Friday, 31 October 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இன்று அலைபேசி வழியாக இணையம் பயன்படுத்துவை நிறுத்தி வைத்து இன்டர்நெட் விலையேற்றத்...

Posted: 30 Oct 2014 06:12 PM PDT

இன்று அலைபேசி வழியாக இணையம் பயன்படுத்துவை நிறுத்தி வைத்து இன்டர்நெட் விலையேற்றத்துக்கு எதிராக ஒரு போராட்டம் !!

எதனை வைத்து முடிவு செய்கிறார்கள் விலை ஏற்றத்தை... இன்றைய சூழ்நிலைகளை பொறுத்து தமது வளங்களை பெருக்கிகொள்ளும் நிறுவனத்தை எதிர்த்து நம்மால் முடிந்ததை செய்வோம்... ஆதரவு கொடுங்கள் நண்பர்களே...

#மறப்போம்_இணையத்தை_இன்று_மட்டும்


இன்று ஒரு நாள் மட்டும் ஒற்றுமையாக இருந்து எந்த மொபைல் இன்டர்நெட்டையும் பயன்படுத்...

Posted: 30 Oct 2014 06:09 PM PDT

இன்று ஒரு நாள் மட்டும் ஒற்றுமையாக இருந்து எந்த மொபைல் இன்டர்நெட்டையும் பயன்படுத்தாமல் நம்முடைய எதிர்ப்பை மொபைல் கம்பெனிக்கு தெரிவிக்கலாம் ,ஆதரவு தாருங்கள்..

இது முதல் ரிலால்ஸ் ப்ளீஸ்-யில் இன்று எந்த பதிவும் இருக்காது.. :)

Relaxplzz

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் தப்பு செய்பவர்களை கடவுள் தண்டிக்கத் தொடங்கினால் காசு தருபவர்...

Posted: 30 Oct 2014 05:57 PM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

தப்பு செய்பவர்களை கடவுள் தண்டிக்கத் தொடங்கினால்
காசு தருபவர்களை மட்டும் ஸ்பெஷலாக கவனிக்கும் பூசாரியிடமிருந்து தான் தொடங்க வேண்டும் !!!

- Kali Muthu.

இனிய காலை வணக்கம் நண்பர்களே :)

Posted: 30 Oct 2014 05:45 PM PDT

இனிய காலை வணக்கம் நண்பர்களே :)


குட்நைட் செல்லம்ஸ் <3

Posted: 30 Oct 2014 10:50 AM PDT

குட்நைட் செல்லம்ஸ் ♥


அழகு

Posted: 30 Oct 2014 10:40 AM PDT

அழகு


:)

Posted: 30 Oct 2014 10:30 AM PDT

:)


:P :P

Posted: 30 Oct 2014 10:20 AM PDT

:P :P


முகநூலில் பாதுகாப்பாக இருக்க பெண்கள் என்ன செய்யவேண்டும்.? சமீபத்தில் ஒரு பதிவைக...

Posted: 30 Oct 2014 10:10 AM PDT

முகநூலில் பாதுகாப்பாக இருக்க பெண்கள் என்ன செய்யவேண்டும்.?

சமீபத்தில் ஒரு பதிவைக்கண்டேன் அதில்..........

பெண்களே புகைபடம் போடதீர்கள்... அதை சிலர் தவறான வலைதளங்களில் போட்டு உங்களை களங்கப்படுத்த வாய்ப்புள்ளது என்று சொல்லுபவர்கள், ஏன் பெண்களின் புகைப்படங்களை அப்படி தவறாகப்பயன்படுத்தாதீர்கள் என்று அவர்களுக்கு சொல்வதில்லை?" என்று கேட்கப்பட்டிருந்தது.

அது புலி உலவும் இடம் அங்கே போகாதே நீ வேட்டையாடப்படுவாய் என்று சொன்னால்....... எங்களை வேட்டையாடக்கூடாது என்று புலியிடம் சொல்லாமல் ஏன் எங்களிடம் அங்கே செல்லாதே என்று சொல்கிறீர்கள் என்று கேட்பதை போலல்லவா இருக்கிறது இந்த வாதம்.

முகநூலுமொரு வனம்தான்..... இங்கே உலவும் மான்களுக்கு தன்னை வேட்டையாடத்துடிக்கும் விலங்குகளிடமிருந்து தன்னைக்
காத்துக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அம்மிருகத்திற்கு இறையாகவேண்டியிருக்கும். அப்படி காத்துக்கொள்ள என்ன வழி......... இங்கே பார்போம். இவையெல்லாம் என்னை சுற்றி உள்ள தோழிகளுக்கு நடந்த சம்பவங்களைக் கண்டு அந்த அனுபவத்தில் நான் எழுதுவது.

1. புகைப்படம் போடுதல்.

தன் சொந்த முகத்தை மறைத்து போலி முகத்தோடு நாம் இங்கே உலவ வேண்டாம். போட்டோ போடலாம் ஆனால் அதை நம் நட்புக்கள் மட்டுமே பார்க்குமாறு போடவேண்டும் அதற்கு முன் நட்புவட்டம் நம்பத்தகுந்ததா என்று கவனியுங்கள் . இல்லை என்றால நம்பிக்கையான சில முக்கிய நட்புக்கள் மட்டுமே பார்க்கும்படி போடலாம்.... அதுவும் இல்லை என்றால் யாருமே போட்டோவை திறக்கமுடியாதபடியும் பதிவிறக்கம் செய்யமுடியாதபடியும் போடலாம் அது மிகவும் சிறந்தது.

2. நட்பு அழைப்பு.

நம்பகமான நட்புவட்டம் என்பது மிக மிக முக்கியம். ஒருவரை இணைக்கும்பொழுது அவரது சுவருக்கு சென்று ப்ரொஃபைல், லைக்ஸ், பதிவுகள் போன்றவைகளை பார்த்து இணைக்க வேண்டும். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று வரும் நட்புக்கள் அனைத்தையும் இணைக்காமல் இருப்பது நல்லது.

அதிக நட்புகள் இருந்தால் அதிக கமண்ட் வரும் என்று, லைக்குக்கும் கமண்ட்டுக்கும் ஆசைப்பட்டு அனைவரையும் இணைத்து பிரச்சனையில் சிக்க வேண்டாம்.

3. ச்சேட்டிங்.

இங்கு மிக முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது ஒன்று "ச்சேட்."!!!! பெரும்பாலும் யாருடனும் ச்சேட் செய்வதை தவிருங்கள். அதுவே பிரச்சனையின் முதல் கட்டம். முன்பின் தெரியாத ஒருவரிடம் தன் குடும்பக் கதைகளையும் பிரச்சனைகளையும் சொல்லாதீர்கள் உங்கள் முன் நல்ல விதமாக பேசும் சிலர். பிறரிடம் உங்களை தவறாக பேசவும் நீங்கள் அவருடன் பேசியதை பிற நணபர்களுக்குக் காப்பி பேஸ்ட் செய்து அனுப்பவும் வாய்ப்பு உள்ளது.

உங்களிடமிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை வைத்து உங்களின் பலவீனம் தெரிந்து அந்த நபரே வேறு ஒரு ஐடியில் வந்து உங்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கலாம். எனவே ச்சேட் செய்வதை கண்டிப்பாக தவிருங்கள்.

4.கைப்பேசி எண் பரிமாற்றம்.

அவசரப்பட்டு யாருக்கும் போன் நம்பர் குடுத்து பேச வேண்டாம். நம் வீட்ட்டிலுள்ளவர்களுக்குத்தெரிந்தே நாம் பேசினாலும் கூட ஒரு சமயம் போல ஒரு சமயமிருக்காது.... இதனால் வீட்டில், குடும்பத்தில் குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல.இன்று நட்புடன் இருந்து உங்களிடம் அன்பாக பேசியவர் நாளைக்கு கருத்து வேறுபாடு கொண்டு பிரிய நேரிட்டால உங்கள் கைப்பேசி எண்ணை தவறாகப்பயன்படுத்தலாம். உங்களுக்கு தொல்லைகள் கொடுக்கலாம்.

உங்களுக்கு நன்கு அறிமுகமான நண்பர்களின் தோழமைகள் என்றபோதும் அவர்களிடம் யோசித்து நம்பர் தருவதே சிறந்தது. காரணம் அந்த நபர் உங்கள் தோழமையிடம் பேசுவது போலவே கண்ணியமாக உங்களிடமும் நடந்து கொள்வார் என்பதற்கு எந்த உத்திரவதமும் இல்லை.

எனவே கைப்பேசி எண்கள் பறிமாற்றத்தை முற்றிலும் தவிருங்கள்.

5. சந்திப்பு.

முதலில் ச்சேட்டிங்கில் தொடங்கி, நம்பர்கொடுத்து பேசி அடுத்டு நேரில் சந்தித்து பிரச்சனையில் சிக்கித்தவித்த தோழிகளும் நிறைய உண்டு இங்கே.
நட்பு, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நேரில் தனியாக சென்று பார்ப்பதை தவிருங்கள். இப்போதெல்லாம் போட்டொ எடுக்க மொபைல் கூட தேவை இல்லை ஒரு பேனாவோ ஒரு கூலினங்கிளாசோ கூட போதும் அதிலேயே கேமெரா இருக்கிறது. உங்களுக்குத்தெரியாமல் உங்களை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் போட்டோ எடுக்க முடியும்.
எனவே ரொம்ப அவசியம் என்றால் மட்டுமே..... பலநட்புக்கள் ஒன்று கூடும்பொழுது ஒரு கெட்டூகெதரிலோ அல்லது விழாவிலோ அல்லது நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்கும் பொது இடங்களிலோ சந்திக்கலாம் அதுவும் தனியே கூடாது.

6. பதிவுகள்

நமது பதிவுகள் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக ஒருபோதும் இருக்கக்கூடாது, இன்று வீட்டில் சண்டை, கோபமாக இருக்கிறது அழுகையாக வருகிறது, நான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறேன். போன்ற நம் குடும்ப விஷயங்களை பதிவிட வேண்டாம். நம் எழுத்துக்களைக் கொண்டே நம் மனநிலையை கணக்கிட்டுவிடுவார்கள். எந்த இடத்திலும் நம் பலவீனத்தை வெளிக்காட்டக்கூடாது. நான் மிகவும் தைரியமானவள் சந்தோஷமானவள் என்பதை காட்டும்படியாகவே நம் பதிவுகள் இருக்க வேண்டும்.

நள்ளிரவு தாண்டி வெகு நேரம் பெண்கள் முகநூலில் இருப்பது நல்லதல்ல. நம்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை அது தூண்டிவிடும்.

குடும்பம் , கணவன் குழந்தைகள் இதைத்தாண்டி வாழ்வில் எதுவும் பெரிதில்லை. எனவே முகநூலில் உள்ளவைகளை முகநூலிலேயே விட்டுவிடவேண்டும் அதை குடும்பத்தில் நுழைத்தால் வீண் பிரச்சனைகள் உருவாகி குடும்ப நிம்மதி அடியோடு கெட்டுவிடும். குடும்ப வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு முகநூலில் வாழ்க்கை நடத்த முடியுமா.?

மொத்தத்தில் முகநூல் ஒரு கானல் நீர் இங்கே காணும் எதுவும் உண்மை இல்லை எனபதை புரிந்துகொண்டு மேற்சொன்னவைகளை பின்பற்றினால் இங்கே நல்ல பேருடனும் நல்ல நட்புக்களுடனும் நிலைத்திருக்கலாம்.

(முகநூலில் உள்ள அனைவருமே கெட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை....... நல்லவர்களும் நிறைய உண்டு ஆனால் அதை பிரித்து அறியும் பக்குவம் வரும்வரை..... கவனமாக இருப்பது நல்லதல்லவா?)

Post Courtesy : - Venn Nilaa

Relaxplzz

World's Cheapest Milk Price by Aavin - 56 Years Record and Rs 10 Hike Detail Ana...

Posted: 30 Oct 2014 10:00 AM PDT

World's Cheapest Milk Price by Aavin - 56 Years Record and Rs 10 Hike Detail Analysis - ஆவின் பால் விலை ஏற்ற சோதனை என்று பலர் புலம்ப - உலகத்த்திலே மிகவும் குறைவான விலையில் பால் வழங்கிய ஒரு நிறுவனமும் இந்த ஆவின் தான் என்ற சாதனையும் பார்க்க வேண்டும். அது எப்படி உலகிலெ மிக குறைந்த விலை என்றால் 2011 வரை பால் விலை - கொள்முதல் விலைக்கே கொடுத்து வந்த ஆவின் 2011 விலையேற்றம் செய்த பிறகும் இந்த உலகின் மிக குறைந்த பால் விலை ரெக்கார்ட்டை தக்க வைத்திருந்தது மட்டுமில்லாமல் - உலகிலே அதிக பால் உற்பத்தி செய்யும் ஒரே நாடு - இந்தியா - அதுமட்டுமல்ல - இந்தியாவிலே அதிக பால் உற்பத்தி செய்வது தமிழகம் மட்டும் தான் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்............இதை பற்றி ஒரு அனலைஸிஸ்...........

ஆவின் இன்று நேற்று தொடங்கபட்ட நிறுவனம் அல்ல 56 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பால் வளத்துறை இன்று தமிழக அரசின் நிறுவனம். தமிழகத்தில் தினமும் சுமார் 1 கோடி 47 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது அதில் 78 லட்சம் லிட்டர் ஆவின் கையாளுகிறது. இந்த பால் விலை இன்று பத்து ரூபாய் ஏற்றும் முன் 2 ரூவாயை ஏற்கனவே ஏற்றி கொடுத்து கொண்டிருக்கிறது ஆவின் நிறுவனம் பால் கறவையாளர்களுக்கு. அது போக இந்த விலையேற்றத்தில் இன்னும் 5 ரூபாய் ஏற்றியது போக மிச்சம் அரசுக்கு வருவது 3 ரூபாய்கள் மட்டுமே.

இது நல்லதா என்றால் நல்லது தான். ஏன் என்றால் தமிழகத்தின் மார்க்கெட் ஷேர்படி ஆவின் பால் 21% சதவிகிதம் மட்டுமே...........83% சதவிகிதம் ஆவின் வசம் இருந்த பால்.மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமா குறைந்தது இரண்டு விஷயத்தில்.... 1. பால் தேவை அதிகரிக்க அதனால் பர்சென்டேஜ் குறைவானது. 2. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து ஆவின் பால் ச்ப்ளை குறைந்த காரணத்தினால் தான் இந்த பால் பூத்துகள் காலை 7 மணிக்கே காலியாகிவிடும் - ஆனால் நாள் முழுவதும் அண்ணாச்சி கடைகளிலும் - தனியார் ஹோட்டல்களிலும் - டீக்கட்டைகளிலும் இருப்பது தான் காரணம். காறி துப்பும் அளவுக்கு காப்பி டீ சைனடு குப்பியை விட சற்றே பெரிதான சைஸில் கொடுக்கும் காப்பி டீ விலை 7 முதல் 10. இவர்கள் தான் இந்த மானியத்தை உறிஞ்சி ஆவினையும் - பால் கறவையாளர்களையும் நஷ்டம் செய்கின்றனர். உண்மையா பால் பயனீட்டாளர்கள் என்று பார்த்தால் 9% சதவிகித தனிமனிதர்கள் தான். இதனால் நாய்ர் ஆகட்டும் அண்ணாச்சி ஆகட்டும் அரசு மானிய பாலை வாங்கி உயர் விலைக்கு விற்கின்றனர். இதில் சில நிறுவனங்கள் கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கின்றன. சில தனியார் தயிர் மற்றூம் பண்ணீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றூம் அனேக கொள்ளை விலை விற்கும் ஸ்வீட் ஃபேக்டரிக்குத்தான் இந்த பால் அதிகம் செல்லுகிறது.

நல்லது என்ன? - அரசு நிறுவனம் என்று ஒன்று இருந்தால் தான் தனியார் பால் விலை ஒரு 10 - 15% மார்ஜினில் இருக்கும் சாத்தியம் - இல்லையெனில் ஆவின் நஷ்டத்தில் மூடப்படும் நிலைமை அல்லது ஏதாவது ஒரு தனியார் நிறுவனம் கையகபடுத்தி நாளை பால் 100 ரூவாய் என்றாலும் வாங்கித்தான் ஆகவேண்டும். அரசி தலையிட்டால் - மினரல் வாட்டர் கொள்ளையர்கள் போல் ஸ்டிரைக் செய்து சாவட்டிப்பார்கள். இன்று முதலை கண்ணீர் சிந்தும் பாஜாக - காங்கிரஸ் அவர்கள் ஆளும் மற்ற மானிலங்களில் இந்த விலைக்கு முதல்ல விற்க சொல்லிவிட்டு அதற்க்கு அப்புறம் போராட்டம் பொரிவிளங்கா செய்யலாம். இன்று தமிழகத்தில் அதிகம் விறகபடும் தனியார் பாலில் இரண்டு முக்கிய விஷயங்கள்...அந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான ஹெரிட்டேஜ் / மில்கி மிஸ்ட் / ஆரோகயா பால் நிறுவங்கள் தான் கோலோச்சுகின்றன. ஆனால் இந்த நிறுவங்கள் 100 சதவிகத ஒரிஜினல் பால் தருவதில்லை 60% பால் பவுடர் மாயம் தான். மில்கி மிஸ்ட் வகை இதில் 80% சதவிகதம் வரை உபயோகிக்கறது. அதனால் இங்கு பொங்கும் பலர் ஒன்று ஆவின் வாங்கி பயன்படுத்துவதில்லை அல்லது இந்த நாட்டிலே இல்லை என்பது தான் உண்மை.. அரசு 34க்கு ஏற்றவில்லை 32 ரூவாய் தான் 34 சில்லரை விலை அதாவது கார்ட் இல்லாமல் வாங்கும் தினசரி அன்றாடம் காய்ச்சிகளுக்குத்தான் அந்த விலை. இந்த ஆவின் அரசு விலையை விட எந்த நிறுவனம் அரசு உலகில் எங்கு பால் கொடுக்கிறது என்று தெரிவித்தால் நானும் ஹேப்பியா கேட்டுக்குவேன். அதனால் இதுவரை மானியத்தில் நாயர் / அண்ணாச்சி மற்றும் பல ஹோட்டல் தொழிலதிபர்களை மானியத்தில் வளர்த்து விட்ட கோபாலபுரத்து அய்யாவையும் - போயஸ் அம்மாவையும் பாராட்டத்தான் வேண்டும்...சினிமாவுல கடைசி சீன்ல மட்டும் விவாசியிக்காக பரிதாபப்படும் நீங்கள் 7 ரூவாய் இந்த விலையேற்றத்தில அடிமடியில் கைவைப்பது நியாயமே இல்லை................பிடித்திருந்தால் பகிரவும்.

- Ravi Nag.


இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) இடம்: தேங்காபட்டணம், கன்னியாகும...

Posted: 30 Oct 2014 09:50 AM PDT

இந்த பசுமையை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

இடம்: தேங்காபட்டணம், கன்னியாகுமரி மாவட்டம்


மூளைக்கொரு வேலை

Posted: 30 Oct 2014 09:40 AM PDT

மூளைக்கொரு வேலை


0 comments:

Post a Comment