Sunday, 2 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


இயற்கை வளக் கொள்ளைக்கெதிராக- மக்கள் இணையமும்.

Posted: 02 Nov 2014 09:32 PM PST

இயற்கை வளக் கொள்ளைக்கெதிராக- மக்கள் இணையமும்.


நடுவண் அரசை கலைக்க ஒரு சட்டம் வேண்டும் ! ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்...

Posted: 02 Nov 2014 09:17 PM PST

நடுவண் அரசை கலைக்க ஒரு சட்டம் வேண்டும் !

ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்தி மாநில அரசை கலைக்கலாம். இதை கருத்தில் கொண்டே பல போராட்டங்களை மாநில அரசுகள் ஒடுக்கி வருகிறது. ஆனால் அந்த சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போனதற்கு காரணம் நடுவண் அரசாக இருக்கும் போது ஏன் மாநில அரசை கலைக்க வேண்டும்? நடுவண் அரசை அல்லவா கலைக்க வேண்டும் !

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் 90 விழுக்காடு நடுவண் அரசை கண்டித்து தான் நடக்கிறது. இப்போது மீனவர்கள் தூக்கு தண்டனையை எதிர்த்து நடத்தப்பட்ட தொடர்வண்டி போராட்டம், சாலை மறியல் உட்பட பல போராட்டங்கள் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவே அமைந்துள்ளது. ஈழப் பிரச்சனை, மீனவர் படுகொலை, இந்தித் திணிப்பு, மீத்தேன் எரிவாயு, அணு உலை என எல்லா போராட்டங்களும் நடுவண் அரசை எதிர்த்தே நடைபெறுகிறது. இப்போராட்டங்கள் எல்லாம் எதிர்காலத்தில் இன்னும் வீரியம் பெறுமே தவிரே குறையப்போவதில்லை.

நடுவண் அரசு தொடர்ந்து மாநில மக்களின் உரிமைகளுக்கு எதிராகவே செயல்படும் நிலையில் நடுவண் அரசு கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையே அனைத்து தரப்பு மக்களாலும் முன்வைக்கப்பட வேண்டும். 356 சட்டப் பிரிவைப் போலவே தேசிய இன மக்களுக்கு எதிராக செயல்படும் நடுவண் அரசை கலைக்க புதிய சட்டப்பிரிவை உருவாக்க நாம் அனைவரும் கோரிக்கை வைக்க வேண்டும். அப்போது தான் தேசிய இனங்களின் உரிமைகள் காக்கப்படும். இல்லையெனில் காலம் முழுவதும் மக்கள் அடிமைகளாக போராட்டம் மட்டுமே நடத்திக் கொண்டிருக்க வேண்டிவரும். சிந்திப்போம், செயல்படுவோம்.

@இராச்குமார் பழனிசாமி

சாலையோர மரங்களை பட்டு போக செய்து கடத்தும் கும்பல்! நாமக்கல் அருகே சாலையோரம் உள்...

Posted: 02 Nov 2014 08:46 PM PST

சாலையோர மரங்களை பட்டு போக செய்து கடத்தும் கும்பல்!

நாமக்கல் அருகே சாலையோரம் உள்ள மரங்களை பட்டு போக செய்து அவற்றை சில கும்பல் கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரங்களில் ஏராளமான புளிய மரங்கள் மற்றும் பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக எண்ணிட்டு அவற்றை கணக்கில் வைத்துள்ளனர். இந்த மரங்கள் திடீரென பட்டு போகின்றன. இவற்றில் புளிய மரங்களை விட, வறட்சியை தாங்கி வளரும் பனை மரங்கள்தான் அதிக அளவில் பட்டு போகின்றன.

இந்த மரங்கள் தானாக பட்டுப்போவதில்லை. பட்டுப்போக வைத்து, அதை கடத்தும் செயலில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகிறது என தற்போது நாமக்கல் பகுதியில் புகார் எழுந்துள்ளது.

பனை மரங்களை கடத்துவதற்காக, பனை மரங்களின் உச்சியில் உள்ள குருத்தில் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் போன்றவற்றை ஊற்றி விடுகின்றனர். இதனால் மரங்களின் சருகுகள் முழுமையாக காய்ந்து விழுந்து விடுகின்றன. நாளடைவில் மரங்கள் பட்டுப் போய் விடுகின்றன. இந்த மரங்களை நெடுஞ்சாலை துறையினர் இயற்கையாகவே பட்டுப் போனதாக கருதி கணக்கில் இருந்து நீக்கி விடுகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில கும்பல், இரவு நேரங்களில் மரங்களை வெட்டி கடத்தி விடுகின்றனர்.

இயற்கையாகவே மரம் பட்டுப் போனதா அல்லது செயற்கையாக பட்டுப்போனதா என்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் அக்கறை காட்டாததே, இத்தகைய கடத்தலுக்கு காரணம் என புகார் கூறுகின்றனர் பொதுமக்கள். நெடுஞ்சாலைத் துறையினர் அக்கறை காட்டாததால் சாலையோரத்தில் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு போகவேண்டிய வருவாயை சில கும்பல் கொள்ளையடித்து வருகிறது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுபோன்று செயற்கையாக மரங்களை பட்டுப் போக செய்து மரங்களை கடத்தும் கும்பலை, அரசு உடனடியாக தடுக்க நடவடிக்கை வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

செய்தி, படங்கள்: கு.ஆனந்தராஜ், விகடன்


அழகு தமிழ்நாடு! ஆரணி!

Posted: 02 Nov 2014 06:59 PM PST

அழகு தமிழ்நாடு! ஆரணி!


#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால் - குறள் இயல்: #குடியியல் - அதிகாரம்: #பெரும...

Posted: 02 Nov 2014 05:54 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால் - குறள் இயல்: #குடியியல் - அதிகாரம்: #பெருமை

#உரை:
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும். ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்.

#Translation:
Greatness is absence of conceit; meanness, we deem,
Riding on car of vanity supreme.

#Explanation:
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.


அழகு கொடைக்கானல்!

Posted: 02 Nov 2014 09:31 AM PST

அழகு கொடைக்கானல்!


#அருண்மொழிவர்மன் - ராஜ ராஜ சோழன் தமிழ் இன குழு ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் சோழ...

Posted: 02 Nov 2014 07:27 AM PST

#அருண்மொழிவர்மன் - ராஜ ராஜ சோழன்

தமிழ் இன குழு ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் சோழ மன்னர்கள் மட்டுமல்ல அனைத்து மன்னர் வம்சமும் அனைவருக்கும் உரிமை உண்டு.

நமக்காக உருவாக்க பட்டதே நம்மால் உருவாக்க பட்டதே நமக்குள் உருவாக்க பட்டதே தலைமை.

@Nambi Arulnambi


தமிழிசையும் கர்நாடக இசையும் !! தமிழ் இசை மரபுக்கும் கர்நாடக இசை மரபுக்கும் உள்ள...

Posted: 02 Nov 2014 07:24 AM PST

தமிழிசையும் கர்நாடக இசையும் !!

தமிழ் இசை மரபுக்கும் கர்நாடக இசை மரபுக்கும் உள்ள வேறுபாடு இன்னும் பல தமிழர்களுக்கு தெரியவில்லை. இந்தியாவில் தோன்றிய எல்லா இசை மரபுக்கும் ஆதாரமாக விளங்குவது தமிழிசையே என்பதை தமிழிசை முனைவர் திரு. நல்லசிவம் அவர்கள் தெளிவாக விளக்குகிறார். தஞ்சை பல்கலையில் பேராசிரியராக பணிபுரியும் நல்லசிவம் ஏன் நாம் தமிழிசையை கைவிட்டோம், எவ்வாறு நாம் அதை மீட்டெடுக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

தமிழிசையை மீட்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். தமிழிசையை மறந்த தமிழர்கள் தங்கள் பண்பாட்டையும் மறந்து விட்டனர் என்பதை நாம் உணர்தல் வேண்டும் . புரியாத கர்நாடக இசையில் மதிமயங்கி ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே கர்நாடக இசையை கற்றுக் கொள்ளும் நிலையில் , நம் தமிழ் இசை எல்லோருக்கும் பொதுவானது , இயல்பானது , இயற்கையானது என்பதை நாம் உணர்ந்து நம் குழந்தைகளுக்கு தமிழிசையை கற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் .

பண்பாட்டு சுற்றுலா சென்ற போது நாங்கள் தமிழ்ப் பல்கலையில் மெய்யியல் துறையை சேர்ந்த திரு நல்லசிவம் அவர்களை பேட்டி கண்ட போது இந்த காணொளி படமாக்கப்பட்டது.


தமிழிசை - கர்நாடக இசை. பேராசிரியர் நல்லசிவம்

தமிழ்ச்செல்வன் அண்ணாவின் நினைவு நாள் இன்று!

Posted: 02 Nov 2014 07:19 AM PST

தமிழ்ச்செல்வன் அண்ணாவின் நினைவு நாள் இன்று!


எதிரி நாட்டின் மீது போர் எடுத்து அந்த நாட்டையே நிர்மூலமாகுவது வழக்கம். அப்படி ஒர...

Posted: 02 Nov 2014 07:14 AM PST

எதிரி நாட்டின் மீது போர் எடுத்து அந்த நாட்டையே நிர்மூலமாகுவது வழக்கம். அப்படி ஒரு சம்பவம் இராஜராஜன் காலத்திலும் நடந்தது. "வம்பு சண்டைக்கு போவதில்லை, வந்த சண்டையை விடுவதில்லை" என்பதை யார் கடைபிடித்தார்களோ இல்லையோ சோழர்கள் அதை சரியாக கடைபிடித்தார்கள். தன் நாட்டு தூதுவன் ஒருவனை சேரர்கள் சிறைப்பிடித்து வைக்கிறார்கள். அந்த தூதுவனை காப்பாற்ற சோழர்களின் படை களமிறங்குகிறது. சேர நாட்டின் மீது படை எடுத்து உதகையை (ஊட்டி அல்ல) தீ வைத்து எரித்து அந்த நகரையே நிர்மூலமாக்கி நாடு திரும்புகிறது அந்த படை. தர்மமற்ற செயலில் அவர்கள் ஈடுபட்டதால் இவர்களும் தர்மமற்ற முறையில் தாக்கினார்கள். ஆனால் அப்படி செய்தது இராஜராஜனுக்கு விருப்பமில்லை போலும். இந்த போர் வெற்றியை தன் மெய்க்கீர்த்தியில் அவர் கடைசி வரை இடம் பெறச் செய்யவேயில்லை!. இப்படி நடந்த செய்தியே பிற்காலங்களில் பாடப்பட்ட உலாக்களில் "உதகை தீ உய்த்த உரையேன்" என்ற பாடலின் மூலம் தான் தெரியவருகிறது!

@சிவபாதசேகரன்


பிற மன்னர்களின் மெய்கீர்த்திகளில் வருவது போல் எதிரியின் மூக்கை அறுத்தேன், நாக்கை...

Posted: 02 Nov 2014 07:13 AM PST

பிற மன்னர்களின் மெய்கீர்த்திகளில் வருவது போல் எதிரியின் மூக்கை அறுத்தேன், நாக்கை அறுத்தேன், சிரத்தை வெட்டினேன் என்று வன்முறைப் புகழ்பாடும் மெய்கீர்த்தியாய் இல்லாமல், வென்ற நாடுகளுடன் சேர்த்து, தோற்ற மன்னர்களின் பெயர்களையும் சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்தும் மெய்கீர்த்தியாய் இல்லாமல். ராஜராஜனின் மெய்கீர்த்தியில் எந்த ஒரு இடத்திலும் தோற்ற மன்னர்களின் பெயர்களை சுட்டப்பெறவில்லை, ஆச்சர்யமாக சோழர்களின் ஜென்ம விரோதிகளான பாண்டியர்களை, சிங்களவர்களை கூட அவர் வென்றிருந்தாலும், அவர்கள் இருவரையும் வைரமுத்து "அழகான ராட்சசி' என்று பாடல் எழுதியதைப் போல் எதிரிகளை "முரட்டெழில் சிங்களர்' என்றும், "தேசுகொள்ளப்பட்ட செழியர்" என்றும் ராஜராஜன் மிகுந்த மரியாதையுடன் அழைத்திருக்கிறார்!.

- Dr. கலைக்கோவன்.


நமக்கு பாரதி "பெரிதினும் பெரிது கேள்" என்றார். அப்துல் கலாம் "கனவு காணுங்கள்" என...

Posted: 02 Nov 2014 07:12 AM PST

நமக்கு பாரதி "பெரிதினும் பெரிது கேள்" என்றார். அப்துல் கலாம் "கனவு காணுங்கள்" என்றார். இவற்றை இராஜராஜனுக்கு யார் கூறியது?. அவர் பெரிதினும் பெரிது கேட்டார், கனவு கண்டார், அதை திட்டமாக்கினார், அதோடு முடித்தும் காட்டினார்!. எங்கிருந்து கற்கள் வந்தது, அது எப்படி மேலேறியது என்ற கேள்வியை ஒதுக்கிவிட்டு. வளர்ந்த நாடுகளாய் இன்றைக்கு இருக்கும் பல நாடுகளில் வாழ்ந்த மனிதர்கள் காட்டுவாசிகளாய் இருந்த காலகட்டத்தில் இதை எப்படி யோசித்துப் பார்க்க முடிந்தது என்பது தானே பெரிய கேள்வி! தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் பார்த்தாலே மூச்சு பேச்சில்லாமல் போகும் விஷயத்தை, ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டி முடித்ததும் கோயிலைப் பார்த்து அந்த மனிதன் என்ன யோசித்திருப்பார்? கடைசி கல் உச்சியில் சென்று அமர்ந்ததும். "இதோடு பணி முடிந்தது" என்று 216 அடி உயரத்தில் இருந்து கொண்டு ஒருவன் கீழிருக்கும் தன் மக்களைப் பார்த்து உரக்க கத்தி இருந்தால். அந்த மக்கள் அன்றைக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சியில் குதூகளித்திருப்பார்கள்! பூமி உள்ளவரை இந்த கோயில் இருக்கும், இந்த கோயில் உள்ளவரை நம் மன்னனின் பெயரும் இந்த சமகாலத்தில் நம்முடைய பெயர்களும், நம் சோழ தேசத்தின் புகழும் நிலைத்திருக்கும் என்பதை அறிந்து அந்த மக்கள் எப்படி ஆரவாரித்திருப்பார்கள்!. சற்றே கண்களை மூடு யோசித்துப் பாருங்கள்!.

-சிவபாதசேகரன்.


காஞ்சிபுரத்திற்கு அருகே இருக்கும் களக்காட்டூர் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு கிராம அதிக...

Posted: 02 Nov 2014 07:10 AM PST

காஞ்சிபுரத்திற்கு அருகே இருக்கும் களக்காட்டூர் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு கிராம அதிகாரி தஞ்சை செல்ல விழைகிறார். இராஜராஜனை நேரில் சந்தித்து "உங்கள் நலனுக்காக விளக்கெரிக்க ஆசைப்படுகிறேன்" என்று இராஜராஜனிடன் அவர் சொல்ல அதற்கு இராஜராஜன் "என் ஒருவர் நலனுக்காக விளக்கெரிப்பதை விட இந்த நாட்டு மக்கள் நலனுக்காக வையுங்கள் என்று கூறி அவரை சமாதானம் செய்து ஊருக்கு அனுப்பிவைக்கிறார். ஊருக்கு திரும்பிய அந்த அதிகாரி மன்னன் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாட்டு மக்களின் நன்மைக்காக விளக்கெரித்ததோடு நில்லாமல் தங்களை இவ்வளவு ஆழமாக நேசிக்கும் தன் மன்னனுக்கும் சேர்த்து இரண்டு விளக்குகளை வைத்திருக்கிறார் அந்த அதிகாரி! மக்களுக்காக மன்னன். மன்னனுக்காக மக்கள்.

@சசி தரன்


அண்ணனைக் கொன்று அப்பனைக் கொன்றெல்லாம் ஆட்சியை பிடித்த மன்னர்களுக்கு மத்தியில். த...

Posted: 02 Nov 2014 07:09 AM PST

அண்ணனைக் கொன்று அப்பனைக் கொன்றெல்லாம் ஆட்சியை பிடித்த மன்னர்களுக்கு மத்தியில். தன் அண்ணன் அநியாயமாக கொல்லப்பட்ட பிறகு தனக்கு வரவேண்டிய அரசபதவியை துச்சமாக நினைத்து நியாயப்படி தன் சிற்றப்பன் தான் ஆள வேண்டும் என்று உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக்கொடுத்தவர் இராஜராஜன். உத்தம சோழன் 16 ஆண்டுகள் ஆட்சி செய்து விலகிய பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார் இந்த மனிதர். பதவியை விட்டுக்கொடுத்து பதினாறு ஆண்டுகள் அமைதியாக அமர்ந்திருந்த ஒரே மனிதன் உலக வரலாற்றிலேயே இவர் மட்டுமாகவே இருக்க முடியும்!.

@சசி தரன்


இராசராச சோழன் சமாதியில் மேல் கூரை அமைக்கபட்டுள்ளது... சுற்று சுவர் எழுப்பியவர்...

Posted: 02 Nov 2014 07:06 AM PST

இராசராச சோழன் சமாதியில் மேல் கூரை அமைக்கபட்டுள்ளது...

சுற்று சுவர் எழுப்பியவர் மலேசிய தமிழர் ஒருவர். மேல் கூரையை உள்ளூர் இளைஞர்கள் அமைத்துள்ளனர்...

இடம் : உடையாளூர், தஞ்சை மாவட்டம்


மக்கள் முதல்வர் விடுதலையாக.,மக்கள் முதல்வர் பதவியேற்க என்று பல்வேறு கோவில்களில்...

Posted: 02 Nov 2014 06:54 AM PST

மக்கள் முதல்வர் விடுதலையாக.,மக்கள் முதல்வர் பதவியேற்க என்று பல்வேறு கோவில்களில் "பொதுமக்கள்" நேர்த்திக்கடன் என்று வளைத்து வளைத்து ஜெயா ப்ளஸ் டிவியில் காட்டினார்கள்.

ஒருவர் கூட கோவிலில் கடவுள் சிலையைப் பார்க்கவில்லை,மனமுருக வேண்டியவாறும் இல்லை.எல்லா முகங்களும்,இடித்து பிடித்தபடி கேமராவை நோக்கிய படியே இருந்தது.கல்யாண வீட்டிற்கு வந்து பொண்ணு-மாப்பிளையிடம் கவரைத் தந்து விடீயோவிற்கு போஸ் தந்த மாதிரியே இருந்தது.

ஆஸ்காருக்கு அனுப்பி வைங்க..

@G Durai Mohanaraju

காடு திருத்தி விளைச்சல் நிலமாக மாற்றுபவர்களுக்கு மானியம் கொடுத்தான் ராசராசன், என...

Posted: 02 Nov 2014 06:49 AM PST

காடு திருத்தி விளைச்சல் நிலமாக மாற்றுபவர்களுக்கு மானியம் கொடுத்தான் ராசராசன், எனவே விளைச்சல் நிலங்கள் அதிகரித்தன, அந்த விளைச்சல் நிலங்களுக்கு பாசன வசதியையும் தவறாமல் செய்தான். தமிழக பாசன வரலாற்றில் சோழர்களின் காலம் பொற்காலம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இன்று அதே சோழநாட்டில் விளைச்சல் நிலங்களை ஒழித்து பாலையாக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் நிறுவனத்திற்கு மான்யம் கொடுக்கிறது அரசாங்கம். ஆறுகள், ஏரிகள் தூர் வாராமல் தமிழகம் பாலையாகிறது.

நாம் இராசராச சோழர் எந்த சாதி என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

கணியன் பூங்குன்றன்....

குறிஞ்சி நிலத்தில் குடியரசு நடத்தி, முல்லை நிலத்தில் முடியாட்சி நடத்தி, மருத நில...

Posted: 02 Nov 2014 06:42 AM PST

குறிஞ்சி நிலத்தில் குடியரசு நடத்தி,
முல்லை நிலத்தில் முடியாட்சி நடத்தி,
மருத நிலத்தில் பேரரசு நடத்திய,
எம் தமிழினத்தின் வழியில்,

இப்புவியின் பெரும்பான்மை நிலத்தை தன் காலடியில் ஆண்டு,
எம் இனத்தின் வலிமையை இவ்வுலகிற்கே பறைசாற்றிய எம் முப்பாட்டன்
அருண் மொழி வர்மனுக்கு பிறந்தநாள் இன்று!!!........

அவரை ஒரு சாதிக்கு மட்டுமே உரியவன் என்று சொந்தம் கொண்டாடுவதை விட,
அவரது வழியில் தமிழினம் மீண்டும் இவ்வுலகை ஆள தேவையான சூழ்நிலையை உருவாக்குவதும்,
தமிழர்கள் நாம் இழந்துவிட்ட வரலாற்று ஆளுமையை மீண்டும் பெறுவதுமே,
அவரது பெயரை உச்சரிக்கும் தகுதியை எவருக்கும் கொடுக்கும்!!!....

அப்படியான எம் முன்னோர்களை பெறுமைப்படுத்தும் திசையில் பயனிப்போம்...


எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க பயபுள்ளைக... :D

Posted: 02 Nov 2014 06:38 AM PST

எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க பயபுள்ளைக... :D


கத்தோலிக்க திருச்சபையின் போப்பான போப் ஃபிரான்சிஸ் உயிரிகளின் வளர்ச்சிக்கான 'டார்...

Posted: 02 Nov 2014 06:04 AM PST

கத்தோலிக்க திருச்சபையின் போப்பான போப் ஃபிரான்சிஸ் உயிரிகளின் வளர்ச்சிக்கான 'டார்வினின் படிவளர்ச்சி கொள்கையும்' (Theory of evolution), பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்கான 'பெருவெடிப்பு கொள்கையையும்' (Big Bang theory) உண்மை என தெரிவித்துள்ளார். இதற்கு மேலே அவர் சொல்லும் விஷயங்கள் முரண்பாடுகளாக இருந்தாலும், அவரே இந்த அறிவியல் விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இதனால், சுமார் ஒரு நூற்றாண்டாக இந்த ஆகச்சிறந்த அறிவியல் கண்டுபிடுப்புகளை சரியாகவோ அல்லது சுத்தமாகவோ புரிந்துகொள்ளாமல் எதிர்த்து வந்தவர்கள், இப்போது, இவற்றில் அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள் என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் மற்றவர் தெரிந்து கொள்வதை எதிர்க்காமலாவது இருப்பார்கள் என தோன்றுகிறது.
.
எதிர்கால உலக சமூகம் என்பது சிறப்பான ஒன்றாக இருக்கும் என்றால் அதன் மிக முக்கிய அம்சங்கள், அறிவியல் முறையில் உலகை புரிந்து கொள்வதும், உண்மையை திறந்த மனதோடு அணுகுவதும் தான். அந்த சமூகத்தை நோக்கிய மிக நீண்ட மனித பயணத்தில், இந்த அறிவிப்பு ஒரு தவிர்க்க இயலாத புள்ளி.

@சகலகலா ஜீன்ஸ்

"இவன் ரொம்ப சிம்பிளா இருக்கான்யா "என்பது பணக்காரர்களுக்காகவே உருவாக்கப்பட்ட வாக்...

Posted: 02 Nov 2014 04:48 AM PST

"இவன் ரொம்ப
சிம்பிளா இருக்கான்யா "என்பது பணக்காரர்களுக்காகவே உருவாக்கப்பட்ட
வாக்கியமாகவே இருக்கிறது..!

#ஏழையை
பார்த்து யாரும்
அப்படி சொல்வதில்லை!!!

@காளிமுத்து

Posted: 02 Nov 2014 04:39 AM PST


வரி ஒழுங்கா கட்டாத பயலுக பூரா சுவிஸ் பேங்ல அக்கவுண்ட் வச்சிருக்கான்.. அவங்களை ஒன...

Posted: 02 Nov 2014 04:24 AM PST

வரி ஒழுங்கா கட்டாத
பயலுக பூரா சுவிஸ்
பேங்ல அக்கவுண்ட்
வச்சிருக்கான்..
அவங்களை ஒன்னும்
பண்ணாதீக.
அப்பப்ப ஸ்டேட்
பேங்க்ல, பென்சன் பணத்த
செலவுக்கு எடுக்கறவன்
கிட்ட 20
ஓவா புடுங்குங்க...

@இளையராஜா

கடையேழு வள்ளல்கள் பற்றி அறிந்திருப்போம். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்கள்...

Posted: 01 Nov 2014 10:22 PM PDT

கடையேழு வள்ளல்கள் பற்றி அறிந்திருப்போம். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்கள் யார்?

#முதலேழு
#வள்ளல்கள்
1.சகரன்
2.காரி
3.நளன்
4.துந்துமாரி
5.நிருதி
6.செம்பியன்
7.விராடன்

#இடையேழு
#வள்ளல்கள்
1.அக்குரன்
2.அந்திமான்
3.கர்னன்
4.சந்தன்
5.சந்திமான்
6.சிசுபாலன்
7.வக்கிரன்

#கடையேழு
#வள்ளல்கள்
1.பாரி
2.ஆய்
3.எழினி
4.நள்ளி
5.மலயன்
6.பேகன்
7.ஓரி

இன்னைக்கு என்ன ஸ்பெஷல்???

Posted: 01 Nov 2014 09:54 PM PDT

இன்னைக்கு என்ன ஸ்பெஷல்???


0 comments:

Post a Comment