Thursday, 16 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


அன்னமிவள் வயதோ பதினாறு ஆண்டுகள் போயின அறுநூறு இன்னும் இவள் முதுமை எய்தவில்லை...

Posted: 16 Oct 2014 08:30 AM PDT

அன்னமிவள் வயதோ பதினாறு
ஆண்டுகள் போயின அறுநூறு
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை
என்னதான் ரகசியம் தெரியவில்லை

--- கவியரசு கண்ணதாசன்

பா விவேக்


அமெரிக்காவின் மிகப்பெரும் எம்பயர் ஸ்டேட் கட்டட் மாதிரி 30 மடங்கு பெரிதான பரமிடுக...

Posted: 16 Oct 2014 07:30 AM PDT

அமெரிக்காவின் மிகப்பெரும் எம்பயர் ஸ்டேட் கட்டட் மாதிரி 30 மடங்கு பெரிதான பரமிடுகளை 4500 ஆண்டுகட்கு முன்பு கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை..
உலகத்தின் மாபெரும் வல்லரசை 2800 ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கிய ரோமாபுரி மன்னர்கள் வளர்த்த இலத்தின் மொழி, இன்று யாருடைய தாய்மொழியும் இல்லை..
மகான் புத்தர் தம் புரட்சிகரமான கருத்துகளை 2600 ஆண்டுகட்கு முன் பரப்பிய பாலி மொழி, அறவே அழிந்துவிட்டது..
உலகை என் காலடியில் பணிய வைப்பேன் என்ற எழுச்சியோடு படை நடத்திச் சென்று ஆசியாவின் முக்கிய பகுதிகளை வென்ற மகா அலெக்சாந்தர் 2300 ஆண்டுகட்கு முன்பு பேசிய கிரேக்க மொழி, இன்று திரிந்து விட்டது..
வரலாற்றின் போ்கையே மாற்றி அமைத்த அன்பரசர் ஏசுநாதர் 2000 ஆண்டுகட்கு முன்பு தம் கருத்துகளை போதித்த அரமிக் மொழி (ஹுப்ரூ மொழியின் கிளை மொழி) இன்று வழக்கிழ்து விட்டது..
ஆனால், இந்தப் பழம்பெரும் மொழிகள் வாழ்ந்து சிறந்த காலத்தில் தானும் வளமாக வாழ்ந்து, இன்று தன் பழைய தோழமை மொழிகள் அனைத்தும் மாண்டு போன போதும், நீண்ட மனித வரலாற்றின் பார்வையாளனாக, இன்றும் இளமையோடு வாழும் ஓரே மொழி நம் தமிழ் மொழி மட்டுமே..
ஆனால், இந்த வளம் கொழிக்கும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள்.., தமிழ் மொழியை பேச தயங்குவது ஏன்??
என் தமிழுக்கு அழிவில்லை.....
தமிழில் பேச தயங்குவதால் தமிழுக்கு எந்த இழப்பும் இல்லை...!!


#Veerapandiya Kattabommannan... இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்...

Posted: 16 Oct 2014 06:25 AM PDT

#Veerapandiya Kattabommannan...

இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்...


வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று! இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் த...

Posted: 15 Oct 2014 09:29 PM PDT

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் இன்று!

இந்திய விடுதலைப் போராட்டம் வீரமும் தீரமும் கொண்டது. மகாத்மா காந்தி சத்தியாகிரகம் செய்வதற்கு முன், இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி துவங்குவதற்கு முன் வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்று போராடியவர்கள் பலர். அதில் முன்னின்று, வியூகம் அமைத்துப் போரிட்டவர்கள் பாளையக்காரர்கள். அந்தப் பாளையக்காரர்களில் முக்கியமானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். கட்டற்ற காளை போல் பொங்கியெழுந்து, வெள்ளையரோடு நேருக்கு நேர் நின்று, வீரசமர் புரிந்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். ஓங்காரம் எழுப்பி வெள்ளையனை மிரளச் செய்தவன். அவரின் நினைவு தினம் இன்று..

veerapandiya kattabomman (Vikatan)


0 comments:

Post a Comment