Thursday, 9 October 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி !! திருச்சி அருகே கி.பி. 12-ம...

Posted: 09 Oct 2014 07:30 AM PDT

தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி !!

திருச்சி அருகே கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சக்கர வடிவ ஆயுதத்தின் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தொன்மை குறியீட்டாய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கல்தூண்
திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை குறிக்கும் வடிவம், சித்திரமேழி பெரிய நாட்டாரின் சின்னங்களான உடுக்கை, ஏர் கலப்பை, 2 போர் வாள்கள், சக்கர வடிவ ஆயுதம், 2 குத்துவிளக்குகள், ஒரு முக்காலியின் மேலே பூர்ணகும்பம் ஆகிய புடைப்பு சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அச்சிற்பங்களில் 19.5 செ.மீ, வெளிவிட்டம் அளவுடைய சக்கர வடிவ ஆயுதம் குறிப்பிடத்தக்கது ஆகும். தட்டையாக இல்லாமல் குவிந்த அமைப்புடையதும், மெல்லியதும், வெளிவட்டம் மட்டும் கூர்மையான நுனி உடையதுமான இதற்கு சக்குரும், சக்கர், சக்ரே, சலிக்கர் போன்ற பெயர்கள் உண்டு. இது பழங்கால போர் படை கருவிகளில் பாணிமுக்தா எனும் எறிந்து தாக்கும் வகையை சார்ந்தது.

அதிபயங்கர ஆயுதம்
ஆள்காட்டி விரலின் சுழற்சியாலோ அல்லது ஆள்காட்டி விரல், கட்டை விரல் ஆகிய இருவிரல்களால் பிடிக்கப்பட்டு முன் கையின் அதிவிரைவு அசைவாலோ எறிந்து தாக்கப்படும் இது எதிரிகளின் தலை, கை, கால்களை துண்டிக்கக்கூடிய அதிபயங்கர ஆயுதமாகும். 12 செ.மீ. முதல் 30 செ.மீ. வரையிலான விட்டம் அளவுகளுடன் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் இரும்பு அல்லது பித்தளை ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதம் முறையே 40 முதல் 60 மீட்டர் அல்லது 80 முதல் 100 மீட்டர் வரை பறந்து சென்று எதிராளியை தாக்கக்கூடியது.

இந்த ஆயுதம் தமிழகம், பஞ்சாப் போன்ற இந்திய மாநிலங்களில் மட்டுமின்றி திபெத், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆயுதத்தை கையாளும் வல்லவர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர் என்பது இக்கண்டுபிடிப்பின் சிறப்பம்சமாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி - தஞ்சாவூர் பக்கம்

பா விவேக்


வளரி (BOOMERANG) தமிழகத்தில் மட்டும் தான் ........! வளரி என்னும் ஆயுதம் இந்தியா...

Posted: 09 Oct 2014 06:30 AM PDT

வளரி (BOOMERANG) தமிழகத்தில் மட்டும் தான் ........!

வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன் படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார்.

இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.

தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

"வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்)

இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.

ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது.

ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம்.

இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்.

பா விவேக்


வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் ! தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றை...

Posted: 09 Oct 2014 05:30 AM PDT

வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர் !

தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.

வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.

அடர் சிவப்பு – cramoisy

அடர் நீலம் - perse / smalt

அடர் மஞ்சள் - gamboge

அயிரை/ அசரை - sandy colour

அரத்த(ம்) (நிறம்) - heliotrope / haematic

அருணம் - bright red, colour of the dawn;

அவுரி(நிறம்) - indigo

அழல் நிறம் – reddish colour of fire

ஆழ் சிவப்பு - cinnabar

ஆழ் செந்நீலம் (ஊதா) - claret

ஆழ் பழுப்பு - brunneous

ஆழ் பைம்மஞ்சள் - citrine

ஆழ்சிவப்பு - cramoisy

ஆழ்நீலச் சிவப்பு – aubergine

இடலை (ஆலிவ்வு) (நிறம்) – olivaceous

இருள் சிவப்பு - puccoon

இருள்சாம்பல் - slate

இள மஞ்சள் - flavescent / primrose

ஈய(ம்) (நிறம்) - plumbeous

ஈரல்நிறம் - Dark red colour, purple colour

உறைபால்(நிறம்) – whey

எண்ணெய்க்கறுப்பு – dark black colour

எலுமிச்சை ம் - citreous

ஒண்சிவப்பு - cardinal

ஒளிர் செஞ்சிவப்பு - phoeniceous

ஒளிர் செம்மை - coccineous

ஒளிர் வெண்கலம் – aeneous

ஒளிர் வெண்கலம் (நிறம்) - aeneous

ஒளிர்சிவப்பு - puniceous

ஒளிர்மஞ்சள் - sulphureous / vitellary

கசகசாச் சிவப்பு - ponceau

கடல்நீல (நிறம்) - ultramarine

கடற்பச்சை - cerulean

கத்தரிநீலம் - periwinkle நித்திய கல்யாணி

கபிலை / புகர்நிறம் - Tawny, brown or swarthy colour;

கரு (நிறம்) - sable

கருஞ்சிவப்பு - porphyrous/purpureal

கரும்பச்சை – corbeau

கருமை - nigricant / nigrine

காயாம்பூ (நிறம்) - purple colour

காளிமம் - black colour

கிளிச்சிறை - Gold resembling the parrot's wing in colour

குங்குமச் சிவப்பு- vermeil

குங்குமப்பூ(நிறம்) - croceate / saffron

குரால் - Dim, tawny colour;

குருதிச்சிவப்பு - erythraean / sanguineous / incarnadine

குருதிச்செம்மை - vermilion

கோமேதக(நிறம்) -topaz

சருகிலை (நிறம்) - filemot

சாம்பல் – cinerious

சாம்பல் பச்சை - caesious / sage

சாம்பல் மஞ்சள - isabelline

சுடர் (நிறம்) – flammeous

சுடுமண்(நிறம்) - terracotta

சுதை வெண்மை - cretaceous

செக்கர் – reddish sky

செங் கருநீல(நிறம்) - violet / violaceous

செங்கருப்பு - piceous

செங்கல்மங்கல் - Dim red colour

செங்கற்சிவப்பு - lateritious / testaceous

செந்தீவண்ணம் - colour of glowing fire

செந்தூரச்சிவப்பு – minium

செப்புநிறம் - Dark-red colour

செம்பட்டை - Brown colour of hair

செம்பவளம் - deep red colour;. Crimson colour; மிகு சிவப்பு

செம்பழுப்பு - sinopia/ sorrel

செம்பு - Copper colour;.

செம்பூச்சி - kermes

செம்பொன் - titian

செம்மஞ்சள் -jacinthe

செவ்வல் (செந்நிறம்) - Redness;

சோணம் - Red colour, crimson colour

தசை (நிறம்) - sarcoline

தவிட்டுநிறம் - Brown, dun colour

திமிரம் – Colour ofDarkness

தும்பை நிறம் - pure white colour

துமிரம் - Deep red colour .

துரு (நிறம்) – ferruginous

துருச் சிவப்பு - rubiginous

துவர் (சிவப்பு) - Scarlet Red colour,

துவரி (காவிநிறம்) - Salmon colour

தூயபழுப்பு - sepia

தெள்ளுப்பூச்சி (நிறம்) - puce

நட்டுச்சினைமண் - A kind of earth of the colour of crab's spawn

நல்சிவப்பு – coquelicot

நறுமஞ்சள் - lutescent

நன்மஞ்சள் - luteolous

நன்னிறம் - White colour

நீல (நிறம்) – azuline

நீல மணி - sapphire

நீலச்சாம்பல் - glaucous / cesious / gridelin / lovat

நீலச்சிவப்பு – amaranthine / solferino

நீலப்பச்சை – turquoise / viridian

பச்சை – chlorochrous

பசுமை - virid

பழுக்காய் - Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut;

பழுப்பு மஞ்சள் - fulvous

பழுப்புச் சிவப்பு - castaneous / rufous / russet / umber

பழுப்புச்சாம்பல் - greige / taupe

பளீர்சிவப்பு - stammel

பனிவெண்மை - niveous

பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்.) - Colour of a class of pearls, resembling that of toddy

பால்வண்ணம் – white colour

புகர் நிறம் - tawny / tan

புகைக்கரி – fuliginous

புள்ளிச் சாம்பல் - liard grey

புற்பச்சை - prasinous

புறவு (நிற) - columbine

பூஞ்சல் - Brown- ish colour; மங்கனிறம்

பூஞ்சாயம்(அழுத்தமன சிவப்பு) - Deep, ruddy colour;

பூவல்- Red colour

பைந்நீல(நிறம்) - teal

பைம்பொன் - chrysochlorous

பொன் மஞ்சள் - goldenrod

பொன்மஞ்சள் luteous

பொன்மை – aurulent

மகரம் - Pink colour

மங்கல் பழுப்பு - fuscous

மங்கல் பழுப்பு – khaki

மங்கல்பச்சை - eau-de-nil

மஞ்சள் – xanthic / icterine / icteritious

மஞ்சள் பச்சை – chartreuse / zinnober

மஞ்சள் பழுப்பு - lurid / ochre

மஞ்சள்சிவப்பு - wallflower

மணிச்சிவப்பு - rubious

மணிநிறம் - Dark blue colour, as of sapphire;

மயில்நீலம் - pavonated

மரகதப்பச்சை - smaragdine

மருப்பு (தந்தம்) - eburnean

மல்லிகை மஞ்சள் – jessamy

மாமை- dark-brown colour

முக்கூட்டரத்தம் - Red colour produced by chewing betel, arecanut and lime

முத்துச்சாம்பல் - griseous

வளர்பச்சை - virescent

வாதுமை (நிறம்) - ibis

வான் நீலம் - cyaneous

விண் நீலம் - celeste

விழி வெண்மை – albugineous

வெங்காயப் பச்சை - porraceous

வெண்சாம்பல் - hoary

வெண்மங்கல் - leucochroic

வெண்மஞ்சள் - ochroleucous

வெளிர் நீலம் - azure

வெளிர் பச்சை - celado

வெளிர் மஞ்சள் - nankeen

வெளிர் மஞ்சள் பச்சை - tilleul

வெளிர்நீலம் - watchet

வெளிர்பழுப்பு - suede

வெளுப்பு – albicant

வைக்கோல் (நிறம்) – stramineous

நன்றி - யாழறிவன்

பா விவேக்


வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களான தூரன் வேலுச்சாமி, நாகராசு கணேசுகுமார், பொன...

Posted: 09 Oct 2014 04:30 AM PDT

வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களான தூரன் வேலுச்சாமி, நாகராசு கணேசுகுமார், பொன்னுச்சாமி, சதாசிவம், ரவிக்குமார் உள்ளிட்டோர் திருப்பூரில் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை நடத்தி வருகின்றனர். அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் ஐந்து தலைமுறைகளாக செப்பேடு ஒன்றை பாதுகாத்து வருவதாக இவர்களுக்கு தகவல் தெரிந்தது. அந்த செப்பேட்டை ஆய்வு செய்தபோது அது, விஜய நகர பேரரசர் ஆட்சியில் கொடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் ரவிக்குமார் 'தி இந்து'விடம் கூறியதாவது:

அந்த செப்பேடு 1533-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 21-ம் நாளில் கொடுக்கப் பட்டது. அந்த காலகட்டத்தில் விஜய நகர பேரரசில் ராமராயர் என்கிற மன்னரின் கீழ் குறுநில மன்னராக சதாசிவராயர் ஆட்சி செய்தார். அப்போது தமிழகத்தில் தாராபுரம் பகுதியின் அதிகாரியாக இருந்தவர் திம்மராசய்யன். இவர் தாராபுரத்தில் வெண்கலப் பொருட்களுக்கு சுங்கம் செலுத்த வேண்டும் என்று உத்தர விடுகிறார். ஆனால், வெண்கலம் வியாபாரம் செய்யும் கன்னார் சமூகத்தினர் தங்களுக்கு எப்போதுமே சுங்கம் இல்லை என்று கூறி அதற்கு காரணமாக , புராண காலத்து கதையை அதிகாரியிடம் விளக்குகின்றனர்.

அதாவது, துவாபார யுகத்தில் பரதன் ஆட்சி செய்தபோது கன்னார்களின் மூதாதையர்களான உதிரசேனன், பதிரசேனன், நெதிரசேனன் ஆகியோர் வையாபுரியில் (பழனி) வெண்கலம் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது அங்கு ஆட்சி செய்த தரணியரசன் சுங்கம் செலுத்த மறுத்த மூவரையும் யானையின் கால்களில் மிதிபட செய்கிறான். அப்போது காமாட்சியம்மன் தோன்றி தரணியரசனை கொன்று சுங்கம் உங்களுக்கு எப்போதும் இல்லை என்று சொல்கிறாள்.

அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திம்மராசன் சொல்லிவிட்டார். இதையடுத்து, தாராபுரத்தைச் சேர்ந்த வேலப்ப செட்டியார் என்பவர் ஊரார் முன்பாக தனது தலையை தானே வெட்டி திம்மராசனிடம் முன் வைத்து உயிர்த் தியாகம் செய்கிறார். இதை அறிந்த மன்னர் ராமராயர் வேலப்ப செட்டியாரின் தியாகத்தை மெச்சி, தலைக்கு ஈடாக தங்கத் தலையை கொடுத்து, 'எசமானன்' என்கிற பட்டமும் கொடுத்து, அரச மரியாதை செய்கிறார். மேலும், அந்த சமூகத்தினருக்கு இனி எப்போதுமே வெண்கலம் சார்ந்த தொழில்களுக்கு சுங்கம் இல்லை என்று எழுதிக் கொடுத்தார். அந்த சாசனம்தான் இந்த செப்பேடு. எட்டு அங்குலம் அகலமும், பத்து அங்குலம் நீளமும் கொண்ட இந்த செப்பேட்டில் மேற்கண்ட விபரங்கள் 49 வரிகளில் எழுதப்பட்டுள்ளன." என்றார்.

வரலாற்று ஆய்வாளரும் எழுத் தாளருமான இரா.முருகவேள் எழுதி யிருக்கும் 'மிளிர்கல்' வரலாற்று நாவலில் தங்கள் தலையை தாங்களே அறுத்து உயிர்த்தியாகம் செய்பவர் களை பற்றி குறிப்பிட்டிருப்பார். அவரிடம் இதுகுறித்து கேட்டோம். "200 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சமூகத்தில் சுய பலிகள் இருந்தன. மன்னர் உடல் நலம் பெறுவதற்கு, போரில் வெற்றி பெறுவதற்கு மற்றும் ஊர் பொது நன்மைக்கு இதுபோன்ற சுய பலிகள் நடத்தப்பட்டன. இதில் தலை முடியை ஒரு கயிற்றில் கட்டி மரத்திலோ ஒரு கம்பத்திலோ இணைத்து கட்டிவிடுவார்கள். பின்னர் சம்மந்தப்பட்ட நபர் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக்கொள்வார். இதன் பெயர் நவகண்டம். இதில் பெரும் பாலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளும், பெண்களுமே பலியிடப்பட்டனர்" என்றார்.

ஆவணப்படுத்த வேண்டும்

செப்பேடுகளை ஆய்வு செய்து வரும் ஒடிசா பாலு கூறும்போது, ''தமிழ் பேசப்பட்ட நிலங்களில் சுமார் 32 உழவு சார்ந்த சமூகங்களின் ஏராளமான ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. எங்களது ஆய்வில் தமிழகத்தில் சுமார் 500 செப்பேடுகள் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1,000 செப்பேடுகள் கோயில், மடம் மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. செப்பெடுகளை எல்லாம் முறையாக ஆய்வு செய்து வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும்." என்றார்.

பா விவேக்


நன்றாக கவனியுங்கள். ஓவியமாகக் கூட வரைவது கடினம். ஒரு தலை, நான்கு உடல்கள் கொண்ட ச...

Posted: 09 Oct 2014 03:30 AM PDT

நன்றாக கவனியுங்கள். ஓவியமாகக் கூட வரைவது கடினம். ஒரு தலை, நான்கு உடல்கள் கொண்ட சிற்பம். தமிழனின் அற்புதமான படைப்புத்திறனுக்கும் சிற்பக்கலைக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
#வியப்பு!

இடம்: தாராசுரம் கோவில்
கட்டியவர் : இரண்டாம் இராசராசன்

பா விவேக்


தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் ! உலகின் பாரம்பரியச் சின்னமும் இந...

Posted: 09 Oct 2014 02:30 AM PDT

தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் !

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் 'தி இந்து'விடம் கூறியதாவது:

கீழே இரு மடங்கு சுமை

பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும்.

அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது.

தலையாட்டி பொம்மை போல..

தஞ்சை பெரிய கோயிலின் ஒரு கன அடி கல்லின் எடை 70 கிலோ. தோராயமாக கோயிலின் எடை ஒரு லட்சம் டன். அதனை ஒப்பிடும்போது அஸ்திவாரமாக சுமார் ஒரு கோடி கன அடி பருமணலை கல்தொட்டியில் நிரப்பியிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் பூமித் தகடுகளின் அசைவின்போது மணல் அஸ்திவாரம் தன்னைத்தானே சமப்படுத்திக்கொள்ளும். இதனை zero settlement of foundation என்பர். இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் எனில் தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. தலையாட்டி பொம்மைகளின் பூர்வீகமும் தஞ்சாவூர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இயல்பிலேயே கருங்கல் கட்டுமானங்களுக்கு மணல் அஸ்திவாரமே பொருத்தமானது. அதனால்தான் பெரும்பாலான கடல் கட்டுமானங்களில் கருங்கற்களும் ஆற்று மணலும் இடம்பெறுகின்றன. 2010-ம் ஆண்டு கோயிலுக்குள் ஆழ்துளைக் கிணறு தோண்டியபோது அஸ்திவாரம் மணல் என்பதாலேயே அங்கு சத்தம் வரவில்லை. அங்கு வெளியேறிய மணலில் மண் மற்றும் பாறைத் துகள் எதுவும் இல்லை. 350 அடி ஆழத்துக்கு கீழே தோண்டிய பிறகுதான் களிமண் வெளியேறியுள்ளது.

இந்த மணல் தஞ்சாவூர் முகத்துவாரப் பகுதிக்கான மணல் அல்ல. தஞ்சாவூர் பகுதியில் இருப்பது சமதளத்தில் ஓடும் காவிரி ஆற்றுப் பகுதியின் குறுமணல். ஆனால், கோயிலின் அடியில் கிடைத்தது, அதைவிட மூன்று மடங்கு பெரிய பருமணல். இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சிலை, நாணயங்கள் இருக்கலாம்

நம் மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை கட்டியது காட்சிக்காகவும் பக்திக்காகவும் மட்டும் அல்ல. அன்னியர்களால் நமது வரலாறு அழியாமல் இருக்கவும், பொக்கிஷங்களை பாதுகாக்கவும்தான் பிரமாண்டமான கோயில்களைக் கட்டியுள்ளனர். அப்படி பிரமாண்டமாக அமைத்தால்தான் அதன் அடியில் பெரும் நிலவறைகள் வடிவமைத்து பொருட்களைப் பாதுகாக்க முடியும்.

எனவே, பெரிய கோயிலின் அடியில் நாணயங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், சிலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவை வென்ற தமிழனின் மற்றொரு பரிமாணத்தையும், மணல் அஸ்திவாரக் கட்டுமானக் கலையின் வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்ளலாம். கோயிலில் அகழ்வாராய்ச்சி நடத்தித்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் ரிமோட் சென்சார் மற்றும் Ground penetrating radar தொழில்நுட்பம்மூலம் பூமிக்குள் ஊடுருவி படங்களை எடுத்து ஆய்வு செய்யலாம்" என்றார்.

நம்
கலைப்பொக்கிசம் தஞ்சைப் பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,இது எப்படி சாத்தியமானது ? ? ! !

படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏட்படுத்தியவர்கள் விஸ்வப் பிரம்மகுல சிற்பிகளே மன்னர் கட்டியது மன்னர்கட்டியது என மார்தட்டும் எந்தமன்னனாவது ஒரு சிறு கல்லைத் தூக்கியதாக வரலாறுண்டா ஒருகல்லை அது எந்தபதத்தில் உள்ளது என , தெரியும்

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டு உள்ளன . எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் மற்றும் நவீன தொழிநுட்பங்கள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

பெரிய கோயில் அளவுகோல்…
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை

1, விரல்,
2, மானாங்குலம்,
3, மானம் என்று அழைத்தனர்.
4, இருபத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.
5, ஒரு முழமே இருவிரல் நீட்டித்து(நீளம்) பதினாறு விரல் அகலத்து(அகலம்), ஆறுவிரல் உயரத்து (உயரம்)பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உயரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறைவெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கத . அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள்

1.2 மீ ஷ்
1.2 மீ சதுரத்தில்
0.6 மீ ஷ்
0.6 ஷ்
0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகளை தீர்மானித்திருக்கிறார்கள் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின்,13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.கருவறையின் நிலகீழ் அமைப்பும் நிலத்தில் நீர் ஊற ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கருவறை அத்திவாரநிலபீடம் எனும் சிட்பசாஸ்திர அளவு முறை ஆலயம் கட்டும் போதும் பயன்படுகிறது என்பது ஒரு முக்கியகுறிப்பு ஆகும்,
சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் உபயோகப்படுத்தப்ப ட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர
தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்ட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ளஉதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்ட . விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது . !!

'இராஜராஜேச்சரம்' – பெயர்க்காரணம்.

"கோயில் என்பது சைவர்களுக்குத் தில்லை பொன்னம்பலத்தையும், வைணவர்களுக்குத் திருவரங்கத்தையும் குறிப்பது போலப் பொது மக்களுக்குப் 'பெரிய கோயில்' என்றால் அது தஞ்சை இராஜராஜேச்சரமே ஆகும்."

"பெரிய கோயில், 'ப்ருஹத் ஈஸ்வரம்' எனும் வடமொழிப் பெயரால் 'பிரஹதீஸ்வரம்' என்றும், பெரிய லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது என்பதால் 'பிரஹதீஸ்வரர் ஆலயம்' எனவும் அழைக்கப்படலாயிற்று. தென்னாட்டுக் கோயில்களுக்குள் மிக உயர்ந்த விமானத்தை உடையதால்தான் 'பெரியகோயில்' என்ற சிறப்புப் பெயர் பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் ஸ்ரீவிமானம் தக்ஷிணமேரு எனப்பெயர் பெற்றுத் திகழ்கிறது."

சென்ற நூற்றாண்டில் இத்திருக்கோயிலின் வரலாறு மக்களால் தெளிவாக அறியப்பட்டிருக்கவில்லை. சைவர்களால் திருவிசைப்பா படிக்கப்பட்டு வந்தபோதும், அதிலுள்ள இராஜராஜேச்சுரம் என்னும் தொடர் வரலாற்று உணர்வோடு புரிந்து கொள்ளப்படவில்லை.

இச்சிவாலயத்தைப் பற்றிப் பலவகையான கற்பனைக் கதைகள் ஏட்டிலும், நாட்டிலும் வழங்கி வந்தன.

"இக்கோயிலைக் கட்டியவர் என்று பலருடைய பெயர்கள் தவறாகப் பரவியிருந்தன. 1892இல் வெளியான 'தென்னிந்திய கல்வெட்டுக்கள்' என்னும் நூலில், "பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம்" எனும் தொடரால்தான் இது மாமன்னன் ராஜராஜன் கட்டிய செய்தி உறுதி செய்யப்பட்டது. இதுதவிர இந்தக் கோயிலைப் பற்றிய வேறு பல செய்திகளும் தவறாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. அவை:- நிழல் கீழே விழாத கோபுரம்; வளர்ந்து வருகின்ற நந்தி, சாரப்பள்ளம் எனும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி கோபுர உச்சிக்கு 80 டன் எடையுள்ள பிரமரந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பது போன்ற பல செய்திகள் பொய்."

"மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தக் கோயிலால் ஆன்மீகம் வளர்ந்தது, கலைகள் செழித்தன; சோழநாட்டின் பொருளாதாரம் சிறந்தது என்பது போன்ற பல சாதனைகளைச் சொல்லி மகிழலாம். ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்."

'இராஜராஜேஸ்வரம்' எழும்பியுள்ள தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்பது முனைவர் குடவாயில் அவர்களின் கருத்து.

நுழைவுக் கோபுரம் – கேரளாந்தகன் திருவாயில்

keralanthakangate1இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகத் திகழ்வது 'கேரளாந்தகன் திருவாயில்' எனப்படும். மாமன்னன் இராஜராஜன் தான் முடிசூடிய நான்காம் ஆண்டில் 'காந்தளூர்ச்சாலை கலமருத்தருளிய கோஇராஜகேசரிவர்மன்' என்று பெயர்பெற்றான். பொ.பி.988ஆம் ஆண்டில் கேரளத்தில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காந்தளூர்ச்சாலையை வென்று இப்பட்டப்பெயர் பெற்றான். (பொ.பி – பொது சகாப்தத்திற்குப் பின், CE)

இந்த கேரளாந்தகன் திருவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அடுத்து வருவது 'இராஜராஜன் திருவாயில்'. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இருப்பது 'நந்தி மண்டபமும்' மாபெரும் நந்தி உருவமும். இப்போது அங்குள்ள பெரிய நந்தி நாயக்க மன்னர்கள் காலத்தில் வைக்கப்பட்டது. மன்னன் ராஜராஜன் நிறுவிய பழைய நந்தி இப்போதும் 'வாராஹி' அம்மன் சந்நிதிக்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

ராஜராஜன் எழுப்பிய மாபெரும் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் நாம் தாண்டிச் செல்லவேண்டிய இவ்விரு கோபுரங்களின் சிறப்பை அறிய வேண்டுமானால் குடவாயில் அவர்களின் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இனி கோயிலின் சிறப்பினைப் பார்ப்போம்.

திருக்கோயிலின் அமைப்பு

ஆலயத்தின் மதிற்சுவரோடு இணைந்து நாற்புறமும் திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கிறது. அதன் வடபுற விமானத்துக்கருகே சண்டீசரின் சந்நிதி உள்ளது. இவ்வளவுதான் அந்த ஆலயத்தின் பழைய தோற்றம். திருச்சுற்று மாளிகையில் பல பரிவார தேவதைகளுக்கான சிறு சந்நிதிகள் உண்டு. பழைய காலத்தில் வடக்குப் புறம் ஓர் அம்மன் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. "திருச்சுற்று மாளிகையில் ஆலயத்து பரமேஸ்வரி" என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.

ஆலயத்தின் மகாமண்டபம், அர்த்தமண்டபம் இவைகளைத் தாண்டிச் சென்றால் ஆலயத்தின் கற்றளி விமானம் இருக்கிறது. "இந்த ஸ்ரீவிமானம் 30.18மீ அளவுடைய உயர்ந்த அதிஷ்டானத்தின் மேல் கருவறை நடுவே திகழ, அதனைச் சுற்றி நான்கு புறமும் வாயில்களுடனும் ஓர் சுற்று அறையுடனும் திகழ்கின்றது. இராஜராஜேச்சரமுடையார் எனும் மிகப்பெரிய லிங்கத் திருவுருவம் நடுவே திகழ, ஒரே வாயிலுடனும் 11அடி கனமுடைய சுற்றுச் சுவர்களுடனும் கருவறை உள்ளது. கருவறைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள அறை 6அடி அகலமுடையதாக விளங்குகிறது. இங்கு புறச்சுவர்களின் நான்கு பக்கச்சுவர்களின் அகலம் 13 அடி கனமுள்ளது. சிவலிங்கத்துக்கு மேலே விதானம் மரத்தாலானது. இது பிற்காலத்தில் அமைக்கப்பட்டது. விமானம் உட்புறம் கூடாக அமைந்திருக்க அதன் இருண்ட பகுதிக்குள் வெளவால்கள் அடைந்துகொண்டு லிங்கத்தின் மேல் அசிங்கம் செய்துவந்த காரணத்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு மர அடைப்பு இடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கருவறைக்கு மேல் இரண்டாம் தளம் உள்ளது. மகாமண்டபம் வழியாகப் படியேறிச்சென்றால் இந்த தளத்துக்குச் செல்லலாம். இங்கே ஒரு திருச்சுற்று இருக்கிறது. இங்கு இருபக்கச் சுவர்களும் மேலே போகப்போக ஒன்றுகூடி 30அடியுள்ள கனமான சுவராக ஆகிவிடுகிறது. இந்த இடத்திலிருந்து விமானம் உட்புறம் பிரமிட் வடிவில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து கடைசியாக 8.7மீ பக்க அளவுடைய ஒரு சதுரத் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தளத்தில் எட்டு நந்திகள் உள்ளன. மையத்தில் 20மீ சுற்றளவுள்ள பெரிய பாறைபோன்ற அமைப்பு, அதன் மேல் சிகரம் அது சுமார் 12 அடி உயரமுள்ளது. இந்த விமானம் தரையிலிருந்து கலசம் வரை 60.40 மீ உயரமுள்ளது.

இந்த விமானத்தின் உச்சியில் உள்ள பாறைபோன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது 80 டன் எடையுடையது என்றெல்லாம் பேசப்பட்டாலும், அது உண்மையல்ல என்பது முனைவர் குடவாயில் அவர்களின் முடிவு. இந்தக் கல்லை ஒரு கிழவி கொடுத்தாள் என்பதெல்லாம் கற்பனை கதை என்றும் அவர் கூறுகிறார். இந்த பாறைவடிவம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாம். இருந்தாலும் ஒரே கல் போன்ற தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை கோர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது.

அற்புதமான துவாரபாலகர்கள்

பெரிய நந்தியிலிருந்து மகாமண்டபத்துள் நுழையுமுன் இருக்கும் முன்மண்டப வாயில் இரண்டு துவாரபாலகர்கள் உண்டு. ஒரு துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது என்று ஆசிரியர் கூறுகிறார். இந்த ஆலயமே ஒரு மாபெரும் தத்துவப் படைப்பு என்றும், இந்தச் சிற்பங்கள் அப்படிப்பட்ட தத்துவங்களை விளக்குவன என்றும் குடவாயில் கூறுகிறார்.

நன்றி : சித்தர்கள் - விஞ்ஞானிகள் பக்கம்

பா விவேக்


கல்லில் தமிழன் செதுக்கிய நரம்பு: மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஒரு சிலை. #வ...

Posted: 09 Oct 2014 02:30 AM PDT

கல்லில் தமிழன் செதுக்கிய நரம்பு: மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஒரு சிலை.

#வியப்பு

நன்றி : தூய தமிழ்ச் சொற்கள்

பா விவேக்


வளரி (BOOMERANG) தமிழரின் ஆயுதம் ! பதினெட்டாம் நூற்றாண்டில் வீரத்தில் சிறந்த சி...

Posted: 09 Oct 2014 12:30 AM PDT

வளரி (BOOMERANG) தமிழரின் ஆயுதம் !

பதினெட்டாம் நூற்றாண்டில் வீரத்தில் சிறந்த சின்ன
மருதுவிடமிருந்து தான் வளரி(BOOMERANG) வீச கற்றுக்
கொண்டதை தன்னுடைய இராணுவ நினைவுகள் என்ற
நூலில் குறிப்பிடுகிறார் கர்னல் "வெல்ஷ்".
1920களில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக
பிறன்மலை கள்ளர்கள் போராடிய
போது அவர்களை ஒடுக்குவதற்கு படைகளை குவித்தது ஆங்கிலேய
அரசு.

அப்போது அவர்களை எதிர்த்து தாக்க அம்மக்கள்
வளரியையே பயன்படுத்தினர்,
பகையாளியை தாக்கிவிட்டு மீண்டும் அடித்தவரிடம்
திரும்பும் அந்த ஆயுதத்தை பார்த்து ஆங்கிலேயர்கள்
கலங்கி போயினர்.

வளரி தடை செய்யப்பட்டது, வீட்டில் வைப்பது குற்றம்
என்று கருதப்பட்ட காரணத்தால் அதற்கு பிறகு அந்த
ஆயுதம் கோவில்களில் வைக்கப்பட்டது,
இன்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இடுப்பில்
வளரி தாங்கியிருப்பார் என்று சொல்கிறார்கள்,
தென்மாவட்டங்களில் பல கோவில்களில்
வளரி பூசனைக்குரிய ஆயுதமாக இருப்பதாக
சொல்கிறார்கள்.....

பா விவேக்


இரண்டு நிமிடம் இதை படித்துவிட்டு ஒவ்வொரு தமிழனும் பகிரவும். கோச்சடையானுக்கு ஜடா...

Posted: 08 Oct 2014 11:30 PM PDT

இரண்டு நிமிடம் இதை படித்துவிட்டு ஒவ்வொரு தமிழனும் பகிரவும்.

கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.

ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் மதுரையை தலைநகராக கொண்டு பாண்டிய நாட்டை ஆண்டவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும்
ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில்
வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய
நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

சோழர்களை போரில் வென்றதன் விளைவாக
நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது.

ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை தானே எடுத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தென்னகத்தில் இருந்த பல கோவில்களுக்கு நன்கொடையாக தந்து விட்டார்.குறிப்பாக தொண்டை நாட்டிலுள்ள கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்தார்.இந்த திருப்பணிகளால் அதிகம் பயன்பெற்ற கோவில்கள் என்றுப் பார்த்தால் சிதம்பரத்தில்
இருக்கின்ற நடராசன் பெருமான் கோவிலும்
திருவரங்கத்தில் இருக்கக்கூடிய இரங்கநாதர்
கோவிலும் தான்.

திருவரங்கத்தில் இருக்கின்ற இரங்கநாதர்
கோவிலுக்கு சுந்தரப் பாண்டியன் ''துலாபார
தானம்'' செய்தார்.

துலாபார தானம் என்றால் தராசு கட்டியில் ஒருவரை அமர செய்து அவரின் எடைக்கு சமமான தங்கத்தை நன்கொடையாக
கொடுப்பதாகும்.ஆனால் சுந்தரப் பாண்டியன் செய்த ''துலாபார தானம்'' சற்று புதுமையானது.ஜடா வர்மன் சுந்தரப் பாண்டியன் தனது பட்டத்து யானையை நன்கு அலங்கரித்து அந்த யானைக்கு மேல் கனமான அம்பாரி,அந்த அம்பாரிக்கு மேல் பூரண கவசத்துடன் தன் பட்டத்தரசியுடன் தானும் அமர்ந்துக் கொண்டார்.முன்புறம் யானையின் பாகன் அமர்ந்துக் கொண்டான். யானை,அம்பாரி, அரச தம்பதியர் மற்றும் யானைப் பாகன் இவர்களின் எடைக்கு சமமான தங்க ஆபரனங்களை திருவரங்கக் கோவிலுக்கு நன்கொடையாக தந்தான்.

இப்பொழுது கேள்வி என்னவென்றால் எப்படி ஜடாவர்மன் பாண்டியன் இவர்களின் எடை சரியாக அளந்து அதை சமமான தங்க
ஆபரணங்களை தானமாக கொடுத்தான் ? ஒரு வேளை யானை அளவிற்கு ஒரு தாராசுக்கட்டியை செய்து அளந்திருப்பானோ ? அதுதான் இல்லை. முதலில் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காவிரிக் கரையாரில் ஒரு நீராழி(குளம்) மண்டபத்தை காட்டினான்.அந்த மண்டபத்திருக்குப் பக்கத்தில் ஒரு தெப்பத்தை (நீரில் மெதக்கும் ஒரு பெரிய பலகைப் போன்றது) கட்டினான். அந்த தெப்பதற்கு மேல் அம்பாறிப் பூட்டப்பட்ட பட்டத்துயானையின் மீது பாண்டியனும் அரசியும் மற்றும் பாகனும் அமர்ந்தவாறு ஏறினார்கள்.யானை தெப்பத்தின் மீது ஏறியவுடன் அந்த தெப்பம் சிறிதளவு தண்ணீரில் அமிழ்ந்தது.பிறகு அதிலிருந்து யானையை இறக்கி விட்டு தங்க ஆபரணங்களை வைக்க ஆரம்பித்தார்கள்.யானை நின்ற பொழுது எவ்வளவு தூரம் தெப்பம் அமிழ்ந்ததோ அந்த அளவு வரும் வரை தங்க ஆபரணங்களை வைத்துக்கொண்டே இருந்தார்கள். கடைசியாக யானை நின்ற பொழுது அமிழ்ந்த அளவும்
வந்தது.பிறகு செல்வங்களை எடுத்து கோவிலுக்கு கொடுத்தான்.

ஆர்கிமிடீஸ் தத்துவத்தை தமிழன் என்றோ தெரிந்து வைத்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்.

பா விவேக்


வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது??, யமன் பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று பல...

Posted: 08 Oct 2014 10:30 PM PDT

வடக்கே தலை வைத்து உறங்கக்கூடாது??,
யமன்
பிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று பல
பூதாகரக் கதைகள் கேட்டிருப்பீர்கள். இது போ
ன்று எழுதப்படாத நியதிகள் பல நம் கலாச்சாரத்தில்
இன்றும் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால்
இதென்ன பகட்டா இல்லை நம்மை மிரளச் செய்யும்
தந்திரமா? விளக்குகிறார் சத்குரு…
சத்குரு:

இந்தியா போன்று பூமத்திய
ரேகைக்கு மேலே உள்ள நாடுகளில் இருப்பவர்கள்
வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது. ஏனெனில்
வடக்கே காந்த ஈர்ப்பு இருக்கிறது.
வடக்கே தலைவைத்துப் படுத்தால்
தேவையில்லாமல் உங்கள் மூளைக்குள் அதிக ரத்தம்
பாயும். அப்போது உங்களுக்கு மனப் போராட்டம்
போன்றவை ஏற்படலாம்.
மிகவும் வயதானவர் வடக்கே தலைவைத்துப்
படுக்கும்போது, ரத்தம் மூளைக்குள் அதிகமாகப்
பாய்வதால் அவர் தூக்கத்திலேயே உயிர்விட
வாய்ப்பு இருக்கிறது. மூளைக்குச் செல்லும்
நரம்புகள் மயிரிழை போன்றவை.
எனவே ஒரு சொட்டு ரத்தம் அதிகம் சென்றாலும்
மூளை நரம்புகள் வெடிக்கக்கூடிய
வாய்ப்பு இருக்கிறது. அதனால் பகலானாலும் சரி,
இரவானாலும் சரி, வடக்கே தலைவைத்துப் படுக்கக்
கூடாது.

பூமத்திய ரேகைக்குக் கீழே உள்ள நாடுகளில்,
உதாரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில்
தெற்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது.
அங்கே காந்த ஈர்ப்பு தென்பக்கம் நோக்கி இழுக்கிறது.

ஆனால் தென்துருவத்தை விட வடதுருவம்
வலிமையானது. அதனால்தான் வலிமையான காந்த
ஈர்ப்பின் காரணமாக முழுக்
கண்டமுமே இந்தியா உள்பட மேல்நோக்கி நகர்கிறது.

அதனால் இமயமும் வளர்ந்து கொண்டே செல்கிறது. 7,
8 வருடத்துக்கு ஒருமுறை 3 அங்குலத்திலிருந்து 4
அங்குலம் வளர்வதாகச் சொல்கிறார்கள்.

வடக்கே வலிமையான காந்த ஈர்ப்பு இருப்பதால்தான்,
பெரும்பாலான நாடுகள் பூமத்திய
ரேகைக்கு மேலே இருக்கின்றன.
ரத்தத்தின் முக்கியமான மூலப் பொருட்களில்
இரும்பும் ஒன்று.

ஒருவேளை உங்களுக்கு ரத்தச்சோகை இருந்தால்,
மருத்துவர்
உங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளும்
டானிக்கும் சாப்பிடக் கொடுப்பார். அதனால், ரத்தம்
மூளையை நோக்கி இழுக்கப்படும். அது நல்லதல்ல.

அது உடலில் இயல்பாக இருக்கும் ஓய்வு நிலையைக்
பாதிக்கும்.
குறிப்பாக அதிகமான வேலைகள் முடித்துவிட்டு,
அல்லது கடுமையான உடற்பயிற்சிகள்
செய்துவிட்டு ஓய்வுக்காகப்
படுக்கும்போது கட்டாயமாக வடக்கில்
தலைவைத்துப் படுக்கக் கூடாது.
அது உங்களுக்கு ஓய்வு நிலையைத் தராது.

மேலும் பதட்டத்தைத்தான் கொண்டுவரும்.
கிழக்கே தலை வைத்துப்
படுப்பதாலோ அல்லது மேற்கே தலை வைத்துப்
படுப்பதாலோ எந்தப் பிரச்னையும் இல்லை.

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில்
நிலாவின் ஈர்ப்பு அதிகமாக உள்ளதால்,
ஏற்கனவே மனநிலையில் பாதிப்படைந்தவர்கள்,
மேலும் மனபாதிப்பு அடைகிறார்கள். அன்று கடல்
அலைகள்கூட உயர உயர எழும்புகிறது. இயற்கையில்
ஒவ்வொன்றும் மேல் நோக்கி ஈர்க்கப்படுகிறது.

ரத்த ஓட்டமும் மேல் நோக்கி இழுக்கப்படுகிறது.
கொஞ்சம் அதிக ரத்தம் மூளைக்குச் சென்றாலும்
பாதிப்படைகிறீர்கள்.

வடக்கே தொடர்ந்து தலைவைத்துப்
படுப்பவரை பிசாசு பிடித்துக்கொள்ளும் என
கர்நாடகாவில் சொல்வதுண்டு.

தொடர்ந்து நீங்கள் மனப்
போராட்டத்துக்கு ஆளாவதால், பிசாசு போன்ற
குணம் உங்களுக்கு வந்துவிடும் என்பதைத்தான்
அப்படிக் குறிப்பால் சொல்கிறார்கள்!

பா விவேக்


பூம்புகார்!! 1.10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். 2....

Posted: 08 Oct 2014 08:30 PM PDT

பூம்புகார்!!

1.10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர்
சிறந்திருந்தனர்.

2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற
தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம்
உருவாக்கப்பட்டிருந்தது.

3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச்
சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது.
(400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால்
உறுதி செய்யப்படுகின்றது.

6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம்
இறுதியாக அழிந்ததை இச்
செய்தி உறுதி செய்கிறது.

7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில்
இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம்
பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில்
வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள்
உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள்
அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல்
நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில்
சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான
நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப்
பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக்
கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:-

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர்,
ஏற்கனவே உலகின் பல
பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம்
உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன்
மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான
படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க,
ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் -
இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத்
தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள்
ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள்
எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:-

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்
தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக
அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம்
(கோவா) மேற்கொண்ட முதல்கட்ட
ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின்
சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில
தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன.
பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச்
சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள
துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல
கோடிகளைச் செலவிட்டது.

அப்போதெல்லாம்
பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை.
துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள்
கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம்
துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச்
சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள்
தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும்
என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப்
பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள்
தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக,
பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில்
காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில்
வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப்
படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில்
வெளியிட இயலாமற் போனதால்.
இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள்
நொந்து போனார்கள்...
நன்றி : தமிழர்கள் பக்கம்

பா விவேக்


தமிழனின் தலை சிறந்த சிற்பம்: நாம் இன்று பெருமையுடன் தமிழையும் தமிழ் வரலாற்றையும்...

Posted: 08 Oct 2014 07:30 PM PDT

தமிழனின் தலை சிறந்த சிற்பம்:
நாம் இன்று பெருமையுடன் தமிழையும் தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அழித்து வரும் வேளையில், 1000 ஆண்டுக்கு முன்னர் தமிழன் செதுக்கிய சிற்பம் தான் இது. ஒரு விரல் உயரம் இல்லை, ஒரு கை நீளமும் இல்லை உலகில் மற்ற நாடுகள் கட்டிடகலைகளில் இப்பொழுது வேண்டுமானால் சாத்தியம் ஆகலாம்... தமிழன் அன்றே சாதித்து விட்டான்.அர்த்தநாரீஸ்வரர் கோவில் இந்தியாவில் திருச்செங்கோடு என்ற இடத்தில் உள்ளது.

பா விவேக்


0 comments:

Post a Comment