Monday, 10 November 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


எப்போ கல்யாண ஆல்பத்தை பார்த்தாலும், வீட்டம்மா முதலும் கடைசியுமா நம்ம கால்ல விழுந...

Posted: 10 Nov 2014 09:01 PM PST

எப்போ கல்யாண
ஆல்பத்தை பார்த்தாலும்,
வீட்டம்மா முதலும்
கடைசியுமா நம்ம
கால்ல
விழுந்து ஆசீர்வாதம்
வாங்கின
போட்டோவைத்தான்
முதல்ல
கண்ணு தேடுது.

@Ravikumar Mgr

How are you என ஆங்கிலத்தில் கேட்பவர்களை விட, அழகிய தமிழில் 'எப்படி இருக்கீங்க' எ...

Posted: 10 Nov 2014 07:54 PM PST

How are you என
ஆங்கிலத்தில்
கேட்பவர்களை விட,
அழகிய தமிழில்
'எப்படி இருக்கீங்க' என
கேட்பவர்களே வசிகரிக்கிறார்கள்.

@காளிமுத்து

#திருக்குறள் குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #உட்பகை....

Posted: 10 Nov 2014 05:54 PM PST

#திருக்குறள்
குறள் பால்: #பொருட்பால். குறள் இயல்: #நட்பியல். அதிகாரம்: #உட்பகை.

#உரை:
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும். அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்.

#Translation:
Water and shade, if they unwholesome prove, will bring you pain.
And qualities of friends who treacherous act, will be your bane.

#Explanation:
Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.


கோவிலுக்கு போய் பக்கத்தில போய் சாமியைப் பார்த்து கும்பிட்டாதான் அந்த சாமி நமக்கு...

Posted: 10 Nov 2014 10:11 AM PST

கோவிலுக்கு போய்
பக்கத்தில போய்
சாமியைப்
பார்த்து கும்பிட்டாதான்
அந்த சாமி நமக்கு அருள்
புரியும்னு நம்புற
மனநிலை உள்ளவர்களைப்
பார்க்கும்போது அவர்கள்
மேல் பரிதாபம்
மட்டுமே வருகிறது...

@விஜய்

கேளாமல் கொடுத்ததால் கேட்காமல் பறிப்பாயோ தேளாகக் கொட்டிவிட்டுத் தேனாகச் சுவைப்பாய...

Posted: 10 Nov 2014 09:32 AM PST

கேளாமல்
கொடுத்ததால்
கேட்காமல் பறிப்பாயோ
தேளாகக்
கொட்டிவிட்டுத்
தேனாகச்
சுவைப்பாயோ
தாளாதே நானிங்கு தவித்திடவே கைகொட்டி
ஏளனமாய்ச்
சிரித்திடவே எனையனுப்பி வைத்தாயோ!

© Yesses Bee

உழுது, விதைத்து , தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து, உரம் போட்டு, பூச்சி மருந்து அடி...

Posted: 10 Nov 2014 04:12 AM PST

உழுது, விதைத்து , தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்து, உரம் போட்டு, பூச்சி மருந்து அடித்து , காவல் காத்து , அறுவடை செய்து , பதப்படுத்தி.... இதற்கெல்லாம் ஆன செலவு- உழைப்பு எல்லாவற்றையும் மறந்துவிட்டு .... விற்பனை செய்த பணத்தை மட்டும் எண்ணிப் பார்த்து சந்தோஷப்படுபவனே விவசாயி....

வந்த வருமானத்தில் இருந்து செலவை கழித்து லாபமா- நட்டமா என கணக்கு பார்ப்பதில்லை அவன்.. அப்படி பார்த்தால்... இங்கே யாருக்கும் சோறு கிடைக்காது....

@Senthil K Nadesan

முன்பெல்லாம் லன்ச்சுக்கு வா டின்னருக்கு வா என்ற கூப்பிட்ட நட்பெல்லாம் இப்போ வாட்...

Posted: 10 Nov 2014 02:34 AM PST

முன்பெல்லாம்
லன்ச்சுக்கு வா டின்னருக்கு வா என்ற
கூப்பிட்ட நட்பெல்லாம்
இப்போ வாட்ஸப்புக்கு வா,
ட்விட்டருக்கு வா,
பேஸ்புக்கு வா என்கின்றனர்!!

@காளிமுத்து

"திறக்கோயில்" வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் மலைகள் சூழ்ந்த...

Posted: 10 Nov 2014 01:17 AM PST

"திறக்கோயில்"

வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் மலைகள் சூழ்ந்து அமைந்திருக்கும் அழகான இந்த கிராமத்தில் உள்ள மலையில் இயற்கையாக அமைந்த மூன்று குகைகள் உள்ளன, இந்த குகைகளில் தான் அன்றைய சமணர்கள் தங்குமிடத்தை அமைத்திருக்கிறார்கள். இந்த மலைக்கு கீழே சுமார் 25 அடி உயரமிருக்கும் இருக்கும் ஒரு தனி பாறையில் மஹாவீரர், பார்ஷ்வனாதர், ரிஷபநாதர், மற்றும் சந்திரனாதர் ஆகிய நான்கு சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களின் நேர்த்தியைக் கண்டால் இவை கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டவையாக தோன்றுகின்றது.

இந்த சிற்பங்களுக்கு கீழே பராந்தக சோழன் சமணர்களுக்கு அளித்த கொடையை ஒரு கல்வெட்டு பதிவு செய்கின்றது, மலைக்கு மேலே இயங்கிய பள்ளிகளுக்கு ராஜ ராஜ சோழனும் கொடை அளித்துள்ளார், அதில் ஒன்று "சங்கரைப் பள்ளி" எனவும் மற்றொன்றை "சுத்தப் பள்ளி" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைக்கு மேல் இயங்கிய அந்த பள்ளியை ஏறிச் சென்று பார்த்தோமேயானால் கீழிறங்கி வருவதற்கு மனம் ஒப்புக்கொள்ளாது, நிலமகள் அவள் அழகில் நம்மை கட்டிப்போட்டு விடுகிறாள், இயற்கை விரும்பிகளும் வரலாற்று ஆர்வலர்களும் கட்டாயம் சென்று காண வேண்டிய இடம்.


பின்னாடி தீ பத்த வச்ச ராக்கெட்டைப்போல வேலைக்குப் போகிற நாளுக்கு பெயர்தான் திங்கள...

Posted: 09 Nov 2014 11:17 PM PST

பின்னாடி தீ பத்த வச்ச
ராக்கெட்டைப்போல
வேலைக்குப் போகிற
நாளுக்கு பெயர்தான்
திங்கள் கிழமை!

@விவிகா சுரேஷ்

தூய்மை இந்தியா திட்டம்! தேவையான பொருட்கள்: வெளக்கமாறு 1 கேமரா 4 @சக்தி லிங்க்

Posted: 09 Nov 2014 11:14 PM PST

தூய்மை இந்தியா திட்டம்!

தேவையான
பொருட்கள்:

வெளக்கமாறு 1

கேமரா 4

@சக்தி லிங்க்

பல எம்டன்களை எலிஃபேன்ட் ஆக்கி சவாரி செய்கிறார்கள் பேரப்பிள்ளைகள்... #நமக்குள்ள...

Posted: 09 Nov 2014 11:11 PM PST

பல
எம்டன்களை எலிஃபேன்ட்
ஆக்கி
சவாரி செய்கிறார்கள்
பேரப்பிள்ளைகள்...

#நமக்குள்ள
ஒரு வில்லத்தனமான
சந்தோசம்...

@சதீஷ் குமார்
தேவகோட்டை

கடன் அன்பை முறிக்கும் என எழுதியிருந்த கடையில் இப்போது கடன் அட்டை அனுமதி என எழுதி...

Posted: 09 Nov 2014 11:09 PM PST

கடன் அன்பை முறிக்கும்
என எழுதியிருந்த
கடையில்
இப்போது கடன்
அட்டை அனுமதி என
எழுதியிருக்கிறது

@களவாணி பய

ஒருவன் மேல் உள்ள கோபத்தை வெளிக்காட்ட, அவன் தவறு செய்யும் வரை பொறுமையாக காத்திருப...

Posted: 09 Nov 2014 11:07 PM PST

ஒருவன் மேல் உள்ள
கோபத்தை வெளிக்காட்ட, அவன் தவறு செய்யும்
வரை பொறுமையாக
காத்திருப்பவனே மேனேஜர்...

@களவாணி பய

0 comments:

Post a Comment