Therinthu Kolvom: Tamil Facebook Wall posts |
- அப்பா: "என்ன புக் படிக்கிறாய்"?. குழந்தை: "குழந்தை வளர்ப்பது எப்படி என்ற புத்தக...
- இருளர் இன மக்களின் துயரம் குறித்து தி ஹிந்து நாளேட்டின் உப இணைப்புகளில் இடம்பெற்...
- 10 ரூபாய்க்கு மருத்துவம்: ஆச்சர்யமூட்டும் மருத்துவர் ராமசாமி! '10 ரூபாய்க்கு என...
- பறவைக் காய்ச்சல் நோய் தீவிரம் எதிரொலி: கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டுவ...
- ஜப்பானியர்களிடம் நாம கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்..! 1. ஜப்பானில் மாணவர்கள் தங்...
- ஆண் அழத் தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன். அன்பில்லாதவன் அல்ல. அன்...
- மிக அவசரம் ! மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நித்ய ஸ்ர...
- பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
- தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
- எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?
- உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி.......... பாகிஸ்தான் அதிரடி...
- மழை இவ்வாறு தான் காட்சியளிக்கும் - விமானத்திலிருந்து... This is how Rainfall lo...
Posted: 27 Nov 2014 09:37 AM PST |
Posted: 27 Nov 2014 06:57 AM PST அப்பா: "என்ன புக் படிக்கிறாய்"?. குழந்தை: "குழந்தை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன்".. அப்பா: "அதை ஏன் நீ படிக்கிறாய்".? குழந்தை: "நீங்கள் ஒழுங்காக என்னை வளர்க்கிறீர்களான்னு செக் பண்ணுகிறேன்"... .!!! |
Posted: 27 Nov 2014 06:18 AM PST இருளர் இன மக்களின் துயரம் குறித்து தி ஹிந்து நாளேட்டின் உப இணைப்புகளில் இடம்பெற்ற கட்டுரை. கட்டுரையை படிக்க: http://tamil.thehindu.com/%E0%AE%89%E0%E2%80%A6/article6625681.ece ![]() |
Posted: 27 Nov 2014 05:34 AM PST 10 ரூபாய்க்கு மருத்துவம்: ஆச்சர்யமூட்டும் மருத்துவர் ராமசாமி! '10 ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?' ஒரு சோப், ஒரு கிலோ காய்கறி வாங்குவது கூட இன்று சாத்தியமில்லை. ஆனால், தென்காசி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 10 ரூபாயில் தரமான மருத்துவ உதவியே கிடைத்து விடுகிறது. 5 நிமிடம் பார்க்கவே, 500 ரூபாய் வசூலிக்கும் மருத்துவர்களிடையே, சேவை மனப்பான்மையோடு, அனைத்து நோயாளிகளுக்கும் மனம் கோணாமல் சிகிச்சை அளிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ராமசாமி. 'இவரிடம் சென்றால், நோய் குணமாகிறது' என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், 'ராசியான மருத்துவர்'என்ற பட்டப் பெயரையும் பெற்று வருகிறார். தென்காசி, வாய்க்காப்பாலம் அருகில் உள்ள அவரது கிளினிக்குக்குச் சென்றோம். இரண்டு சிறிய அறைகள். தென்காசி அரசு மருத்துவமனையில் அவர் பணிபுரிந்த காலத்தில் இருந்து, சுமார் 32 வருடங்களாக, இதே இடத்தில்தான் மருத்துவம் பார்க்கிறார். ஒரு நாளைக்குச் சுமார் 50 முதல் 100 நோயாளிகள் வந்து கொண்டே இருக்கின்றனர். தொடர்ந்து வரும் நோயாளிகளை மிகுந்த சிரத்தையுடன் அணுகுகிறார். 'வணக்கம் டாக்டர்' என்று நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், ''என்னைத் தேடி நோயாளிகள்தான் வருவாங்க... நோய்க்கு மருத்துவம் சொல்ற டாக்டர் விகடனே... என்னைப் பார்க்க வந்திருக்கிறதை நினைச்சா ரொம்பச் சந்தோஷமா இருக்கு. ஆனா, கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணனும்... ஆரோக்கியமானவங்க... காத்திருக்கலாம். நோயாளிகளைக் காக்க வைக்கக்கூடாது இல்லையா" என்றார். காத்திருந்து அவரிடம் பேசினோம். "நான் டாக்டர் ஆவேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. விவசாயக் கல்லூரியில் சேர்ந்து, படிப்புல நிறைய மார்க் எடுத்தேன். மருத்துவப் படிப்புக்குச் சீட் கிடைச்சது. மேற்படிப்பு படிக்க ஆர்வம் இருந்ததால் படிச்சேன். பால்வினை நோய் சிறப்பு மருத்துவர் ஆனேன். பெரிய நகரங்கள் அளவுக்கு, பால்வினை நோய் பற்றி, இந்த ஊர்ல யாரும் வெளியில் சொல்றதில்லை. தெரிஞ்சு வர்றவங்க கொஞ்சம் பேர்தான். அவங்களுக்கும் பார்க்கிறேன். அதனால, எல்லாருக்குமே பொதுமருத்துவம்தான். இந்த மக்களிடம் சிகிச்சை அளிக்கிறப்ப, ஒரு பின்னடைவு ஏற்படுகிறது. அதுக்கு, மக்களோட அறியாமைதான் காரணம். தொக்கம் எடுக்கிறது, பார்வை பார்க்கிறது, குழந்தைக்குக் குளிப்பாட்டும்போது சளி எடுப்பது, இதெல்லாம் எதுவும் மாறவே இல்லை. நேற்றுகூடப் புதுசா ஒருநோயாளி வந்தார், அவருக்குத் தையல் போட முடியாத அளவுக்குப் பெரிய காயம். அந்தக் காயத்துக்குத் தையல்போடவும்கூடாது. நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்கலை. எனக்குத் தெரியாமலேயே, மருந்து கடைக்குப் போய்த் தையல் போட சொல்லிருக்கார். அவங்க முடியாதுன்னு சொல்லவும் வேற இடத்துக்குப் போயிட்டார். அதேபோல, மஞ்சள் காமாலை வந்தால் இந்தப் பகுதி மக்கள் காரையாறுக்குதான் முதல்ல போவாங்க. அப்புறம்தான் டாக்டர் கிட்டயே வருவாங்க. அறியாமை என்பது ரத்தத்துலேயே ஊறிப்போயிருக்கு. என் கிட்ட வர்ற பேஷண்டுக்கு மேற்சிகிச்சை தேவைப்பட்ட்டால், அவர்களின் பாக்கெட்டை கடிக்காத அளவுக்கு, நானே பேசி, சிறந்த டாக்டர்கிட்ட அனுப்புவேன்" என்கிறார் டாக்டர். மேலும், டாக்டர் ராமசாமி, தென்காசியில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிய போது, 40 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனச் சரியாக யூகித்து, திருநெல்வெலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார். ஊரில் பரவும் நோயை கட்டுப்படுத்துவதிலும், நோயாளியின் நோயை சரியாக யூகித்து, முறையான சிகிச்சைஅளிப்பது என ஒரு திறமையான மருத்துவராக மட்டுமில்லாமல் நோயாளியின் மனதை புரிந்து கொள்ளும் மன நல ஆலோசகராகவும் திகழ்கிறார். இந்தக் காலத்தில் 10 ரூபாய்க்கு மருத்துவம் எப்படிச் சாத்தியம்? என்று கேட்டால்... ''சாப்பாட்டுக்குகூட வழியில்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் வளர்ந்தேன். என்னைப்போல இருக்குறவங்களுக்கு உதவனும்னு நினைசேன். 10 ரூபாயே அதிகம் தான். 1, 2, 5 ரூபாய்கூட வாங்கிட்டு இருந்தேன். நான் இலவச மருத்துவம் பார்க்கவும் தயார். ஆனால், எனக்குக் கீழே வேலை பார்க்கிறவங்களையும், அப்படி இருக்கச் சொல்ல முடியாதே. கட்டட வாடகை, மின்சாரக் கட்டணம், எனக்கு உதவியா இருக்கிறவங்களுக்குச் சம்பளம்னு எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டி இருக்கறதால 10 ரூபாய் வாங்கறேன். ஒரு மருத்துவமனை கட்டி அதுல 1 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கனும், மருந்தெல்லாம் நியாயமான விலையில் கொடுக்கனும்னு ஆசை. அது முடியாத காரியங்கிறதால, என்னால முடிஞ்சதை பண்ணிட்டு இருக்கேன். நிறைய நல்ல மனிதர்களைச் சம்பாதிச்சிருக்கேன். ரொம்பத் திருப்தியா சந்தோஷமா இருக்கேன்'' என்றார். இங்குள்ள பலராலும் சொல்லப்படும் கருத்து, "இவர் எங்க குடும்ப மருத்துவர். எங்க குடும்பத்துல யாருக்கு என்ன பிரச்னைன்னு வந்தாலும் உடனே, இவர்கிட்ட தான் ஓடிவருவோம். சட்டுன்னு சரியாயிடும். எங்க தென்காசி ஊர் ஜனங்க அத்தனை பேருக்குமே டாக்டர் ராமசாமிதான் குடும்ப டாக்டர்" - மக்களின் மனதில் 67 வயது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார் டாக்டர்.ராமசாமி. -பா.சிதம்பர பிரியா (மாணவப் பத்திரிகையாளர்) படங்கள்: எல்.ராஜேந்திரன் நன்றி : விகடன் ![]() ![]() |
Posted: 27 Nov 2014 05:23 AM PST பறவைக் காய்ச்சல் நோய் தீவிரம் எதிரொலி: கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டுவர திடீர் தடை தமிழகத்தில் வியாபரம் பெரும்பாதிப்பு. |
Posted: 27 Nov 2014 04:25 AM PST ஜப்பானியர்களிடம் நாம கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்..! 1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள். 2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர். 3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார். 4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும். 5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர். 7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள். 8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை. 9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே. 10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. |
Posted: 26 Nov 2014 11:58 PM PST ஆண் அழத் தெரியாதவன் அல்ல. கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன். அன்பில்லாதவன் அல்ல. அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்கத் தெரியாதவன். வேலை தேடுபவன் அல்ல. தன் திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன். பணம் தேடுபவன் அல்ல. தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன். சிரிக்கத் தெரியாதவன் அல்ல. நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன். காதலைத் தேடுபவன் அல்ல. ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன். கரடுமுரடானவன் அல்ல. நடிக்கத் தெரியாமல் கோபத்தைக் கொட்டிவிட்டு வருந்துபவன். நல்லுள்ளம் கொண்ட அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்.......!!!! |
Posted: 26 Nov 2014 11:55 PM PST மிக அவசரம் ! மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நித்ய ஸ்ரீ என்ற கர்ப்பிணிப் பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் . . ஆகவே அவரையும் , வயிற்றில் உள்ள குழந்தையையும் காப்பாற்ற A + ve இரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது . தொடர்புக்கு 9092383434 . |
Posted: 26 Nov 2014 11:34 PM PST பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ? |
Posted: 26 Nov 2014 11:19 PM PST தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? |
Posted: 26 Nov 2014 10:57 PM PST எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்? |
Posted: 26 Nov 2014 10:06 PM PST உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி.......... பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி, எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ, அதே அளவிற்கு இளகிய மனம் படைத்தவர். ஆம், .தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல் மருத்துவமனை அமைப்ப தற்கும் மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கும் செலவு செய்துள்ளார். இதுவரை அவர் இதற்காக 17 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார். இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் இருக்கும். முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது. அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம்.. வாழ்த் துவோம்..! ![]() |
Posted: 26 Nov 2014 07:26 PM PST |
You are subscribed to email updates from அறிந்துகொள்வோம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment