Thursday, 30 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகு அருணை!

Posted: 30 Oct 2014 07:31 PM PDT

அழகு அருணை!


Posted: 30 Oct 2014 12:14 PM PDT


மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது சலித்துவிட்டதால ் சிங்கள அரசு இப்போது...

Posted: 30 Oct 2014 12:01 PM PDT

மீனவர்களை துப்பாக்கியால்
சுட்டுக்
கொல்வது சலித்துவிட்டதால
் சிங்கள
அரசு இப்போது தூக்கு கயிற்றை எடுத்திருக்கிறத
ு..
தன் சொந்த
குடிமக்களை சுட்டுக்
கொல்லும்
`நட்பு நாட்டை'தட்டிக்
கேட்க மறுக்கும்
மானங்கெட்ட
மோடி அரசின்
முகமூடியையும்,

தூக்கு கயிற்றையும்
அறுத்தெறிவோம்..

இது மீனவர்கள்
போராட்டமல்ல..
தமிழர்களின் போராட்டம்..

@பாலா


அப்போ நாங்கள் இந்தியன் இல்லையா??

Posted: 30 Oct 2014 11:52 AM PDT

அப்போ நாங்கள் இந்தியன்
இல்லையா??


மீனவர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல. இனத்திற்கான போராட்டமாகவே பார்க்க வேண்டும். அ...

Posted: 30 Oct 2014 11:35 AM PDT

மீனவர்களுக்கான
போராட்டம் மட்டுமல்ல.
இனத்திற்கான
போராட்டமாகவே பார்க்க
வேண்டும்.
அறிக்கைககளும். கண்டன
ஆர்ப்பாட்டமுமே தீர்வல்ல.
இன்று ராமேஸ்வரம்
ஸ்தம்பித்து நிற்பதை போல்
ஒட்டு மொத்த தமிழகமும்
அமைதி வழியில்
ஸ்தம்பிக்க வேண்டும்.
மீனவர்களின்
போராட்டத்திற்கு
எல்லோரும் துணை நிற்க
வேண்டும்.
அப்போதுதான் மத்திய
அரசு திரும்பி பார்க்கும்.


"சோழர்களின் கடற்போர்" @ஓவியர் மாருதி

Posted: 30 Oct 2014 08:46 AM PDT

"சோழர்களின்
கடற்போர்"

@ஓவியர் மாருதி


மொபைல் நெட் கார்ட் விலை உயர்வுக்கு எதிராக சிலர் முன்னெடுக்கும் போராட்டத்தை நான்...

Posted: 30 Oct 2014 08:21 AM PDT

மொபைல் நெட் கார்ட்
விலை உயர்வுக்கு எதிராக
சிலர் முன்னெடுக்கும்
போராட்டத்தை நான்
ஆதரிக்கிறேன்..
மொபைல் போன்களின்
ஆரம்ப கவர்ச்சியில்
மயங்கியும் ,
சூழ்ச்சியால்
ஏமாற்றப்பட்டும் , தபால் ,
தந்தி என ஒன்றொன்றாக
இழந்து மொபைல்
போன்களின்
மோனோபோலிக்கு நாமே வழி செய்து கொடுத்து விட்டோம்..
இனி திருந்தியும் பயன்
இல்லை...

போதுமான
அழிவுகள்
நிகழ்ந்து விட்டன,,,
ஆனாலும்
அழிவை குறைக்க
முயன்று பார்ப்போம்.

@பிச்சைகாரன்

5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை தூக்கு தண்டனை விதிப்பு. #கயிறு நான் தான் வாங்கி தந...

Posted: 30 Oct 2014 08:09 AM PDT

5 தமிழக
மீனவர்களுக்கு இலங்கை தூக்கு தண்டனை விதிப்பு.

#கயிறு நான் தான்
வாங்கி தந்திருக்கிறேன்
ன்னு பிஜேபி கார
மூத்த
தலைவர் பதில்
சொல்லுவார் பாருங்கள்.

@தனபால்

அன்றும்! இன்றும்! 1980 ல் பெண் பார்க்கும்போது கேட்கப்படும் 5 கேள்விகள். 1.பொ...

Posted: 30 Oct 2014 07:17 AM PDT

அன்றும்! இன்றும்!

1980 ல் பெண்
பார்க்கும்போது கேட்கப்படும் 5
கேள்விகள்.
1.பொண்ணுக்கு சமைக்க தெரியுமா?
2.பொண்ணுக்கு பாட தெரியுமா?
3.பெரியவங்கள அன்பா பார்த்துக்க
தெரியுமா?
4.பொண்ணு அடக்கமா இருக்குமா?
5.வீட்டுக்கு ஏற்ற
மருமகளா இருப்பாளா?

2014 ல் பெண்
பார்க்கும்போது கேட்கப்படும் 5
கேள்விகள்.
1.பொண்ணுக்கு Facebook ல அக்கவுண்ட்
இருக்கா?
2.Whatsapp,Skype உபயோகிக்க
தெரியுமா?
3.வாரத்துல
ஒரு தடவையாது சமைப்பாளா?
4.என் பையனவிட
கம்மியா படிச்சிருக்காளா?
5.கராத்தே கிளாஸ்லாம்
போகமாட்டாள்ளே?

@வானதி ஸ்ரீ

இந்தியாவில் கல்வியை எப்படி முன்னேற்றுவது என்பது பற்றிய கலந்துரையாடலுக்காக ஆர்.எஸ...

Posted: 30 Oct 2014 06:11 AM PDT

இந்தியாவில்
கல்வியை எப்படி முன்னேற்றுவது என்பது பற்றிய
கலந்துரையாடலுக்காக
ஆர்.எஸ்.எஸ்
தலைவர்களை சந்தித்தார்
மனித வள
மேம்பாட்டு அமைச்சரான
ஸ்மிருதி இரானி.

பிளாஸ்டிக்
சர்ஜரிக்கு பிள்ளையாரை லெக்ட்சரராக
போடலாம்
என்று முடிவெடுத்திருப்பார்களோ ?

@Narain Rajagopalan

தெரியாம ஆட்டோகாரன்ட்ட ஏடிஎம்க்கு வழிகேட்டுட்டேன்... "உக்காருங்க சார் 150 ரூபாய...

Posted: 30 Oct 2014 06:02 AM PDT

தெரியாம
ஆட்டோகாரன்ட்ட
ஏடிஎம்க்கு வழிகேட்டுட்டேன்...

"உக்காருங்க சார் 150
ரூபாய்
கொடுங்க"ன்னு கேக்குறான்...
டேய் நான் எடுக்க
போறதே 100 ரூபாய்
தான்டா...

@பூபதி

ஆணின் அறியாமையை ரசிக்க ஒரு பெண்ணால் முடிகிறது ... பெண்ணின் சாதூர்யத்தை சகிக்ககூட...

Posted: 30 Oct 2014 05:14 AM PDT

ஆணின்
அறியாமையை ரசிக்க
ஒரு பெண்ணால்
முடிகிறது ...
பெண்ணின்
சாதூர்யத்தை சகிக்ககூட
முடிவதில்லை ஒரு ஆணால்... !!!

வெள்ளையர்கள் கறுப்பின மக்களை பல நூற்றாண்டுகளாக அடிமையாக்கி பயன்படுத்தினார்கள். க...

Posted: 30 Oct 2014 05:12 AM PDT

வெள்ளையர்கள் கறுப்பின மக்களை பல நூற்றாண்டுகளாக அடிமையாக்கி பயன்படுத்தினார்கள். கறுப்பின மக்கள் மனிதர்களே அல்ல. வேறொரு விலங்கின வகை என்று நினைத்ததால் அவர்களை அடிமைபடுத்துவதை பற்றி வெள்ளையர்கள் கவலைப்படவில்லை. ஹிட்லரின் நாஜிக்களும் அப்படி பார்த்ததால்தான் யூதர்களை கொன்று குவித்தார்கள். அறிவியல் என்ன சொல்கிறது? டார்வினே கறுப்பின மக்களும் நம்மை போன்ற மனித இனம் தான் அவர்களை அடிமைபடுத்துவது தவறு என்றார். 'வலுத்ததே வாழும்' என்பது பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக உயிரிகளில் நடந்த படிப்படியான மாற்றங்களை விளக்கவே அவர் சொன்னார்.

ஆனால் டார்வின் கொள்கைகளை ஆழமாக புரிந்துகொள்ளாமலேயே அதை தங்களின் ஆதாயத்திற்காக பயன்படுத்தியவர்கள் அதிகம். 'வலுத்ததே வாழும்' என்பதை சக மனிதர்களை அடிமைபடுத்தவும் கொல்லவும், அறிவியல் தந்த அடிப்படையாக பயன்படுத்தியது, அரசியல் பொருளாதார ஆதாயங்களுக்காக ஹிட்லர் போன்றோர் செய்த காரியம். ஹிட்லரின் இரண்டாம் உலகப்போர் ஆட்டங்களுக்கு பின், ஐ. நா சபை உண்டாக்கப்பட்டது. அது மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்தான், அதை சொன்ன டார்வினின் ஆழம் மகத்தானது என்றது. மேலும், மனிதர்களிடம் இருக்கும் பெரிய அளவிலான வேற்றுமைகளுக்கு (உதாரணம்: அறிவியலின் விற்பன்னர்களாக ஐரோப்பியர்கள் இருப்பது, ஆப்பிரிக்கர்கள் அப்படி இல்லாமல் இருப்பது) அவர்களின் வளர்ந்த சூழல் அதாவது கலாச்சாரம்தான் காரணம் என்ற பார்வையை முன்வைத்தது! அதாவது பிறப்பால் அனைவரும் மனிதர்களே என்றது. சமத்துவத்தை வலியுறுத்தியது. ஆழமாக அறிந்துகொண்டு கடைபிக்க வேண்டிய விஷயம்தான் இது.

சரி நம் இந்தியாவில் அரசியல் பொருளாதாரத்தை விட்டுவிடலாம். நம் நாடு ஒரு ஆன்மிக நாடு. ஆனால் நம் மதமே சாதிப்பிரிவுகள் என்ற விஷயங்களை தருகிறது. இதன் அடிப்படையில் மனிதர்கள் சமமாக பார்க்கப்படுகின்றனரா? அல்லது நம் அமைப்புகளை அறிவியலின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டதா?

- சகலகலா ஜீன்ஸ்

கருப்புப் பணம் பதுக்கல் பற்றி தகவல் தெரிந்தால் சொல்லலாம்: சிறப்பு புலனாய்வுக் கு...

Posted: 30 Oct 2014 04:06 AM PDT

கருப்புப் பணம் பதுக்கல்
பற்றி தகவல் தெரிந்தால்
சொல்லலாம்:
சிறப்பு புலனாய்வுக்
குழு வேண்டுகோள்

#கோர்ட்டுக்கு கொடுத்த
லிஸ்ட்ல உள்ள எல்லார்
பேரயும் நீங்க
சொல்லுங்கோ! யார்
பேர் விடுபட்டிருக்கு
ன்னு நாங்க சொல்றோம்!

@ஜெயராஜ்

அழகு கொடைக்கானல்!

Posted: 30 Oct 2014 03:55 AM PDT

அழகு கொடைக்கானல்!


இந்தப் படத்தில் பச்சைப் பசேல் என்று தெரிகிறதா?அது ஒரு ஆறு. சிவகாசிக்குப் பட்டாச...

Posted: 30 Oct 2014 02:31 AM PDT

இந்தப் படத்தில் பச்சைப் பசேல் என்று தெரிகிறதா?அது ஒரு ஆறு.

சிவகாசிக்குப் பட்டாசு வாங்க செல்லும்போது,வழியில் ஒரு பாலம்.அதில்,தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை சார்பில் "வெம்பக்கோட்டை ஆறு" என்று மிகப் பெருமையாக ஒரு கல்வெட்டை வைத்து,அந்தப் பாலத்தைத் திறந்து வைத்தவர்கள் பெயரையும் போட்டிருந்தார்கள்.அரசாங்க அறிவிப்பாச்சே-பொய் சொல்ல மாட்டார்களே,பாலத்துல நின்னு ஒரு புகைப்படம் எடுக்கலாமே என்று வண்டியை நிப்பாட்டி,இறங்குனா....

கண்ணுக்கெட்டிய தூரம் வரை.இது தான் இருந்தது.ஆற்றையும் காணோம்-ஒரு வெங்காயத்தையும் காணோம்.இது இருக்கும் தைரியத்தில் மணல் திருட்டு வேறு அமோகமாக நடக்கின்றது.

இது--சீமைக் கருவேலமரங்கள்.

இன்னும் எத்தனை ஆற்றை, நீர்நிலைகளை கெடுத்து-நாசாமாக்கிய பின்-அரசாங்கத்தின் பார்வை படுமோ!!!

@துரை மோகன்


சீன நீர்மூழ்கி கப்பல்கள் வந்து போவதெல்லாம் சகஜம்தான்.. -- இலங்கை ராணுவ செய்தித்...

Posted: 30 Oct 2014 02:24 AM PDT

சீன நீர்மூழ்கி கப்பல்கள்
வந்து போவதெல்லாம்
சகஜம்தான்.. --
இலங்கை ராணுவ
செய்தித் தொடர்பாளர்.

#இப்படியெல்லாம் திமிரா பேசுனா நாங்க
கோவப்படுவோமுன்னு நினைச்சீங்களா?
உங்க ஜட்ஜிமென்ட்
ரொம்ப
தப்பு..!

@உவரி அனிதன்

தன்னம்பிக்கை நிறைந்தவன் தோல்வியுற்றப் பின், அறிவுரையையும் ஆறுதலையும் தேடுவதில்லை...

Posted: 30 Oct 2014 02:17 AM PDT

தன்னம்பிக்கை நிறைந்தவன்
தோல்வியுற்றப் பின்,
அறிவுரையையும்
ஆறுதலையும்
தேடுவதில்லை. அடுத்த
வாய்ப்பையே தேடுகிறான்.

@ஆதிரா

கொடூரமான கொலையை கௌரவக் கொலை என்று அழைப்பது கொலையாளிகளின் கோணத்தில் இருந்து குற்ற...

Posted: 30 Oct 2014 02:15 AM PDT

கொடூரமான
கொலையை கௌரவக்
கொலை என்று அழைப்பது கொலையாளிகளின்
கோணத்தில்
இருந்து குற்றத்தைப்
பார்ப்பதாகும்

@அ.மார்க்ஸ்

சட்டவிரோதமாகத் திரியும் இந்த பொறுக்கிசாமி மீது நடவடிக்கை எடுக்க மனு நீதிமன்றத்தா...

Posted: 30 Oct 2014 01:55 AM PDT

சட்டவிரோதமாகத்
திரியும் இந்த
பொறுக்கிசாமி மீது நடவடிக்கை எடுக்க
மனு நீதிமன்றத்தால்
முடியாது. ஆனால் மக்கள்
மன்றத்தால் முடியும்.


தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் அயல் மாநிலத்...

Posted: 30 Oct 2014 01:17 AM PDT

தமிழகத்தில் உள்ள
நடுவண்
அரசு நிறுவனங்களில் 50 விழுக்காட்டிற்கு மேல்
அயல் மாநிலத்தவர்களே வேலைகளில் உள்ளனர்.

கோவை போன்ற நகரங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம்.

எனக்குத் தெரிந்து விஷம் திரவத்தில் இல்லை சிலரின் வார்த்தையில்தான் இருக்கிறது.....

Posted: 30 Oct 2014 01:00 AM PDT

எனக்குத் தெரிந்து
விஷம்
திரவத்தில் இல்லை
சிலரின்
வார்த்தையில்தான் இருக்கிறது..

@சுசீந்திரன்

ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில், இவ்வளவு பணமும், நகையும் அவர்களிடம் ஒப்...

Posted: 30 Oct 2014 12:46 AM PDT

ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில், இவ்வளவு பணமும், நகையும் அவர்களிடம் ஒப்படைத்தது சரியல்ல...


'சலுப்பை' என அழைக்கப் படும் இவ்விடம், கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டு...

Posted: 29 Oct 2014 11:10 PM PDT

'சலுப்பை' என அழைக்கப் படும் இவ்விடம், கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள, அழகாபுரி எனும் அழகர் கோயிலில் இருக்கிறது. இது சோழர்களின் எல்லைக் காவல் தெய்வங்ளிலொன்று. 'கருவூர்ச் சித்தர்' என அழைக்கப் படும் கருவூர்த் தேவரால் இயற்றப்பட்ட 'திருவிசைப்பா'விழும், சயங்கொண்டார் அருளிய 'கலிங்கத்துப் பரணி'யிலும், ஒட்டக்கூத்தர் அருளிய 'மூவருலா'விலும், 'விக்கிரமங்கல தேவ சரித'த்திலும் இக்கோயில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் உண்டு.

முன்பு பராமரிப்பு இல்லாமல் இருந்த கோவில் தற்போது புனரமைத்து பராமரித்து வருகின்றனர். பெரிய தட்டி, சிலைகளில் கிறுக்காதீர்கள் என்று எழுதியுள்ளனர்... எனினும் எவரும் சட்டை செய்வதாய் இல்லை...

@புலி வம்சம்


கொட்டிக் கொடுத்து வள்ளலாகு... தட்டிக் கேட்டு தலைவனும் ஆகு... தன்னலமின்றி வாழ்ந...

Posted: 29 Oct 2014 10:57 PM PDT

கொட்டிக்
கொடுத்து வள்ளலாகு...

தட்டிக்
கேட்டு தலைவனும்
ஆகு...

தன்னலமின்றி வாழ்ந்திட
பழகு...

தரணி போற்றும் நீ
மறைந்திட்ட பிறகு…

இந்தப் புகைப்படத்தை சற்று உற்று பாருங்கள்.பல அதிசயங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு,...

Posted: 29 Oct 2014 10:41 PM PDT

இந்தப் புகைப்படத்தை சற்று உற்று பாருங்கள்.பல அதிசயங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு,தமிழனின் அறிவியலுக்குச் சான்றாக இன்றளவும் இருக்கும் ஒரு கோவிலைப் பற்றிய குறிப்பு இது.

இது எங்கள் குலதெய்வம் "கோபால்சாமி" கோவில்.சுமார் 800-900 வருடங்களுக்கு முன்னர், திருமங்கலத்திலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவில் "மோதகம்" என்ற இடத்தில் இருக்கும் ஒரு குன்றின் மேல்,கட்டப்பட்டக் குடவரைக் கோவில்.பிற்காலப் பண்டைய பாண்டிய மன்னர்களோ,சோழர்களோ கட்டியிருக்கக் கூடும். இன்றைக்கு "மோதகம்"என்றழைக்கப்பட்ட அந்த ஊர் இல்லை.கால வெள்ளத்தில் கரைந்து விட்டது.

முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன மண்டபங்கள்,அவற்றைத் தாங்கும் பிரம்மாண்ட தூண்கள்,அதில் திருமாலின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் சிற்பங்கள் என அனைத்தையும்-ஒரே ஒரு செங்குத்துப்பாறை போன்ற ஒரு குன்றில்,குன்றைக் குடைந்து அடிவாரத்தில் அரங்கநாதருக்கு ஒரு குடவரைக் கோவிலும்,குன்றின் மேல் "கோபால்சாமிக்கு" ஒரு கோவில் என இருவகையான கோவில்களைக் அக்காலத்தில் கட்டியிருக்கின்றார்கள். வழக்கம் போல பாறைகளை எப்படி,எதை வைத்து பிளந்தார்கள்,எங்கு வைத்து,எப்படி சிற்பங்களை செதுக்கினார்கள்,எப்படி கீழிருந்து மேலே கொண்டு சென்றார்கள் போன்ற Architectural Science-வியப்புகளையெல்லாம் தாண்டி அதிசயிக்க வைக்கும் ஒரு விசயம்,Natural Ventilation by Air Circulation-அதாவது இயற்கையின் துணை கொண்டு அமைக்கப்பட்ட காற்றோட்டம்.ராஜஸ்தானிலுள்ள "ஹவா" மகாலை விட சிறந்த காற்றோட்டத் தொழில்நுட்பம் இக்கோவிலில் கையாளப்பட்டுள்ளது.குன்றின் மேல்-கோபால்சாமி சந்நிதி,மிக மிக குறுகியது.மிக அதிக புளுக்கம் கொண்ட இடம் அது.அந்த இடத்தில்,குளு குளு காற்றோட்டத்தை-அதுவும் 900 வருடங்களுக்கு முன்னர்-இயற்கையான முறையில் உருவாக்கியிருப்பது "காற்றோட்ட அறிவியலின்" உச்சம்.

நம் வியப்பிற்கெல்லாம்,சிகரம் வைத்தார் போல இருப்பது-அறிவியலால் கூட விளக்க முடியாமல் இருப்பது-அந்த செங்குத்து குன்று இரண்டாகப் பிரிந்து-அதில் ஒரு பாறையில்,"கருடன்" கைகூப்பி வணங்கியது போன்ற ஒரு சிலை மாதிரியான அமைப்புத் தெரியும்.

ஆனால் உண்மையில் அது சிலையுமல்ல,யாரும் செதுக்கியதுமல்ல. கருடன் தன் முதுகில் "கோபால்சாமியை" வைத்துக் கொண்டு, வணங்கியது போல்-தானாகவே-காற்றின் போக்கால் இயற்கையாகவே அமைந்த பாறை.இதை இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட இந்தக் கோணத்தில் பார்த்தால் மட்டுமே தெரியும்.

@துரை மோகன்


0 comments:

Post a Comment