Monday, 10 November 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:P :P

Posted: 10 Nov 2014 09:20 AM PST

:P :P


நல்ல கறி... எப்படி வாங்குவது? சென்னை ரயில்களில் வந்த அந்தப் பெட்டிகளைப் பார்த்த...

Posted: 10 Nov 2014 09:00 AM PST

நல்ல கறி... எப்படி வாங்குவது?

சென்னை ரயில்களில் வந்த அந்தப் பெட்டிகளைப் பார்த்தபோது, அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள். முடை நாற்றம் எடுக்க... அழுகிய நிலையில் இருந்தது இறைச்சி. அடுத்தடுத்த நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சரக்கு ரயில் பெட்டிகளைச் சோதித்தபோது மேலும் பல பெட்டிகள் சிக்கின. இப்படிக் கைப்பற்றப்பட்ட இறைச்சியின் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா? ஒன்றரை டன். எங்கிருந்து வருகிறது இந்த இறைச்சி என்பதுகுறித்து அதிகாரிகளுக்கு இதுவரை துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், அது எங்கே போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது... உங்களுடைய வயிறு!

ஆமாம். தமிழகத்தில் ஆட்டிறைச்சியின் விலை 400 ரூபாயைத் தாண்டிவிட்டது. வெளி மாநிலங்களில் இருந்து அது 200 ரூபாய்க்குள் கிடைத்தால் லாபம்தானே? இந்த லாப வெறிதான் சாலையோர உணவகங்களில் இருந்து பெரிய உணவு நிறுவனங்கள் வரை இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான, சுகாதாரமற்ற இறைச்சியை வாங்க வைக்கிறது.

''வெளிமாநிலங்களில் இருந்து வரும் இறைச்சியைத் தினமும் சோதனை செய்ய முடியாது. திடீர் சோதனை நடத்தி கெட்டுப்போன இறைச்சிகளைக் கைப்பற்றி அழிக்கிறோம். இதுபோன்ற இறைச்சியை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்று அசைவ உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சென்னையைப் பொறுத்த அளவில் தினமும் 1,650-க்கும் மேற்பட்ட ஆடு மாடுகள் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு, சுகாதாரமான முறையில் வெட்டப்படுகின்றன. இவற்றின் இறைச்சி விற்கப்படுவதற்குத் தகுதியானவை எனச் சான்றிதழை நாங்கள் அளிக்கிறோம். மக்கள் நம்பகமான கடைகளில் இறைச்சியை வாங்குவது நல்லது'' என்று சொல்கிறார் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர்.

இறைச்சி சாப்பிடும்போது நம்மை நாமே எப்படி பாதுகாத்துக்கொள்ளவது என்பதுகுறித்து பொதுநலம் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர் கே.விவேகானந்தனிடம் கேட்டோம்.

'பொதுவாக, ஆட்டுத்தொட்டியில் வெட்டப்படும் இறைச்சியை நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பதப்படுத்தாமல் வைத்திருந்தால், இறைச்சி அழுக ஆரம்பித்துவிடும். குளிர்பதனப் பெட்டிகளில் மைனஸ் 15 முதல் மைனஸ் 18 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு இறைச்சியை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். பொதுவாக, ஆடு மாடு உடலில் கிளாடீரியம், ஸ்டப்லா காகஸ், எக்கினோ காகஸ், ஈகோலி, ஆஸ்காரிஸ் போன்ற ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஆடு மாடு இறந்ததும் இவை அதிக அளவில் பல்கிப் பெருகி அதைச் சிதைக்க ஆரம்பிக்கின்றன. இதனால், இறைச்சி அழுக ஆரம்பிக்கிறது. மேலும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படலாம்.

எனவே, கால்நடைகளை வெட்டிய அடுத்த சில மணி நேரங்களில் சமைத்துச் சாப்பிடுவதுதான் நோய்க் கிருமிகளைத் தவிர்க்க ஒரே வழி. கெட்டுப்போன இறைச்சியில் உள்ள கிருமிகள் மனித உடலுக்குள் செல்லும்போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ரத்தக் குழாய்கள் வழியே சென்று மூளையைப் பாதிக்கும். ஹைடாடிட் என்ற ஒட்டுண்ணியானது கல்லீரலுக்குச் சென்று அங்கு கட்டியை உருவாக்கும். நுரையீரலை அடையும் கிருமிகள் சுவாசப் பிரச்னை, இடைவிடாத இருமல், சளி போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். தசைகளில் தங்கும் கிருமிகள் தீராத வலியை ஏற்படுத்தும். இதுதவிர, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் ஏற்படலாம். பாதுகாப்பு இல்லாத இறைச்சியை ஈக்கள் மொய்க்கும்போது காலரா போன்ற நோய்கள் ஏற்படும்'' என்றார்.

கறிக் குழம்பைக் காரசாரமாக வைப்பதும் சாப்பிடுவதும் மட்டும் கலை அல்ல; நல்ல கறியாகப் பார்த்து வாங்குவதும் கலைதான். என்ன சொல்கிறீர்கள்?

பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது? ஆறு விஷயங்களைக் கவனியுங்கள் என்கிறார் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர் இனாயதுல்லா.

கவனிக்க வேண்டிய ஆறு விஷயங்கள்

1. நீங்கள் செல்லும் இறைச்சிக் கடை தினந்தோறும் திறக்கக் கூடியதா?

2. அந்தக் கடைக்கு அரசு உரிமம் உள்ளதா?

3. கடையில் சுத்தமான சூழல் உள்ளதா?

4. இறைச்சி பக்கத்தில் நிற்கும்போது மொஞ்சை (கவுச்சி) வாடை அடிக்கக் கூடாது.

5. இறைச்சி நிறம் மிகவும் சிவப்பாகவோ, மிக அதிகம் வெளுத்துப்போயோ இருக்கக் கூடாது. இறைச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

6. கறியைத் தொட்டுப் பார்த்தால் ஜில் என இருக்கக் கூடாது. அப்படி 'ஜில்' என இருந்தால் அது குளிர்பதனப் பெட்டியில் வைத்த முந்தைய நாள் இறைச்சியாக இருக்கலாம்.

Thanks Vikatan

Relaxplzz


(லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து)... ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...

Posted: 10 Nov 2014 09:00 AM PST

(லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து)...

ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சகாயம் ஐ.ஏ.எஸ்...!

கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் முதல்வராக வேண்டும் என்று ஃபேஸ்புக்கில் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

சகாயம் ஐ.ஏ.எஸ். முதல்வராக நாங்கள் விரும்புகிறோம்" ( We want U Sahayam IAS as CM ) என்ற முகவரியோடு புரபைல் ஒன்று சமூக வலைதளமான ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் உலாவருகிறது.

மாவட்ட ஆட்சியராக மதுரை மாவட்டத்தில், 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வழி செய்தார். இவரது அறையில் "லஞ்சம் தவிர்த்து. நெஞ்சம் நிமிர்த்து" என்கிற வாசகம் எழுதப் பட்டு இருக்கும்.

கிரானைட் மற்றும் கனிம, மணற் கொள்ளைகள் பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தார். நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போதும், பிறகு மதுரையிலும் 'தொடுவானம்' என்ற இணைய வலைப்பூ வாயிலாக பொது மக்கள் தங்களுக்கான புகாரை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் வழிவகை செய்திருக்கிறார்.

இந்த நிலையில் "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" என்ற வாசகங்களுடன் உள்ள, ஃபேஸ்புக் பக்கம், ஆரம்பித்த 2 வது நாளான இன்று இரவு 9:20 மணி வரை 6,370 பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் லைக்குகளோடும், இந்த யோசனைக்கு ஏராளமான வரவேற்புகளுடனும் பரபரப்பை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

Relaxplzz


நீதிபதி : "வாடகைக்கு குடியிருந்த வீட்டை எதற்கு இடித்தாய்?" ? ? ? ? ? ? ? ? ? ? ?...

Posted: 10 Nov 2014 08:50 AM PST

நீதிபதி :
"வாடகைக்கு குடியிருந்த வீட்டை எதற்கு இடித்தாய்?"
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
குற்றவாளி:
"வீட்டு ஓனர்தான் விடியுறதுக்குள்ள வீட்டைக் `காலி`பண்ணுனு சொன்னார் யுவர் ஆனர்"

நீதிபதி:???? :O :O

Relaxplzz

ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். அவை...

Posted: 10 Nov 2014 08:15 AM PST

ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்.

அவை மேலே பறக்கும் பலூன்கள். அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு மாணவி கவனித்துக் கொண்டிருந்தாள். மெல்ல பலூன்காரரிடம் வந்தாள். இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா? என்று கேட்டாள்.
ஓ… பறக்குமே. என்ன விஷயம்? பலூன் எந்த நிறத்துல இருந்தாலும் பறக்குமா? என்று மீண்டும் கேட்டாள் அந்த மாணவி. அந்தப் பள்ளி மாணவி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.

ஏம்மா கேக்குற?
இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?

பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்த மாணவியின் நிறம் கறுப்பு. பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா. உள்ள இருக்கிற வாயுதான்.

பலூன் மட்டுமல்ல மனிதனும் எந்த நிறத்தில் இருந்தாலும் உள்ளே இருக்கிரும் வாயுவோ அறிவோ அளவானதாகவும் சரியா இருந்தா, யார் வேண்டுமானாலும் உயரலாம் என்றார்.

சில சமயம் பலூன் விற்பவர்கூட ஆசிரியராக மாறிவிடுகிறார்கள்.

பிடித்திருந்தால் பகிரவும்

Relaxplzz

எந்த உறவானாலும் பாதி வரை தொப்புற் கொடி உறவைத் தவிர பெருமைப்படுகிறேன் இங்கு பெண்...

Posted: 10 Nov 2014 07:40 AM PST

எந்த உறவானாலும் பாதி வரை தொப்புற் கொடி உறவைத் தவிர

பெருமைப்படுகிறேன் இங்கு பெண் தெய்வமானதால் ..


#விவசாயிக்காக_ஒரு_நிமிடம்_ஒதுக்கி_படிச்ப்பாருங்களேன் உழுதவன் கணக்குப் பார்த்தால...

Posted: 10 Nov 2014 07:00 AM PST

#விவசாயிக்காக_ஒரு_நிமிடம்_ஒதுக்கி_படிச்ப்பாருங்களேன்

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா?

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது' என்பார்கள். உண்மையில் எந்த உழவனும் கணக்குப் பார்ப்பது இல்லை. பச்சை நெல்லின் பால் வாசம் வீசும் மார்கழிப் பனியில், வரப்பில் நடந்தபடியே தன் குழந்தைகளைப் போல பயிர்களை நேசிக்கும் விவசாயி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் பார்ப்பான். யூரியா, டி.ஏ.பி., விலையைப் பார்ப்பான். ஒருபோதும் வரவு-செலவு கணக்குப் பார்ப்பது இல்லை. உழுவதும் உழைப்பதும் தனது பிறவிப் பெருங்கடன் என்று எண்ணியே காலம் எல்லாம் சேற்றில் நிற்கிறார்கள் விவசாயிகள்.

ஆனால், அது பார்க்கப்பட வேண்டிய கணக்கு. 'விவசாயிகளின் நிலை பரிதாபம்' என்று அனுதாபப்படுவது இருக்கட்டும். அந்த அவலம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது, மும்பை பங்குச் சந்தையின் வணிகக் கணக்கு அல்ல; வங்கி அரை வருடக் கணக்கு முடிவும் அல்ல. நம் ஊருக்கும் உலகுக்கும் சோறு போடும் உழவர்களின் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரம்!

தஞ்சாவூருக்கு அருகே உள்ள காசவளநாடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, குமார். இவர் இப்போதுதான் அறுவடையை முடித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவானது என்று குமார் சொல்லும் வரவு-செலவுக் கணக்கு இதோ...

ஒரு ஏக்கருக்கான உழவுக் கணக்கு

* வெறும் நிலத்தில் எரு அடிக்க வேண்டும். முன்பு ஒவ்வோரு வீட்டிலும் மாடுகள் இருக்கும். எருவும் வீட்டிலேயே இருக்கும். அதை வண்டி வைத்துக்கொண்டு சேர்க்கும் செலவு மட்டும்தான். இப்போது மாடுகள் இல்லை என்பதால், எருவை, காசு கொடுத்து வாங்க வேண்டும் அல்லது ஆட்டுக்கிடை வைக்க வேண்டும். இந்த வகையில் ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு 1,500 ரூபாய்.

* ஒரு ஏக்கருக்கு நடவு நட, நாற்றங்கால் அமைக்க வேண்டும். டிராக்டர் வாடகை, 350 ரூபாய். ஒரு கூலி ஆள் வேண்டும். அவருக்கு சம்பளம் 350 ரூபாய். இந்த வகையில் மொத்தம் 700 ரூபாய்.

* விதை நெல் 30 கிலோ பை - 1,100 ரூபாய். தஞ்சை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் 39, 38 ஆகிய ரக நெல்களின் விலை இது. ஒருவேளை ஆந்திரா பொன்னி என்றால் 1,400 ரூபாய் வரும். ஆந்திரா பொன்னி ஒருசிலர்தான் பயிரிடுவார்கள் என்பதால், முந்தையதையே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். விதை நெல் வகையில் ஒரு ஏக்கருக்கு 1,100 ரூபாய் செலவு.

* நாற்றுப் பறிக்க, 30 கிலோ நெல்லுக்கு 1,500 ரூபாய்.
நடவு நட, சேறு அடிக்க வேண்டும். டிராக்டர் செலவு, 2,000 ரூபாய்.

* வரப்பு வெட்ட, ஓர் ஆளுக்கு 350 ரூபாய். ஒரு ஏக்கருக்கு, குறைந்தது மூன்று ஆட்கள் வேண்டும். அதற்கு, 1,050 ரூபாய்.

* நடவு நட, ஒரு ஏக்கருக்கு 18 ஆட்கள் தேவை. ஓர் ஆளுக்கு இப்போது 100 ரூபாய் கூலி. மொத்தம் 1,800 ரூபாய்.

* நடவு நடும்போது நாற்றுக் கட்டுகளைத் தூக்கிப் போட, பட்டம் பிடிக்க... என்று ஒரு ஏக்கருக்கு மூன்று ஆட்களின் வேலை இருக்கும். ஓர் ஆளுக்கு 350 ரூபாய் வீதம், மொத்தம் 1,050 ரூபாய்.

* நடவு நடும் பெண்கள் மற்றும் நடவு வயலில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு டீ, பலகாரம் வாங்கித் தர வேண்டும். இந்த வகையில் செலவு, சுமார் 1,000 ரூபாய்.
களை எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு களை எடுக்க, குறைந்தது 20 பேர் தேவை. ஓர் ஆளுக்குச் சம்பளம், 100 ரூபாய். மொத்தச் செலவு, 2,000 ரூபாய்.

*நெல் அறுவடையை முன்பு ஆட்கள்தான் செய்தார்கள். இப்போது கடுமையான ஆள் பற்றாக்குறை என்பதால், இயந்திரம்தான் அறுவடைக்கு ஒரே வழி. தவிரவும் இது ஒரு ஏக்கர் அறுவடையை ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுகிறது. நேரடியாக அறுவடை வயலில் இறங்கும் இயந்திரம் ஒரு பக்கம் அறுத்துக்கொண்டே வர, மறுபக்கம் நெல் தனியாகக் கொட்டிவிடுகிறது. இந்த வகையில் ஒரு ஏக்கர் நெல்லை அறுவடை செய்ய, ஒரு மணி நேரத்துக்கான இயந்திரக் கூலி 2,300 ரூபாய்.

* அறுத்த நெல்லை, நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுசெல்ல ஆகும் டிப்பர் வாடகை, 800 ரூபாய்.
பெரும்பாலான விவசாயிகள், நடவு நடும்போது டி.ஏ.பி., அடி உரம் போடுகின்றனர். ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி., தேவை. விலை 1,400 ரூபாய். நடவுக்குப் பின்னர், இரு முறை யூரியா அடிக்க வேண்டும். முதல் முறை 300 ரூபாயும், இரண்டாம் முறை 550 ரூபாயும் செலவாகும். உர வகைகளில், மொத்தம் 2,250 ரூபாய்.

*நெற்பயிரில் கதிர் வரும்போது, நன்றாகக் கதிர் பிடிப்பதற்காக மருந்து அடிப்பார்கள். ஒரு ஏக்கருக்கு அடிப்பதற்கான இந்த மருந்தின் விலை 800 ரூபாய்.
இரண்டு முறை பூச்சி மருந்து அடிக்க வேண்டியிருக்கும். ஒரு முறைக்கு 400 ரூபாய் வீதம், மொத்தம் 800 ரூபாய்.

*அடி உரம் அடிப்பதில் தொடங்கி, யூரியா, டி.ஏ.பி., பூச்சி மருந்து தெளிப்பது வரை அனைத்தையும் செய்ய கூலி ஆட்கள் தேவை. ஆறு பேர் கூலி என்று கணக்கிட்டால், மொத்தம் 2,100 ரூபாய்.

* அறுவடை முடிந்து நெல் விற்கப் போகும்போது, கூலி ஆட்கள் தேவை. 30 மூட்டை போட வேண்டும் என்றால்கூட, மூன்று ஆட்களின் வேலை இருக்கும். இந்த வகையில் செலவு, 1,050 ரூபாய்.

*நெல் கொள்முதல் நிலையத்தில், 40 கிலோ கொண்ட ஒரு பைக்கு 20 ரூபாய் கமிஷன் (அதாவது லஞ்சம்) கட்டாயம். சில இடங்களில் இது 15 ரூபாயாகவும், சில இடங்களில் 25 ரூபாயாகவும் உள்ளது. 20 ரூபாய் என்று எடுத்துக்கொண்டால், ஒரு ஏக்கரில் விளைந்த நெல்லுக்கு சுமார் 800 ரூபாய் கமிஷன்.

*மேலே உள்ளவற்றை மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், 24,600 ரூபாய் வருகிறது.

##இது_செலவு_இனி_வரவுக்_கணக்கைப்_பார்ப்போம்.

*தற்போதைய நிலையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல்லின் விலை, 850 ரூபாய். ஒரு ஏக்கருக்கு சுமார் 36 மூட்டை என்பது அதிகபட்ச விளைச்சல். பெரும்பாலும் 30 மூட்டைகள் தான் விளைகின்றன என்றபோதிலும் நாம் 36 மூட்டைகள் என்றே எடுத்துக்கொள்வோம். இதன்படி கணக்கிட்டால், மொத்தம் 30,600 ரூபாய் வருகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் 6,000 ரூபாய் லாபம். அதாவது 24,000 ரூபாய் முதலீடு செய்து, ஐந்து மாதங்கள் கடுமையாக உழைத்தால் கிடைக்கும் லாபம் வெறும் 6,000 ரூபாய்.

இதை ஐந்து மாதங்களுக்கான சம்பளமாகக் கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 1,200 ரூபாய். நாள் கூலியாகக் கணக்கிட்டால், தினம் 40 ரூபாய். மத்திய அரசின் திட்டக்குழு அறிக்கையின்படி, கிராமப்புறங்களில் 28 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்கள் ஏழை இல்லை. எனில், நம் விவசாயிகள் ஒரு நாளைக்கு 40 ரூபாய் சம்பாதிப்பதால், அவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்ற அரிய உண்மையை நாம் இதன் மூலம் தெரிந்துகொள்கிறோம்.

இந்த வரவு-செலவுக் கணக்கு மிகவும் பெருந்தன்மையானது என்பதால்தான், மேற்கண்ட 6,000 ரூபாய் லாபமும் கிடைத்துள்ளது. அது என்ன பெருந்தன்மை? விவசாய வேலைகளைப் பொறுத்தவரை நாற்றங்கால் சேறு அடிப்பதில் தொடங்கி, அறுவடை முடியும் வரை குடும்பத்து ஆட்கள் அத்தனை பேருமே வெவ்வேறு வகைகளில் வேலைபார்க்க வேண்டியிருக்கும். அவர்களுக்கான கூலி எதுவும் இங்கு கணக்கிடப்படவில்லை. ஏனெனில், அதை வெறுமனே 'வேலை' என்று கருத முடியாது.

பயிர், பருவம் பிடிக்கும் நாளில், வீட்டுக்கூடத்தில் அமர்ந்து சோற்றில் கை வைக்கும்போது, தாழ்வாரத்தில் ஒரு சொட்டு மழைநீர் விழுந்தால், அவன் ஈரக்குலை நடுங்கும். ஏனெனில், பால் வைக்கும் பருவத்தில் மழை பெய்தால், அனைத்தும் பாழ். எல்லாம் கருக்காயாகப் போய்விடும். செய்த செலவும் இட்ட உழைப்பும் வீண். நாள் தவறாமல் வயலுக்குச் சென்று நீர் பாய்ச்சவும் வடியவைக்கவும் வேண்டும். இதற்கு என்ன கூலி நிர்ணயிப்பது?

இவ்வளவு இடர் நிறைந்த, லாபமற்ற தொழிலை எப்படி விவசாயிகள் இடைவிடாமல் செய்து வருகின்றனர்?

விவசாயி ஒருவரிடம் கேட்டால், அவர் சொல்கிறார்...
''ஒரு வெள்ளாமைக்காரன் நிலத்தைச் சும்மாப் போட்டிருந்தா, ஊர்ல அப்புறம் நம்மளை ஒரு பய மதிக்க மாட்டான். ஒரு நல்ல நாள்ல நாலு வீட்டுப் பொங்கப் பானையில அள்ளிப்போட, என் வயல்ல வெளஞ்ச அரிசி வேணும்ல தம்பி!''

Relaxplzz


தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் <3

Posted: 10 Nov 2014 05:40 AM PST

தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் ♥


:)

Posted: 10 Nov 2014 05:30 AM PST

:)


வாழ்க்கையில் இந்த மூன்று பேரை மட்டும் எந்நாளும் மறக்காதீர்கள். 1. கஷ்டமான சமயங்...

Posted: 10 Nov 2014 05:10 AM PST

வாழ்க்கையில் இந்த
மூன்று பேரை மட்டும்
எந்நாளும் மறக்காதீர்கள்.

1. கஷ்டமான சமயங்களில் உதவியவர்.

2. கஷ்டமான சமயத்தில்
விட்டு சென்றவர்.

3. கஷ்டமான
சூழ்நிலைக்கு தள்ளியவர்..!

Relaxplzz

உலகிலேயே அதிகமான கொலை செய்த மனிதர்களை தெரியுமா? உலகிலேயே அதிக கொலைகள் செய்த ஆண்...

Posted: 10 Nov 2014 04:50 AM PST

உலகிலேயே அதிகமான கொலை செய்த மனிதர்களை தெரியுமா?

உலகிலேயே அதிக கொலைகள் செய்த ஆண் இந்தியாவைச் சேர்ந்த பெஹ்ராம் (Thug Behram) என்ற இந்திய மனிதர் ஆவார். இவர் கடந்த 1790-1840 ஆண்டுகளுக்கு இடையே 931 மனிதர்களை எந்த ஒரு ஆயுதமின்றி வெறும் கை குட்டையைப் பயன்படுத்தி கொன்றுள்ளான். இந்த தொடர் கொலை வழக்கில் 1840 ஆம் ஆண்டு பெஹ்ராம் தூக்கிலிடப்பட்டான்.

இதே போல் உலகிலேயே அதிக மக்களை கொன்ற பெண் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கவுண்டஸ் எலிசபெத் பாதோரி (Countess Elizabeth Báthory) என்பவர் ஆவார். இவர் கொலை செய்த மக்களின் எண்ணிக்கை 612 ஆகும். இவரின் கோபம் இளம் பெண்களின் மீது தான் (பெண்களை கொன்று அவர்கள் ரத்தத்தில் குளித்ததாகவும் தகவல்கள் உண்டு).

Relaxplzz


:)

Posted: 10 Nov 2014 04:30 AM PST

:)


ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை.அதனால் அவர்கள...

Posted: 10 Nov 2014 04:10 AM PST

ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5
ஆண்டுகளாக
குழந்தை பாக்கியமே இல்லை.அதனால்
அவர்கள் மிகவும் வருத்தத்தில்
இருந்தனர்.ஒரு நாள் அழகிய நாய்
குட்டி ஒன்றை வாங்கி வந்தனர்,அதை தங்கள்
மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர்.

அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள்
வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய
எஜமானருக்கு விசுவசாமாக
நடந்து கொள்ள தன் உயிரையும்
பொருட்படுத்தாமல் அவர்களை விரட்டியது.

நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய்
நல்ல பெரிய நாயாக வளர்ந்தது.7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான்.

இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன்
தான் அந்த தம்பதியினர்
நேரத்தை செலவிடுகின்றனர் .நாய்
இப்போதெல்லாம் தனிமையிலே தன்
பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று.

அவர்கள் வளர்த்த நாய்க்கு அந்த
குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று
ஒரு நாள் அந்த தம்பதியினர்
குழந்தையை தொட்டிலில் தூங்க
வைத்து விட்டு மாடியில்
நின்று பேசி கொண்டு இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம்
கேட்டதும்
மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர்.படி அருகில் நின்ற நாயினது வாயில் இரத்தக்கறையுடன்
நின்று கொண்டு இருந்தது.இதைப்
பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார்.

பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த
அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.

குழந்தையின் அருகில்
பாம்பு ஒன்று இரண்டு துண்டுகளாக
கிடந்தது. குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த
பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த
பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான்
அவர்களுக்கு புரிந்தது.

தங்கள் குழந்தையை காப்பாற்றிய
நாயை அநியாயமாக
கொன்று விட்டனே என்று கதறி அழுதனர்.

முன்கோபம் முட்டாள் தனத்தில் போய்
முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு.

எப்போது நாம்
ஒரு முடிவு எடுப்பதென்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க
வேண்டும்.

பிடித்திருந்தால் பகிரவும் ...

Relaxplzz

இந்தக் காலம் நன்றாக இல்லை. மாலை நாளிதழ்களை யாரும் படிப்பதில்லை. பேருந்துகள...

Posted: 10 Nov 2014 03:50 AM PST

இந்தக் காலம்
நன்றாக இல்லை.

மாலை நாளிதழ்களை
யாரும் படிப்பதில்லை.

பேருந்துகளில் எப்போதும்
உட்கார இடமில்லை.

மிதிவண்டி வைத்திருந்தால்
பஞ்சர் ஒட்ட ஆளில்லை.

எம்ஜிஆர் படங்களை
அரங்கில் பார்க்க முடியாது.

கலைஞர் பேசும் கூட்டங்கள்
குறைந்துவிட்டன.

படம்பார்க்க வந்த பெண்டிர் கூட்டம்
என்ன ஆனதென்றே தெரியவில்லை.

முதல் மரியாதையை
இன்று வெளியிட்டால்
முதல் மூன்று நாள்தான் மரியாதை.

தொலைக்காட்சித் தொடர் பாதிப்பால்
பெண்டாட்டிகள் சண்டைக்கு வருகிறார்கள்.

சிறு பத்திரிகைகள்
வருவதாய்த் தெரியவில்லை.

முதலமைச்சர் எழுதுவதால்தான்
கடிதம் என்ற ஒன்று
இருப்பதே தெரிகிறது.

இலக்கிய வித்தாரங்களை
எல்லாரும் பேசுகிறார்கள்.

திருவிழாவுக்குப் பாட்டு வைத்தால்
கேட்பதை விடுத்துக் கடுப்பாகிறார்கள்.

அரிசி மண்ணில் விளைவதைப்
பிள்ளைகள் அறியாதிருக்கிறார்கள்.

நல்ல மழை பார்த்து
நாளாயிற்று.

குடி மக்களைக்
'குடியுங்கள் மக்களே' என்னும்
அரச நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை.

கல்விக் கூடங்களில்
சாலைப் பயணங்களில்
வண்டி நிறுத்தங்களில்
பன்மாடக் கொட்டகைகளில்
எங்கும் எங்கும் கட்டணக் கொள்ளை.
கட்டுப்பாடில்லை... கணக்கு வழக்கில்லை.

ஆசிரியர் பயிற்சிக்கு
ஆள் சேர்வதில்லை.

தமிழ் படிப்போர்
தமிழறிந்தோர்
தட்டுப்படவில்லை.

வாகனப் பெருக்கம்
சாலைகளைத் தின்றுவிட்டன.

பதிப்பகத்தார் பஞ்சப்பாட்டு
இன்னும் ஓயவில்லை.

பொறியாளர்க்கு எட்டாயிரமாம்
புரோட்டா பிசைய பதினெட்டாயிரமாம்.

தோனி அடிக்கடி வென்று
கிரிக்கெட்டை மறக்கடித்துவிட்டார்.

எல்லாப் பெண்களும்
எக்கச்சக்கமாகப் படித்திருக்கிறார்கள்.
எப்படிப் பெண் கேட்பதென்றே
தெரியவில்லை.

வெஸ்ட் இண்டீசா
அப்படியென்றால் என்ன என்று
பாப்பா கேட்கிறாள்.

காய்கறி வாங்குவதற்குக்
கட்டுப் பணத்தை
உடைக்க வேண்டியிருக்கிறது.

முடிவெட்டும் கட்டணத்தைவிட
பக்கத்தூர் முருகனுக்கு
முடியிறக்கிவிட்டு வருவது
செலவு குறைவு.

ஆளில்லாத கண்ணாடி அறை
குழல் விளக்கொளி
குளிர்பதன வசதி
அதற்குக் குருதியும் சதையுமாய்
மனிதக் காவல்
தானியங்கு பணமெடுப்பு நிலையங்களாம்.

நகர் மையத்திலிருந்து
நகர மைந்தன் வெளியேற்றப்பட்டவாறே
இருக்கிறான்.

கடைத்தெருக் கடைகளில்
யார்க்கும் தேவையில்லாதது
எப்போதும் விற்கிறது.

யார்யாரோ நாயகர்கள்.
எல்லாரும் இயக்குநர்கள்.

காக்கைக்கு முன்பெழுந்து
ஓடுவோர் தொகை பெருகிவிட்டது.

பல்குச்சியைத் தவிர
எல்லாமே செல்பேசியில் இருக்கிறதாம்.

ஐபோனாம் அறுபதாயிரமாம்
நமக்குப் பால் சுரந்தூட்டிய பசுவினம்
அழிந்துகொண்டிருப்பதை
யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.

உண்மையாகவே
இந்தக் காலம் நன்றாக இல்லை !

- கவிஞர் மகுடேசுவரன்.

Relaxplzz


:)

Posted: 10 Nov 2014 03:30 AM PST

:)


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி வ...

Posted: 10 Nov 2014 03:10 AM PST

பாலைவனத்தில் பயணம்
செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத்
தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும்
நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால்
உயிர் போய்விடுமோ என்று நினைத்த
போது தூரத்தில் ஒரு குடிசை போல
ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன.

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."...

அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர்
வருமா என்பது சந்தேகமாக இருந்தது.

அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர்
பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.
ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத்
தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க
ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.

தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில்
ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம்
இன்பமயமாகி விடுமல்லவா?

இது போல் தாங்களும் செய்ய முடிவிருந்தால் மட்டும் பகிருங்கள்

Relaxplzz

ஷ்ஷ்ஷ்.....சத்தம் போடாம படிங்க..... நாளைக்கு கேள்வி கேட்பேன்.... மார்க்கப்பொல...

Posted: 10 Nov 2014 02:50 AM PST

ஷ்ஷ்ஷ்.....சத்தம் போடாம படிங்க..... நாளைக்கு கேள்வி கேட்பேன்....

மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.

முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன்.

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

"லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

குளிர் காலத்தில் குயில் கூவாது.

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
புழுக்களுக்கு தூக்கம கிடையாது.

நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

Relaxplzz


மிகுந்த களைப்புடன் வீட்டிற்குள் நுழையும்போது அம்மா நீட்டும் ஒரு கப் காஃபிதான் தே...

Posted: 10 Nov 2014 02:40 AM PST

மிகுந்த களைப்புடன் வீட்டிற்குள் நுழையும்போது அம்மா நீட்டும் ஒரு கப் காஃபிதான் தேவாமிர்தம்.

உண்மையெனில் லைக் செய்யவும் (y)


:)

Posted: 10 Nov 2014 02:30 AM PST

:)


ஒரு ஜப்பானிய சுற்றுலாப் பயணி மிகவும் ஆர்வத்துடன் சிங்காரச் சென்னையில் வந்து இறங்...

Posted: 10 Nov 2014 02:15 AM PST

ஒரு ஜப்பானிய சுற்றுலாப் பயணி மிகவும் ஆர்வத்துடன் சிங்காரச் சென்னையில் வந்து இறங்கினார். அவர் ரஜனி நடித்த முத்து படத்தை மூன்று தடவையும் பாபா படத்தைப் பத்துத் தடவையும் எந்திரன் படத்தை ஏழு தடவையும் சிவாஜிபடத்தைப் பதினொரு தடவையும் பார்த்தவர்.

சென்னை விமான நிலையத்தில் இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி சென்னை நகரை சுற்றிப்பார்க்கத் தன்னைக் கொண்டு செல்லும்படி ஓட்டுனரிடம் கூறினார்.

அவனும் அவரை குலுக்கோ குலுக்கு என்று குலுக்கிய படி ஆட்டோவை ஓட்டினான். முதலில் ஒரு ஹொண்டா அவர்களை முந்திச் சென்றது oh Honda, made in Japan… going faster என்றார் அந்த ஜப்பானியர்.

சிறிது நேரம் கழித்து ஒரு யமாஹா அவர்களை முந்திச் சென்றது . oh Yamaha, made in Japan… going faster என்றார் அந்த ஜப்பானியர்.

சிறிது நேரம் கழித்து இன்னொரு டொயோட்டா அவர்களை முந்திச் சென்றது. oh Toyota, made in Japan… going faster என்றார் அந்த ஜப்பானியர்.

பயணம் முடிந்தது கட்டணம் எவ்வளவு என்றார் ஜப்பானியர். ஆட்டோ ஓட்டுனர் ஆயிரம் ரூபா என்றார். ஐயோ அத்தனை தொகையா என்றார் ஜப்பானியர்.

ஓட்டுனர் ஆட்டோ மீட்டரைக் காட்டி meter…….made in India…..going very very faster….என்றான்

Relaxplzz

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது என்...

Posted: 10 Nov 2014 01:59 AM PST

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்
பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது
என்று சொல்வதுண்டு...

பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக
என்று சொல்லலாம் என்றாலும்,
"தலைமுறை தலைமுறையாக"
என்பதே உண்மை பொருள் ஆகும்.

அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

நமக்கு முந்தைய தலைமுறைகள்:
நாம் - முதல் தலைமுறை

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி -
ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் -
ஆறாம் தலைமுறை

பரன் + பரை - ஏழாம் தலைமுறை

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள்
என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
என்று பொருள் வரும்.
எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

Relaxplzz


"தமிழ் - தமிழர் பெருமை" - 1

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் யார் யாருக்கு என்ன கிடைக்கனுமோ அதுதான் கிடைக்கும் என்று நம் த...

Posted: 10 Nov 2014 01:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

யார் யாருக்கு என்ன கிடைக்கனுமோ அதுதான் கிடைக்கும் என்று நம் தோல்விகளை புதைத்துவிட்டு........
அடுத்த தோல்விக்கு ரெடியாகிவிடுகிறோம்

- திவ்யா ராஜன்

கோடி ரூபாய்க் கொடுத்தாலும் இது போன்ற அனுபவம் கிடைக்காது

Posted: 10 Nov 2014 01:40 AM PST

கோடி ரூபாய்க் கொடுத்தாலும் இது போன்ற அனுபவம் கிடைக்காது


:)

Posted: 10 Nov 2014 01:30 AM PST

:)


ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களைய...

Posted: 10 Nov 2014 01:15 AM PST

ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.

அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது. ''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.

எலி சொல்லியது,'சும்மா கத்தாதே,கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்..

Relaxplzz

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது . முதல் முடிச்சு - பெண் தன...

Posted: 10 Nov 2014 01:00 AM PST

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது .

முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க
வேண்டும்

2 - ஆம் முடிச்சு -
கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க
வேண்டும்

3 - ஆம் முடிச்சு - நல்ல
குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.

Relaxplzz


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் தன்னை அறிந்தவர் எவருமில்லை..!! - Sheila Chowdry

Posted: 10 Nov 2014 12:50 AM PST

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

தன்னை அறிந்தவர்
எவருமில்லை..!!

- Sheila Chowdry

பெற்ற தாயை ரோட்டில் விடுபவர்களை திட்டுவதாக இருந்தால் `நாய்` என்ற வார்த்தையை பயன்...

Posted: 10 Nov 2014 12:40 AM PST

பெற்ற தாயை ரோட்டில்
விடுபவர்களை திட்டுவதாக இருந்தால் `நாய்` என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர் ...

ஏனெனில் நாய்களுக்கு மனிதர்களை விடத் தாய்பாசம் அதிகம்!!


:)

Posted: 10 Nov 2014 12:30 AM PST

:)


பெருந்தலைவர் காமராஜர் கூறியது :- ***********************************************...

Posted: 10 Nov 2014 12:15 AM PST

பெருந்தலைவர் காமராஜர் கூறியது :-
*****************************************************

ஒரு கோயில் திறந்தால்
இந்துக்களுக்கு மகிழ்ச்சி

ஒரு சர்ச் திறந்தால் கிறிஸ்துவர்களுக்கு மகிழ்ச்சி

ஒரு மசூதி திறந்தால் இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி

ஒரு நூலகம் திறந்தால் புத்திசாலிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி

ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் நம்மை படைத்த கடவுளுக்கே மகிழ்ச்சி.

Relaxplzz

0 comments:

Post a Comment