Tuesday, 21 October 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!! கணவன்: என்ன? மனைவி: யார் இந்த உலகத்துலேயே...

Posted: 21 Oct 2014 09:15 AM PDT

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)

♥ ♥

Relaxplzz

சாதனைத் தமிழனைப் பாராட்டுவோம்..! (y) (y) தண்ணீரில் ஓடும் இரு சக்கரவண்டி..! பெட்...

Posted: 21 Oct 2014 09:00 AM PDT

சாதனைத் தமிழனைப் பாராட்டுவோம்..! (y) (y)

தண்ணீரில் ஓடும் இரு சக்கரவண்டி..!
பெட்ரோலுக்கு, "டாட்டா'..!

காரைக்கால்: பெட்ரோலுக்கு, "டாட்டா' காட்டும் வகையில், தண்ணீரில் பைக் இயக்கிய, காரைக்காலை சே ர்ந்தவரை, முதல்வர் ரங்கசாமி பாராட்டினார். காரைக்கால் வள்ளல் சீதக்காதி வீதியைச் சேர்ந்தவர், அமீது மரைக்காயர் 42, ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த இவர், பிரான்சில் டெக்னிக்கல் கோர்ஸ் படித்துள்ளார். பெட்ரோல் விலை அதிகரிப்பதால், தண்ணீரில் வாகனம் ஓடும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தார். ஐந்து ஆண்டுகளாக, பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.

"எலக்ட்ரோலைசிஸ்': இதில், "எலக்ட்ரோலைசிஸ்' தொழில் நுட்பத்தின் அடிப்படையில், "கரன்ட்' மூலம் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனைத் பிரித்து, பெட்ரோல், டீசல், எரிவாயுவில் ஓடும் மோட்டார் வாகனங்களை தண்ணீரில் இயக்க முடியும் என கண்டுபிடித்தார். அமீது மரைக்காயர், நேற்று முன்தினம் மாலை, சட்டசபையில் முதல்வரைச் சந்தித்து, தன் தயாரிப்பு குறித்து, செயல் விளக்கம் அளித்தார். முதல்வர் ரங்கசாமி ஆவலுடன் கேட்டு மரைக்காயரைப் பாராட்டினார். முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.

அமீது மரைக்காயர் கூறியதாவது:"எலக்ட்ரோலைசிஸ்' தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தண்ணீரில் வாகனங்களை இயக்குவது குறித்து, ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தேன். இதில் இரு வகை உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட எரிபொருளுடன் தண்ணீர் கலந்து இயக்குவது ஒரு வகை. பெட்ரோல் டீசல் எதுவுமின்றி, முழுவதும் தண்ணீரில் இயக்குவது, மற்றொரு வகை.எரிபொருளுடன் தண்ணீரால் இயக்க, பைக்கிற்கு, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய்வரை தனியாக செலவாகும். முழுவதும் தண்ணீரால் இயங்க, 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய்தனியாக செலவாகும்.எந்த வாகனத்திலும், என் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஓட்டும் போது, எந்த பிரச்னையும் இருக்காது. பெட்ரோல், டீசல், எரிவாயு உதவியோடு வாகனம் ஓட்டும் போது, சில, கி.மீ.,க்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும். ஆனால் தண்ணீரில் இந்தப் பிரச்னை இருக்காது. குறைந்தது, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஓட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்

Relaxplzz


பலாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) (y)

Posted: 21 Oct 2014 08:50 AM PDT

பலாப்பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y) (y)


உங்களுக்கு பிடித்த தீபாவளி பலகாரம் என்ன...? சொல்லுங்க பார்ப்போம் :)

Posted: 21 Oct 2014 08:45 AM PDT

உங்களுக்கு பிடித்த தீபாவளி பலகாரம் என்ன...?

சொல்லுங்க பார்ப்போம் :)

தீபாவளி தீபங்களால் மின்னும் மீனாட்சி அம்மன் கோவில், பொற்றாமரை குளம்.

Posted: 21 Oct 2014 08:40 AM PDT

தீபாவளி தீபங்களால் மின்னும் மீனாட்சி அம்மன் கோவில், பொற்றாமரை குளம்.


:)

Posted: 21 Oct 2014 08:30 AM PDT

:)


தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்றார் நண்பர்.. வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும் அண...

Posted: 21 Oct 2014 08:15 AM PDT

தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்றார் நண்பர்..

வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும் அண்ணன்,
வெளியூரில் படிக்கும் தம்பி,
அடுத்த ஊரில் கட்டிகொடுத்த அக்காள்,
கடையை தாண்டாத அப்பா,
வீடே கதியென கிடக்கும் அம்மா...

இவைகளை இணைக்கும் நாட்களை,
பண்டிகை என்பதை தாண்டி,
குடும்ப ஒருங்கிணைப்பு என்று கொண்டாடுவோமே...

குழந்தைகளுக்கு பட்டாசு,
அனைவருக்கும் புத்தாடை,
வீட்டிலேயே பலகாரம்,
இவை அனைத்தும் தினமும் கிடைப்பதில்லை...
ஏமாற்றம் வேண்டாம்,
இனிதே கொண்டாடுவோம்...

:) இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

ரிலாக்ஸ் ப்ளீஸ்

எந்த ரஜினி சரி எந்த ரஜினி தப்புன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா. "மீண்டும் ஜெயலலித...

Posted: 21 Oct 2014 08:00 AM PDT

எந்த ரஜினி சரி எந்த ரஜினி தப்புன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா.

"மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது" - என்று ஜெ. யின் 1991-96 ஆட்சி பற்றி வாய்ஸ் கொடுத்தவர் ரஜினி.

அதே 1991-96 ஆட்சியின் முறைகேடு நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெ. இப்போது ஜாமீனில் வெளிவரும் போது வாழ்த்தி வரவேற்கிறார் ரஜினி.

எந்த ரஜினி சரி எந்த ரஜினி தப்புன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா.

:P :P

- Ilangovan Balakrishnan.

Relaxplzz


ஒரு ஆண் முதுமையில் இழக்க கூடாத சொத்து மனைவி மட்டுமே.. <3

Posted: 21 Oct 2014 07:50 AM PDT

ஒரு ஆண் முதுமையில் இழக்க கூடாத சொத்து மனைவி மட்டுமே.. ♥


நண்பர்கள் அனைவருக்கும் ரிலாக்ஸ் ப்ளீஸ் -யின் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள...

Posted: 21 Oct 2014 07:40 AM PDT

நண்பர்கள் அனைவருக்கும் ரிலாக்ஸ் ப்ளீஸ் -யின் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்... :)

ரிலாக்ஸ் ப்ளீஸ்


:)

Posted: 21 Oct 2014 07:30 AM PDT

:)


ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அ...

Posted: 21 Oct 2014 07:15 AM PDT

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?" என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!

:P :P

Relaxplzz

"தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்" தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால் வரிசை...

Posted: 21 Oct 2014 07:00 AM PDT

"தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்"

தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருந்ததால் தீபாவளி என்ற காரணப் பெயராக நிலைத்துவிட்டது!

தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்கிறோம்.

இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம். பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் "சந்திர தரிசனம் " என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும்.

சந்திர தரிசனம்

"சந்திர தரிசனம்" என்றால் என்ன?

ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது.

ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும்.

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்காஸ்நானம்" என்று கூறுகிறார்கள்.

கதை, கதைகள்

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நம் நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கதையை தங்கள் பேரக் குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லி வருகிறார்கள்.

நம் ஊரில் தாத்தா, பாட்டிகள் சொல்லும் ஜெனரல் கதை 'நரகாசுர வதம்'.

பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கீட்டோம்ங்கிற தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களை பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.

எப்படிப்பட்ட தொல்லைன்னா ராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்சவிளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார்.

பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையிற நிலைக்கு ஆளாயிட்டார். இதனால் கோபமான சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டு அவனை வெட்டி வீழ்த்தினாங்க.

நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான். எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.

பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்கிட்டாங்க. அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக.... தீபத்திருவிழாவாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

வட நாட்டில்..

ஆனால், வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர்சீதா தேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம்.

மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள்.

குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள்.

சீக்கியர்களின் தீபாவளி

சீக்கியர்கள் தீபாவளி கொண்டாடுகிற..... தீபாவளிக்கு சொல்கிற காரணம் வேற. சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளைத்தான் தீபாவளியாகக் கொண்டாடுவதாச் சொல்கிறார்கள்.

அரக்கன் ராவணனை, ராமன் அழித்தொழித்த நாள்தான் தீபாவளி என்று சொல்வாரும் உண்டு. மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்போரும் உண்டு !

சிங்கப்பூர் செய்த சிறப்பு

துர்கா தேவி மகிசாசுரனை வதம் செய்தழித்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று சொல்வதும் உண்டு. சொல்லப்படுகிற அனைத்துக் கதைகளிலும் உள்ள ஒரே ஒற்றுமை விஷ்ணுவின் அவதாரம் இருப்பதுதான் !

தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இந்தியாவில் அதற்கு செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம்! தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் மட்டும்தான்.

Relaxplzz


மதங்களை வளர்க்கும் மனிதன்.... மரங்களை வளர்க்க மறந்து விடுகின்றான்.... பிறகு நி...

Posted: 21 Oct 2014 06:50 AM PDT

மதங்களை வளர்க்கும் மனிதன்....
மரங்களை வளர்க்க மறந்து விடுகின்றான்....
பிறகு நிழலையும், நீரையும் தேடி அலைகின்றான்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


உண்மை தான ;-)

Posted: 21 Oct 2014 06:41 AM PDT

உண்மை தான ;-)


:)

Posted: 21 Oct 2014 06:30 AM PDT

:)


விமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு பாராசூட்டுகளை விற்று...

Posted: 21 Oct 2014 06:15 AM PDT

விமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு
பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.

'ஸார்..! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம் திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்….!'

ஒரு பயணி நின்றார்.

பாராசூட் என்ன விலை?

ரெண்டாயிரம் ரூபாய் ஸார்

சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?

"பணம் வாபஸ் ஸார்"

:O :O :P :P

Relaxplzz

ஒரு கருமி இருந்தான் . எச்சிற்கையால் காக்கை ஓட்ட மாட்டான்! அவன் வீட்டுக்கு எதிரி...

Posted: 21 Oct 2014 06:00 AM PDT

ஒரு கருமி இருந்தான் .
எச்சிற்கையால் காக்கை ஓட்ட மாட்டான்!

அவன் வீட்டுக்கு எதிரில் ஒரு தர்மவான் இருந்தான் ; பசி என்றுவந்தவர்க்கெல்லாம் உணவளிப்பவன்.

கருமியிடம் யாராவது வந்தால்,எதிர் வீட்டைத் தன் விரலால் சுட்டிக்காட்டி விடுவான் .

அவன் இறந்தபின் எமலோகத்தில் அவனை எண்ணைச் சட்டியில் போட்டு வறுத்தார்கள்.

அவனது சுட்டு விரல் தவிர உடல் முழுவதும் வறுபட்டது.

ஏன் என எமனிடம் கேட்க அவன் சொன்னான் "நீ தர்மம் செய்யப்படும் இடத்தை உன் விரலால் சுட்டிக் காடினாய்; எனவேதான்"

கொடுக்காவிடினும்,கொடுக்கப்படும் இடத்துக்கு வழி காட்டியதற்குப் பலன்!

#நல்ல காரியங்கள் நீங்களாக செய்யாவிடினும், நல்ல விஷயங்களுக்கு துணைபோங்கள்.. வாழ்க்கை மலரும்

Relaxplzz


"குட்டிக்கதைகள்" - 1

ஜப்பானில் நடந்த ஒரு பூகம்பத்திற்க்கு பின் ரோடு

Posted: 21 Oct 2014 05:50 AM PDT

ஜப்பானில் நடந்த ஒரு பூகம்பத்திற்க்கு பின் ரோடு


தீபாவளி துப்பாக்கி வெடித்து அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Oct 2014 05:40 AM PDT

தீபாவளி துப்பாக்கி வெடித்து அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:)

Posted: 21 Oct 2014 05:30 AM PDT

:)


காதல் நோய் தாக்கினால்: 1.பன்னி குட்டிய பாத்தா கூட "வாவ்! சோகியூட்!" ன்னு கடுப்ப...

Posted: 21 Oct 2014 05:15 AM PDT

காதல் நோய் தாக்கினால்:

1.பன்னி குட்டிய பாத்தா கூட "வாவ்! சோகியூட்!" ன்னு கடுப்பேத்துவாங்¬க.

2.உள் பனியன , ஜட்டிய கூட அயர்ண் பண்ணி போடுவாங்க ..

3.செங்கல்ல தேச்சி குளிச்சவன் மைசூர்சாண்டல்
தேச்சி குளிப்பான்!

4.கேப்டன் மாதிரி கண்ணெல்லாம் செவந்து போயிருக்கும்!!
தூங்கவே மாட்டானுங்க

5.ஒரு பாக்கெட் சிகரெட்டை, ஒரே நாளுல ஊதி தள்ளுரவங்க, அந்த ஸ்மெல்லே பிடிக்காத மாதிரி, ஆக்ட்
கொடுப்பாங்க..(அ ¬ம்மணி சொல்லிருச்சாம்)

6.நல்லா இருக்குற தலைய நாலு முறை சீவிக்க
சொல்லும்.

7.இவன் 10அரியர் வச்சுருந்தாலும் , அவ exam போரப்ப "பிரசாதம் எடுத்துக்கோ டியர் கோவிலுக்கு போய்ட்டு வந்தன்" ன்னு நிப்பான்.

8.மெசேஜ்க்காக நிமிசத்துக்கு ஒருமுறை மொபைல
பார்க்கத்தோன்றும்..

9.சரக்கடிக்க லவர்ட பர்மிசன் கேட்டு வெறி ஏத்துவானுங்க.

10.லவ்வரோட இருக்கரப்ப தெருநாய்ய ஏன் சொரி நாய பாத்தாகுட "look very cute yar" ன்னு சொல்லி அவ முகத்த பாப்பான்.

இவனுன்ங்க லவ்'ஸ் தாங்க முடியலடா சாமி!

Relaxplzz

தமிழன் சாதித்த கட்டிடகலை - திருவலஞ்சுழி ஒரு தூணில் ஏன் இத்தனை நுணுக்கங்கள், ஒவ்...

Posted: 21 Oct 2014 05:02 AM PDT

தமிழன் சாதித்த கட்டிடகலை - திருவலஞ்சுழி

ஒரு தூணில் ஏன் இத்தனை நுணுக்கங்கள்,
ஒவ்வொன்றையும் செதுக்க எவ்வளவு நாட்களாகியிருக்கும்..
எதற்காக இத்தனை வேலைப்பாடு..

#கலை_தாகம்


"தமிழன் சாதித்த கட்டிடக்கலை"

கை நாட்டு வந்தது எப்படி? படிக்காதவர்கள் கையெழுத்துப் போடுவதற்குப் பதிலாக கைரேகை...

Posted: 21 Oct 2014 04:48 AM PDT

கை நாட்டு வந்தது எப்படி?

படிக்காதவர்கள் கையெழுத்துப் போடுவதற்குப் பதிலாக கைரேகையைப் பதிப்பாங்க. ஆனால், படித்தாலும்கூட, சில முக்கிய பத்திரங்களில் கைரேகையை பதிய வைக்கிறாங்க. இது ஏன் தெரியுமா? உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக கைரேகை இருக்கிறது. அது ஒவ்வொரு விரலுக்கும்கூட மாறுபடுகிறது.
அது சரி, முதல்ல இந்தப் பழக்கம் எப்படி வந்ததுன்னு சொல்லவே இல்லைன்னு கேட்கிறீர்களா?

அவசரப்படாதீங்க, Friends. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன அரசர்கள் கைரேகைகளில் இத்தனை விஷயம் இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டாங்க.

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 1

:)

Posted: 21 Oct 2014 04:30 AM PDT

:)


Teacher : யார் அடுத்த கேள்விக்கு பதில் சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு போயிரலாம்.....

Posted: 21 Oct 2014 04:15 AM PDT

Teacher : யார் அடுத்த
கேள்விக்கு பதில்
சொல்றாங்களோ அவங்க
வீட்டுக்கு போயிரலாம்..

(உடனே ஒரு பையன் அவன் bag ah
தூக்கி வெளிய போட்டான்)

Teacher (கோபமா) : எவன்டா bag
ahதூக்கி வெளிய போட்டது..

Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன்
கிளம்புறேன்..

நாங்க எப்போதும் இப்படித்தான்.....

:P :P

Relaxplzz

"சில யதார்த்தங்கள்" பெண்களிடம் வயதை கேட்கக் கூடாதுன்னு பெரியவங்க சொன்னத மதிக்கன...

Posted: 21 Oct 2014 04:01 AM PDT

"சில யதார்த்தங்கள்"

பெண்களிடம் வயதை கேட்கக் கூடாதுன்னு பெரியவங்க சொன்னத மதிக்கனும்ன்னு ஆண்கள் கண்டுப்பிடித்த குறுக்கு வழியே..

"நீங்க எப்ப காலேஜ் முடிச்சிங்க?"

*****

அப்பன், பாட்டன், முப்பாட்டன் போட்டோவெல்லாம்..ஃப்ரெம் பண்ணி, சுவத்துல மாட்டி வச்ச கடைசி தலைமுறை நாமதான்..
ஸ்கூல்ல போர்ட் அழிக்க வீட்ல டஸ்டர் தச்சு கொண்டு வந்த கடைசி தலைமுறையும் நாம தான்.

****

வீட்டுல எத்தனை பேர் இருந்தாலும் அம்மாவுக்கு கோவம் வந்தா அதிகமா அடிவாங்குறது என்னவோ அடுப்படி பாத்திரங்களே..

****

தோழிகளின் சடை நுனியிலிருக்கும் ரிப்பனை பிடித்திழுத்து திட்டு வாங்கிய கடைசி தலைமுறையில் நானும் ஒருவன்
பள்ளி விடுமுறையை ஸ்பெஷல் கிளாஸ் தொல்லைகளின்றி உறவினர் ஊர்களில் கழித்த கடைசி தலைமுறை நாம் தான்

****

வீட்ட விட்டு வெளிய போகாத, வீட்டுலே இரு, எங்க போனாலும் சீக்கிரம் வந்துருன்னு பெண் பிள்ளைகளுக்கு சொல்லப்படும் அளவிற்கு, வெளியே சென்றால் எந்த பெண்ணிடமும் வம்பிழுக்காதன்னு ஆண் பிள்ளைகளுக்கு சொல்லப்படுவதில்லை.

****

அடுத்த தலைமுறை எக்கேடு கெட்டா நமக்கென்னானு மரங்கள அழிக்கிற கடைசி தலைமுறை நாம் தான்.!

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 2

"வாட்சப்" பால உலகத்துக்கு உண்டான ஒரே நன்மை என்ன தெரியுமா? பொம்பளைங்க அவ்வளவு பே...

Posted: 21 Oct 2014 03:50 AM PDT

"வாட்சப்" பால உலகத்துக்கு உண்டான ஒரே நன்மை என்ன தெரியுமா?

பொம்பளைங்க அவ்வளவு பேரும்
நாள் பூராவும்
க்ரூப் க்ரூப்பாப்
பேசிச் சிரிச்சுக்கிட்டே இருந்தாலும்
சத்தமே வராது...

அதுதான்... :P :P

- Murali Krishnan.

இது என்னவென்று புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 21 Oct 2014 03:40 AM PDT

இது என்னவென்று புரிந்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


0 comments:

Post a Comment