Relax Please: FB page daily Posts |
- சிந்திக்க வைத்த கதை: "ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்...
- விமானத்தை கண்டுபிடித்தது அமெரிக்கன் இல்லை ஒரு இந்தியன். விமானத்தைக் கண்டுபிடித்...
- பருவம்.. பாவாடை தாவணி.. மயிர்க்கற்றை... குறுகுறு விழிகள்.. மல்லிகை.. வளையல்கள்.....
- அழகு
- (y)
- அம்மா... பாக்கட்மணி 20 ரூபாய் கொடேன்.. போடா.. என்கிட்ட காசே இல்ல.. அப்பாகிட்ட போ...
- ஒரு கல்லூரி வாசலில் ஒரு மூதாட்டி இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். அதைப்...
- ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அங்கே ஏழைகளும் கார்கள் வைத்திருக்கிறார்கள் என்பதில...
- :)
- உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகை...
- மறைக்கப்பட்ட வரலாறுகள்... நாமோ அல்லது நம் பிள்ளைகளோ கடல் கொள்ளையர்கள் ஆவோம் என...
- உன் அருமை தெரியாத இடத்தில் நீ இருந்தால் உன் பெருமை யாருக்கும் தெரியாது! :) Rela...
- :)
- இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம் ;-) முதல் வீதி .......
- # படித்ததில் பிடித்தது # பெண்களை வாடி போடி என்றும்.. வாமா போமா என்றும் வாடா போட...
- சின்ன சின்ன சந்தோசங்களும், எதிர்பார்ப்புகளும், கோபங்களும், ஏமாற்றங்களும், இல்லேன...
- :)
- எறும்பின் தன்னம்பிக்கை! தலைப்பைப் படித்ததும் இது சிறுவர்களுக்கான கதை என நினைத்த...
- கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக...
- இந்த படத்தில் எத்தனை சிட்டுக் குருவிகள் உள்ளன...?
- :)
- ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம் அடிக்கடி பேசாவிட்டாலும், அப்பாவை பற்றி அதிகம் தெரிந...
- C.F.L .பல்புகள் உடைந்தால்...! சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்து...
- முட்டையை கொடுத்து, காசு வாங்குகிறவன் வியாபாரி. காசை கொடுத்து, முட்டையை வாங்குகி...
- :)
- அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண...
- # படித்ததில் பிடித்தது # ஒரு ரெஸ்ட்டாரண்ட்டில் தன் எதிரில் வந்து அமர்ந்தவளின் அ...
- முன்னெல்லாம் வெளியே கிளம்புமுன் சகுனம் பார்ப்பார்கள்.. இப்போது மொபைல்ல சார்ஜ் ஃப...
- :)
Posted: 12 Oct 2014 09:15 AM PDT சிந்திக்க வைத்த கதை: "ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒரு வார காலம் இருந்தது. மேலும், அது சுலபமான பேப்பர் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாச ஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்ப வேண்டிய தருணம் வந்தது. அப்போது ஒரு நண்பன், "கிளைமேட் அருமையாக இருக்கிறது. இன்றிரவும் இங்கே தங்கிவிட்டு, நாளை காலை ஆறு மணிக்கு காரில் கிளம்பினால் போதும். பரீட்சை நேரத்துக்கு கல்லூரி போய்விடலாம்" என்றான். அதுவும் சரிதான் என்று நண்பர்கள் அன்று முழுவதும் அங்கேயே கோலாகலமாக கழித்துவிட்டு, இரவு தாமதமாக தூங்கினார்கள். நெடுநேரம் கழித்தே கண் விழித்தார்கள். 'சரி, பேராசிரியரிடம் ஏதாவது பொய் சொல்லி, மாற்றுப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்ற நம்பிக்கையோடு புறப்பட்டார்கள் . பேராசிரியர் முன்பு நல்ல பிள்ளைகளைப் போல் நின்றவர்கள், 'சார்.. நாங்கள் அரிதான சில தாவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு மலைப்பகுதிக்கு சென்றிருந்தோம். அங்கிருந்து நேராக பரீட்சை எழுத கல்லூரிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்தில், விடியற்காலை காரில் புறப்பட்டோம். வழியில் கார் பஞ்சராகிவிட்டது. அதனால் பரீட்சை எழுத முடியவில்லை. நீங்கள் தான் பெரிய மனசு பண்ணி, எங்களுக்கு மாற்றுப் பரீட்சை வைக்க வேண்டும் .." என்று பொய்யை மெய்போல் உருகி சொன்னார்கள். பேராசிரியரும் ஒப்புக் கொண்டார். அந்த நான்கு மாணவர்களையும் நான்கு வெவ்வேறு அறைகளில் அமர வைத்து பரீட்சை எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு செம குஷி. உற்சாகத்துடன் பரீட்சை எழுத உட்காந்தார்கள். முதல் கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது. மாணவர்கள் அதற்கு விடை எழுதி விட்டு அந்த கேள்விக்கான மதிப்பெண் என்ன என்று பார்த்தார்கள். ஐந்து. சரி என்று அடுத்த பக்கத்தை திருப்பினார்கள். 95 மதிப்பெண்கள் என்ற குறிப்புடன் காணப்பட்ட அந்த கேள்வி, அவர்களின் முகத்தை அறைந்தது. அந்தக் கேள்வி- 'உங்கள் காரில் பஞ்சரானது எந்த டயர்?' பஞ்சர் என்று பொய் சொன்னார்களே தவிர.. இப்படி ஒரு கேள்வி வரும், அதற்கு இந்த டயர் தான் பஞ்சர் ஆனது என்று நாலு பேரும் ஒன்று போல் பதிலளிக்க வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்ளவில்லையே! #பொய் என்பது ஒரு தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும்.உண்மை என்பது சூரியனைப் போல..அது வாழ்நாள் முழுதும் மட்டுமல்ல.வாழ்ந்து முடிந்த பிறகும் கூட பலன் கொடுக்கும்..." Relaxplzz |
Posted: 12 Oct 2014 09:00 AM PDT விமானத்தை கண்டுபிடித்தது அமெரிக்கன் இல்லை ஒரு இந்தியன். விமானத்தைக் கண்டுபிடித்தது திரு.தால் படயே,புனே,இந்தியா. அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல. உலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு. 1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 10,000 அடிகள் உயரத்தில் பறந்தது.சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது) அடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை? ஆதாரம் : vedic world heritage,volume VII அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு 'வைமானிகா சாஸ்திரம்' என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன. இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம். வைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்!!! குறிப்பு : ஆதாரங்கள் இங்கே http://www.gaudiya-repercussions.com/index.php?showtopic=2138 Relaxplzz ![]() |
Posted: 12 Oct 2014 08:50 AM PDT |
Posted: 12 Oct 2014 08:40 AM PDT |
Posted: 12 Oct 2014 08:30 AM PDT |
Posted: 12 Oct 2014 08:15 AM PDT அம்மா... பாக்கட்மணி 20 ரூபாய் கொடேன்.. போடா.. என்கிட்ட காசே இல்ல.. அப்பாகிட்ட போய் கேளேன்... கேட்கத்தான் போனேன்.. அவருதான் எங்க கணக்குமிஸ் கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசிட்டிருந்தார்.... வந்துட்டேன். என்னடா பேசி சிரிச்சிட்டிருந்தார் !!! ????? அட போமா.,.உனக்கு உனக்கு வேற வேலை இல்ல.... டேய் இந்தா..100 ரூபாய் வச்சுக்க சினிமா போகனும்னுயே போய்ட்டுவா... ம்ம்ம் சரிம்மா.... இப்ப சொல்லுடா அப்பா என்ன பேசி சிரிச்சுட்டிருந்தார்.... தங்கச்சிக்கு நீ Maths home work நேற்று தப்பா செய்து கொடுத்திட்டியாம்... அதான் மிஸ் கிண்டல் அடிச்சாங்க... என்ன சொன்னாங்க ..? உஙக வீட்ல எல்லோருமே தப்பு தப்பாத்தான் கணக்கு போடுவீங்களானு கேட்டாங்கம்மா அதான் அப்பா சிரிச்சுட்டிருந்தார்.. #ரசித்தது ;-) Relaxplzz |
Posted: 12 Oct 2014 08:00 AM PDT ஒரு கல்லூரி வாசலில் ஒரு மூதாட்டி இளநீர் வியாபாரம் செய்து கொண்டிருந்தாராம். அதைப் பார்த்துவிட்டு உள்ளே போன பேராசிரியர், வகுப்பறையில் மாணவர்களைப் பார்த்து கேட்டாராம். "பசங்களா.... வெளியே இந்த தள்ளாத வயதிலும் இளநீர் விற்கும் அந்த மூதாட்டியைப் பற்றி நீங்களெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?" ஒரு மாணவன், "இந்த வயதான காலத்திலும் உழைத்து வாழவேண்டும் என்ற கொள்கை அருமை சார்" "வறுமை வாட்டிய போதும், மாணவர்களுக்கு தீமை தரும் பொருட்களை விற்காமல் நலம் தரும் இளநீர் விற்கும் அந்த தாயின் நல்லுள்ளம் பிரமிக்க வைக்கிறது சார்" இன்னொரு மாணவன். இப்படி ஒவ்வொருத்தரும் அந்த மூதாட்டியின் ஏழ்மையை சுற்றியே பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவன் மட்டும் எழுந்து சொன்னாராம், " இந்த தள்ளாத வயதிலும், பெப்ஸி & கோக் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு எதிராக இளநீர் விற்றுச் சவால் விட்டுக் கொண்டிருக்கும் அவரைப் பார்த்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது சார்". பன்னாட்டுப் பன்னாடைகளைத் தவிர்த்து இந்நாட்டு இளநீர் குடிப்போம். பி.கு : பன்னாடை என்றால், தென்னை மரத்திலேயே அதிகம் பயன்படாத ஒரு வலை நார். Relaxplzz ![]() |
Posted: 12 Oct 2014 07:45 AM PDT |
Posted: 12 Oct 2014 07:30 AM PDT |
Posted: 12 Oct 2014 07:15 AM PDT உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகைக்கு 24 மூச்சு, நிமிடத்திற்கு 360 மூச்சு வகுக்கப்பட்டுள்ளது. (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ), ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு,ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்றுக் கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது. இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம்.மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே! Relaxplzz |
Posted: 12 Oct 2014 07:00 AM PDT மறைக்கப்பட்ட வரலாறுகள்... நாமோ அல்லது நம் பிள்ளைகளோ கடல் கொள்ளையர்கள் ஆவோம் என உங்களுக்கு தெரியுமா ? சோமாலிய என்றவுடன் நமது நினைவுக்கு வருவது கடும் பஞ்சம் மற்றும் கடற் கொள்ளையர்கள்... 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை நாம் யாரும் மறந்திருக்க வாய்ப்புகள் குறைவு. மாபெரும் கடல்சீற்றத்தில்ஆசிய நாடுகள் இலச்சக்கனகான மக்கள் கொல்லப்பட்டதையும் யாரும் மறந்திருக்க வாய்புகள் குறைவு. கடல் சீற்றம் அடங்கியபோது உலகின் மீடியாக்களில் சுனாமி தான் பல நாட்களுக்கு தலைப்பு செய்தி. ஆனால் சுனாமி பாதிப்பு என்பது ஆசிய நாடுகளை விட ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது... கடல் சீற்றத்தின் வாயிலாக இல்லை.. மாறாக இந்த கடல் சீற்றத்தின் போது பல அணு கழிவுகள் சோமாலிய மணற்பரப்பை வந்தடையும் சூழல் ஏற்பட்டது... இந்த கோரமான அணு கழிவுகளின் பாதிப்பில் இருந்து சில மாதங்களிலேயே இலச்சக்கணக்கான சோமாலிய மக்கள் பலியாகினர்.. மேலும் பலர் புற்று நோயிக்கு பாதிப்புக்குள்ளாயினர் .இந்த செய்திகள் அனைத்தையும் திட்டமிட்டு மீடியாக்கள் வெளிவரவிடாமல் மறைத்தன.. காரணம் இந்த அணுக கழிவுகளை சட்டத்திற்கு புறம்பாக சோமாலிய கடற்பரப்பில் கொட்டியது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கப்பல்கள் ஆகும். தொடர்ந்து கொட்டப்பட்ட இந்த கழிவுகளின் காரணமாக சோமாலிய கடற்பரப்பில் இருந்த மீன்வளங்கள் அனைத்தும் அழிந்து போயின. இன்று சோமாலிய கடற் கொள்ளையர்கள் என்று நாம் கூறும் இவர்கள் அனைவரும் முன்னர் மீனவர்கள்.. இதை நம்பமுடிகிறதா? அவர்களின் கடற்பரப்பில் வந்து கொண்டிருக்கும் கப்பல்களை பிடித்து அதில் உள்ள மாலுமிகளை பணயக் கைதியாக பிடித்து வைதிருப்பதை அல்லது அவர்களுடன் ஏற்படும் சண்டையில் கொல்லப்படும் மாலுமிகளை பற்றி தினம் தினம் செய்திகளை வெளியிடும் மீடியாக்கள் ஏனோ ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் அணுக்கழிவுகள் திருட்டுதனமாக சோமாலிய கடலில் கொட்டப்பட்டதன் விளைவு தான் சோமாலியாவில் இலட்சக் கணக்கான மக்கள் இறந்தனர் என்ற உண்மையை மட்டும் உலகிற்கு கூறாமல் மறைத்து வருகின்றனர்.. சரி........ கூடங்குளத்தில் ஒருவேளை அணு உலையின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் போது அதில் கிடைக்கும் கழிவுகளை நமது அரசு என்ன செய்யும் நமது சொந்த கடலில் கொட்டுமா ? அல்லது வேறு நாட்டின் கடற்பரப்பில் கொட்டுமா? நன்றி- வரதராஜ் Relaxplzz ![]() |
Posted: 12 Oct 2014 06:45 AM PDT |
Posted: 12 Oct 2014 06:30 AM PDT |
Posted: 12 Oct 2014 06:15 AM PDT இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம் ;-) முதல் வீதி ....First rule ... அதிகாரத்தில் கை வைக்க கூடாது "No power of the house" ;-) வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும் நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension Second Rule ... அடிப்பெனு மிரட்ட கூடாது :) "No unwanted scaring" ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது Third rule ... அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும் நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும் :O And 4'வது Rule .... எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ... ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது :P And then 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது ... ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும் கூச்சமே படாம Sorry கேட்ரனும் ... மானம் ரோசம் அறவே கூடாது :( Relaxplzz |
Posted: 12 Oct 2014 06:00 AM PDT # படித்ததில் பிடித்தது # பெண்களை வாடி போடி என்றும்.. வாமா போமா என்றும் வாடா போடா என்றும் பா என்றும் செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்துஆண்களின் வழக்கமாக இருக்கிறது. இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை. (மா..டி..பா..டா..குட்டி..செல்லம்) இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைத்து, பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைத்து, டா என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து (தனக்கு நிகராகவும் நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில், குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும் செல்லம் என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும அழைக்கிறார்கள்். ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும். அதனால் தான் நான் பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை. அந்த எழுத்து என் மனைவிக்கானது..அதை நான் மற்ற பெண்களிடம் பயன்படுத்த விரும்பவில்லை. Relaxplzz ![]() |
Posted: 12 Oct 2014 05:45 AM PDT |
Posted: 12 Oct 2014 05:30 AM PDT |
Posted: 12 Oct 2014 05:15 AM PDT எறும்பின் தன்னம்பிக்கை! தலைப்பைப் படித்ததும் இது சிறுவர்களுக்கான கதை என நினைத்து விடாதீர் கள். இது உங்களுக்கானது. முழுவதையும் படியுங்கள். இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான். நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு.. அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான். யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான் என்று அர்த்தம். கவலைப்படுபவர்கள் இங்கு மட்டுமில்லை. உலகம் முழுவதுமே இருக்கிறார்கள். சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் 40 சதவீதக் கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை. 30 சதவீதக் கவலைகள் கடந்த காலம் பற்றியவை. 12 சதவீதக் கவலைகள் பிறர் பற்றியது. 10 சதவீதக் கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை. அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமலும் இருக்கலாம். மீதம் உள்ள 8 சதவீதம் மட்டுமே உண்மையான கவலைகள் எனக் கண்டறியப்பட்டது. பெரும்பாலான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது என்பது புரியும். அது போன்றுதான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம். செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால், நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள். தடைகளை வெல்வது எப்படி? இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென்று நின்றுவிட்டது. மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது. பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது. எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர். துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண் டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும். கவலையும் காணாமல் போய்விடும்... Relaxplzz |
Posted: 12 Oct 2014 05:00 AM PDT கிராமத்தில் அந்த டீக்கடை மிகவும் பிரபலம். அதிகாலை நேரமானதால் டீக்கடையைச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. ''அண்ணே! நாலு டீ போடுங்கண்ணே? அதுல ஒண்ணு சீனி கம்மியா ஸ்டாங்கா இருக்கட்டும்.'' ''ஒரு ரெண்டு டீ போடு.'' குரல் நாலாபுறம் இருந்தும் வந்தது. டீக்கடைக்காரர் கூட்டம் அதிகமாக இருந்தும் பதட்டப்படாமல் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ''ஐயா! ஒரு சாயா தாங்கய்யா.'' எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். அழுக்கு உடையில் காவிப் பற்களுடன் துண்டை இடுப்பில் கட்டியவாறு அந்த நபர் தெரிந்தார். டீக்கடைக்காரர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளரில் டீ கொடுத்து விட்டு, அந்த அழுக்கு நபருக்கு, அலுமினிய டம்ளரில் டீ போட்டு தன் விரல் அந்த நபர் கையில் பட்டு விடாதபடி டம்ளரை நீட்டினார். எல்லோரும் காசு கொடுக்க _ அந்த நபரும் காசு கொடுக்க கல்லாவில் போட்டார் கடைக்காரர். டீ கொடுத்து, அதைக் குடித்து விட்டு கடைக்காரரை ஏறிட்டு மெதுவாகச் சொன்னார் அந்த அழுக்கு ஆசாமி. ''ஐயா, நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன்னு எனக்குத் தனியா வேற ஒரு டம்ளரில் டீ தாரீங்க. ஆனா நான் கொடுத்த காசையும் அவங்க கொடுத்த காசையும் ஒரே கல்லாவில் போடுறீங்களே!'' பதில் சொல்லத் தெரியவில்லை டீக்கடைக்காரருக்கு. சாதிக்குப் பிறந்த எவனும் மனிதன்னே அல்ல சாதிக்க பிறந்தவனே உண்மை மனிதன்!!!! Relaxplzz ![]() |
Posted: 12 Oct 2014 04:45 AM PDT |
Posted: 12 Oct 2014 04:30 AM PDT |
Posted: 12 Oct 2014 04:15 AM PDT ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம் அடிக்கடி பேசாவிட்டாலும், அப்பாவை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கும் மகன்... அண்ணனின் இரகசியங்கள் எல்லாம் தெரிந்திருந்தும ் அப்பாவிடம் சொல்லிவிடாத தங்கை... தங்கை இன்னொரு வீடு செல்லும் வரை, அவளைக் காக்கும் மதுரை வீரனாய் அண்ணன்... தன் வரவுச் செலவு சோகங்களை சமையலறைக்குள்ளே ஒளித்துவிட்டு, எப்போதும் சிரித்த முகத்துடனே வரும் அம்மா... உழைத்த களைப்போடு வீடு வந்தபோதும், பிள்ளைகளின் முகத்தைக் கண்டதும் புத்துணர்ச்சி அடையும் அப்பா... சேலை முந்தானையில் முடிஞ்ச சில்லரைகளாலே பேரனின் பொருளாதார தேவைகளை தீர்த்துவைக்கும ் பாட்டி... நாங்கலாம் அந்த காலத்துலன்னு ஆரம்பிச்சி கதை சொல்லியே பேத்தியை தூங்க வைக்கும் தாத்தா... இன்றைக்கும் இப்படியான குடும்பங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. #சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்தக் குடும்பம்...! - இந்துப்ரியா Relaxplzz |
Posted: 12 Oct 2014 04:00 AM PDT C.F.L .பல்புகள் உடைந்தால்...! சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் . சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ? * உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் . * வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் . * கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் . * உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் . Relaxplzz ![]() |
Posted: 12 Oct 2014 03:45 AM PDT |
Posted: 12 Oct 2014 03:30 AM PDT |
Posted: 12 Oct 2014 03:15 AM PDT அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள். ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்). சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்) இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க. அமெரிக்க அதிகாரிகள்.- "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க. டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் ட்ரிக்ஸ். :P :P Relaxplzz |
Posted: 12 Oct 2014 03:00 AM PDT # படித்ததில் பிடித்தது # ஒரு ரெஸ்ட்டாரண்ட்டில் தன் எதிரில் வந்து அமர்ந்தவளின் அழகில் மயங்கினான் அவன்.இதயம் துடிக்க,கைகால்கள் படபடக்க.. உணர்ச்சிமயமாக இருந்தவனுக்கு..பேச்சும் வரவில்லை. சர்வரை அழைத்து, 'காபிக்கு கொஞ்சம் சர்க்கரை கொண்டு வா' என்று சொல்ல நினைத்தவன், நாக்கு குழறி, " காபிக்கு கொஞ்சம் உப்பு கொண்டு வா' என்றான். சர்வர் இதைக் கேட்டு திகைத்தார்.வார்த்தை தவறியது மறுவிநாடியே அவனுக்குப் புரிந்துவிட்டது என்றாலும் அழகியின் எதிரில் தன் இமேஜைக்காப்பாற்றிக்கொள்ள, 'ஆமா.. உப்புதான் கேட்டேன். கொண்டு வா!" என்றான் சர்வரிடம். அழகிக்கு ஆச்சரியம். " காபியில் உப்பு போட்டு சாப்பிடுவதா?" என்று விசாரித்தாள். அவனோ, உடனடியாக கதை ஒன்றை அவிழ்த்துவிட்டான்."கடலோர மீனவ கிராமம் ஒன்றில் பிறந்தவன் நான்.இப்ப நகரத்துல வசதியா இருந்தாலும் அப்பாவும் அம்மாவும் அந்தக் கிராமத்தை விட்டு வரமாட்டேங்கறாங்க. அவங்க நினைப்பும், ஊரு நினைப்பும் என்னைவிட்டுப் போயிடக் கூடாதுங்கிறதால, காபியில உப்பு போட்டுக்கறேன்!" என்றான். அவனது பெற்றோர் பாசமும், ஊர் பற்றுதலும் அவளை ஈர்த்தது. அடுத்தடுத்து அவளே வந்து வலிய சந்தித்ததில் காதல் வளர்ந்து, கல்யாணமும் முடிந்தது. நாற்பது ஆண்டு கால குடும்பவாழ்க்கைக்குப் பிறகு,ஒருநாள் அவன் இறந்துவிட, அவனது பெட்டியில் ஒரு கடிதத்தைக் கண்டாள் அவள்."ஸாரி டார்லிங்! ஒரு பொய் சொல்லிட்டேன். நமது முதல் சந்திப்பின் போது, காபிக்கு நான் உப்பு கேட்டது என் உளறல். சொன்ன சொல்லைக்காப்பாற்ற வாழ்க்கை முழுக்க நான் காபியில் உப்பு சேர்த்துக்கொண்டாலும்..அன்று சொன்ன பொய் என்னை நெருடுகிறது...!" பின் குறிப்பு : "நீ மட்டும் கிடைப்பதாக இருந்தால் அடுத்த ஜென்மத்திலும் உப்பு காபி சாப்பிட நான் தயார்!" வேறொரு நாள்... அவள் காபியில் உப்பு சேர்த்துக் கொண்ட போது, " உப்புக் கரிக்கலையா?" என்று கேட்டார் ஒருவர். "இனிப்பாக இருக்கிறது!" என்றாள் அவள் Relaxplzz ![]() |
Posted: 12 Oct 2014 02:45 AM PDT |
Posted: 12 Oct 2014 02:30 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment