Relax Please: FB page daily Posts |
- தன் மனைவிக்கு சிறுநீரகம் தானம் கேட்டு வீதிவீதியாக கழுத்தில் போர்டு மாட்டி கொண்டு...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் உணராதவர்களுக்கு கடவுளாகவும்... உணர்நதவர்களுக்கு சாத்தானாகவும்...
- (y)
- :)
- ஒருவர் ஒரு கடைக்குச் சென்றார். அங்கே எல்லாப் பொருட்களுக்கும் நடுவே வெண்கலத்தினா...
- ஊனம் என்பது உடலில் இல்லைங்க அதை பார்ப்பவர்கள் மனசை பொறுத்து தான் உள்ளது!!
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் தனிமையும் உப்பும் ஒன்றே. இரண்டும், கட்டாயத்தேவை, அளவும் மிகக்...
- தம்பி, பால் விலை ஏறிடுச்சு, நாளைல இருந்து டீ 10/- ரூபா அதெல்லாம், பால்ல டீ போடு...
- :)
- "இந்தியாவிற்கு ரசாயன உரங்கள் விற்பனை செய்யும் எந்த நாடும்,நாம் அந்த ரசாயன உரத்தி...
- ”காதல் மலரும் சமையல் அறை” -என்று எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தனது ஆண்களுக்கான சம...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பேஸ்புக்கில் இருப்பவர்களை விட மிகவும் வெட்டியாக இருப்பவர்கள்...
- காட்சிகள் வேறுதான்! ஆனால், இருவர்களுக்கும் நோக்கம் ஒன்றுதான்!
- :)
- ஆணும் பெண்ணும் சமம் அல்ல:: பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவக...
- டேய்... தம்பி! ஓடிப்போய் ரெண்டு கலர் சோடா வாங்கி வாடா!’- வீட்டுக்கு வரும் உறவினர...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பள்ளிக்குழந்தைகள் கூட்டத்தில் தன் குழந்தை மட்டும் தனியாகவும்,...
- இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தய...
- :)
- எப்ப பாரு என் மனைவி திட்டிக்கிட்டே இருக்காடா.. ஆமா உங்க வீட்ல உன் மனைவி திட்...
- சுற்றி இருக்கும் அத்தனைச் சொந்தங்களும் சரியாக அமையாவிட்டாலும்.. வாழ்க்கைத் துணை...
- கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி. மனைவி : ஆமாங்க! அதனால...
- இது நம்ம சென்னை... உலகின் தலைச்சிறந்த நகரங்களில் சென்னைக்கு 9-வது இடம்.., உலகம...
- :)
- வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா? இந்த விஷ...
- நீர் வேண்டுமென்றேன் கடவுள் ஏரியை பரிசளித்தான்! பூ வேண்டுமென்றேன் கடவுள் ஒரு பூங...
- #ரிலாக்ஸ்_நறுக்ஸ் என்னோட எதிர்காலம் என்னனு எனக்கே தெரியாதப்ப கிளிக்கு மட்டும் எ...
- வாழ்க்கை ஓர் கண்ணாடி தான்.. அதைப் பார்த்து நாம் புன்னகைத்தால் அதுவும் புன்னகைக்...
- (y)
- சிரிக்க மட்டுமே..... வீடு கிடைக்கறது அவ்ளோ கஷ்டம் தெரியுமா?..... ஒரு இளைஞன் இர...
Posted: 26 Oct 2014 09:00 AM PDT தன் மனைவிக்கு சிறுநீரகம் தானம் கேட்டு வீதிவீதியாக கழுத்தில் போர்டு மாட்டி கொண்டு அலையும் ஓர் அற்புத மனிதர். Larry Swilling என்ற 78 வயதான சவுத் கரோலினாவை சேர்ந்தவர் தன் மனைவி Jimmie Sue என்பவருக்காக சிறுநீரகம் தானம் கேட்டு வீதிவீதியாக கழுத்தில் போர்டு மாட்டி கொண்டு அலைகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 57 ஆண்டுகள் ஆகிறது.Jimmie Sue க்கு பிறக்கும்போதே ஒரே ஒரு கிட்னி தான் இருந்தது.இத்தனை ஆண்டு காலமும் ஒரு சிறுநீரகத்தை வைத்தே சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தினார்.இப்பொழுது அந்த சிறு நீரகம் பழுதடைந்துவிட்டதால் மாற்று சிறுநீரகம் தேடி அலைகின்றனர். அவருடைய கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சிறுநீரகம் பொருந்தாததால் வேறு நபரிடம் இருந்து சிறுநீரகம் எடுத்து பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி Larry Swilling கூறும்போது என்னுடைய சிறுநீரகம் பொருந்தும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் ஆனால் எனது சிறுநீரகம் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே இயங்க கூடிய நிலையில் இருப்பதால் என் சிறுநீரகத்தை மருத்துவர்கள் பயன்படுத்த மறுத்துவிட்டனர். என் மனைவிதான் எனக்கு எல்லாம்,அவளுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்ய தயார்.பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் என்று எனக்கு கவலை இல்லை,எப்படியும் என் மனைவிக்காக நிறுநீரகம் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று சொல்லிவிட்டு கழுத்தில் "Need kidney 4 wife" என்று மாட்டிகொண்டு சவுத் கரோலினா நகரத்தெருக்களில் சுற்றி வருகிறார். இந்த அற்புதமான மனிதருக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று விரும்பினால் call Medical University of South Carolina at 1-800-277-8687 தொடர்பு கொள்ளுங்கள். இந்த வயதிலும் தன் மனைவி மேல் பிரியமாக இருக்கும் இவருக்கு விரைவில் அவர் விரும்பியது நடக்கும் என்று நம்புவோம். via Ilayaraja Dentist. ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz ![]() |
Posted: 26 Oct 2014 08:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் உணராதவர்களுக்கு கடவுளாகவும்... உணர்நதவர்களுக்கு சாத்தானாகவும்... தெரிவதே... # காதல் - காட்டு பூச்சி |
Posted: 26 Oct 2014 08:40 AM PDT |
Posted: 26 Oct 2014 08:30 AM PDT |
Posted: 26 Oct 2014 08:15 AM PDT ஒருவர் ஒரு கடைக்குச் சென்றார். அங்கே எல்லாப் பொருட்களுக்கும் நடுவே வெண்கலத்தினால் ஆன ஒரு எலியின் சிலை அவர் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு சீட்டுத் தொங்கியது. சிலையின் விலை ரூ. 1000; சிலை பற்றிய கதையின் விலை ரூ. 3000 என்று சொன்னது சீட்டின் வாசகம். சிலை போதும். கதை வேண்டாம் என்று ரூ. 1000 கொடுத்து சிலையை வாங்கிக் கொண்டு போனான் சிலையோடு வெளியேறிய சிறிது நேரத்தில் அவர் எதிர்பாராதவிதமாக, அவரைப் பின் தொடர்ந்து சில எலிகள் வரத் துவங்கின. அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போய் ஆயிரங்களைத் தொட்டு அவரை மிகவும் பயமுறுத்தியது. என்ன செய்வதென்று தெரியாமல் அவர், அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்று அந்த வெண்கலச் சிலையைக் கடலில் வீசி விட்டார். பின் தொடர்ந்து வந்த எலிகளும் கடலில் குதித்து மூழ்கின. நிம்மதி அடைந்து திரும்பியவர் யோசித்தபடியே, மறுபடியும் அந்தக் கடைக்குச் சென்றார். கடைக்காரர், அந்த சிலையின் கதைக்காகத்தான் வந்திருக்கிறார் என்று எண்ணி, "கதைப் புத்தகத்தைத் தேடி வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு இவர் சொன்னார், "வேண்டாம். அந்த எலியின் சிலை போல ஒரு அரசியல்வாதியின் சிலை கிடைக்குமா?" # படித்ததில் பிடித்தது :P :P Relaxplzz |
Posted: 26 Oct 2014 08:11 AM PDT |
Posted: 26 Oct 2014 07:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் தனிமையும் உப்பும் ஒன்றே. இரண்டும், கட்டாயத்தேவை, அளவும் மிகக்கூடாது. ஆனால், நோயாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் தராவிட்டாலும் நல்லதுதான்! |
Posted: 26 Oct 2014 07:40 AM PDT |
Posted: 26 Oct 2014 07:30 AM PDT |
Posted: 26 Oct 2014 07:15 AM PDT "இந்தியாவிற்கு ரசாயன உரங்கள் விற்பனை செய்யும் எந்த நாடும்,நாம் அந்த ரசாயன உரத்தில் விளைந்த காய்கறிகளை ஏற்றுமதி செய்தால் வாங்குவதில்லை" - நம்மாழ்வார். 1) ஏன் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் இவ்வளவு விலையேற்றம்? 2) ஏன் நம் நாட்டில் உணவுப்பற்றாக்குறை? 3) ஏன் அப்படியிருந்தும் லாபம் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை? 4) ஏன் விலையை விவசாயிகள் நிர்ணயிக்க முடிவதில்லை? 5) ஏன் நம் நாட்டில் கருவேல மர விதைகள் தூவப்பட்டன? 6) ஏன் நம் இயற்கை விவசாயமுறை மாற்றப்பட்டது? 7) ஏன் அதிக அளவு ரசாயன உரங்களை வாங்குகிறோம்? 8) ஏன் நம் முதல் தர விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது? 9) ஏன் நாம் ரசாயன உணவுப்பொருட்களை சாப்பிட பழக்கப்படுத்த படுகிறோம்? 10) ஏன் நம்மை உலகம் இரண்டாம்தர மக்களாக பார்க்கிறது? யாராவது இந்தியா வல்லரசு என்று சொன்னால் அவர்களிடம் இந்த கேள்விகளை கேளுங்கள்.நிச்சயமாக பதில் கிடைக்காது. இந்த பதில்கள் தான் காங்கிரஸ் ஒப்பந்தம்போட்டு வாங்கிய சுதந்திரத்திற்கும், சுபாஸ் சந்திர போஸ் போராடிய சுதந்திரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு. - Boopathy Murugesh Relaxplzz |
Posted: 26 Oct 2014 07:00 AM PDT "காதல் மலரும் சமையல் அறை" -என்று எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தனது ஆண்களுக்கான சமையல் குறிப்பு நூலில் ஒரு பகுதியில் எழுதியிருப்பார். எங்கள் வீட்டில் பெரும்பாலும் என் சகி சமைப்பார்கள். எப்போதாவது நான் வீட்டிற்கு சீக்கிரம் வரும் நேரத்தில் நான் சமைப்பது உண்டு. ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து இது வரை சமையல் அறையில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்து இல்லை. காரணம், எங்கள் வீட்டு சமையல் அறையும் மிகவும் சிறியது. ஆனால் இந்த தீபாவளிக்கு அந்த அணுபவம் கிடைத்தது. தீபாவளி பலகாரத்தை இருவரும் சேர்ந்தே செய்தோம். "காதல் மலரும் சமையல் அறை" என்பதற்கான நேரடிப்பொருளை இந்த ஆண்டு நேரடியாக உணர்ந்து கொண்டோம். பூங்காவும், கடற்கரையையும் விட, காதல் மலர அற்புதமான இடம் நமது வீட்டு சமையல் அறைகள் தான். நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். தினம் தினம் தீபாவளிதான். ♥ - களப்பிரன் களம் Relaxplzz ![]() |
Posted: 26 Oct 2014 06:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பேஸ்புக்கில் இருப்பவர்களை விட மிகவும் வெட்டியாக இருப்பவர்கள் சன் மியூசிக் சேனலில் மெசெஜ் அனுப்பிக் கொண்டிருப்பவர்கள்.. #imiss u ammu #i love u di யாருக்கு டா அனுப்புறீங்க? ஒரு எழவும் தெரிய மாட்டேங்குது.. நாங்க எவ்வளவோ மேல் :P - சுபா ஆனந்தி |
Posted: 26 Oct 2014 06:40 AM PDT |
Posted: 26 Oct 2014 06:30 AM PDT |
Posted: 26 Oct 2014 06:15 AM PDT ஆணும் பெண்ணும் சமம் அல்ல:: பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! ) மொழி; பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம். பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS) ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது. வாகனம் ஓட்டுதல்; வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் "ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்"ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போதுஇசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை). பொய்ப்பேச்சு; ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள். ) எ காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை! பிரச்சனைக்கான தீர்வுகள்: பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள். ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள். தேவைகள்: மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும். ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும். மகிழ்ச்சியின்மை: ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது. உரையாடல்; பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள். எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது. நடவடிக்கை; பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்! ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள். Relaxplzz |
Posted: 26 Oct 2014 06:01 AM PDT டேய்... தம்பி! ஓடிப்போய் ரெண்டு கலர் சோடா வாங்கி வாடா!'- வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு உடைத்து கொடுத்து உபசரிக்கும் எளிமையான பானம். 'வயிறு சரியில்லை... காலையில் இருந்து ஒரே பொறுமல், ஜிஞ்சர் சோடா ஒன்னு கொடுங்கண்ணே..!'-திடீர் உபாதைகளை தீர்க்கும் நிவாரண பானம். 'தலைவரே! சோடா குடிச்சிட்டு பேசுங்க...'- குரல் கம்மும் மேடை பேச்சாளருக்கு தொண்டர்கள் தரும் புத்துணர் பானம். 'தாகம் தீர பன்னீர் சோடா கொடுங்க...' -திருவிழா கடை வீதி சுற்றி களைத்து நாவறண்டு வருவோர் குடிக்கும் கமகம பானம். 'வாட மாப்ளே! சோடா கலர் குடிச்சு வரலாம்...' -திரைப்பட இடைவேளைகளில் தியேட்டர் கேண்டீனில் வாங்கிக் குடித்த ஆரஞ்சு சோடா ஒரு நட்பு பானம். திருவிழா பம்மலில் காதலியை ஒரங்கட்டி ஊருக்கு தெரியாமல் வாங்கி கொடுத்து அன்பை வளர்த்த ப்ரியபானம். துண்டு சைக்கிள் டியூப்பினுள் சொருகிய வட்டதிறப்பான் எழுப்பும் 'கீச்ச்ச்' ஓசையில் திறக்கும் கோலி குண்டு. சுரீர் கியாஸ் நுரைக்கும் பானத்தை பருகியதும் மூக்கில் வெளியேறும் சுள் ஏப்பம்... இந்த தலைமுறைக்கு கிடைக்காத தனி சுகம். -சந்திரன் வீரசாமி Relaxplzz ![]() "நினைவுகள்" |
Posted: 26 Oct 2014 05:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் பள்ளிக்குழந்தைகள் கூட்டத்தில் தன் குழந்தை மட்டும் தனியாகவும், பக்கத்து தெரு வரும்போதே மகனின் பைக் சத்தத்தை தனியாகவும் உணரும் இயல் தாய்க்கு மட்டுமே கைவரப்பெற்றிருக்கிறது.. ♥ - Uthaya Senthil. |
Posted: 26 Oct 2014 05:40 AM PDT இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோம். Relaxplzz ![]() |
Posted: 26 Oct 2014 05:30 AM PDT |
Posted: 26 Oct 2014 05:15 AM PDT எப்ப பாரு என் மனைவி திட்டிக்கிட்டே இருக்காடா.. ஆமா உங்க வீட்ல உன் மனைவி திட்டவே மாட்டாங்கலாடா.. யாரு சொன்னா எல்லா மனைவியும் திட்டுவாங்கதான் .. என் மனைவி திட்டும்போது ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன் சிரிச்சிகிட்டே போயிடுவா.. அப்படியா என்னடா அது சொல்லு.. SAME TO YOUUUU... :P :P Relaxplzz |
Posted: 26 Oct 2014 05:00 AM PDT சுற்றி இருக்கும் அத்தனைச் சொந்தங்களும் சரியாக அமையாவிட்டாலும்.. வாழ்க்கைத் துணை என்னும் ஒரு சொந்தம் சரியாக அமைந்து விட்டால்.. . எந்த ஆணும் பெண்ணும் அத்தனை உறவுகளையும் வென்று உலகையும் வெல்லலாம்.. Relaxplzz ![]() |
Posted: 26 Oct 2014 04:50 AM PDT கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி. மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன். கணவன் : ????!!!! |
Posted: 26 Oct 2014 04:40 AM PDT |
Posted: 26 Oct 2014 04:30 AM PDT |
Posted: 26 Oct 2014 04:15 AM PDT வீட்டிற்கு முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பது உண்மையா? இந்த விஷயம் சற்று சுவாரசியமானது. அந்தக் காலத்தில் கிராமத்து வீடுகளில் சமையலறை இருந்தாலும் விருந்தினர்கள் வந்தாலோ, அதிகப்படி சமைக்க நேரிட்டாலோ, வீட்டின் பின்புறத்தில் சமையல் நடக்கும். அதிகப்படி சமையல் முதற்கட்டில் (வெட்டவெளி) நடக்கும்.சோறு தவலையில் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து சுற்றியுள்ள மரங்களில் உள்ள காக்கைகள் முதற்கட்டை சுற்றிச் சுற்றிக் கரையும். சமையலறையில் சமைத்தாலும், விருந்தினர் சாப்பிட்ட மிச்சத்தை முதற்கட்டில் கொட்டுவார்கள். எப்படியோ சோறு இருப்பதைக் கண்டு காகங்கள் வட்டமிடும்.அக்கம் பக்கத்துக்காரர்கள் காகங்கள் கரைவதைப் பார்த்து விருந்தினர்கள் வந்திருப்பதைப் புரிந்து கொள்வர். இதுதான் நாளடைவில் தலைகீழாக மாறி காகம் கரைந்தால் விருந்தினர் வருவார் என்று சொல்லப்படுகின்றது. சரியாகப்பார்த்தால் "காகம் கரைந்தால் விருந்தினர் வந்துள்ளார்" என்றுதான் வந்திருக்க வேண்டும். Relaxplzz |
Posted: 26 Oct 2014 04:01 AM PDT நீர் வேண்டுமென்றேன் கடவுள் ஏரியை பரிசளித்தான்! பூ வேண்டுமென்றேன் கடவுள் ஒரு பூங்காவை எனக்காய் தந்தான்! மரம் வேண்டுமென்றேன் கடவுள் ஒரு வனத்தையே அருளிச்சென்றான்! கேட்பதைவிட எல்லாமே அதிகமாய் அள்ளித்தரும்,, நீதான் வேண்டும் கடவுளே என்றேன்....... அவன் தன்னைவிட மேலாய் உள்ள... என் தாயை தந்துபோனான்! Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 2 |
Posted: 26 Oct 2014 03:50 AM PDT #ரிலாக்ஸ்_நறுக்ஸ் என்னோட எதிர்காலம் என்னனு எனக்கே தெரியாதப்ப கிளிக்கு மட்டும் எப்படி தெரியும். - செந்தில் ஜி |
Posted: 26 Oct 2014 03:40 AM PDT |
Posted: 26 Oct 2014 03:30 AM PDT |
Posted: 26 Oct 2014 03:15 AM PDT சிரிக்க மட்டுமே..... வீடு கிடைக்கறது அவ்ளோ கஷ்டம் தெரியுமா?..... ஒரு இளைஞன் இரு ஏரிக்கரை வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது ஒருவர் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்டான்.அவர் உதவி கேட்டு அலறவே இளைஞனும் உடனே நீரில் குதித்து அவரைதூக்கினான். அந்த ஆளுக்கு நினைவு இருந்தது. இளைஞன் நீந்திக் கொண்டே அவர் குடியிருப்பது ,சொந்த வீடா வாடகி வீடா என்று கேட்டான்.அவரும் வாடகை வீட்டில்குடியிருப்பதாகச் சொன்னார்.அவருடைய வீட்டு முகவரி கேட்டான்.அவரும் சொன்னார். உடனே இளைஞன் அவரை அப்படியே நீரில் விட்டுவிட்டு தான் மட்டும் கரைக்கு நீந்தி வந்து அவர் சொன்ன முகவரிக்கு ஓடினான். அந்த வீட்டின் சொந்தக்காரரை அணுகி,"ஐயா,உங்கள் வீட்டில் குடியிருந்தவர் ஏரியில் மூழ்கி விட்டார்.எனக்கு அந்த வீட்டை வாடகைக்குக் கொடுப்பீர்களா?" வீட்டின் உரிமையாளர் சொன்னார்,"அடப்பாவமே,கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாதா? இப்போதுதான் அவரைத் தண்ணீரில் தள்ளிவிட்டவர் வந்து வாடகைக்கு வீட்டைப் பிடித்து விட்டார். :O :O Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment