Relax Please: FB page daily Posts |
- மூளைக்கொரு வேலை
- :)
- மரணப்படுக்கையில் இருந்த அந்த மனிதனுக்காக பிரார்த்திக்க வந்தார் பாதிரியார். பக்க...
- இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களின் நினைவுநாள்..... 03.01.1740 அன்...
- :)
- நமக்கு அழகியாய் தெரியும் பெண்கூட; அவளுடைய கணவணுக்கு பிசாசுதான்... #கணவன்_மனநிலை...
- :)
- ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான். அந்த பெண் "என்னை கை விடமாட்டி...
- இஞ்சினியரிங் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு.. // பகிர்ந்து மாணவர்கள் பயன் பெற உதவு...
- FBம் ட்விட்டரும் போரடிக்குதா? வாழ்க்கைல ஏதாவது உருப்படியா செய்ய நேரம் வந்திருச்ச...
- Iphone6 Rs.500 only ன்னு ஒரு மெயில் வந்துருக்கு ...அடையார் ஆனந்த பவன் போயி நாலு...
- :) Relaxplzz
- பெண்களே.. சகோதரிகளே.. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் புகைப்படங்களை பகி...
- நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல...
- வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...!!!" அதற்கு அவமானம் தெரியாது.....
- அருமை
- :) Relaxplzz
- ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் ந...
- சத்தான உணவை சாப்பிட்டு, கடும் உடற்பயிற்சிகள் செய்து, தசைகளை, உடலை வலுவேற்றி மிக...
- நீயும் நானும் வாழ இல்லம் வேண்டாம், ஒரு குடையும் கொஞ்சம் மழையும் இருந்தால் போதும...
- :) Relaxplzz
- திருமணம் செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்று யோசிக்கும் ஆணா நீங்கள்...??? உடனே செ...
- நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து நம்ம ஊருக்கு ஒரு பயணம். இரவு 8.10 சென்னை...
- உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் கடவுள் கொடுத்த ஒரே செல்வம...
- :) Relaxplzz
- மாணவன் : டீச்சர்...நேத்து நீங்க சொன்னா மாதிரியே.. இன்னைக்கி நாங்க அஞ்சு பேரும் ச...
- எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்து...
- சில நேரங்களில் சிலர் சம்பளமின்றியே பாதுகாவலாகிறார்கள்... ;-) - முத்துப்பேட்டை ம...
- மாங்காய் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
மூளைக்கொரு வேலை Posted: 16 Oct 2014 09:40 AM PDT |
Posted: 16 Oct 2014 09:30 AM PDT |
Posted: 16 Oct 2014 09:15 AM PDT மரணப்படுக்கையில் இருந்த அந்த மனிதனுக்காக பிரார்த்திக்க வந்தார் பாதிரியார். பக்கத்தில் ஓர் இருக்கை இருந்தது. தனக்குப் பிரார்த்திக்கத் தெரியாதென்றும், சில ஆண்டுகளாய் இறைவனுக்காக இருக்கை போட்டு, அதில் கடவுள் இருப்பதாய்க் கருதி உரையாடி வருவதாகவும் சொன்னான். "இதுவே போதும்! இனி ஏன் பிரார்த்தனை!! விடைபெற்றார் பாதிரியார். இருக்கை விவகாரம் குடும்பத்துக்குத் தெரியாது. மறுநாள் அந்த மனிதன் இறந்தான். படுக்கையைவிட்டு எழுந்து தலையை எதிரிலுள்ள இருக்கையில் தலைவைத்திருந்தான். கேள்விப்பட்ட பாதிரியார் சொன்னார், "கடவுளின் மடியில் கடைசி மூச்சை விட்டிருக்கிறான். இது எத்தனை பேருக்கு வாய்க்கும்?" இதயத்தில் அன்பிருந்தால் எதிர் இருக்கையிலும் இறைவன் இருப்பான். :) :) Relaxplzz |
Posted: 16 Oct 2014 09:00 AM PDT இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களின் நினைவுநாள்..... 03.01.1740 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிஜய கட்டபொம்மு மண இணையருக்கு மகனாக பிறந்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு ஆண் உடன்பிறப்புகளும், ஈஸ்வர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு பெண் உடன்பிறப்புகளும் இருந்தனர். ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் "பாஞ்சாலன்" நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. இந்த அரச மரபில் 47வது மன்னனாக வந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 02.02.1790 இல் பாஞ்சாலங்குறிச்சியில் அரசுக் கட்டில் ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனது துணைவியார் வீரஜக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. 09 ஆண்டுகள், 08 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனிடம், கிழக்கிந்தியக் கம்பெனியார் 1793 இல் கப்பம், வரி என்பன கேட்டனர். 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797-1798 இல் முதல்முறையாக போர் தொடுக்கப்பட்டு, போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன்துரை தோற்று ஓடினார். நெல்லை மாவட்டக் ஆட்சியர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார். பல இடங்களுக்கு அலைக் கழித்தார். இறுதியில் 10.09.1798 இல் இராமநாதபுரத்தில் செவ்வி கண்டார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டு வெற்றி வீரராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தடைந்தார். 05.09.1799 இல் பானர்மன் என்ற ஆங்கில தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. போரில் பல வெள்ளையர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்றுவிட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தளபதிகளோடு சித்தார்த்தி ஆண்டு ஆவணித்திங்கள் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை வழியே விரைந்து சென்றார். 09.09.1799 இல் வெள்ளையர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. 01.10.1799 இல் புதுக்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். 16.10.1799 இல் கயத்தாற்றில் தூக்கில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை அமைந்துள்ளது. தோழமையுடன் தமிழ்ச்செல்வன் Relaxplzz ![]() |
Posted: 16 Oct 2014 08:50 AM PDT |
Posted: 16 Oct 2014 08:40 AM PDT |
Posted: 16 Oct 2014 08:30 AM PDT |
Posted: 16 Oct 2014 08:15 AM PDT ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான். அந்த பெண் "என்னை கை விடமாட்டியே " என்று கேட்டாள் . அவன் "நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் " என்று சொன்னான் . ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது . அப்போ பையன் கேட்டான் " இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா" ? அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி . அந்த பையனுக்கு பார்வை இல்லை. அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள். சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் . " என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ " என்று... Relaxplzz |
Posted: 16 Oct 2014 08:00 AM PDT இஞ்சினியரிங் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு.. // பகிர்ந்து மாணவர்கள் பயன் பெற உதவுங்கள் // Cognizant நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்க்கான நேர்முகத் தேர்வு சென்னையில் October-17 அன்று நடைபெற உள்ளது. மேலதிக தகவல்கள் : Job Description: Any Graduate freshers are eligible. BE / B.TECH / ME / M.TECH / MCA / MSC IT / MSC / MBA/LIFE SCIENCE GRADUATES ARE NOT ELIGIBLE. Desired Candidates: Should have good communication skill Willingness to work in night shifts is mandatory Should not have any outstanding arrears Cognizant Walkin Details: Walk-in Date: 15th to 17th October 2014 Interview Timings: 10 AM - 1 PM Interview Venue: Cognizant Technology Solutions, Old.no.165/New.no.110 Menon Eternity Building, St'Mary's Road, Alwarpet, Chennai-18. //பகிர்ந்து பயன்பெறுங்கள்// Relaxplzz ![]() |
Posted: 16 Oct 2014 07:50 AM PDT |
Posted: 16 Oct 2014 07:40 AM PDT Iphone6 Rs.500 only ன்னு ஒரு மெயில் வந்துருக்கு ...அடையார் ஆனந்த பவன் போயி நாலு பேரு நைட்டு டிபன் சாப்பிட்டாலே பில்லு 600 ரூபாய் வருது .. இவனுக ஐபோன் 500 ரூபாய்க்கு தரேன்னு சொல்றானுக... ரெண்டு இட்லிய கெட்டி சட்னியோட உருட்டி பார்சல் பண்ணி அனுப்பி வைப்பாங்க போல ;-) - நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் |
Posted: 16 Oct 2014 07:30 AM PDT |
Posted: 16 Oct 2014 07:15 AM PDT பெண்களே.. சகோதரிகளே.. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் புகைப்படங்களை பகிரவேண்டாம் என்ற வேண்டுகோள் அடிக்கடி பலருடைய பதிவுகளாக வருவதை பார்க்கமுடிகிறது. அதற்கு அவர்கள் சொல்கிற காரணம் , அந்தப் படங்களை மார்ஃபிங் செய்து தவறாக சித்தரித்து நிர்வாணப்படங்களாக வெளியிட்டு விடுவார்கள் என்பதுதான். அவர்களின் வேண்டுகோள் உண்மையிலேயே ஒரு வித அக்கறையில் "பெண்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே" என்ற நல்லெண்ணம் காரணமாகத்தான் என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு பின்னால் பிற்போக்குத்தனமும் பெருஞ்சோகமும் இருப்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இதுவரைக்கும் எந்த ஆம்பள ஆட்களுக்கும் இதுபோன்ற எந்த கோரிக்கையும் வந்ததில்லை. காரணம் என்ன? நாம் ஆம்பளை.. நம்ம மூஞ்சிகளை கிராபிக்ஸ் செஞ்சு போட்டா ஒரு நாயும் சீண்டாது. அப்படியே போட்டாலும் நமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. யார் கண்டார் , அந்த பலான கிராபிக்ஸ் வீடியோவை பார்த்து நாம் ரசிக்கவும் செய்யலாம், அதை நண்பர்களுக்கு பெருமிதம் பொங்க காட்டவும் செய்யலாம். அவர்கள் அவமானப்பட்டு கூனி குறுகும் ஒரு விஷயம் நம்மை மட்டும் எதுவுமே செய்வதில்லை. ஒரே காரணம் என்ன? அவர்கள் பெண்கள், நாம ஆண்கள். இங்கு பிரச்சினை என்ன? பெண்களா..? இல்லவே இல்லை. நிச்சயம் ஆண்கள் தான். கலாச்சாரம் , கற்பு என்றெல்லாம் ஜல்லியடித்து பல ஆண்டுகாலமாக அவர்கள் மீது ஆண் சமூகம் செய்துவரும் வன்முறையை ஏன் நாம் நிறுத்தவில்லை ? ஒரு பெண்ணின் உடம்பை புனிதப்படுத்துதல் என்ற பெயரில் அவர்களை மேலும் மேலும் மன உளைச்சல்களுக்கு ஆளாக்குகிறோம் என்பது நமக்கு ஏன் உறைக்கவில்லை? ஒரு பெண் உடம்பை கணவனைத்தவிர வேறு யாராவது பார்த்துவிட்டால் , அவ்வளவு தான்.. அந்த குடும்பத்துக்கே பேரவமானம்... அந்தப் பெண் அதன்பிறகு வாழத்தகுதியற்றவள்.. அவளின் புனிதம் கெட்டுப்போய்விட்டது.. இதுதானே இங்கு காலம் காலமாக நமக்கு போதிக்கப்பட்டு வருகிறது? சினிமாவில் கூட என்ன செய்கிறார்கள்? ஒரு பெண்ணை கற்பழிக்கக்கூட வேண்டாம், அவள் ஜாக்கெட்டை கிழித்துவிட்டு அறையிலிருந்து தலைமுடியை கலைத்துவிட்டு வந்தாலே போதும் அந்த பெண்ணை அவமானப்படுத்த. ஒரு ஆம்பளையை அவமானப்படுத்தவேண்டுமென்றால் கூட அவனை பொம்பளை என்று சொன்னால் போதும். ஆம்பள என்பது அவ்வளவு உசத்தி இங்கே..! இந்த ஆம்பளத் திமிர் தானே, ஒரு பொண்ணு போட்டோவை நிர்வாணமாக்கி ரசிக்க வைக்கிறது? ஒரு பொண்ணு குளிப்பதை படம் எடுத்து அந்த பெண்ணை அதை வைத்தே மிரட்டி படுக்க கூப்பிடுகிறது? இந்த ஆம்பளத்திமிர் தானே கூட்டத்தில் ஒரு பொண்ணு சிக்கினால் அவள் மார்பகத்தை இடிக்க வைக்கிறது? என்ன காரணம்? ஒண்ணு ஆம்பளத்திமிர் இன்னொன்று பெண்களால் இது எதையும் வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் அது அவர்களுக்குத்தான் அவமானம். அவர்களோடு சேர்த்து அவர்கள் குடும்பமே அவமானப்படவேண்டும். அதுதானே..? இந்த ஆம்பளத் திமிரை அடக்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்காத நாம, பெண்களை மட்டும் என்ன சொல்கிறோம்? "நீ பேஸ்புக் ல போட்டோ போடாதே... வாட்ஸப் ல add பண்ணாத.. ஜீன்ஸ் போடாத..!" ஏனென்றால் அவர்களின் உடம்பு தான் நமக்கு புனிதம். அதைத் தொடர்ந்து புனிதப்படுத்தி வருவதும் அதை காப்பாற்றிவருவதும் மட்டுமே நாம் அவர்கள் மேல் காட்டுகிற அதிகபட்ச அக்கறை..! - Sivasankaran Saravanan Relaxplzz |
Posted: 16 Oct 2014 07:00 AM PDT நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை... அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்...அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை... நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை... 15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது... இது சட்டத்தில் இருப்பதுதான்...நமக்குதான் தெரியவில்லை.... license இல்லையா vehicle papers இல்லையா... பணத்த எடுனு போலிஸ் சொன்னா... நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி செல்லான்வாங்கிக்கோங்க.. உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே... தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம். Relaxplzz ![]() |
Posted: 16 Oct 2014 06:50 AM PDT வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...!!!" அதற்கு அவமானம் தெரியாது...!!!" விழுந்தவுடன் அழுது முடித்து, திரும்பவும் எழுந்து நடக்கும்...!!! Relaxplzz ![]() |
அருமை Posted: 16 Oct 2014 06:40 AM PDT |
Posted: 16 Oct 2014 06:30 AM PDT |
Posted: 16 Oct 2014 06:15 AM PDT ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் நாட்டின் உடையது, உங்கள் உயிர் உங்களுடையது " என்றான்.. எனவே அனைவரும் அமைதியாக இருந்தனர், இது தான் "மனம் மாற்றும் கருத்து ". ஒரு பெண் மேசையில் படுத்திருந்தாள், ஒரு கொள்ளைக்காரன் "நங்கள் கற்பழிக்க வரவில்லை கொள்ளையடிக்க வந்திருக்கிறோம், ஒழுங்காய் கீழே உக்காரு " என்றான். இது தான் "தொழில் முறை யுக்தி", கவனம் சிதறாமல் இருப்பதற்கு. கொள்ளையடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒருத்தன் கேட்டான் "எவ்வளவு பணம் இருக்குது னு எண்ணுவோம்". இன்னொருவன் " அட முட்டாளே, டிவி'ல நியூஸ் போடுவாங்க அதுல பாத்துக்கலாம்" என்றான். இது தான் "அனுபவம்" என்பது, திறமைகளை விட பெரியது. அவர்கள் கொள்ளை அடித்து சென்ற பிறகு வங்கி மேலாளர், ஊழியரிடம் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள் என்றார், ஆனால் அவன் "நாம ஒரு 10 கோடி எடுத்துட்டு, மொத்தம் 50 கோடின்னு கணக்கு சொல்லிடலாம்" என்றான். இது தான் "அலைகளை நோக்கி நீந்து" என்பது. அதை கேட்டு மேலாளர் சொன்னார், "மாதா மாதம் கொள்ளை நடந்தால் நல்லா இருக்கும்" இது தான் "அலுப்பின் வெறுப்பு", வேலையை விட சொந்த சந்தோசம் தான் முக்கியம் இவர்களுக்கு. மறுநாள் டிவி'யில் 100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. அந்த கொள்ளைக்காரன் ஆக்ரோஷத்துடன் "நாங்கள் உயிரை பணயம் வைத்து 30 கோடி தான் கொள்ளை அடித்தோம், ஆனால் அவர்கள் 70 கோடி கொள்ளை அடித்துவிட்டனர், கொள்ளை அடித்தவனை விட படித்தவனே மிக கேவலமாக நடந்து கொள்கிறான்" இதுவே "அறிவு தங்கத்துக்கு நிகரானது" என்று சொல்லப்படுகிறது. அந்த வங்கி மேலாளர் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார், கொள்ளை சம்பவத்தால் தான் இழந்த பங்கு சந்தையை மீட்டார். இது தான் "வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது". இப்பொழுது சொல்லுங்கள், இதில் யாரு உண்மையான கொள்ளைக்காரன் ?? #நம்மூரு_நிகழ்வு_இதுவே Relaxplzz |
Posted: 16 Oct 2014 06:00 AM PDT சத்தான உணவை சாப்பிட்டு, கடும் உடற்பயிற்சிகள் செய்து, தசைகளை, உடலை வலுவேற்றி மிக ஆரோக்கியமா இருக்கிற ஆணுக்கு (கறுப்பா இருந்தாலும் பிரச்சனையில்லை) மிஸ்டர் மெட்ராஸ் பட்டம். உணவைக் குறைச்சு, நிர்ணயிக்கப்பட்ட உடல் வளைவுகளும், அளவுகளும் வரணும்னு அதுக்கேத்த உடற்பயிற்சி செஞ்சு, முடி முதல் கால்விரல் நகம் வரை பாலிஷ் போட்டு, ஜீரோ சைஸ்ல இருக்கிற நோஞ்சான் பொண்ணுக்குத்தான்(கட்டாயம் வெள்ளைத் தோலா இருக்கணும்) மிஸ் மெட்ராஸ் பட்டமாம். என்னங்க இது அநியாயம் ? - Geeta Ilangovan. Relaxplzz ![]() |
Posted: 16 Oct 2014 05:45 AM PDT |
Posted: 16 Oct 2014 05:30 AM PDT |
Posted: 16 Oct 2014 05:15 AM PDT திருமணம் செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்று யோசிக்கும் ஆணா நீங்கள்...??? உடனே செய்து கொள்ளுங்க... ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' நல்ல மனைவி கிடைத்தால் நீங்க சந்தோஷமா இருப்பீங்க...!!! இல்லை என்றால் ஞானியாகி விடுவீங்க...!!! எப்படிப்பாத்தாலும் கடைசியில நாமதான் ஜெயிக்கரோமில்ல...!!! :P :P - Salem S N Arul Relaxplzz |
Posted: 16 Oct 2014 05:00 AM PDT நெல்லை எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து நம்ம ஊருக்கு ஒரு பயணம். இரவு 8.10 சென்னையில ஏறியதும் உடனே திருநெல்வேலி வந்து விடாதா என்று ஓரு ஏக்கம். கொஞ்ச தூரம் வரை வேடிக்கை பார்ப்போம். திருச்சி வரை ஒரு தூக்கம். பிறகு ரயிலில் மதுரை வர மறுபடியும் குட்டி தூக்கம் அங்க முழிச்சுக்குவோம். எப்போ நம்ம ஊரு வரும்னு ஒரு ஏக்கம் மனதில் இருக்கும். காலையில் நம்ம அப்பா/அம்மா,தம்பி/தங்கச்சிய பார்க்க போறோம் என்கிற சந்தோஷத்தில் மறுபடியும் ஒரு குட்டி தூக்கம். கோவில்பட்டி வந்ததும் மனசுக்குள்ள ஒரு பூரிப்பு. நம்ம எல்லைக்குள்ள வந்துட்டா மாதிரி. இன்னும் 1 மணி நேரத்துல ஊருக்கு போய்விடுவோம் என்ற அளவில்லாத சந்தோஷத்தில் இருப்போம். சங்கர்நகர் வந்ததும் மக்கா ஊருக்கு வந்துட்டேன் மக்கா திருநெல்வேலி ஸ்டேஷனுக்கு வந்துருடானு ஒரு ஃபோன போடுவோம் நம்ம உயிர் நண்பனுக்கு. அதிகாலை வந்ததும் ஒரு மனம் கலந்த காற்று வீசும் பாருங்க அய்ய்ய்யோ அப்படி ஒரு மனம் நமது மாவட்ட காற்றுக்கும் ஏதோ உணர்வு இருப்பது போல். திருநெல்வேலி தோராயமா காலை 8.00மணிக்கு இறங்கி நம்ம மண்ணுல கால வைச்சதும் உள்ளத்தில் ஒரு சிலிர்ப்பு வரும். சொர்க்கமே என்றாலும் அது நம்ம நெல்லை மாவட்டம் போல வருமா..! - Rajan Nellai. Relaxplzz ![]() |
Posted: 16 Oct 2014 04:45 AM PDT |
Posted: 16 Oct 2014 04:30 AM PDT |
Posted: 16 Oct 2014 04:15 AM PDT மாணவன் : டீச்சர்...நேத்து நீங்க சொன்னா மாதிரியே.. இன்னைக்கி நாங்க அஞ்சு பேரும் சேர்ந்து ஒரு பாட்டியை, ரோட்டுக்கு இந்த பக்கத்துல இருந்து அந்தப் பக்கமா கொண்டு வந்து விட்டோம் டீச்சர்...! :) டீச்சர் : வெரிகுட்...!! நல்ல காரியம்! வயசானவுங்க சாலையை கடக்க இப்படித்தான் உதவி செய்யணும்!!................. அதுசரி....... ஒரு பாட்டிக்கு எதுக்கு அஞ்சு பேர்....?! மாணவன் : பின்ன என்ன டீச்சர்...! அவங்க வரவே மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க...! நாங்க அஞ்சு பேரும்தான் சேர்ந்து இழுத்து பிடிச்சு கொண்டுவந்து விட்டோம்....! :O :O :P Relaxplzz |
Posted: 16 Oct 2014 03:59 AM PDT எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள் நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம். 1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும். 3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். 4. தொடர் விக்கல் நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 5. அஜீரணம் ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும். சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும். 6. வாயு தொல்லை வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும். 7. வயிற்று வலி வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும். 8. சரும நோய் கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும். 9. மூக்கடைப்பு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். 10. கண் எரிச்சல், உடல் சூடு வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 11. வயிற்றுக் கடுப்பு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். 12. பற் கூச்சம் புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும். 13. வாய்ப் புண் வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும். 14. தலைவலி பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். 15. வயிற்றுப் பொருமல் வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 16. அஜீரணம் ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும். ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும். 17. இடுப்புவலி சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும். 18. வியர்வை நாற்றம் படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும். 19. உடம்புவலி சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும். 20. ஆறாத புண் விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். 21. கண் நோய்கள் பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும். 22. மலச்சிக்கல் தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும். 23. கபம் வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும். 24. நினைவாற்றல் வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். 25. சீதபேதி சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும். 26. ஏப்பம் அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். 27. பூச்சிக்கடிவலி எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். 28. உடல் மெலிய கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். 29. வயிற்றுப்புண் பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். 30. வயிற்றுப் போக்கு கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும். 31. வேனல் கட்டி வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும். 32. வேர்க்குரு தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். 33. உடல் தளர்ச்சி முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும். 34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம். 35. தாய்ப்பால் சுரக்க அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும். 37. எரிச்சல் கொப்பளம் நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. 38. பித்த நோய்கள் கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும். 39. கபக்கட்டு நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும். 40. நெற்றிப்புண் நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும். 41. மூக்கடைப்பு இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது. 42. ஞாபக சக்தி வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும். 43. மாரடைப்பு சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம் 44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். 45. கை சுளுக்கு கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும். 46. நீரிழிவு அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும். 47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். 48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன் புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம் 49. உடல் வலுவலுப்பு ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும். 50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்! Relaxplzz ![]() இயற்கை வைத்தியம் |
Posted: 16 Oct 2014 03:50 AM PDT |
Posted: 16 Oct 2014 03:40 AM PDT |
Posted: 16 Oct 2014 03:30 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment