Wednesday, 12 November 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:P :P

Posted: 12 Nov 2014 09:30 AM PST

:P :P


நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் இரகசிய தருணங்களைப் படம் பிடித்து ரச...

Posted: 12 Nov 2014 09:00 AM PST

நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் இரகசிய தருணங்களைப் படம் பிடித்து ரசிப்பவர்களா..?!

Very Sorry.. உங்களின் மானம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.

அது எப்படி… என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?" என்று யோசிக்கிறீர்களா..?! அந்த புதிருக்கான விடையின் பெயர் 'ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software) .

அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

"செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் Delete செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல 'ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான 'ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் 'வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!

ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்… உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…!

Relaxplzz


நான் வளரும் பொழுது, நான் பேசியதை கேட்டு, அம்மா என்றழைத்துவிட்டன் என்ற மகிழ்ச்சி...

Posted: 12 Nov 2014 08:30 AM PST

நான் வளரும் பொழுது,
நான் பேசியதை கேட்டு,
அம்மா என்றழைத்துவிட்டன் என்ற மகிழ்ச்சி என் அம்மாவிற்கு,
பேசிவிட்டேன் என்ற மகிழ்ச்சி என் அப்பாவிற்கு,
எனக்கோ என் நாவில் தமிழ் வந்துவிட்ட மகிழ்ச்சி...

தமிழால் வளர்ந்தவர்கள் பலர் என்றாலும்,
தமிழால் வீழ்ந்தவர்கள் எவரும் இல்லை என்பதே பெருமை... (y) (y)

Relaxplzz


உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள் 1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும...

Posted: 12 Nov 2014 08:00 AM PST

உபயோகமான வரிகள். படித்து பகிருங்கள்

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.
சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

Relaxplzz

இதைப் படித்தால் பென்ஸ், பி.எம்.டபிள்யு கார்களை நெனச்சிகூட பார்க்கமாட்டீங்க! ஜெர...

Posted: 12 Nov 2014 07:30 AM PST

இதைப் படித்தால் பென்ஸ், பி.எம்.டபிள்யு கார்களை நெனச்சிகூட பார்க்கமாட்டீங்க!

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, "பென்ஸ்' மோட்டார் தொழிற்சாலையில், "பிட்டர்' ஆக வேலை செய்கிறார்.

பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பல அரிய தகவல்கள் கிடைத்தன. அது: தம்பி… இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது… ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, "டாட்டா' கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது… நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்! இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்… இங்கே லேபர், "சீப்!' அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, "அட்வான்டேஜ்' ஆகிப் போகிறது. இந்தியாவில் லேபர் எவ்வளவு, "சீப்' என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி…' என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.

ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்… இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்… ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்… ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்…

இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க! கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்…

ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,' என்றார் அந்த நண்பர்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசியம்...

Relaxplzz


நம்ம நாராயணசாமி கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை பேராசிரியர் ஒருகேள்வி கேட்டார...

Posted: 12 Nov 2014 07:00 AM PST

நம்ம நாராயணசாமி கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை பேராசிரியர் ஒருகேள்வி கேட்டார்....

பேராசிரியர் : தமிழில் முதலில் வெளிவந்த மௌன திரைப்படம் (silent movie) எது ....?
நாராயணசாமி கொடுத்த பதிலில் இருந்து பேராசிரியர் கேள்வி கேட்பதையே நி.றுத்தி விட்டாராம்...இதான்அவர் சொன்ன பதில்(கேள்வி)
.
.
.
.
.

.
.
.
.
."படம் மௌனம் என்று சொல்கிறீர்கள்..அப்புறம் உங்களுக்கு எப்படி தெரிந்தது அது தமிழ் படம் என்று " ..?

:P :P

Relaxplzz

ஒன்றுக்கும் உதவாதவன், உருப்பிடாதவன், தண்டச்சோறு, தடிமாடு என்று நம் முன்னால் அதிக...

Posted: 12 Nov 2014 06:30 AM PST

ஒன்றுக்கும் உதவாதவன்,
உருப்பிடாதவன்,
தண்டச்சோறு,
தடிமாடு
என்று நம் முன்னால் அதிகம் திட்டினாலும்
உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு,
அயர்ந்து தூங்கும் பொழுது
நமக்கே தெரியாமல்
நம் கால்களை நீவிவிட்டு
நமக்காக சில துளி கண்ணீர் விடுவார்
நமக்கு பின்னால்.
'தந்தை'...!!!

♥ ♥

Relaxplzz


மூன்று விஞ்ஞானிகள் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.வழியில் வயலில் ஒர...

Posted: 12 Nov 2014 06:00 AM PST

மூன்று விஞ்ஞானிகள் ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தனர்.வழியில் வயலில் ஒருகறுப்பு ஆடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

முதல் விஞ்ஞானி; "இந்த கிராமத்தில் எல்லா ஆடுகளும் கறுப்பாக இருக்கும் போலிருக்கிறது".

இரண்டாம் விஞ்ஞானி; "அதெப்படிச் சொல்ல முடியும்?இங்கிருக்கும் ஆடுகளில் சில கறுப்பு என்ற முடிவுக்கு வேண்டுமானால் நாம் வரலாம்".

மூன்றாம் விஞ்ஞானி; "இந்த கிராமத்தில் இந்த ஆட்டின் நாம் காணும் ஒரு பக்கம் நிச்சயம் கறுப்பு என்று உறுதியாகச் சொல்லலாம்".

மெத்தப் படித்தால் இப்படித்தான்!

# நல்லா வேளை இதற்கு ஒரு கமிட்டி போடாமல் இருந்தால் சரி. :P :P

Relaxplzz

சின்ன வயசுல நம்மகுத் தெரிஞ்ச பெப்சி (PEPSI) இதுதான்...

Posted: 12 Nov 2014 05:30 AM PST

சின்ன வயசுல நம்மகுத் தெரிஞ்ச பெப்சி (PEPSI) இதுதான்...


வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும்...

Posted: 12 Nov 2014 05:00 AM PST

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.

போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"

அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."

மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."

போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."

அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."

மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"

போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."

அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."

மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"

அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."

போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"

மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்."

ஆஹா செத்தாண்டா சேகரு..!!!!

Relaxplzz

நொடிப்பொழுதில் நாம் வீணாக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும், ஏதோ ஒரு விவசாயின் 9...

Posted: 12 Nov 2014 04:30 AM PST

நொடிப்பொழுதில் நாம் வீணாக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும், ஏதோ ஒரு விவசாயின் 90 நாள் உழைப்பு என்பதை மறந்துவிடக்கூடாது..

- புரட்சி


முன்பின் அறியாத கடவுளை நான் நம்புவதில்லை என்றார் அந்த ரயில் பயணி... அருகிலிருந்...

Posted: 12 Nov 2014 04:00 AM PST

முன்பின் அறியாத கடவுளை நான் நம்புவதில்லை என்றார் அந்த ரயில் பயணி...

அருகிலிருந்த சக பயணி, அதனாலென்ன! நீங்கள் கடவுள் தன்மையை நம்புகிறீர்களே, அது போதும் என்றார்...

நாத்திகருக்குப் புரியவில்லை...

இந்த ரயிலை இயக்குபவரை நீங்கள் முன் பின் அறிந்ததில்லை. ஆனால் பயணம் செய்கிறீர்கள். சற்று முன் நீங்கள் அருந்திய தேநீரை விற்பனை செய்தவரை உங்களுக்குத் தெரியாது. நம்பி வாங்கினீர்கள்...
.
உலகில் உள்ள நல்ல தன்மைகளை நம்புவதே கடவுளை நம்புவதற்குச் சமம் என்றார் சகபயணி...!

Relaxplzz

வாழ்நாளில் உழைப்பவனிடம் நாடகம் , ஒரு நாள் உழைப்பவனுக்கு மட்டும் விளம்பரமா... து...

Posted: 12 Nov 2014 03:30 AM PST

வாழ்நாளில் உழைப்பவனிடம் நாடகம் ,
ஒரு நாள் உழைப்பவனுக்கு மட்டும் விளம்பரமா...

துடைப்பத்தை கூசிய விரல்களுடன் பிடிக்கும் உங்களுக்கு,
அவனுக்கு ஒரு கையுறை வழங்கவேண்டும் என தோன்றியதுண்டா...?

Relaxplzz


How are you என ஆங்கிலத்தில் கேட்பவர்களை விட, . அழகிய தமிழில் 'எப்படி இருக்கீங்க'...

Posted: 12 Nov 2014 03:00 AM PST

How are you என
ஆங்கிலத்தில்
கேட்பவர்களை விட,
.
அழகிய தமிழில்
'எப்படி இருக்கீங்க' என
கேட்பவர்களே வசிகரிக்கிறார்கள். (y)

- காளிமுத்து @ Relaxplzz

சிரிக்க தெரியாதவனின் பகல் நேர வாழ்க்கையும் இருட்டாகத்தான் இருக்கும்... "வாய் விட...

Posted: 12 Nov 2014 02:30 AM PST

சிரிக்க தெரியாதவனின் பகல் நேர வாழ்க்கையும்
இருட்டாகத்தான் இருக்கும்...
"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் "


எறும்பு தொல்லை தீர! ******************** உங்க வீட்ல எறும்பு தொல்லை இருக்கா. அது...

Posted: 12 Nov 2014 02:00 AM PST

எறும்பு தொல்லை தீர!
********************

உங்க வீட்ல எறும்பு தொல்லை இருக்கா.
அது தீர ஒரு சூப்பர் ஐடியா.

ஒரு சின்ன கிண்ணத்துல சர்க்கரையோட‌ மிளகாய் பவுடர் மிக்ஸ் பண்ணி வச்சிடுங்க...

எறும்பு சர்க்கரைன்னு நினைச்சி சாப்பிடும்....

அப்போ அதோட நாக்கு காரத்துல எரியும்...

அப்போ எந்த எறும்பு தண்ணீர் தண்ணீர் தொட்டிக்கு வரும்...

நீங்க பின்னாடி இருந்து தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுங்க...

எறும்பு செத்துடும்...எப்படி என் ஐடியா????!!!

இந்த கடிய விட எறும்பு கடி பரவாயில்லைன்னு தோணுதோ :P :P

Relaxplzz

உங்கள் வாழ்கையில் ஒரு தடவையாவது மருத்துவர், பொறியாளர், வக்கீல், தேவைப்படுவார்கள்...

Posted: 12 Nov 2014 01:30 AM PST

உங்கள் வாழ்கையில் ஒரு தடவையாவது
மருத்துவர்,
பொறியாளர்,
வக்கீல்,
தேவைப்படுவார்கள்..
ஆனால் உங்கள் வாழ்கையில்
ஒவ்வொரு நாளும்,
மூன்று வேளையும்,
விவசாயி தேவைப்படுவார்..

விவசாயத்தை காப்பாற்றுங்கள்..

Relaxplzz


எப்போ கல்யாண ஆல்பத்தை பார்த்தாலும், ;-) . .. . . . . . . .. . . . . . . . . ....

Posted: 12 Nov 2014 01:00 AM PST

எப்போ கல்யாண
ஆல்பத்தை பார்த்தாலும், ;-)
.
..
.
.
.
.

.
.
..
.
.
.
.
.
.
.
.
.

வீட்டம்மா முதலும்
கடைசியுமா நம்ம
கால்ல
விழுந்து ஆசீர்வாதம்
வாங்கின
போட்டோவைத்தான்
முதல்ல
கண்ணு தேடுது.

:P :P

- Ravikumar Mgr

Relaxplzz

அக்னி ஏவுகணை சோதனை நடந்த 1989-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதிக்கு முதல் நாள் அப்போத...

Posted: 12 Nov 2014 12:30 AM PST

அக்னி ஏவுகணை சோதனை நடந்த 1989-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதிக்கு முதல் நாள் அப்போதைய பாதுகாப்புத் துறை மந்திரி கே.சி.பந்த், ஏ.பி.ஜே. அப்துல் கலாமிடம், "உங்கள் ஏவுகணை திட்டத்தின் வெற்றியை கொண்டாட என்ன செய்யலாம்?" என்று கேட்டார்..

உடனே அப்துல் கலாம் கேட்டது "இம்ராத் ஆய்வு மையத்தில் நடுவதற்கு ஒரு லட்சம் ,மரக்கன்றுகள் கொடுங்கள்!"

Relaxplzz


கணவனைக் காய் வாங்கி வரச் சொன்னாள் மனைவி. கணவனும் போய் வெண்டைக்காய் வாங்கி வந்தா...

Posted: 12 Nov 2014 12:00 AM PST

கணவனைக் காய் வாங்கி வரச் சொன்னாள் மனைவி.

கணவனும் போய் வெண்டைக்காய் வாங்கி வந்தான்.
காயை வாங்கிப் பார்த்த மனைவி,''இது என்ன ,முத்தல் காயா வாங்கி வந்திருக்கீங்க?ஒரு காய் கூட வாங்கத் தெரியாதா?''என்று எரிந்து விழுந்தாள்.

மறு நாள் கடைக்குப் போன கணவன் இளம் பிஞ்சாகப் பொறுக்கி வாங்கி வந்தான்.மனைவி,''வெண்டைக்காய் இவ்வளவு பிஞ்சாக யாராவது வாங்குவாங்களா?அடுப்பில் ஒரு நொடியில் கூழாகி விடுமே.இந்த சின்ன வேலைக்குக் கூட நீங்கள் லாயக்கில்லை.''என்று பொரிந்தாள்..

அடுத்த நாள் கடைக்குப் போன கணவன்,
இன்று எப்படியும் நல்ல பேர் வாங்கவேண்டும் என்று நினைத்து,கடையில் காய்வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் சொல்லி நல்ல வெண்டைக்காய்களாக வாங்கிக் கொண்டு கம்பீர நடை போட்டு வீடு வந்து சேர்ந்தான்.

வெண்டைக்காயைப் பார்த்ததும் மனைவிக்கு ஆக்ரோசமே வந்து விட்டது,''ஏனய்யா,உனக்கு வெண்டைக்காயை விட்டால் வேறு காயே தெரியாதா?'' என்றாள்.
கணவனுக்கு மயக்கம் வந்தது.

Relaxplzz

மட்டன் பிரியாணி! ! ! ! பிரியாணிசெய்முறை உங்களுக்காகவும் ........ தேவையான பொருட்...

Posted: 11 Nov 2014 11:30 PM PST

மட்டன் பிரியாணி! ! ! !

பிரியாணிசெய்முறை உங்களுக்காகவும் ........
தேவையான பொருட்கள்;-

அரிசி - 1 கிலோ
மட்டன் - 1 கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
வொங்காயம் - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 10
பட்டை - 10
லவங்கம் - 10
ஏலக்காய் - 10
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
எலும்மிச்சை – 1
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
எண்ணெய் - 50 கிராம் (தேவைக்கு)
நெய் - 50 கிராம் (தேவைக்கு)
உப்பு - தேவைக்கு

கேசரிப்பவுடர் - தேவைக்கு
அரைக்க வேண்டியவை;-
இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.
பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5,மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்

செய்முறை;-

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய்இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரைநன்கு வதக்கவும்.

அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையு ம் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்துநன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன்மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார் .

Relaxplzz


"திருநெல்வேலி" என்று தெளிவாக வெள்ளைக்காரர்களால் உச்சரிக்க முடியும்.ஆனால் நம்மை க...

Posted: 11 Nov 2014 11:10 PM PST

"திருநெல்வேலி" என்று தெளிவாக வெள்ளைக்காரர்களால் உச்சரிக்க முடியும்.ஆனால் நம்மை கேவலப்படுத்தவே "டின்னவேலி" என்று அழைத்தார்கள்.....

"தமிழை" டமில் என்றார்கள் நாமும் TAMIL என்றே எழுதி வருகிறோம்."THAMIZH" என்பதே ஆங்கிலத்தின் உண்மையான வரி வடிவம்.

அதுபோலவே

வேலுரை "வெள்ளூர்" என்றும்...
திருச்சியை "ட்ரிச்சி" என்றும்....

வெள்ளைக்காரர்கள் நம் மொழியை அடிமைப்படுத்த உச்சரித்த பெயர்கள்.அவை நமக்கெதற்கு"

- பெ.மணியரசன்

Relaxplzz

வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும்...

Posted: 11 Nov 2014 10:38 PM PST

வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்?

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.

சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.

உண்மை வரிகள் ....

•பிறந்த நாட்டை விட்டு பிரிந்து உறவுகளை விட்டுவிட்டு தனியனாய் உரிமைகள் அற்று சிதறி கற்பனை வாழ்வில் மட்டுமே கனவுகளில் லயித்து நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது எங்கள் வாழ்க்கை..!

•எனக்கொரு கனவு கடனில் இருக்கும் வீட்டை என் காலத்திலாவது கட்டி மீட்டிட வேண்டும்..!

•நண்பனுக்கொரு கனவு தன்னோடு கஷ்டம் போகட்டும் தன் தமையன்களுக்காவது நல்ல படிப்பை நல்கிட வேண்டும்..!

•அறைத் தோழன்னுக்கோர் கனவு அப்பாவின் ஆப்பரேசனுக்கு பணம் சேர்த்து மீளாத் துயரில் இருக்கும் குடும்பத்தை மீட்டிட வேண்டும்..!

•தோழியின் கனவு தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து பார்த்து மகிழ்ந்திட வேண்டும்..!

•இப்படியாய் நாங்கள் கனவுகள் வெவ்வேறு பணம் ஒன்றே பிரதானமாய் எல்லோரும் வெளிநாட்டில்..!

•காய்ச்சல் வந்ததென்றால் கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமேன்றால் ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில் நாங்களும் அனாதைகள்தான்.
நாடுகடந்து வாழ்வதால் நாங்களும் அகதிகள்தான்..!

•அம்மா அழைக்கிறாள் உன்முகம் பார்த்து நாளாச்சு.. கண்ணுலையே நிக்குற.. வந்து காட்டிட்டு போ உன் முகத்தைன்னு..!

•தகப்பன் சொல்கிறார் தங்கச்சிக்கு மாப்ள பாத்துட்டேன்.. கல்யாணத்துக்கு பணம் பத்தல அனுப்பி வைப்பான்னு..!

•தம்பி கேட்கிறான் அண்ணா..நான் நடந்தே பள்ளிக்கூடம் போறேன் சைக்கிள் ஒன்னு வாங்கி தாணான்னு..!

•தங்கை கேட்கிறாள் கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வருவியான்னு..!

•முகத்தில் மலர்ச்சி காட்டி உள்ளத்தால் அழுகின்றோம் எப்போ விடியும் எங்களின் வாழ்க்கையென்று..!

Relaxplzz


"சமுக கட்டுரைகள்" -2

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ண...

Posted: 11 Nov 2014 10:29 PM PST

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...

தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....

இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...

இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்n அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... சூடு அல்ல சுவடு...

சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்....

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்.... நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 1

ஒருவர் தனது திருமணத்திற்காக கல்யாண சத்திரம் புக் செய்ய சென்றார்.......சத்திரம் அ...

Posted: 11 Nov 2014 10:00 PM PST

ஒருவர் தனது திருமணத்திற்காக கல்யாண சத்திரம் புக் செய்ய சென்றார்.......சத்திரம் அலுவலகம்மூட பட்டு இருந்தது .மூடபட்ட கதவின் மேல் ஒரு வாசகம் ஒட்டப்பட்டு இருந்தது.......

அந்த வாசகம் இதுதான்....
.
.
.
.
.
.
.
.
.
.
.
"அலுவலகம் 1 மணி முதல் 3 மணி வரை மூடப்பட்டு இருக்கும் .....இந்த சமயத்தை திருமணத்திற்கான உங்கள் மறு பரிசீலனைக்கு உபயோக படுத்திக்கொள்ளுங்கள் "

:P :P

Relaxplzz

இலைகளினால் உருவாக்கப்பட்ட ஆடை......

Posted: 11 Nov 2014 09:40 PM PST

இலைகளினால் உருவாக்கப்பட்ட ஆடை......


சும்மா... சும்மா... 5

பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக மகள் வர்ஷிணியுடன் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினான் சூரியா....

Posted: 11 Nov 2014 09:28 PM PST

பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக மகள் வர்ஷிணியுடன் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினான் சூரியா.

ஸ்டேஷனில் ஐநூறு ரூபாயும் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு அனுப்பினார் எஸ்.ஐ.

எஸ்.ஐ. அங்கிள் என் பிரெண்டோட அப்பா தான் ஏம்ப்பா அவருக்கு பணம் கொடுத்தீங்க.

அதை கொடுத்தா தான் அவங்க நமக்கு பாஸ்போர்ட் தருவாங்க.
இது தான் லஞ்சமாப்பா. கண்கள் விரிய கேட்டாள்.

அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலிருந்து அழுது கொண்டே வரும் தன் மகள் ஸ்வேதாவை ஆதரவாக தூக்கிய எஸ்.ஐ. காரணம் கேட்க.

நேத்து நீங்க என் பிரெண்டு வர்ஷினியோட அப்பாகிட்ட லஞ்சம் வாங்கினீங்களாம் பேட் அங்கிளோட பொண்ணும் பேட் பொண்ணுதான்னு சொல்லி என் கூட பேசமாட்டேன்னு சொல்லிட்டா என்றாள் அழுதபடி.

ஒரு கணம் திடுக்கிட்டு போன எஸ்.ஐ. மனதுக்குள் நினைத்து கொண்டார். இனிமேல்
.
.
.
.
...
.
..
.
,
.
.
.
.
எது வாங்கினாலும் யாருக்கும் தெரியாமல் தான் வாங்க வேண்டும் என....

;-)

Relaxplzz


"நெகிழ வைத்த நிஜங்கள்"

உடல் இளைக்க கிரீன் டீ :- கிரீன் டீ-யின் பயன்கள் :- 1 கேன்சர் உருவாவதை தடுக்கிற...

Posted: 11 Nov 2014 09:01 PM PST

உடல் இளைக்க கிரீன் டீ :-

கிரீன் டீ-யின் பயன்கள் :-

1 கேன்சர் உருவாவதை தடுக்கிறது.

2சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.

3இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

4ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும்,
முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.

5எடை இழப்பிற்கு உதவி செய்கிறது .

6.முதுமை அடைவதை தடுக்கிறது ,

7.இளமையாக இருக்க உதவுகிறது.

8.சீரான செரிமானத்திற்கு உதவுகிறது .

9.குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.

10.சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது .

11.எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

12.சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.

1.கிரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது .

2.நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம்.

3.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன.இது உடலில் உள்ள கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது .இதனால் கொழுப்பு இழக்கப்படுகிறது, உடல் எடை குறைக்கபடுகிறது .

4. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது.உடல் எடையும் குறைக்கபடுகிறது .

Relaxplzz


"உணவே மருந்து"

நீயா,நானா? மரணப் படுக்கையில் இருந்த ஒரு முதியவர்,தன மனைவியிடம் பேசிக் கொண்டிருந...

Posted: 11 Nov 2014 08:32 PM PST

நீயா,நானா?

மரணப் படுக்கையில் இருந்த ஒரு முதியவர்,தன மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

முதியவர் : "லதா,நம்முடைய கடையை மூத்த மகன் ராமுக்குக் கொடுத்துவிடு".

மனைவி : "அதை அடுத்த மகன் ராஜாவுக்குக் கொடுத்து விடுவோம்.அவன் ஒரு புத்திசாலி".

முதியவர் :"சரி,நமது லாரியை மூன்றாவது மகன் முருகனுக்குக் கொடுத்துவிடு".

மனைவி :"ஆனால் என் தம்பி தான் அதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் அவன் குடும்பத்துக்கு அது வேண்டுமே"?

முதியவர் : "சரி,சரி,கிராமத்திலிருக்கும் வீட்டை நம் மகள் சாந்திக்குக் கொடுத்து விடு".

மனைவி :"உங்களுக்குத் தெரியுமா? சாந்திக்கு அந்த வீடு பிடிக்காது.எனவே அதை இளைய மகள் மீனாவுக்குக் கொடுத்து விடுவோம்".

முதியவர் :(கோபத்துடன்) "இப்போது செத்துக் கொண்டிருப்பது யார்? நீயா,...நானா"?....

:P :P

Relaxplzz


குசும்பு... 3

0 comments:

Post a Comment