்படுத்துவதையே வேலையாய் கொண்டிருக்கிறாள்..!!! ♥ < 3♥ காதுகள் கூட சுவை உணருமா??... choo sweet என்று அவள் சொன்னது, காதின் வழிச்சென்று ரத்தத்தில் சர்க்கரையை ஏற்றுகிறது.! ♥ ♥ ♥ அவள் செய்யும் வேளைகளில், அவளுக்கு நான் ஏதாவது உதவி செய்ய நினைத்தால் அந்த வேலையை சப்தமாகச் சொல்வாள்.. #இப்படித்தான் இப்பொது குளிக்கப்போறேன் என்று கத்தினாள் !!! ♥ ♥ ♥ அதிகம் பேசிவிட்ட களைப்பில் ஓய்வெடுக்கிறது அவளின் விழிகள்... #உறக்கம் ! ♥ ♥ ♥ கணவன் மனைவி உறவின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவித்து வாழுங்கள்.. அன்பு பெருகும்.. ♥ ♥ ♥ - Kali Muthu. Relaxplzz |
Posted: 29 Nov 2014 07:00 AM PST ஒரு குட்டிப்பொண்ணு தாத்தாவோட பேசிட்டு நடந்து போச்சாம். அவரோட கை சுருக்கங்களைப் பார்த்துட்டு.. "தாத்தா உங்க தோல கடவுள் தான் செய்தாரா?" அப்டின்னுச்சு. "ஆமா" தன்னோட கைய தொட்டு பாத்துட்டு "என்னுதையுமா?" அப்டின்னுச்சு. "ஆமான்டா, ஆனா என்னுத ரொம்ப நாள் முன்னாடி செஞ்சாரு உன்னுத இப்ப தான் செஞ்சாரு" அது பொறுமையா சொன்னது.. "இப்பல்லாம் கடவுள் நல்லா வேல செய்ய கத்துக்கிட்டாரு இல்ல?" # ஓப்பீடு :) :) # குழந்தைகளின் மனது நமக்கு இருப்பின் என்றும் ஆனந்தமே... Relaxplzz ![]() |
Posted: 29 Nov 2014 06:50 AM PST |
Posted: 29 Nov 2014 06:30 AM PST |
அப்பா <3 Posted: 29 Nov 2014 06:20 AM PST |
Posted: 29 Nov 2014 06:10 AM PST நான் உங்களுக்கு 5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன்,வெரி ஸ்வீட் கேர்ள்ஸ். ஜாலியா கடலை போடலாம்.எவ்வளவு நேரம் வேணாலும் அவங்களோட பேசலாம்.. . . . . . . . . . . . . ஏர்டெல் -121 ஏர்செல் – 55333 ரிலையன்ஸ் – 369 பி எஸ் என் எல் -123 வோடஃபோன் -111 இந்த மேட்டர் யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்,நமக்குள்ளயே இருக்கட்டும். பின்குறிப்பு : சத்தியமா இத நான் copy/paste தான் செஞ்ச்சேன்..... என்னைய யாரும் திட்ட வேணாம் ப்ளீஸ்... :P :P Relaxplzz |
Posted: 29 Nov 2014 06:00 AM PST என் நண்பன் அவள்..!!! யார் கண்ணிலும் படாமல் பாதுகாத்த சாவிக்கொத்தொன்று அம்மா கையில் சிக்கியதும் வெடுக்கென்றுப் பிடுங்கினேன் நண்பன் கொடுத்த பரிசென்று. பிறந்த நாள் அர்ச்சனைக்காக கோவிலில் காத்திருக்கும்போது "தம்பியைக் காலையில் கோவிலில் பார்த்தேனே" என்று பூக்காரக்கா கூறும்போது சாமர்த்தியமாக சமாளித்தேன் காலையில் நண்பனுடன் ஒருமுறை வந்தேனென்று. . வீட்டில் அனைவரும் படம் பார்க்கும்போது முக்கியமான காட்சியில் என்ன நடக்கும் என்று ஆர்வத்தில் கூற மற்றவர்கள் எப்படித் தெரியுமென்று கேட்கும்போது யோசிக்காமல் சொன்னேன் முன்பே நண்பனுடன் பார்தேனென்று. வெளியூர் சென்றபோது நல்ல ஹோட்டல் எங்கு என்று தேட எனக்குதெரியும் என்று சரவணபவன் கூட்டிச்சென்றபோது எப்படி என்று அவர்கள் கேட்கும் முன் நானே முந்திக்கொண்டேன் முன்பிருமுறை நண்பனுடன் வந்திருக்கிறேனென்று. ஜாதகம் பார்த்துவிட்டு அப்பா ஒரு படத்தைக் காட்டி இந்த பெண் தான் உனக்குப் பார்த்திருக்கிறோம் என்று கூறியபோது மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று முதல் உண்மையைக் கூறினேன் இவ்வளவு நாள் எனக்கு நண்பனாக இருந்த பெண் இவள்தானென்று. - Elambarithi Kalyanakumar. Relaxplzz ![]() |
Posted: 29 Nov 2014 05:50 AM PST |
Posted: 29 Nov 2014 05:40 AM PST |
Posted: 29 Nov 2014 05:30 AM PST |
Posted: 29 Nov 2014 05:20 AM PST |
Posted: 29 Nov 2014 05:10 AM PST உப்பும் ,,,,,தேனும் ,,,,,நோயும் .......... நாம் தினமும் பயன் படுத்தும் உப்பை பற்றி தகவல் தான் இந்த பதிப்பு .. உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் . உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும் நமக்கு தெரிந்த விவரம் ... உப்பின் தன்மை என்ன ? சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ? இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு... உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள் இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் .. ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் . உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் . சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உன்ன பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் ... தேன்.... தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ? தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் . ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் . இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள் .. மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ 1.மாதம் 2 முறையாவது 3 வேலையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் . 2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் . தேன் சர்க்கரை நோய்களை தூண்டது . 3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும் நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது . உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் ) இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணபடுத்த உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy ) இனிப்பை வைத்து வைத்யும் செய்வது homeopathi . உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது. நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது கருவாடு ,உறுகாய்,போண்டரைவைகள் உதாரணம் ... நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே . தேவ அமிர்தம் என்பது தேன் ... தேன் தேவகுணம் உடையது உப்பு அசுரகுணம் உடையது தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும் உப்பு புலோகத்தில் இருக்க வைக்கும் .. இவைகள் உடல் சார்ந்த விவரம் .... அகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம் ... நன்றி. - Raja Govindaraj Relaxplzz |
Posted: 29 Nov 2014 04:50 AM PST |
Posted: 29 Nov 2014 04:40 AM PST சிறிய உதவி செய்தாலும், பெறுபவர் முகத்தில் தோன்றும் நன்றியுணர்வும், புன்னகையும் கோடிகளுக்கு ஈடாகாது. # நாமும் அனுபவித்து உணரலாமே # - ஜானு @ Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment