டீ குடிப்பதற்காக சாலையோரத்திலுள்ள கடையொன்றிற்குச்செல்கிறீர்கள்.
அங்கே,
பிச்சைக்காரர் போன்ற தோற்றத்திலுள்ள வயது முதிர்ந்தவரொருவர்
உங்களையணுகுகிறார்.
சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள்.
அவரவர் அவரவரரின் வேலையைப்பார்க்கின்றனர்.
"எப்பா தம்பி..
ஒரு டீ வாங்கித்தாயா.."
உங்களின் மனம் இளகுகிறது.
டீமாஸ்டரிடம்,
"அண்ணே, இன்னொரு டீ போடுங்க.." என்று சொல்கிறீர்கள்.
அப்போது சட்டென்று அந்த பிச்சைக்காரர் டீ மாஸ்டரிடஞ் சொல்கிறார்.
"சக்கரை கொஞ்சந்தூக்கலா..
மேல கொஞ்சம் நுரைபோட்டு போட்டுக்கொடுப்பா.."
கட்.
இப்போது உங்களின் மனநிலை என்னவாயிருக்கும்?
அடுத்து இதேசூழல்.
பிச்சைக்காரருக்கு பதிலாக நீண்ட நாட்களாய்க் காணாத உங்களது பழைய நண்பர்.
கொஞ்சநேரம் பேசிவிட்டு டீ மாஸ்டரிடம் ரெண்டு டீ சொல்லப்போகிறீர்கள்.
அதற்குள்ளாக நீங்களே உங்கள் நண்பரிடங் கேட்கிறீர்கள்..
டீ எப்படி?
லைட்டா மீடியமா ஸ்ட்ராங்கா?
அவரும் ஏதோ சொல்கிறார்.
கட்.
இப்போது முதற்காட்சிக்குவாருங்கள்.
பிச்சைக்காரரின் டீபருகும்வழக்கத்தை ஏன் நீங்கள் கேட்கவில்லை?
பதிலில்லைதானே?
மூன்றாமவர்களிடமும் நம்மவர்களிடமும்
நாம் எப்படி உண்மையில் நடந்துகொள்கிறோமென்பது விளங்குகிறதுதானே?
via ஃபீனிக்ஸ் பாலா

0 comments:
Post a Comment