Thursday, 16 October 2014

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


ஜீவா என்னும் சினிமா - பலே! பலே!! கிரிக்கெட் என்பது எப்படி முழுக்க முழுக்கப் சாத...

Posted: 16 Oct 2014 10:29 AM PDT

ஜீவா என்னும் சினிமா - பலே! பலே!!

கிரிக்கெட் என்பது எப்படி முழுக்க முழுக்கப் சாதி சுரண்டல் கிடங்காக இருக்கிறது என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளாராம் இயக்குநர் சுசீந்திரன். உண்மையிலேயே இது ஒரு படம் அல்ல - சமூகத் தொண்டு- விழிப்புணர்வும்கூட என்கிறார்கள்!

ஜீவா என்ற கதாநாயகனை உருவாக்கி, அவனுக்குக் கிரிக்கெட்டில் மிகப் பெரிய அளவிற்குத் திறமை இருந்தும் இந்திய அணியில் இடம் கிடைக்காததற்குக் காரணம் என்ன? ரஞ்சி டிராஃபி என்பது என்ன? அதில் இடம் பிடிப்பது யார்? தேர்வு செய்வதற்கு என்ன அளவுகோல் என்பதை சும்மா புரட்டிப் புரட்டி எடுத்துள்ளாராம்.

கருத்துள்ள படமா பாருங்க நண்பர்களே. மனித மாண்புகளும், மனித நேயமும் வலுப்பெறனும்..அதான் சிறந்த படம்!


Posted: 16 Oct 2014 07:19 AM PDT


காவல்நிலையத்திற்குப் போகும் போது, ரவுடியாகவே இருந்தாலும் பிளேட கூட கீழபோட்டுட்டு...

Posted: 16 Oct 2014 02:05 AM PDT

காவல்நிலையத்திற்குப் போகும் போது, ரவுடியாகவே
இருந்தாலும் பிளேட கூட கீழபோட்டுட்டுத்தான்
போவா, ஆனா இங்கே என்னடானா 22வயசு பையன்
கத்தி எடுத்துட்டு காவல்நிலையத்திற்குப் போனானாம்,
எஸ்.ஐ.யேவே இடுப்புல குத்துனானாம்..! கொஞ்சம்
நம்பற மாதிரி பொய் சொல்லுங்கப்பா.

மூன்று பேருக்கு 15 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது. ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதா...

Posted: 15 Oct 2014 08:16 PM PDT

மூன்று பேருக்கு 15 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது.
ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதாவது அவர்கள் கேட்கலாம்..

முதல் ஆள்,"எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்" என்றான்.

இரண்டாம் ஆள், "எனக்கு சிறையில் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்"

மூன்றாவது ஆள்,"எனக்கு ஒரு லட்சம் சிகரெட்கள் வேண்டும்"

15 வருடம் கழித்து மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்..

முதல் ஆள்," நான் நிறைய தெரிந்து கொண்டேன் ஒரு லைப்ரரி அமைப்பேன்"

இரண்டாம் ஆள்,"நான் உடலை வலுவாக்கினேன் ஜிம் வைப்பேன்"

மூன்றாம் ஆள், நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்"என்றான்

எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம் சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான் என்று.

அவன் சொன்னான், "தீப்பெட்டி கேக்க மறந்துட்டேன்ப்பா..

போட்டியில் ஜப்பான் காரனும்,இந்தியனும் கலந்துகொண்டார்கள்.... ஒரு லிட்டர் பெட்ரோலி...

Posted: 15 Oct 2014 11:34 AM PDT

போட்டியில் ஜப்பான்
காரனும்,இந்தியனும்
கலந்துகொண்டார்கள்....
ஒரு லிட்டர் பெட்ரோலில்
எவ்ளோ தூரம்
போகிறோம்,என்பதுதான்
போட்டி...
ஒரே கம்பெனியின்
தயாரிப்பான
இரண்டு பைக்குகள்...
முதலில் ஜப்பானியர்
போட்டியை துவங்கினார்,
1லிட்டரில் 40
கி.மீ.சுற்றி வந்தார்,பெட்ரோல்
தீர்ந்துவிட்டது..,
அடுத்து வந்த நம்மநாட்டுகாரன்
,அதே 1 லிட்டரில் 40 கி.மீ
வண்டி நின்றது.அப்பொழு
துதான் தனக்கு தெரிந்த
மொத்த வித்தையையையும்
இறக்கினான்.,
பெட்ரோல் டேங்
மூடியை திறந்து வாயால்
ஊதிவிட்டு....... ஸ்டார்ட்
செய்தான். 2 கிமீ ஓடியது.
வண்டியை.தரையில்
வழப்பக்கமா சரிச்சி போட்டு......
மீண்டும்,ஸ்டார்ட்
செய்து 2கிமீ.ஓட்டினான்.
அப்புறம் இடப்பக்கம்
சரிச்சு போட்டு.....2
கிலோமீட்டர் ஓட்டினான்.
ஆகமொத்தம் போட்டில
நம்மஆளு ஜெயிச்சிட்டான்..
ஜப்பான் காரன்
சொன்னான்,பைக்க
கண்டுபிடிச்சது என்னமோ நாங்கதான்,
ஆனால் அதை எப்படிலாம் ஓட்ட
வேண்டும் என்பதை உங்களிடம்
இருந்துதான் கற்றுகொள்ள
வேண்டும்.

0 comments:

Post a Comment