"மாவீரர்களை போற்றுவோம்"
உலகிலேயே மிக அதிகம் சாலைவிபத்துகள் நடக்கும் நாடு இந்தியா; இந்தியாவிலேயே மிக அதிக சாலைவிபத்துகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. சாலைவிபத்துகளுக்கு ஒரு முக்கிய காரணம் சட்டவிதி மீறல். லஞ்சம், ஊழல், நிருவாகச் சீர்க்கேடு எனக்கேவலப்பட்டு நிற்கும் தமிழ்நாட்டில் விதிமீறல்கள் சர்வ சாதாரணம்.
ஆனால், தமிழ்நாட்டுக்கு மிக அருகிலேயே "தமிழீழம்" என்கிற ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டில் 'லஞ்சம், ஊழல், நிருவாகச் சீர்க்கேடு' என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் ஓர் உன்னதமான அரசு இயங்கியது. இராணுவம், காவல்துறை, மருத்துவமனை, வங்கி, பள்ளிக்கூடம், கல்லூரி என எல்லாமும் மிகச்சிறப்பாக இயங்கிய ஒரு எடுத்துக்காட்டு நல்லாட்சி அரசு அங்கு நடந்தது.
தமிழீழத்தில் சாலை விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு 13 விதமான குற்றங்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதில் முதலாவதும், மிகப்பெரிதுமான தண்டனை 'மதுக்குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்துக்கு' அளிக்கப்பட்டது. தமிழீழத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அளிக்கப்பட தண்டனைப் பட்டியலை படத்தில் காண்க:
-----------------------------------------------------------------------------------
"எது தர்மம்?"
"மாவலி ஒரு மிகச்சிறந்த மன்னன். மக்களை நேசித்தவன். மாவலியின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம். அப்போது சண்டை இல்லை, சச்சரவுகள் இல்லை, ஏமாற்று வேலைகள் இல்லை, திருட்டு இல்லை. மக்கள் தங்களின் எல்லா தேவைகளையும் பெற்றனர். மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். மாவலி மன்னன் ஒரு மிகச்சிறந்த நீதிமானாக ஆட்சி செய்தான்.
நல்லாட்சியைப் பார்த்து தேவர்கள் அஞ்சினர். "இந்த அசுரனை அழிக்க ஏதாவது செய்" என்று விஷ்ணுவிடம் வேண்டினர். அவரும் வாமணன் எனும் குள்ள பார்ப்பனனாக அவதாரமெடுத்து வாமனனை அழித்தார். "வாமன அவதாரம் என்பது விஷ்ணு நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும்" என்று பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஆனால், "மாவலி மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழ ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மாவலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக" கேரள மக்கள் நம்புகிறார்கள். அதனை ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------
"யார் பயங்கரவாதி?"
உலகில் நீதிக்கும் நியாயத்துக்கும் எதிராக அரசு நடத்திவரும் நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, நல்லாட்சி நடந்த "தமிழீழத்தை" அழித்தனர். அதனை பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என பொய்யுறைத்தார்கள்.
மாவலி மன்னன் உலகுக்கெல்லாம் அசுரன் என்றாலும், கேரள மக்களுக்கு அவனே கதாநாயகன்.
உலகமே ஒன்று சேர்ந்து குற்றம் சாட்டினாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர்கள். மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழினத்தின் ஒரே தேசியத் தலைவர்.
-----------------------------------------------------------------------------------
"விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு". -
- களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும் - என்கிற திருக்குறள் வழியில் கடைசி நொடிவரை எதிர்த்து நின்று போரிட்டு, தமிழின உரிமைக்காக வீரமரணம் எய்திய மாவீரர்களை நினைவு கூறுவோம்.
@அருள் ரத்தினம்






0 comments:
Post a Comment