Monday, 20 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சென்னை சத்தியம் தியேட்டர் மீது கல்வீச்சு.... கத்தி படத்தின் புக்கிங் துவங்கியது...

Posted: 20 Oct 2014 12:33 PM PDT

சென்னை சத்தியம் தியேட்டர்
மீது கல்வீச்சு....

கத்தி படத்தின் புக்கிங்
துவங்கியதும்
தாக்குதல்...


சென்னையில் பெரு வெள்ளத்திற்கு காரணம் திடீர் மழைதான் :- மேயர் துரைசாமி ஆமாம்......

Posted: 20 Oct 2014 12:15 PM PDT

சென்னையில்
பெரு வெள்ளத்திற்கு காரணம்
திடீர் மழைதான் :-
மேயர் துரைசாமி

ஆமாம்... இத்தனை வருஷமா சொல்லிட்டு வந்த
மழை, இந்த வருஷம்
மட்டும் மேயர்கிட்ட
சொல்லாம
வந்திடுச்சி...

@பாபு

ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது - மோடிக்கு சூப்புரமணியசாமி கோரிக்கை //பாரத் மாத...

Posted: 20 Oct 2014 10:33 AM PDT

ராஜபக்சேவுக்கு பாரதரத்னா விருது -
மோடிக்கு சூப்புரமணியசாமி
கோரிக்கை

//பாரத் மாதா கீ ஜே!

இன்று என் அலுவலக நண்பர் ஒருவர் (தமிழர்தான்) இட்ட கையெழுத்தை கவனித்து வியந்து போன...

Posted: 20 Oct 2014 06:05 AM PDT

இன்று என் அலுவலக நண்பர் ஒருவர் (தமிழர்தான்) இட்ட
கையெழுத்தை கவனித்து வியந்து போனேன்.
தமிழில் இட்டிருந்தார்...

அவரோட பேசப்பேச ஆச்சரியங்களும், என் மேல் கோபமும்
வந்துது...

★சீனர்களின் கையெழுத்து பெரும்பாலும் சீன
மொழியில்தான் உள்ளது. பெரும்பாலும் உலகின்
அநேக மக்களின் கையெழுத்தும் அவரவர்
தாய்மொழியிலேயே...

★ கைரேகை வைப்பது கூட கையெழுத்தாக
ஒப்புக்கொள்கிறார்கள் (அதாவது, அதை விட சிறந்த
சாட்சி இல்லை என்ற போதிலும், எழுத்தறிவில்லாத
காரணத்தால்). நம் தாய்மொழிக்கென்ன குறை..?

★அரசாங்கக் கோப்புகளில் தொடங்கி, அவர் படித்த
சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
வரை அனைத்திலும் அவர் கையொப்பம் தமிழில் தான்
இருக்கிறது...

என் கையெழுத்தையும் தமிழில் மாற்றிக்கொள்ளப்
போகிறேன். (ஏகப்பட்ட கோப்புகளை மாற்ற வேண்டும்,
கடவுச்சீட்டு முதல் எத்தனையோ, இருப்பினும்
தமிழுக்காக) தமிழன்
என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தில்
கையெழுத்திடுவதில் எனக்கே சற்று அவமானமாய்
இருக்கிறது...

தமிழர் என்று சொல்லுவோம். தமிழராய் வாழ்வோம். நம்
அடையாளம் அதுவே...!

- பா விவேக்


செத்துப்போன தொண்டர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கறீங்களே. ரைட்டு.. எரிச்ச பஸ்சுக்கும்...

Posted: 20 Oct 2014 05:25 AM PDT

செத்துப்போன
தொண்டர்களுக்கு நஷ்ட
ஈடு கொடுக்கறீங்களே. ரைட்டு.. எரிச்ச
பஸ்சுக்கும் உடைச்ச
கடைகளுக்கும்
யாரு நஷ்ட
ஈடு கொடுப்பாங்க..??

- கருப்பு கருணா

சில குழந்தைகள் சரியான மனநலமின்றி பிறக்கிறது,கர்ப்ப காலத்தில் குடும்பத்திலுள்ள அல...

Posted: 20 Oct 2014 03:45 AM PDT

சில குழந்தைகள் சரியான மனநலமின்றி பிறக்கிறது,கர்ப்ப காலத்தில் குடும்பத்திலுள்ள அல்லது பெற்றோருக்கிடையே சரியின்றி இருக்கும் அன்னியோன்யம், வெறுப்பான மனநிலை இதை தீர்மானிப்பதாக சொல்கிறார்கள்.இது முதல்வகை.

இரண்டாவதாக சிலரை உலகம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று வெறுத்து ஒதுக்கி விடுகிறது.உண்மையில் அவர்கள் தான் இங்குள்ள பொய்,பித்தலாட்டம்,போட்டி,பொறாமை, வஞ்சம், துரோகங்களை சமாளிக்க இயலாமல் இந்த உலகமே வேண்டாம் என்று வெறுத்து விடுகிறார்கள்.

இந்த இரண்டு வகையிலுமே,உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக லட்சகணக்கில் செலவழிக்கும் உறவுகள் ஏனோ மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கியே விடுகிறது.வெறுப்பை ஒருநாளும் வெறுப்பால் ஜெயிக்க முடியாது.மாறாக அன்பால் மட்டுமே வெல்ல முடியும்.

அவர்களுக்கு தேவை உங்கள் பணமோ,மருந்துகளோ இல்லை,கொஞ்சம் அன்பு,கொஞ்சம் அங்கீகாரம் மட்டுமே.அவர்கள் மனநலம் சரியாகலாம்,சரியாகாமலும் போகலாம்.ஆனால் நீங்கள் அன்பு செலுத்துகிறீர்களா, வெறுத்து ஒதுக்குகிறீர்களா என்பதை பொருத்து தான் உங்கள் மனநலம் தீர்மானிக்கப்படுகிறது.

இப்போது அவர்களுக்கான அன்பை வழங்கி வந்த 'பெட்டர் சான்சஸ்' என்னும் அமைப்பு அவர்களுக்கான அங்கீகாரத்தை தரும் முயற்சியாக வில்லிவாக்கம் காய்கறிச் சந்தையில் அவர்களுக்கென்று ஒரு காய்கறிக் கடையை உருவாக்கியுள்ளது.

'ரூட்ஸ்' என பெயரிடப்பட்ட இந்த காய்கறிக்கடை,நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் உதயமாக உள்ளது.அவர்களது முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...!!!


‘மேடம்’ என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச்சொல் மேற்கு மாவட்டங்களில் பயன்படுத்தப்படுக...

Posted: 20 Oct 2014 03:08 AM PDT

'மேடம்' என்பதற்குப்
பொருத்தமான
தமிழ்ச்சொல்
மேற்கு மாவட்டங்களில்
பயன்படுத்தப்படுகிறது.
அம்மணி!

மரியாதையும் பாசமும்
கலந்து வெளிப்படும்
சொல், ஒருவகையில்
மேடத்தைவிட
உயர்வானது.
இதற்கு ஆண்பாற்சொல்
இல்லை என்பதும்
குறிப்படத்தக்கது!

@கவிஞர்
மகுடேசுவரன்

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்! நாம் நிறைய நேரங்களி...

Posted: 20 Oct 2014 01:40 AM PDT

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்! நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.

1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.

4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்!

5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7. பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம் உணவக பழக்கங்கள், எப்படிப் பரிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.

8. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

9. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும்.

10. உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நிங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.

11. புத்தகம், கவிதை, நல்ல நாவல்கள் ஆகியவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.

12. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

13. இன்றைய உலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் எதிர் பார்க்க முடியாது. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.

14. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்...


#சின்னகுழந்தைகள் வெச்சிருக்கீங்களா....அவசியம் படிங்க ...... முடிந்த வரை Share செ...

Posted: 19 Oct 2014 10:55 PM PDT

#சின்னகுழந்தைகள் வெச்சிருக்கீங்களா....அவசியம் படிங்க ......
முடிந்த வரை Share செய்க...
.
பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும்.
குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை.

இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?
Immunize<space><குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

உடனே 'உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது' என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும்.
ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.

0 comments:

Post a Comment