Thursday, 16 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 16 Oct 2014 06:50 PM PDT


ஐரோப்பிய யூனியனில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்.

Posted: 16 Oct 2014 11:54 AM PDT

ஐரோப்பிய யூனியனில்
தமிழீழ விடுதலைப்
புலிகள் மீதான
தடை நீக்கம்.

நான் லாரில கிளீனரா இருக்கும் போது ஆந்திரா-சட்டிஸ்கர்,ஆந்திரா-மஹாராஷ்டிரா எல்லைப்...

Posted: 16 Oct 2014 08:40 AM PDT

நான் லாரில கிளீனரா இருக்கும் போது ஆந்திரா-சட்டிஸ்கர்,ஆந்திரா-மஹாராஷ்டிரா எல்லைப்பகுதில நக்சல்கள் ஆதிக்கம் அதிகம்...

அந்த வழில போகனும்னா நக்சல் குழுவின் அனுமதி வேணும்...இல்லன்னா சில இடங்களில் லாரி மேல தாக்குதல் நடக்கும்..

நாலு மணிநேரத்துக்கு ஒரு தடவ அத்தனை லாரியும் ஒன்னா சேர்ந்து வரிசையா நிப்போம்..நக்சல் ஜீப் ரெண்டு வரும்...

20 லாரி இருந்தாலும் முன்னாடி ஒரு ஜீப் பின்னாடி ஒரு ஜீப் பாதுகாப்புக்கு வரும்...

கட்டணம் எவ்வளவு தெரியுமா?
7 வருசம் முன்னாடி வெறும் 20 மட்டும் ஒரு லாரிக்கு...அதுவும் அவிங்களுக்கு டீசல் போடவே சரியாகிரும்...அது நக்சல் ஏரியா..அங்க என்ன நடந்தாலும் நம்ம மேலதான் பழி விழும்னு தெரிஞ்சு நக்சல்கள் குடுக்கும் பாதுகாப்பு அது..சில இடங்களில் இரவில் பயணம் செய்ய அனுமதியே இல்லை....

நானே டிரைவரா மாறி போகும்போது சில வித்தியாசமான அனுபவமும் கிடைச்சிருக்கு..

ரோட்டு ஓரமா நிறுத்தி நானும்,இன்னொரு டிரைவரும் சமையல் செஞ்சுட்டு இருந்தோம்...திடீர்னு பரபரப்பா பத்து பேரு துப்பாக்கியோட வந்து சோறு,குழம்பு மட்டும் குடுன்னு கேட்டானுக...

குழம்பு ரெடியாகைலைன்னு சொன்னதும் துப்பாக்கிய தூக்கி ஓரமா வச்சுட்டு என்கூட சேர்ந்து வெங்காயம் உரிக்க ஆரம்பிச்சுட்டானுக...

சமையல் செய்யும் போதே சொல்லிட்டேன்...நீங்க எல்லோரும் சாப்பிட்டுட்டு அப்புறம் மத்தவங்கலுக்கு எடுத்துட்டு போங்கன்னு...ஏன்னா எனக்கு அப்பவே கம்யூனிசம் பேசும் தோழர்கள் பலரோட நட்பு இருந்தது...

பொறுமையா சாப்பிட்டுட்டு செல்வா மாமா பண்ணுன சமையலை மறுபடி செஞ்சு அவங்க கொண்டு வந்த பாத்திரத்துல எடுத்துட்டு போனாங்க...

போகும் போது செல்வா மாமா காலில் விழுந்துட்டான் ஒருத்தன்...எங்க மாமா கூட செலவுக்கு காசு எதுவும் வேணுமான்னு கேட்டப்போதான் அவங்க சொன்னாங்க நாங்க நக்சல் குரூப்புன்னு...

எங்க செல்வா மாமா ஊருக்கு திரும்பி வீரர் வரைக்கும் அதைத்தான் பேசிட்டு இருந்தார்....

நான் பார்த்த வரைக்கும் நக்சல்கள் பதவிக்கோ, பணத்துக்கோ, அதிகாரத்துக்கோ போராடுபவர்கள் அல்லர்.....

தனது வாழ்வுரிமைக்காக போராடும் ஒருவகையான போராளிகள் மட்டுமே....


வாழ்க்கையின் மதிப்பு என்னவென்பதை, வீணாக்கப்பட்டக் காலத்தை விட வேறெதுவாலும் தெளிவ...

Posted: 16 Oct 2014 07:40 AM PDT

வாழ்க்கையின் மதிப்பு என்னவென்பதை, வீணாக்கப்பட்டக் காலத்தை விட வேறெதுவாலும் தெளிவாகப் புரியவைக்க முடியாது. :(

@கனா காண்கிறேன்

"இந்தி - நேஷனல் லேங்குவேஜ் - இது கூட தெரியாம இந்தியாவுல இருக்கீங்களா???" "தமிழ்...

Posted: 16 Oct 2014 07:30 AM PDT

"இந்தி - நேஷனல் லேங்குவேஜ் - இது கூட தெரியாம இந்தியாவுல இருக்கீங்களா???"

"தமிழ் - இண்டர்நேஷனல் லேங்குவேஜ் - இதுகூட தெரியாம உலகத்துல இருக்கீங்களா??"

இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி என கிழக்கிந்திய கம்பெனியின் மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் அம்மாநிலத்தை தாண்டி சென்றதில்லை...

ஆனால் தமிழ் பல நாடுகளில் அலுவலக மொழி.. இங்கிலாந்தில் Call Center வேலைகளிலோ, பல மொழி சார்ந்த சார்ந்த வேலைகளின் மொழி பட்டியலில் ஜப்பானிய மொழி, சீன மொழியுடன் தமிழும் ஒரு உலக மொழியாக இருக்கும்... இந்தி என்றால் அங்கு என்னவென்றே தெரியாது...

@Agazhvaan GGanesh

2,500-year-old labyrinth discovered in Dharmapuri Archaeologists Believe It To...

Posted: 16 Oct 2014 07:00 AM PDT

2,500-year-old labyrinth discovered in Dharmapuri

Archaeologists Believe It To Be The Largest In The World

A 2,500-year-old labyrinth has been excavated in Kambainallur village in Dharmapuri district of Tamil Nadu.Archaeologists believe it could well be the largest in the world.With a complicated network of paths, labyrinths have been a fertility symbol associated with many cultures. They represent a unique pattern of consciousness and have been used as meditation tool since the Neolithic period.

Ancient people used to worship labyrinths to be blessed with a child, to attain success in their pursuits and for long life for their cattle, experts say."All the rituals were in practice since the ancient period. Every ritual followed today is just an extension of the fertility cult in this region," said Sugavana Murugan, who along with Sad hanandham Krishnakumar, discovered the site a month ago. Even though it is difficult to find one's way inside a labyrinth, it is believed that those who come out through the right path are blessed by the almighty , he said.

Soon after the discovery, the duo sent details with pictures to Jeff Saward, a London-based expert in the field of labyrinths and mazes, for his opinion. After studying it in detail, Saward said, "The pattern is exactly same as the one which is found on the clay tablet from Pylos in Greece, one of the oldest laby rinths in clay found in the world."

The labyrinths and mazes, according to Saward, have been found to be in existence since the Neolithic period. "Maze is a multi-curved category where we have multiple pathways to reach our goal whereas in labyrinths there is only one pathway which leads inexorably to the goal from the point of entry," said Saward, who is editor of `Caerdroia', the journal of mazes and labyrinths.

This square labyrinth found in Kambainallur contains seven paths. "This labyrinth has been under worship from time immemorial. It was found among cist burials, which has made it easy for archeologists to predict its age," said Murugan, who is a member of the Krishnagiri District Archaeological Research Centre.

Source:

http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=2500-year-old-labyrinth-discovered-in-Dharmapuri-05102014006005#

http://www.megalithindia.in/2014/08/a-mysterious-megalith-from-dharampuri.html

http://www.mcs.ca/vitalspark/2010_conciousness/209la01.html

In Tamil...Page 18...

http://epaper.dailythanthi.com/firstpage.aspx?keys=13


காதலிகளுக்கு மட்டும் அழகு குறைவதே இல்லை... அவர்களுக்கு வயதானாலும் கூட... முதல்...

Posted: 16 Oct 2014 06:05 AM PDT

காதலிகளுக்கு மட்டும் அழகு குறைவதே இல்லை...
அவர்களுக்கு வயதானாலும் கூட...

முதல் பார்வையில் எனது வயிற்றில் உருண்ட அதே உணர்வுகள் அவளை இப்போது பார்க்கும் போதும் உயிர்பெற்றுவிட்டன....

அவளை விட அவளது கணவனுடன் தான் அதிகம் பேசினேன்...
ஆனால்...
அவனை விட அவளைத் தான் அதிகம் கவனித்தேன்...

"ச்சீ... அடுத்தவன் மனைவியைப் போய் இப்படி,..", ஆறாம் அறிவு கேவலமாய் பார்க்கும் பார்வைகளை... ஆழ்மனது கண்டு கொண்டதாக தெரியவில்லை...

"அவனுக்கு மனைவி ஆகும் முன்னே எனக்கு காதலி..." இந்த கேடுகெட்ட ஆறுதலை ஆழ்மனது உதிர்க்கும் முன் அதை அழித்துவிடுகிறது அவளது ஐந்து மாதக் கைக்குழந்தையின் சிரிப்பு...

"இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று" தொலைவில் கேட்ட அந்த பாடலைப் பாடும் வானொலியை அடித்து நொறுக்கி விட எத்தனித்தது சிந்தனை...

எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் கடவுளை விட குடும்ப சூழ்நிலைகளே ஆட்கொண்டு விட்டன எங்களிருவருக்கும்...

காலத்தின் சாபக்கேடாய் அவளது திருமணத்திற்கே சென்று அட்சதை போடும் துர்பாக்கியவதியாய் ஆனேன்..

தாலி கட்டும் கடைசி நிமிடம் வரை அவளின் கண்கள் என்னையே வெறித்துகொண்டு இருந்தது... "இப்போதாவது உன் காதலை சொல்லுடா" என்ற பார்வைமொழி பரிதவித்தது...

தகுதியும் தைரியமும் இல்லாத நிலையில் ஒரு ஆணாய் இல்லாமல்... ஒரு கோழையாய் என்னால் அழ மட்டுமே முடிந்தது...

கல்யாணக் கோலத்தில் நின்று... திரைப்படங்களின் கதாநாயகனாய் திருமணத்தை நிறுத்தி தன் கரம் பற்றி இழுத்தால்.,,.என்னோடு ஓடிவர, அவளது கால்கள் தயாராய் தான் இருந்தது...

ஆனாலும் அவளின் அப்போதைய பார்வை
திராணியற்ற என்னை ஏளனம் செய்தது... கண்களில் காதலோடு கண்ணீரும் வழிந்தது...

காலங்கள் கரைந்தோடிய ஓர் நாளில் அவளை சந்தித்தேன்....

"ஹீ இஸ் மை கிளாஸ்மேட் ____ " என்று கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்...

அவளது கணவனோடு சில நிமிடங்கள் பேசிய பின் அவளின் முகம் பார்த்தேன்...
இன்னும் அவள் பார்வையின் மின்சாரத்தை எவனும் பிடுங்கவில்லை,,,

ஏக்கங்கள் ததும்பிய அவளது பார்வைகளை தவிர்த்து விட அவளிடம் விடை பெற்றேன்...

சிறிது தூரம் சென்ற பின் திரும்பினாள்...
நான் புன்னகைத்தேன்...
அவளும் புன்னகைத்தள்....

உடன் நடக்கும் அவளது கணவனின் கைகளை தன்னுடன் கோர்த்துக்கொண்டாள்...
இருவரும் நடந்து சென்றனர்...
நெருக்கமாக...
இன்னும் நெருக்கமாக...
இன்னும் இன்னும் நெருக்கமாக....

இப்போது தான் அவள் என் காதலை புரிந்துகொண்டாள்...
அதனால் அவளது கணவனை மேலும் காதலிக்க தொடங்கிவிட்டாள்...

காதலிகளுக்கு மட்டும் அழகு குறைவதே இல்லை அவர்கள் நமக்கு கிடைக்காமல் போனாலும் கூட..


தனிதனியே செய்யும் சாதம், கூட்டு, பொறியல், சாம்பார், ரசம் போன்ற பலவற்றை ஒரே பாத்த...

Posted: 16 Oct 2014 05:01 AM PDT

தனிதனியே செய்யும்
சாதம், கூட்டு,
பொறியல், சாம்பார், ரசம்
போன்ற
பலவற்றை ஒரே பாத்திரத்தில்
போட்டு கிளறுவதே சைனீஸ்
பாஸ்ட்புட்....

@பிரபின் ராஜ்

மனைவியை பெற்ற அப்பாவுக்கு தான் தெரியும், தீபாவளிக்கு துணி எடுக்க தன் மகளுடன் கடை...

Posted: 16 Oct 2014 04:57 AM PDT

மனைவியை பெற்ற
அப்பாவுக்கு தான்
தெரியும், தீபாவளிக்கு துணி எடுக்க தன்
மகளுடன்
கடைக்கு போன
மருமகன் என்ன
பாடுபடுவானோ என்று... :)

@இளையராஜா

ரஜினியின் அரசியல் பிரவேசம்!!!! ஆயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில் மக்கள் நலனில்...

Posted: 16 Oct 2014 03:45 AM PDT

ரஜினியின் அரசியல் பிரவேசம்!!!!

ஆயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆண்ட எத்தனையோ மன்னர்கள், பேரரசர்கள் உண்டு. தமிழனின் பெருமையாக அவர்கள் கட்டிய பல்லாயிரக்கணக்கான கோவில்களையும் மாட அரண்மனைகளையும், கொட்டாரங்களையும் நம்மால் காட்ட முடிகிறது. ஆனால் எனக்கு தெரிந்து மக்கள் நலனுக்காக மன்னர்கள் கட்டிய ஒரே ஒரு மருத்துவமனையையோ, கல்விக் கூடத்தையோ, ஆராய்ச்சி கூடத்தையோ, பயிற்சிக் கூடத்தையோ நம்மால் காட்ட முடியவில்லை.

மீனாக்ஷி அம்மன் கோவில் உலக அதிசயம், மகாபலிபுரம் சிற்பக் கலையின் உச்சம் என்று மார்தட்டும் நம்மால், அக்காலத்தில் பஞ்சத்திலும் பட்டினியிலும் செத்தவர்களுக்கு தொழில் கற்றுக் கொடுக்கவோ, அறியாமையை அகற்ற கல்வி கற்றுக் கொடுக்கவோ, பிணி தீர்க்கும் மருத்துவ வசதிக்கோ அரசர்கள் எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை. ஆயிரம் ஆண்டுகால கோவில் என்று பெருமையுடன் காட்டும் நம்மால் ஆயிரம் ஆண்டுகால கல்லூரி என்றோ, ஆயிரம் ஆண்டு கால மருத்துவமனை என்றோ காட்ட எதுவுமே இல்லை.

ஆனால் குடிக்கும் கூத்திற்கும் என்றும் ஆதரவு அளிக்கும் சமூகம் நம் தமிழ் சமூகம். கோவிலில் ஆடுபவர்களுக்கு கிராமத்தை எழுதி வைக்கும் பெருமை கொண்டது. அறிஞர்களும் அறிவியலாளர்களும், சிந்தனையாளர்களும் பட்டினியில் சாகும் போது ஆட்டக்காரர்களுக்கு அணி செய்து அழகு பார்த்த பரம்பரை நாம். அதனாலேயே அறிவும் அறிவியலும் சிந்தனையும் வளரவில்லை நம் சமூகத்தில். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லிய வள்ளுவருக்கு பிறகு இரண்டாயிரம் வருடம் தேவைப்பட்டது பிறப்பால் மனிதன் சமம் என்று பெரியார் வந்து சுயமரியாதை சொல்லிகொடுக்க!!

சுயமரியாதை இல்லாத, அடிமை குணத்துடன், பிற்போக்கு எண்ணம் கொண்ட, குறுகிய எண்ணத்துடன், சுயநலம் மிக்க அடுத்தவனுக்கு என்ன நடந்தாலும் தான் நல்ல இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, பொறாமையும் வஞ்சமும் கொண்ட, அறிவுசார் விசயங்களில் ஆர்வம் இல்லாத ஒரு இனமாகவே தமிழர் இனம் இருந்து வந்துள்ளது. விதிவிலக்குகள் இருக்கலாம். இன்றும் அவ்வாறே உள்ளது.

மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டு சிறுகுழந்தை கால்வாயில் விழுந்து இறந்தாலும் அஜித் விஜய் சண்டையே டுவிட்டர் ட்ரெண்டில் முன்னிலை வகிக்கிறது. வெப்சைட் நடத்துபவர்களிடையே ஒரு பேச்சு உண்டு. தமிழில் நடிகைகளை பற்றி நாலு வரி எழுதினால் போதும். வெற்றிகரமாக வெப்சைட் நடத்தலாம் என்று. முற்றிலும் உண்மை. உலகத்தை பற்றி கவலைப்படாமல் இன்று நீ கூத்தில் கவனம் செலுத்தினால் நாளை உன் குழந்தை கால்வாயில் சாகும் போது பக்கத்து வீட்டில் எந்திரன் படம் பார்த்துக்கொண்டு இருப்பர்.

அறிவியலாளர்களும், மெத்தபடித்தவர்களும் வெளிநாடு செல்கின்றனர் என்றால், "கூமுட்டைகளே! உங்களோடு சேர்ந்து என்னையும் இது எந்த நடிகையின் தொப்புள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட சொல்கிறீர்களா? நானாவது நானோ டெக்னாலஜி பற்றி ஆராய்கிறேன். உங்கள் பரம்பரையில் அறிவியலாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையை எனக்கு தெரியும்" என்று தான் அர்த்தம்.

புற நோயளியாக ஐம்பது ருபாய் கொடுக்க வக்கில்லாத தண்டம் எல்லாம் முன்னூறு ரூபாய்க்கு முதல் ஷோ பார்த்தால் உனக்கு எந்த முட்டாள் வைத்தியன் மருத்துவம் பார்ப்பான்? கூடங்குளம் வெடித்து எவன் செத்தால் என்ன, எனக்கு கரண்ட் வந்தால் போதும். யார் ஆட்சிக்கு வந்தால் என்ன டாஸ்மாக் போதும். புறணி பேச சினிமா கிசுகிசு போதும். சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி போன்ற அடிப்படை உரிமைகளை கூட ஆட்சியாளர்களிடம் கேட்டு பெறமுடியாத பொறுக்கி தின்னிகள் தான் நாம்.

இந்நிலையில் அடுத்த மன்னனை தேட ஆரம்பித்து விட்டோம். ஆயிரம் ஆண்டு கழித்து ஐநூறு கோடி வசூல் செய்த படம் எங்கள் முதல்வர் நடித்தது என்று வரலாறு பேசும். நாமோ சிறு குழந்தைகளை கால்வாயிடமும், வளர்ந்த மூடர்களை டாஸ்மாக்கிடமும் பறிகொடுத்து, எப்போதும் மூடர்களாய் எழுபிறப்பும் அறிவிலிகளாய் இருப்போம். வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!

வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!


வங்கியில் இரவல் பேனா கேட்டவர் சட்டைப் பையில் இரண்டு ஸ்மார்ட் போன்கள்! @பாஸ்கரன்

Posted: 16 Oct 2014 03:34 AM PDT

வங்கியில்
இரவல்
பேனா
கேட்டவர்
சட்டைப் பையில்
இரண்டு
ஸ்மார்ட் போன்கள்!

@பாஸ்கரன்

மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் கனவை நிறைவேற்றி நெகிழச்செய்த ஐதராபாத் போ...

Posted: 16 Oct 2014 03:31 AM PDT

மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் கனவை நிறைவேற்றி நெகிழச்செய்த ஐதராபாத் போலீஸ் கமிஷனர்...

மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றியது ஐதராபாத் காவல்துறை. சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவனை ஐதராபாத் போலீஸ் கமிஷனர் நாற்காலியில் உட்கார வைத்து சிறுவனின் வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளனர்.

சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவன் 'Terminally-ill' நோயாளி ஆவார். டெர்மினலி இல் என்றால் அவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கும். காரணம் இவருக்கு இருக்கும் நோய்க்கு எந்த வித சிகிச்சையும் பலனளிக்காது என்று முடிவுகட்டப்பட்ட ஒரு நோயாளி ஆவார் அவர்.

சாதிக்கிற்கு இருக்கும் நோய்க்கு மருத்துவ தீர்வு கிடையாது என்ற செய்தி அவரது குடும்பத்தினருக்கு 5 மாதங்கள் முன்புதான் தெரியவந்துள்ளது. இவர் எம்.என்.ஜே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆன்காலஜி என்ற அரசு மருத்துவக் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் சாதிக்கின் தந்தை மொகமது ரஹீமுதீன், விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவென்றே செயல்படும் 'மேக் எ விஷ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டு காவல்துறையில் உயர் பதவியாற்ற வேண்டும் என்ற சாதிக்கின் தீராத அவாவை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

அந்த அமைப்பின் உதவியுடன் ஐதராபாத் உயர்மட்ட காவல்துறையுடன் தொடர்பு கொண்டு சாதிக்கை ஒருநாள் கமிஷனர் நாற்காலியில் அமரவைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் நன்றாக இஸ்திரி போடப்பட்ட போலீஸ் சீருடை, பதக்கங்கள், சாதனை பேட்ஜ்கள், பளபளக்கும் ஷூக்கள், தெலங்கானா போலீஸ் என்று பொறிக்கப்பட்ட போலீஸ் துறை பெல்ட் ஆகியவற்றுடன் கமிஷனருக்கேயுரிய மிடுக்குடன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

ஒருநாள் கமிஷனர் கையெழுத்திடுவதற்காக கோப்புகள் சாதிக் மேசையில் வைக்கப்பட்டன.

ஐதராபாத் நகர கமிஷனர் எம்.மகேந்தர் ரெட்டி நெகிழ்ச்சியுடன் சாதிக்கை வரவேற்று தனது நாற்காலியில் சிறுவனை உட்காரச் செய்தார். சில மணி நேரங்கள் கமிஷனராக சாதிக் பணியாற்றவும் அனுமதித்தார்.

என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு சாதிக் சட்டென, "நான் ரவுடிகளைப் பிடிப்பேன்" என்றார் உற்சாகமாக. மேலும் நகரை அமைதியாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், போக்குவரத்து விவகாரங்களை கவனிப்பேன் என்றும் 10 வயது கமிஷனர் கூறி அனைவரையும் அசத்தினார்.

முன்னதாக புதிய கமிஷனரை எப்படி வரவேற்க வேண்டுமோ அத்தகைய சடங்குகளுடன் கமிஷனர் அலுவலகத்தில் சாதிக்கிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவன் சாதிக் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் நடந்து வந்த போது, 'புதிய கமிஷனரை' காவல்துறை ஊழியர்கள் வரவேற்றனர்.

அதன் பிறகே கமிஷனர் மகேந்தர் ரெட்டியின் அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்தார் சாதிக்.

செய்தியாளர்களிடம் சாதிக் கூறும் போது, "என்னுடைய 3 மாமாக்கள் ராணுவத்தில் சேவை புரிந்து வருகின்றனர். மேலும் இரண்டு பேர் கரீம்நகரில் காவல்துறையில் சேவை செய்து வருகின்றனர்" என்றார்.

மகனின் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்ட கசப்பான நிலையில் சற்றே மகிழ்ச்சியடைந்த தந்தை மொகமது ரஹிமுதீன், "எனது மகன் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் வாழ்க்கை அவனை வேறு ஒன்றிற்கு காத்திருக்கச் செய்துள்ளது" என்றார்.

"மரணத்தை எதிர்நோக்கும் சிறுவனின் கனவை நிறைவேற்ற முடிந்தது எங்களுக்கு மன நிறைவை அளிக்கிறது" என்று கமிஷனர் மகேந்தர் ரெட்டி தெரிவித்தார்

- தி இந்து


அடிவாங்கிய அரசாங்க பேருந்துகளில் 'அல்ட்ரா டீலக்ஸ்' என்று எழுதியிருப்பதை பார்க்கு...

Posted: 16 Oct 2014 03:17 AM PDT

அடிவாங்கிய அரசாங்க பேருந்துகளில் 'அல்ட்ரா டீலக்ஸ்' என்று எழுதியிருப்பதை பார்க்கும்போதெல்லாம் நடத்துனரிடம் கேட்க தோன்றுகிறது,

"சங்கூதுற வயசுல சங்கீதா...!!!"

- பூபதி முருகேஷ்

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போ...

Posted: 16 Oct 2014 02:46 AM PDT

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.

பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு..

- மாத்தியோசி

இதெல்லாம் நியாயமா?? நீங்களே சொல்லுங்க.. 1.பர்சனல் வொர்க் எதுவும் ஆபீஸ் கம்ப்யூட...

Posted: 16 Oct 2014 12:45 AM PDT

இதெல்லாம் நியாயமா?? நீங்களே சொல்லுங்க..

1.பர்சனல் வொர்க் எதுவும் ஆபீஸ் கம்ப்யூட்டர் ல பார்க்க கூடாது.facebook கூட திறக்க கூடாது ன்னு சொல்றாங்க. ஆனா ஆபிஸ் கம்ப்யூட்டர் ர வீட்டுக்கு கொண்டு வந்து விடிய விடிய ஆபீஸ் வொர்க் பாக்கலாம் ன்னு சொல்றாங்க.

2.கிளாஸ் ல பாடம் நடத்தறப்ப தூங்க கூடாது சொல்றாங்க. ஆனா வீட்ல தூங்கற நேரத்துல டீ குடிச்சி , முகத்த கழுவி, நின்னுட்டு, நடந்துட்டேவாது படிக்கணும் ன்னு சொல்றாங்க.

3.பரிட்சைக்கு ஒண்ணுமே படிக்கலைன்னு சொல்றாங்க. ஆனா,எக்ஸாம் ஹால் ல பக்கம் பக்கமா எழுதறாங்க. முதல் மதிப்பெண் வேற வாங்கறாங்க

4.நல்லா மேக்கப் போட்டு வறாங்க.இன்னைக்கு டைம் ஆயிட்டுன்னு சரியா பவுடர் கூட அடிக்கலைன்னு சொல்றாங்க.

5.தெரியாதுன்னு பதில் சொன்னா திட்டறாங்க.ஆனா பதில் தெரியாதுன்னு தெரிஞ்சே தான் கேள்வி கேக்கறாங்க.

6.பொய் பேசறது தப்பு ன்னு சொல்றாங்க.ஆனா உண்மைய பேசினா உதைக்கறாங்க.

7.பொண்ணுங்க ஏமாத்தறாங்க ன்னு மூச்சி வாங்க பேசறாங்க.ஆனா கடன் வாங்கியாவது டாப் பப் செய்றத மட்டும் நிறுத்தவே மாட்டறாங்க.

8.சூரியன் கூட விடிய காலைல எழும்புது.நீ ஏன் 10 மணி வரை தூங்கறன்னு கேட்கறாங்க.ஆனா சூரியன் சாயங்காலம் 6 மணிக்கே தூங்க போயிருது, அதனால தான் காலைல 6 மணிக்கே எழும்புது.நான் 10 மணிக்கு தான தூங்க போனேன்.இதை சொன்னா அடிக்க வறாங்க.

-ஆதிரா.

0 comments:

Post a Comment