Thursday, 9 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


:(

Posted: 09 Oct 2014 07:49 PM PDT

:(


Posted: 09 Oct 2014 09:56 AM PDT


'ஜில்லுனு ஒரு காதல்' படத்துல சூர்யா - பூமிகா கல்யாணத்தில் பூமிகா அப்பா வந்து பிர...

Posted: 09 Oct 2014 09:35 AM PDT

'ஜில்லுனு ஒரு காதல்'
படத்துல சூர்யா -
பூமிகா கல்யாணத்தில்
பூமிகா அப்பா வந்து பிரச்சனை பண்ணுவாரு...

கடைசில
பூமிகா ஆஸ்திரேலியா போவாங்க, சூர்யா பாவம்
ஆஸ்பத்திரி தான்
போவாரு...

இந்த உண்மைய
சொன்னா நம்மள
ஆணாதிக்கவாதிம்பாய்ங்க... :P

@பூபதி

காளையார் கோவிலை பாதுகாப்பது நம் கடமை அல்லவா? சிவகங்கைச் சீமையிலேயே உயரமான கோபுர...

Posted: 09 Oct 2014 08:30 AM PDT

காளையார் கோவிலை பாதுகாப்பது நம் கடமை அல்லவா?

சிவகங்கைச் சீமையிலேயே உயரமான கோபுரமாயிருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து கட்டினார்களாம் காளையார்கோயில் கோபுரத்தை. மருதிருவரும் சீமை முழுதும் சென்று மண்ணெடுத்து சுட்டுப் பார்த்து கடைசியில் மானாமதுரையில் சுட்ட செங்கல்தான் உறுதியாய் இருக்கிறது என்று மானாமதுரையை அடுத்த கருமலையில் இருந்து கல் அறுத்து கொண்டு வந்து அந்த கோபுரம் எழுப்பப்பட்டதாம்.

சீமையின் மன்னர் முத்துவடுக நாதரும், அவரது இரண்டாவது மனைவி கெளரி நாச்சியாரும் காளையார்கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது குள்ளநரித்தனமாக கோயிலை சுற்றி வளைத்ததாம் வெள்ளையர் படை, அப்போது பான்சோர் என்னும் பரங்கியரின் தளபதி தனது கைத்துப்பாக்கியால் மன்னரையும் ராணியையும் சுட்டுக் கொன்றானாம். முத்து வடுகநாத சேதுபதியின் இரத்தம் பட்டு இன்னும் சிவந்து போனதாம் காளையார் கோயிலின் செம்மண். மருதிருவரும் வெள்ளையரின் சூழ்ச்சியில் சிக்குண்டு தலைமறைவாயிருந்த போது தலைமறைவை விட்டு வெளியே வந்து அவர்கள் சரணடையா விட்டால் காளையார்கோயில் கோபுரத்தை தகர்த்தெறிவோம் என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மிரட்டல் அறிவுப்பு செய்ய....
நாங்கள் வீழ்ந்தாலும் வீழ்வோம் நாங்கள் சார்ந்திருக்கும் சைவத்தை வீழச் செய்ய மாட்டோம் என்று சைவ சமயத்தின் அடையாளமாய் இன்றும் விண்ணுயர்ந்து நிற்கும் காளையார்கோயிலை காக்க மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வெள்ளையரிடம் சரணடைந்தனராம்.

1801ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மருதிருவரையும் தூக்கிலிட்டு அவர்களது தலையை காளையார் கோயில் சின்ன கோபுரத்திற்கு நேர் எதிரேயும் உடலை திருப்பத்தூரில் புதைத்தனராம் வெள்ளையர்கள்.
காளையார்கோயில் வெறுமனே ஒரு வழிபாடு செய்யும் மதம் சார்ந்த கோயில் மட்டும் அல்ல அதற்குப் பின்னால் வீரம் செறிந்த தமிழ் இனத்தின் மிகப்பெரிய போரட்ட வரலாறும் இருக்கிறது. " வரி என்று வாய் திறந்தால் அது கிழிக்கப்படும்..." என்று வெள்ளையரின் ஏகாதிபத்தியத்தியத்தை எதிர்த்து முதல் கலகக்குரல் எழுப்பியவர் மன்னர் முத்துவடுகநாத சேதுபதி, அதே போல சுதந்திர இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்து களமிறங்கிய முதல் வீரப் பெண்மணி அவரது மனைவி ராணி வீரமங்கை வேலு நாச்சியார்.

பண்டைய வீர வரலாற்றை நமக்காக விட்டு வைத்து சென்ற வீர மறவர்களைப் போல இல்லாமல் தற்போதைய தமிழ் சமூகம் சுருங்கிப் போய் டாஸ்மாக் தமிழர்களாக உருமாறி அரசியல் கட்சிகளுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டு வாழ்கவுக்கும் ஒழிகவுக்கும் இடையே அவலமாய் வாழ்ந்து கொண்டிருப்பதோடு ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை நமது அடுத்த தலைமுறையினருக்கு உருவாக்கியும் வைத்திருக்கிறது. வரலாற்றுச் சின்னங்களின் புனிதமறியாவிட்டாலும் அவற்றைப் போற்றி புகழ் பாடாவிட்டாலும் கூட பரவாயில்லை அதை பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடத் தெரியாத தற்கால சமூகச் சூழலில் தமிழர்கள் என்று அறிவித்துக் கொள்பவர்கள் கூட நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்பதுதான் என் போன்றோர்களுக்கு வெட்கமாயிருக்கிறது இப்போது....!

-தேவா சுப்பையா...


ஊட்டி ரோஸ் கார்டன் .."ஜெயலலிதா" என பெயர் வைக்கப்பட்டு இருக்கும் ரோஜா பூ ...சுத்த...

Posted: 09 Oct 2014 08:12 AM PDT

ஊட்டி ரோஸ் கார்டன் .."ஜெயலலிதா" என பெயர் வைக்கப்பட்டு இருக்கும் ரோஜா பூ ...சுத்தி கம்பி போட்டு வச்சிருக்காங்க .

@நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்


கன்னடர்களை கைது செய்வோம் என்கிறார் அமைச்சர் வளர்மதி. நீதிபதிகளை கடுமையாக திட்டுக...

Posted: 09 Oct 2014 08:11 AM PDT

கன்னடர்களை கைது செய்வோம் என்கிறார் அமைச்சர் வளர்மதி. நீதிபதிகளை கடுமையாக திட்டுகின்றனர் மற்ற அதிமுக அமைச்சர்கள். சென்னையில் கன்னடர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள் மற்றும் நிறுவனங்களை அதிமுகவினர் தாக்குகின்றனர்.

கேரளத்தில் இருந்து வெளிவருகின்ற மலையாள மனோரமா பத்திரிக்கையில் இன்றைய பதிப்பில் ஜெயலலிதா அம்மையார் பாய், தலையணையோடு ஜெயில் கம்பிகளுக்குள் சிறையில் இருப்பது போன்று, இழிவு படுத்தி கார்டூன் வரைகிறான்.

இதை எதிர்த்து தமிழகத்தில் மலையாள மனோரமா பத்திரிக்கையை கிழித்தெறிய அதிமுக காரங்களுக்கு தைரியம் இருக்கிறதா ? குறைந்த பட்சம் மலையாள மனோரமா பத்திரிக்கைக்கு கண்டனமாவது தெரிவிக்க முடியுமா ??

- Walter Williams


தமிழ்நாட்டிற்கு வெளியே நம்மைப்பற்றி ஒரு விபரீதமான கருத்து ஏற்படக்கூடிய நிலையில்...

Posted: 09 Oct 2014 07:40 AM PDT

தமிழ்நாட்டிற்கு வெளியே நம்மைப்பற்றி ஒரு விபரீதமான கருத்து ஏற்படக்கூடிய நிலையில் இருக்கிறோம்.

ராஜிவ் கொலை வழக்கில் மூன்று தமிழர்களை மரணதண்டனையில் இருந்து விடுவிப்பதற்காக தமிழகம் முழுக்க நீண்ட காலமாக பலவிதமான போராட்டங்கள் நடந்ததை பற்றி தமிழ்நாட்டிற்கு வெளியே பலராலும் சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை. இராஜிவ் கொலைக்கு பிறகும் தமிழகத்தில் தொடர்ந்த ஈழ விடுதலை ஆதரவு போராட்டங்களும் மக்கள் ஆதரவும் மற்ற மாநிலத்தவர்களால் சரியாக புரிந்துக்கொள்ளப்படவில்லை.

இப்போது ஜெயலலிதா அம்மையார் மீதான ஊழல் வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தண்டனைக்கு எதிராக தமிழகமே கொந்தளித்திருப்பதைப்போல ஒரு பொய் பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாம் நியாயத்திற்காக நடத்திய போராட்டங்களையும் இப்போது அநியாயத்திற்கு ஆதரவாக நடக்கும் போலி போராட்டங்களையும் வேறுபடுத்தி பார்க்கமுடியாமல் போகலாம்.

இது எதிர்கால நோக்கில் நம்மையே பாதிக்கும்..

@பிரபா அழகர்

சாத்தூரில் கல்குவாரியில் ஆய்வு நடத்தாமல் இருக்க ரூ.12,000 லஞ்சம் வாங்கிய துணை வட...

Posted: 09 Oct 2014 07:34 AM PDT

சாத்தூரில் கல்குவாரியில் ஆய்வு நடத்தாமல் இருக்க ரூ.12,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர்,மற்றும் அவரின் உதவியாளர் கைது.-செய்தி

அரசு அதிகாரி தன் கடமையைச் செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கியது தவறென்றால்,அதே அரசு பதவியைப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும்,ஊழல் செய்துதம் தவறு.

இப்ப இருக்குற விலைவாசியில் 12,000 தானே லஞ்சம் வாங்குனார்,இதெல்லாம் ஒரு தொகையா?யார்தான் லஞ்சம் வாங்கலை? இதுக்கெல்லாம் கைதா? என்னய்யா நீங்க, என்று மனதில் தோன்றினால்,அந்த "66 கோடியும்" சரியென்றும்,சிறை தவறென்றும் தோன்றும்.

"மன்னன் எவ்வழியோ,மக்கள் அவ்வழி"

@G Durai Mohanaraju

Posted: 09 Oct 2014 07:30 AM PDT


Timeline Photos
Tamil Script Found in Egypt A broken storage jar with inscriptions in an ancient form of Tamil script, dated to the first century BCE., has been excavated in Egypt. Dr. Roberta Tomber, a pottery specialist at the British Museum, London, identified the fragmentary vessel as a storage jar made in India. Iravatham Mahadevan, a specialist in Tamil epigraphy, has confirmed that the inscription on the jar is in Tamil written in the Tamil script of about the first century. Earlier excavations at this site about 30 years ago yielded two pottery inscriptions in Tamil from the same era. Additionally, a pottery inscription was found in 1995 at Berenike, a Roman settlement of the Red Sea coast of Egypt. These discoveries proved material evidence to corroborate the literary accounts by classical Western authors and the Tamil Sangam poets about the flourishing trade between the India and Rome, via the Red Sea ports, in the early centuries CE http://www.cmi.ac.in/gift/Epigraphy/epig_tamilorigin.htm http://www.thehindu.com/todays-paper/article1952611.ece In Tamil http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article790365.ece?service=print ..... — with Karthik Tim Karthik.

Posted: 09 Oct 2014 07:28 AM PDT


Timeline Photos
Technology of Forge Welding Adopted at Mallappadi - An Iron Age site in Tamil Nadu An Iron Bar was found along with other iron artefacts such as arrow-heads, wedge and iron nails from the excavation at Mallappadi in the year 1977-78. The site is located 5km south of Paiyampalli, a Neolithic and Megalithic habitation-cum-burial site in Krishnagiri District. The cultural vestige containing iron artefact from Mallappadi is dated to 500.B.C. For More Details http://www.new1.dli.ernet.in/data1/upload/insa/INSA_1/20005b67_91.pdf Ancient Cave Paintings at Mallappadi http://www.unom.ac.in/uploads/miscelloneous/schools/history/ancient_history.pdf http://www.tnarch.gov.in/cons/paint.htm http://www.frontline.in/static/html/fl2412/stories/20070629000206400.htm Outlines of a past http://www.thehindu.com/thehindu/mag/2004/03/07/stories/2004030700460800.htm In Tamil http://tamilnanbargal.com/tamil-articles/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81 http://puranaanuru.blogspot.in/2013/07/normal-0-false-false-false-en-us-x-none.html http://paalveli-athirvagal.blogspot.in/2011/12/blog-post_8824.html ..... — with சுரேஷ் பருகூர் and 3 others.

தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்பு....தங்களது பகுதியில் உள்ள அஇஅதிமுக நிர்வாகிகள் மற...

Posted: 09 Oct 2014 07:24 AM PDT

தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்பு....தங்களது பகுதியில் உள்ள அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக செயலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்...தினமும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உண்ணாநோன்பில் கலந்துகொள்பவர்களுக்கான கட்டண விபரம் :-

1.general participent 10am to 5 pm - Rs. 300 + 1 பிரியாணி
2.காலை 7மணி முதல் மாலை வரை - Rs. 500+ 1 பிரியாணி
3. உண்ணாவிரதப் பந்தலில் media முன்பு அழுபவர்களுக்கு தனியாக 200 ரூபாயும் மொட்டை அடித்துகொள்பவர்களுக்கு Rs.1000

மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர்...இச்சலுகை இதயதெய்வம்,டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் விடுதலை ஆகும் வரை மட்டுமே!!

- யாரோ

துப்பட்டா போடாமல் செய்தி வாசிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் "ஆடைக்கட்டுப்...

Posted: 09 Oct 2014 05:51 AM PDT

துப்பட்டா போடாமல்
செய்தி வாசிக்கும்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில்
"ஆடைக்கட்டுப்பாடுகளை" பற்றி ஆவணப்படம்...!

#முரண்

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள ஊடகங்கள் தமிழினத்திர்க்கு எதிராகவே...

Posted: 09 Oct 2014 05:50 AM PDT

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள ஊடகங்கள் தமிழினத்திர்க்கு எதிராகவே செயல்படுகிறது என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு,

தமிழர்களை இனவெறியர்களாகவும், தீவிரவாதிகளாகவும், காட்டுமிராண்டிகளாகவும், கொள்ளை, கொலைக்காரர்களாகவும் சித்தரிக்கின்றன,

சற்றுமுன் ஒரு மலையாள ஊடகத்தில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன்,

அதில் இரண்டு மலையாளிகள் ஊர் முழுவதும் கடன்வாங்கி கடனாளிகளாக ஆகி,

தங்கியிருக்கும் வீட்டிர்க்கு வாடகை செலுத்த முடியாமல் திணருகின்றனர்,

வீட்டின் உரிமையாளர் வாடகை கேட்டு வர, அச்சமயத்தில் கடன் கொடுத்த கந்துவட்டிக் காரனாக தமிழன் வருகிறான்,

நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் சிரிப்பதற்க்காக தமிழனை ஒரு கோமாளிப் போல் சித்தரிக்கின்றனர்,

அவனும் வந்து கொடுத்தப் பணத்தை கேட்கிறான்,

அப்பொழுது மலையாளியான வீட்டின் உரிமையாளர் எனக்கு வாடகை கொடுக்க முடியாதவர்கள்

உனக்கு எங்கிருந்து பணம் கொடுக்கப் போகிறார்கள், வந்த வழியே திரும்பிப் போ என்கிறார்,

உடனே கந்துவட்டியான தமிழன் பணம் சம்பாதிப்பதர்க்கு உங்களுக்கு நான் வழி சொல்கிறேன் என்று,

ஆட்களை கடத்திக் கொண்டுவந்து மிரட்டிப் பணம் பறிப்போம் என்று ஆலோசனைக் கூறுவதாக காட்சி அமைந்துள்ளது,

இதற்க்கு மேல் பார்த்தால் கோபமாகி என் தொ.காட்சிக்கு சேதாரமாகி விடும் என்பதால் நிறுத்திவிட்டேன்,

இந்நிகழ்ச்சியை மேலோட்டமாக பார்க்கும்போது நகைச்சுவையாக தான் தோணும்,

ஆனால் அதில் தமிழர்களை எந்தளவிர்க்கு இழிவுப்படுத்த முடியுமோ,

அந்தளவிர்க்கு தமிழர்களை கொள்ளைக்காரர்களாகவும், திருடர்களாகவும், கடத்தல்காரர்களாகவும்,

நாகரீகம் தெரியாதவர்களாகவும் சித்தரித்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து மக்களுக்கு வழங்குகின்றனர்,

இதைப்பார்க்கும் மலையாளிகள் தமிழர்களை வெறுக்கும் நிலைக்கு வருகின்றனர் என்பது நிதர்சனம்,

இதை உறுதியாக கூறமுடியும் என் அனுபவத்தில்,

இவ்வாறான நிகழ்ச்சிகள் புதிதல்ல, ஏதாவது ஒருவகையில் தமிழர்களை இழிவுப்படுத்தும் நோக்கோடு பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகின்றன,

இதே நிலைதான் தமிழ்நாட்டிலும், நமது மண்ணில் இருந்துக் கொண்டே,

நம்மின வரலாற்றை திரிப்பதும், பண்பாட்டை கேவலப்படுத்துவதும்,

நம் மொழியை இழிவுப்படுத்துவதென ,

எல்லா வழியிலும் ஓர் இனத்தின் மீது வன்மத்தைக் காட்டும் இவர்கள் நோக்கம் தான் என்ன?

@இரா. வேல் முருகன்

அம்மாக்காக மண் சோறு சாப்பிடுபவர்கள் பொன்னி அரிசி சோற்றை தரையில் போட்டு சிரமப்பட்...

Posted: 09 Oct 2014 05:14 AM PDT

அம்மாக்காக மண்
சோறு சாப்பிடுபவர்கள்
பொன்னி அரிசி சோற்றை தரையில்
போட்டு சிரமப்பட்டு சாப்பிட
வேண்டாம்.

ரேசன்
அரிசியை அப்படியே சமைச்சு சாப்பிட்டா போதும்.
:P

#டிப்ஸ் ஃபார்
அறப்போராட்டம்

@சதீஷ் குமார்
தேவகோட்டை

ஹ்ம்ம்... அப்புறம்... ஹ்ம்ம்... அப்புறம்... காதலிக்கிறவனுக்கும், கல்யாணம் ஆனவன...

Posted: 09 Oct 2014 05:09 AM PDT

ஹ்ம்ம்... அப்புறம்...

ஹ்ம்ம்... அப்புறம்...

காதலிக்கிறவனுக்கும்,
கல்யாணம்
ஆனவனுக்கும் தான்
தெரியும் இந்த
வார்த்தையின் சுகமும்...
வலியும்...

@சதீஷ் குமார்
தேவகோட்டை

தக்காளி, வெங்காயம், பச்ச மிளகாய் நடுவே எதையாவது கலந்தால் அதுவே சமையல்! //பேச்சு...

Posted: 09 Oct 2014 05:02 AM PDT

தக்காளி, வெங்காயம்,
பச்ச மிளகாய்
நடுவே எதையாவது கலந்தால் அதுவே
சமையல்!

//பேச்சுலர் கிச்சன்
:P


@பிரபின் ராஜ்

வீட்டு வேலை செய்வதும், ஆண்களை திருப்தி படுத்துவதுமே ஒரு பெண்ணின் வேலை - ஆர் எஸ்...

Posted: 09 Oct 2014 03:55 AM PDT

வீட்டு வேலை செய்வதும்,
ஆண்களை திருப்தி படுத்துவதுமே ஒரு பெண்ணின்
வேலை - ஆர் எஸ் எஸ்
தலைவர் மோகன் பகவத்

:>>நீங்கள் வணங்கும்,
சரஸ்வதி, லட்சுமி போன்ற
பெண் தெய்வங்களுக்கும்
இதே நிலைதானா... பின்னாடி நிக்குற
காளியம்மா கிட்ட
சொல்லிராதிங்க.. கழுத்தில
சூலத்தை இறக்கிற
போகுது,..


நன்றாக கவனியுங்கள். ஓவியமாகக் கூட வரைவது கடினம். ஒரு தலை, நான்கு உடல்கள் கொண்ட ச...

Posted: 09 Oct 2014 03:42 AM PDT

நன்றாக கவனியுங்கள்.
ஓவியமாகக் கூட
வரைவது கடினம்.
ஒரு தலை,
நான்கு உடல்கள் கொண்ட
சிற்பம். தமிழனின்
அற்புதமான
படைப்புத்திறனுக்கும்
சிற்பக்கலைக்கும்
ஒரு எடுத்துக்காட்டு.

#வியப்பு!

இடம்: தாராசுரம் கோவில், கும்பகோணம்


இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லா தேசிய இனங்களின் மொழிகளுக்கும் முக்கிய...

Posted: 09 Oct 2014 02:55 AM PDT

இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லா தேசிய இனங்களின் மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்திய ரூபாய் ஆங்கிலேயர்கள் 1910 ல் வெளியிட்டது. இந்த ரூபாய்த் தாளில் தமிழில் எண் இருப்பதை நீங்கள் காணலாம். மொழி சம உரிமையை ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்தி அரசு புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனை.

இந்திய ரூபாய்த் தாள்கள் அந்தந்த மாநிலத்தின் பெருமை சாற்றும் வகையில் அந்தந்த மாநில மொழியிலும் எண்களிலும் அச்சிட்டு வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும்.


சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்தா ஆரம்பிச்சிட்ராய்ங்க.. உன்னோட படிச்ச அவன் வேலைக்கு...

Posted: 09 Oct 2014 02:47 AM PDT

சொந்தக்காரங்க
வீட்டுக்கு வந்தா ஆரம்பிச்சிட்ராய்ங்க.. உன்னோட படிச்ச அவன்
வேலைக்கு போய்ட்டான்.. இவன்
வேலைக்கு போயிட்டான்னு.
இவங்களோட படிச்சவங்க
எல்லாம் இப்ப
போயி சேந்துட்டாங்க... இவரு எப்ப
போகப்போறார்ன்னு நாங்க
எப்பயாவது கேட்ருக்கோமா?

# சும்மா கடுப்பேத்திக்கி
ட்டு...

#தமிழன் ஒரு இளிச்சவாயன்.

Posted: 09 Oct 2014 02:36 AM PDT

#தமிழன்
ஒரு இளிச்சவாயன்.


எங்க ஊர்ல ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவர் லஞ்சம் வாங...

Posted: 09 Oct 2014 01:39 AM PDT

எங்க ஊர்ல
ஒரு இன்ஸ்பெக்டர்
இருந்தார்
ஐந்து வருடங்களுக்கு முன்னர்
அவர் லஞ்சம்
வாங்கியபோது லஞ்ச
ஒழிப்பு துறையால்
கைது செய்யப்பட்டு வேலை இழந்துவிட்டார்.

கடந்த ஒரு வாரமாக
அவர் தன்னை மக்கள்
இன்ஸ்பெக்டர்
என்று சொல்லிகொள்கிறார்.

இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் இதுதான் அனைத்து துறைகளிலும் நடக்கும்...

Posted: 09 Oct 2014 01:10 AM PDT

இட ஒதுக்கீடு மட்டும் இல்லை என்றால் இதுதான் அனைத்து துறைகளிலும் நடக்கும்...


"உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை...

Posted: 08 Oct 2014 09:49 PM PDT

"உண்மையில் நான்
அர்ஜெண்டினாவை சேர்ந்தவன்
மேலும்
க்யுபாவை சேர்ந்தவன்,
பொலிவியாவை சேர்ந்தவன்,
ஆப்ரிக்காவை சேர்ந்தவன்,
ஆசியாவை சேர்ந்தவன், ஏன்
அமெரிக்காவை சேர்ந்தவன்
கூட. ஏனெனில்
அடிமைப்பட்டு கிடக்கும்
ஒவ்வொரு நாடும் என்
தாய் நாடு.
அவர்களுக்கு எனது போராட்டம்
தேவை இருக்கிறது.
நானொரு கொரில்லா போராளி.
அப்படி அழைக்கபடுவதைத்த
ான் நான்
விரும்புகிறேன்"... -
எர்னஸ்ட் சேகுவேரா"


0 comments:

Post a Comment