Relax Please: FB page daily Posts |
- படித்ததில் பிடித்தது உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்.. உடுத்த உடையிருந்தால்.....
- இப்படியும் ஒரு கிராமம்!இப்படியும் ஒரு தலைவர்! நம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில்...
- :P
- மருத்துவர்களின் மகத்தான சாதனை...!
- :)
- தன்னம்பிக்கை வரிகள்! ஒருவன் சந்தோசமாக வாழவேண்டும் என்றால்,முதலில் அவன் தன்னைத்த...
- (சமூகநல சிந்தனை கொண்டவர்கள் கட்டாயம் இதை நண்பர்களுக்கும் பகிரவும்!) ஒரு ஃபேஸ்பு...
- மலிவு விலை, குறைந்த தரம் என்றால் -Made in china அதிக விலை, நிறைந்த தரம் என்றால்...
- :)
- மூலிகைகளும் அதன் பலன்களும்: *அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்க...
- குற்றாலீசுவரன்:- இந்த பெயர எங்கையோ படிச்சி இருக்கோம்னு தோனுதா? நியாபகம் வந்திச...
- எளிமையான, பசுமை வீடு... இந்த வீட்டை பிடிச்சவங்க லைக் போடுங்க...!
- :)
- ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?? தெரிஞ்சுகோங்க காற்றில் க...
- கதை போல் ஒரு உண்மை: 'எமனுக்கே எமன்டா!' சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதற்காகச் செ...
- மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வீடு...! இடம் : எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்
- :)
- ஒரு பொண்ணு அவ லவ்வருடன் ஓடிப்போச்சி. அவ குடும்பமே சோகத்துல இருக்குக்க... . .. ....
- நீங்கள் அனுபவித்து பாருங்களேன்இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்க...
- ஒரு ஆம்பள கேட்ட உடனே மதிச்சு பதில் சொல்லுற ஒரே ஒரு ஆளு... GOOGLE மட்டுதான்...! ;-)
- :)
- காதலை சொல்வது எப்படி ..? 1. நான் இருக்கும் போது உங்க அப்பா ஏன் மாப்பிளை தேடனும்...
- குரங்கு ஒன்று அசிங்கத்தை தொட்டு விட்டு.. அதை தன்னிச்சையாக கையைத் தன்மீதே துடைத...
- ஜெ. விடுதலையாக வேண்டி 1006 பேர் மொட்டை: சேலம் அதிமுகவினர் கோயிலில் வேண்டுதல்
- உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து முந்தச் செய்கிறது. - முருகேசன் க...
- :)
- வீதிகளில் உலவும் நாய் ஒன்றும் , வீட்டில் சகல மரியாதைகளுடன் வளர்க்க பட்ட நாய் ஒன்...
- அவசியம் நண்பர்களுக்கு பகிரவும்:- மாரடைப்பு ஏற்பட்டால்... செய்ய வேண்டிய முதல் உத...
- :)
- தமிழன் சாதித்த கட்டிடக்கலை! இடம் : தஞ்சை பெரிய கோவில்!
Posted: 11 Oct 2014 09:15 AM PDT படித்ததில் பிடித்தது உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்.. உடுத்த உடையிருந்தால்.. தலை மேல் கூரையிருந்தால்.. உறக்கம் கொள்ள இடமிருந்தால்.. உலகின் 75 சதவிகித மக்களை விட நீங்கள் மேலானவரே! உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்.. உங்கள் பர்சில் சிறிது சில்லறை இருந்தால்.. உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே! நீங்கள் போரின் அனுபவம் பெறாதிருந்தால்.. எந்த வித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால்.. தினம் தினம் செத்துப் பிழைக்கும், கோடானு கோடி மக்களை விட நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே! மேற்கூறியவைகளை தங்களால் படித்துப் பார்க்க முடிந்தால்.. பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களை விடவும் நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே!!! Relaxplzz |
Posted: 11 Oct 2014 09:00 AM PDT இப்படியும் ஒரு கிராமம்!இப்படியும் ஒரு தலைவர்! நம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நடத்க்கு காட்டுகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் பொப்பட் ராவ் பாகுஜி பவார் என்ற அதிசய மனிதர்தான் அவர். ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெத்து வேட்டுகளோ வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று ப்ளக்சுகளில் மின்னிக் கொண்டிருக்கின்றன. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தினந்தோறும் பத்திரிகயைத் திறந்தால் ஊழல் செய்திகளே பல பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தங்கள் பதவிக் காலத்திற்குள் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள்.பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை உண்மையான மக்கள் நலனுக்காக உழைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால் கிராமங்களோ வறுமை,வறட்சி,நோய்கள் அறியாமை இவற்றின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. நாளுக்கு நாள் கிராம மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தை வளப்படுத்த வேண்டியவர்களோ தங்களை மட்டும் வளப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி பட்டவர்களுக்கு மத்தியிலே இப்படி ஒரு மனிதர் எப்படி உருவானார். எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்வதற்கு பதிலாக அரசு திட்டங்களை பயன்படுத்திகொள்வதோடு மகாத்மா காந்தியின் கொள்கைகளான சுயசார்பு சுய நம்பிக்கயை சுய ஆட்சி முறையை பின்பற்றி ஹிவாரே பசார் என்ற தனது கிராமத்தை இந்தியாவின் மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டி இருக்கிறார் பொப்பட் ராவ் பாகுஜி பவார். இது ஒரு நாளில் நிகழ்ந்த மாயாஜாலமல்ல அயராத முயற்சியும் தளராத தன்னபிக்கையுமே இந்த இந்த கிராமத்தின் உயர்வுக்கு காரணம். கிராம மக்கள் இவர் மீது அபார நம்பிக்கை வைத்து உழைத்தனர்: இன்று உயர்ந்தனர், அப்படி என்னதான் செய்தார் இவர்? வியக்கும் அளவுக்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது? மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத்நகர் மாவட்டத்தில் சஹ்யாத்ரி மலைப் பகுதிக்கு அருகிள் உள்ள மழை மறைவுப் பிரதேச கிராமங்களில் ஒன்று ஹிவாரே பசார். இந்த கிராமத்து மக்களின் சராசரி வருமானம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 20 மடங்கு அதிகம்.முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அனைத்து தடைக் கற்களையும் தகர்த்தெறிந்து கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று முன் மாதிரி கிராமமாக திகழவைத்த சாதனையாளரின் வெற்றிக் கதை இதோ சிறந்த தலைவர் உட்பட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிற பொப்பட்ராவ் பாகுஜி பவார் அகமத் நகரில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்தார்.வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தும் வணிக எண்ணம் தோன்றவில்லை. மகாத்மா காந்தி, வினோபாபாவே, அண்ணா ஹசாரே, பாபா ஆம்டே கொள்கைகளால் கவர்ப்பட்ட பொப்பட் ராவ் மோசமான நிலையில் இருந்த தன கிராமத்தை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று விரும்பினார். 1990 இல் மக்களால் ஒரு மனதாக கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அன்று முதல் ஓய்வை ஒதுக்கி வைத்து விட்டு உழைக்க தொடங்கினார். தனது கிராமத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல பஞ்சசூத்ரம் என்ற ஐந்து வழிமுறைகளை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வலியுறுத்தினார் ஷ்ரம்தான்-அனைவரும் தனது உழைப்பை கிராமத்திற்காக இலவசமாக தருவது கிராமத்தில் ஆடு மாடுகள் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தாவரங்களை மேய்ச்சலை தடுப்பது மரங்கள் வெட்டுவதை முழுமையாக தடை செய்வது கிராமத்தில் மது விலக்கை கடை பிடிப்பது குடும்ப கட்டுப்பாடு முதலில் சிரமப்பட்டாலும் பின்னர் இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல் பட்டனர்.கிராம மக்கள். ஏரி குளங்கள், கால்வாய்களை சீரமைத்தல்,மரம நடுதல் போன்றவற்றிக்கு கூலி இன்றி தங்கள் உழைப்பை தந்தனர். கண்டபடி புல்வெளிகளையும் தாவரங்களையும் ஆடுகள் மேய்வதை கட்டுப்[ படுத்தினர். 94-95 இல் 200 டன்னாக இருந்த புல் உற்பத்தி 2001-2002 இல் 5000 டன்னாக உயர்ந்தது மரம் வெட்டுவதை முழுமையாக தடை செய்திருந்ததால் மரங்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்தது. மதுவிலக்கை கண்டிப்பாக கடை பிடித்ததால் மனித வளத்தின் ஆற்றல் உய்ரந்ததோடு குற்றசெயல்கள் முற்றிலும் ஒழிந்திருந்தது. குடும்பக் கட்டுப்பாடு முறையை மக்கள் ஏற்றுக் கொண்டதால் பிறப்பு விகிதம் குறைந்தது. வறுமை ஒழியவும் தன்னிறைவு அடையவும் இது உதவியது. கிராமத்தை சேராதவர்களுக்கு நிலங்கள் விற்பது தடுக்கப்பட்டது. இதனால் வணிக நோக்கம் முற்றிலுமாக தவிர்க்கப் பட்டது. நீர் வளத்தை அதிகப்படுத்த திட்டம் தீட்டப் பட்டு முறையாக செயல்படுத்தப் பட்டது. அதிக நீர் உறிஞ்சும் பயிர்களான கரும்பு போன்றவை பயிர் செய்தல் தவிர்க்கப் பட்டது. ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கண்டபடி நீர்உறிஞ்சி பயன்படுத்துவது தடை செய்யப் பட்டது. 1995 முதல் 2005 வரை நிலத்தடி நீர் சேகரித்தல்,மழைநீரை தேக்கி வைத்தல் போன்றவற்றை மக்கள் பங்கேற்புடன் திட்டமிட்டு செயல் படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்தது 70 -80 அடியில் இருந்த நீர்மட்டம் 20-25 அடியாக அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 300 லிட்டரில் இருந்து 3000 லிட்டராக உயர்ந்துள்ளதாம்.தங்கள் கிராமத்தில் தயாரிக்கப் படும் பால் பொருட்களுக்கென்று தனி ட்ரேட் மார்க் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. பெரிய அளவில் தொழில் நுட்பங்களோ முதலீடோ இல்லாமல் கிடைப்பதை வைத்து சுய உழைப்பு,கூட்டுறவு,கட்டுப்பாடு,ஒற்றுமை இவற்றின் மூலமே முன்னேற முடியும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து இந்த கிராமம். வேலை வாய்ப்பு கல்வி, சுகாதாரம், அடிப்படைவசதிகள் எல்லாம் இங்கேயே கிடைத்ததால் கிராமத்தை விட்டு பிழைக்க சென்ற குடும்பங்கள் மீண்டும் ஹிவாரே பஜாருக்கே திரும்பி விட்டார்களாம். அருகிலுள்ள கிராமங்கள் ஹிவாரே பஜாரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தன. இது போன்று இன்னும் சில கிராமங்கள் இருக்கக் கூடும். நம் நாட்டில் உள்ள கிராமத் தலைவர்களை இந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதிலும் ஓர் ஆபத்து உள்ளது. அந்த கிராமத்தை இவர்கள் கெடுத்து விடாமல் இருக்கவேண்டும். ஒரு கூட்டு முயற்சியால் சிகரத்தை எட்டியுள்ளது என்றாலும் சுயநலமின்றி நல்ல தலைவராக இருந்து பல திட்டங்களை தீட்டி வழிகாட்டிய பொப்பட் ராவ் பாகுஜி பவாரே அத்தனை சாதனைகளுக்கும் உரித்தானவர். ஒரு நல்லதலைவர் இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம். ஹிவாரே பஜார் கிராமத்துக்கு ராவ் பாகுஜி பவார் என்ற சிற்பி கிடைத்தார். நாட்டுக்கு இப்படி ஒருவர் கிடைப்பாரா? கிடைத்தாலும் விடுவார்களா? கொசுறு: இந்த கிராமத்துக்கென்று வலைப்பக்கமும் உண்டு அதன் முகவரி :http://hiware-bazar.epanchayat.in/ கட்டுரை ஆசிரியர்: டி.என்.முரளிதரன் Relaxplzz ![]() |
Posted: 11 Oct 2014 08:50 AM PDT |
Posted: 11 Oct 2014 08:40 AM PDT |
Posted: 11 Oct 2014 08:30 AM PDT |
Posted: 11 Oct 2014 08:15 AM PDT தன்னம்பிக்கை வரிகள்! ஒருவன் சந்தோசமாக வாழவேண்டும் என்றால்,முதலில் அவன் தன்னைத்தானே நம்ப வேண்டும். புரிந்து கொள்ளாதபோதும்,பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாக கருதுகிறான். சோம்பேறிக்கு எல்லாமே கடினமாய் தோன்றும்,ஊக்கமுள்ளவனுக்கும் எல்லாமே எளிதாய் தோன்றும். உதிரும் பூவாக இல்லாமல்,அதை சுமக்கும் செடியாக இருப்பவனே நண்பன். உன் திறமை ஒன்று என்றாலும் அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்கு சமம். ஒருவனின் தன்னம்பிக்கையும்,சுய ஒழுக்கமுமே அவனின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும். பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது,பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாவே இருக்கும். ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும்போது அங்கு அமைதி விலகி சென்று விடும். முட்டாளின் தோழமையை விட,ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல்-புத்தர் வறுமையினால் பெரிய துன்பம் இல்லை,செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை-கதே உழைப்பை மட்டும் விற்கலாம்,ஒரு நாளும் ஆன்மாவை விற்க முடியாது-ரஸ்கின். மவுனம் என்னும் மரத்தில்,அமைதி என்னும் கனி தொங்குகிறது.- டெஸ்கார்டில். பழிவாங்குதல் என்பது அற்பர்கள்,அற்ப ஆனந்தம் கானும் செயலாகும். சிறப்பு என்பது பலத்தை சரியான வழியில் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாள் காலையும்,அந்த நாளை நல்ல நாளாக ஆக்குவதற்கான சந்தர்ப்பத்தை தருகிறது. எல்லா நேரமும் நல்ல நேரம்தான்,அதில் எதை செய்து முடிக்கிறாய் என்பதுதான் கேள்வி. மூளையால் சிந்திப்பவன் பாதி மனிதனே,இதயத்தால் சிந்திப்பவனே முழு மனிதன். செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான். செயலை விதையுங்கள் பழக்கம் உருவாகும்,குணத்தை விதையுங்கள் உங்கள் எதிர்காலம் உருவாகும். (y) (y) Relaxplzz |
Posted: 11 Oct 2014 08:00 AM PDT (சமூகநல சிந்தனை கொண்டவர்கள் கட்டாயம் இதை நண்பர்களுக்கும் பகிரவும்!) ஒரு ஃபேஸ்புக் தோழியின் கேள்வி:- இப்பவெல்லாம் சினிமாவை பார்லேயே ஷூட் பண்றாங்களோ? முழுப்படமும் பார்லேயே உக்கார்ந்து பார்க்கிறமாதிரி.. ஒரே பீர்மயம்.. என் பதில்: பல பேருக்கு தெரியாத உண்மை இது! மதுவும், புகையிலை பொருட்களும் விளம்பரம் செய்வதை சட்டம் தடை செய்துள்ளது. அதனால்தான் நீங்கள் எந்த ஒரு மது/புகையிலைப் பொருள் விளம்பரத்தையும் டிவியில் பார்க்கமுடிவதில்லை. அப்புறம் எப்படி விளம்பரம் செய்து வருவாயை பெருக்குவது என்று மீட்டிங்க் போட்ட அந்நிறுவனங்கள் பல உக்திகளை கண்டுபிடித்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான இரண்டை மட்டும் இங்கு கூறுகிறேன். 1. மது/புகையிலை பொருட்களின் பிராண்ட் பெயரிலேயே மது/புகையிலை அல்லாத பொருளை தயாரித்து அதனை விளம்பரம் செய்வது. எ.கா. காஜா தீப்பெட்டிகள் - நம் நினைவுக்கு உடனே வருவது காஜா பீடிகள், கிங்க்ஃபிஷர் சோடா- நம் நினைவுக்கு உடனே வருவது - கிங்க்ஃபிஷர் பீர். 2. திரைப்படங்களில் குறிப்பாக கதாநாயகன் மது/சிகெரெட் பிடிப்பது போல் தேவையே இல்லாமல்,கதையின் ஒரு பகுதியாகவே காண்பிப்பது. இது ஒரு மார்க்கெட்டிங் சைக்காலஜி. கதாநாயகன் போல் ஆகவேண்டுமென்றால், மது/புகையிலை பயன்படுத்த வேண்டும் என்று உங்களையே அறியாமல் உங்கள் ஆழ்மனதில் ஒரு எண்ணத்தை விதைப்பது. அதே போல், மது/புகையிலை பயன்படுத்தும் காட்சிகளை அவ்வபோது காண்பித்து, அது ஒன்றும் தவறில்லை. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற மாயையை சமூகத்தில் விதைப்பது. எ.கா. எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் கதாநாயகி, கதாநாயகன் வாங்கி வைத்திருந்த சிகெரெட்டை கையில் வைத்துக்கொண்டு, சிகெரெட் பிடிக்கும் அவன் அழகை இரசித்து காதலிப்பதாக ஒரு பாடல் முழுவதும் காண்பித்திருக்கிறார்கள். இதன் மூலம் பெண்களுக்கு சிகெரெட் பயன்படுத்தும் ஆண்களை பிடிக்கும் என்ற மாயையை ஆண்கள் மனதில் விதைக்கச் செய்திருக்கிறார்கள். எத்தனை காட்சிகளில் சிகெரெட்/மது காண்பிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு டைரக்டர்/பிரடியூசருக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். என்ன கொடும...?? - Karthik Laxmanan (Psychologist) Relaxplzz ![]() |
Posted: 11 Oct 2014 07:45 AM PDT மலிவு விலை, குறைந்த தரம் என்றால் -Made in china அதிக விலை, நிறைந்த தரம் என்றால் -Made in Japan இல்லாத பொருளை இருப்பதாக (கணக்கு) காட்டினால் -Made india - M Muhammad Fazil Erode Relaxplzz |
Posted: 11 Oct 2014 07:30 AM PDT |
Posted: 11 Oct 2014 07:15 AM PDT மூலிகைகளும் அதன் பலன்களும்: *அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது *கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா *ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். *திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. *வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். *நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. *கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது. *வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். *அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். *துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. *செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. *கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. *சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. *கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. *முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. *கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. *குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. *பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. *முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும். *லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. *வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். *பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். *வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. *மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். *சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. *பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். *சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. *ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. *கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். *வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். *வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். *நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. *நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். *பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. *கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். *பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். *வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். *சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். *மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். *கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். Relaxplzz |
Posted: 11 Oct 2014 07:00 AM PDT குற்றாலீசுவரன்:- இந்த பெயர எங்கையோ படிச்சி இருக்கோம்னு தோனுதா? நியாபகம் வந்திச்சா? இல்லையா அப்போம் படிங்க.... குற்றாலீசுவரன் (பிறப்பு: 8 நவம்பர், 1981) என்னும் குற்றால் இரமேசு இந்திய நீச்சல் வீரர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், மாரத்தான் என்னும் வகை நீச்சல் வீரர். தன்னுடைய 7-ம் அகவையில் இருந்து நீச்சல் போட்டியில் பங்குபெற்றும் வரும் இவர், ரிப்பன் மீட் என்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாக நீச்சலடித்தார். அப்போட்டியில் ஆராவது இடம் பிடித்தார். அதன்பிறகு பல மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்ற இவர், தன்னுடைய 10-வது அகவையில், 1991-ம் ஆண்டு நடைபெற்ற 5 கி.மீ. தூர நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு நான்காம் இடம் பிடித்தார். 1994-ம் ஆண்டு, மிஹிர் சென்னுடைய ஒரே வருடத்தில் ஐந்து கால்வாய்களை நீச்சல் மூலம் கடந்த 30 வருட சாதனையை முறியடித்தார். இவர் முதன்முதலாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாக்கு நீரிணையை ஏப்ரல 1994-ம் ஆண்டு நீச்சலடித்து கடந்தார். அதன்பிறகு, தமிழக அரசின் உதவியுடன் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி ஆங்கிலக் கால்வாயைக் கடந்தார். ஆறு கால்வாய்களை நீச்சல் மூலம் நீந்தி கடந்தமைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். இவரைப் பற்றிய ஒரு பாடம் தமிழ்நாட்டின் பாடபுத்தகத்திலும் இருந்தது. இப்போம் நியாபகம் வருதா எங்க படிச்சோம்ன்னு??? சாதனை புரிந்த பிறகு, இவர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு போட்டிகளில் பங்குபெறத் துவங்கினார். 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை, 25-நீச்சல் வீரர்களில், உலக நீச்சல் போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே நபரும் இவரே. இவர் 6-முறை இந்தியாவுக்காக நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று விருதும் பெற்றுள்ளார். அவற்றுள், சுவிட்சர்லாந்தில் பெற்ற முதல்பரிசும் அடங்கும். இவருக்கு 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. மறக்காதிங்க சாதனை செய்தவரை...... Relaxplzz ![]() |
Posted: 11 Oct 2014 06:45 AM PDT |
Posted: 11 Oct 2014 06:30 AM PDT |
Posted: 11 Oct 2014 06:15 AM PDT ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?? தெரிஞ்சுகோங்க காற்றில் களையும் கூந்தலை வெறும் கைகளால் கோதிகொள்ளும்போது ரசிப்பார்கள். சீவிய தலைமுடியை கலைக்கும்போதும் ரசிப்போம். வச்ச கண்ணு வாங்காம நம்மல பாத்துட்டு பாக்காத மாதிரி நடிக்கும் நடிப்பை ரசிப்போம். சிக்னல்ல நிக்கும்போது பைக் கண்ணாடியில் தன்னை பாத்துகொள்ளும்போதும் ரசிப்போம். வளந்து வளராத அரும்பு மீசையை முறுக்கி பார்க்கையில் ரசிப்போம். டி.வி ரிமொட்டுகாக தங்கையோடு சண்டைபோடும்போது ரசிப்போம். சிரிப்பை அடக்கிக்கொண்டு கோவமாய் பேசுவதுபோல் நடிக்கையில் ரசிப்போம். சிரித்துக்கொண்டே செல்போன்னை பார்க்கும்போது ரசிப்போம். புருவம் உயர்த்தி கேள்வி கேட்கும் போது ரசிப்போம். இரண்டு நாள் கிளீன் ஷேவ் பண்ணாத தாடியை ரசிப்போம். குழந்தையின் காதில் ரகசியம் பேசுகையில் ரசிப்போம். நண்பர்களோடு சிரிச்சுபேசும்போது ரசிப்போம். கடந்து செல்லும்போது நம்மை ஓரக்கண்ணால் பார்க்கையில் ரசிப்போம். கவிதை சொல்ல நினைத்து வார்த்தை வராமல் தவிக்கையில் ரசிப்போம். கைபிடிச்சு கண் பார்த்து பேசும்போது ரசிப்போம். ஐஸ் கிரீம், சாக்லேட் நமக்கு வாங்கி தரும்போது வம்பு பண்ணி பதிய சாப்ட்டு தரும்போது ரசிப்போம். பைக்ல போகைல நம்ம அவங்க தோள்ல கைபோட்டுகுவோமானு பைக் கண்ணாடில பாக்கும் போது ரசிப்போம். வேட்டி கட்டி அதிலயும் அத மடிச்சு கட்டி நடந்து வரும் தோரணைய பாத்து ரசிப்போம். நாள் முழுக்க போன் பேசிட்டு போன்ன வைக்க போறப்ப போன்ன வைக்க மனசே இல்லன்னு சொல்லுரப்போ ரசிப்போம். பொண்ணுக எப்பலாம் பசங்கள ரசிக்கிரோம்ன்னு சொல்லிட்டேன்... இத படிச்சுட்டு ஏதாவது ஒரு பொண்ண உங்கள ரசிக்க வைக்க டிரை பண்ணிட்டு அந்த பொண்ணு உங்கள ரசிக்கலேனா அதுக்கு நான் பொறுப்பில்ல.. - நந்தமீனாள் ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz |
Posted: 11 Oct 2014 06:00 AM PDT கதை போல் ஒரு உண்மை: 'எமனுக்கே எமன்டா!' சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதற்காகச் சென்று பார்த்துவிட்டே வரலாம் என்று முடிவெடுக்கவும் இயலாது. எமலோகத்தில் இப்போதெல்லாம் எல்லாம் நவீன மயம். நரகம் தவிர மற்ற பகுதிகள் ஏ.ஸி. வசதி செய்யப்பட்டுவிட்டன. சொர்க்கவாசிகளுக்கு இலவச இண்டர்னெட், டிஷ் டிவி. வசதிகளும் உண்டு. மரணங்களின் வரவு செலவுக் கணக்கெல்லாம் இப்போது கம்ப்யூட்டரில். தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் வாசலில் இறந்தவர்களாகவே இருந்தாலும் மெட்டல் டிடக்டர் வைத்துச் செக் செய்தபின்தான் உள்ளே நுழையவே இயலும். திருத்தியமைக்கப்பட்ட நரகத்தைப் பார்வையிட எம தர்ம ராஜன் வருகை புரிந்தார். பல்வேறு புதுவகை சித்ரவதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு நரகம் ஜொலித்தது. புதிய கொள்கையின்படி இந்தியர்களை மா நிலம் வாரியாகப் பிரித்திருந்தார்கள். எமன் முதலில் நுழைந்தது கர் நாடகா பகுதியில். அப்போது சித்ரவதைகளுக்கிடையேயான அரைமணி நேரம் ஷார்ட் ப்ரேக் என்பதால் கர் நாடகர்கள் ஓய்வாகப் படுத்தபடி மிகவும் கவலையான முகங்களுடன் புலம்பிக்கொண்டும், அழுது அரற்றிக்கோண்டும் இருந்தார்கள். "தண்டனைகள் ரொம்ப அதிகமோ?" என்றார் எமன். எமனின் செக்ரட்டரி சொன்னான் : "மஹா பிரபு... இவர்களை நம்பாதீர்கள். இவர்கள் சொர்க்கம் சென்றால் கூட இப்படித்தான் அழுது புலமிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் குணம் அப்படி. ஏனெனில் தான் துன்பப்படுவது பற்றி அவர்கள் கவலைப்பட்டதில்லை. அடுத்தவன் மகிழ்ச்சியாக இருப்பதுதான் அவர்களுக்கு மிகவும் துன்பமளிக்கும் செயல். எல்லா வளங்களும், வசதிகளும் கொண்ட இவர்கள் பக்கத்து மா நிலத்திற்குக் குடிக்கத் தண்ணீர் கூட தராமல் வஞ்சித்தவர்கள். இங்கு மற்ற மா நிலத்துக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து இந்தக் கவலை..." எமனின் மீசை துடித்தது. "அட அற்பர்களே... இவர்களை நரகத்தில் வைத்திருப்பது கூடப் பாவம்... இது நரகத்திற்கே அவமானம்... இப்போதே ஒழித்து விடுகிறேன் இவர்களை..." என்று சடாரென்று கையசைக்க அனைவரும் மறுபடியும் மடிந்தனர். அடுத்துச் சென்றது கேரளா பக்கம். அங்கும் அதே கதை. கர் நாடகத்தவர்களை விட கேரளத்தவர்கள் இன்னும் கடுமையாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். எமனின் குறிப்பறிந்து செக்ரட்டரி "... இவர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். கர் நாடகாவை விட இவர்கள் செழிப்பானவர்கள். வீட்டிற்கொருவர் வெளி நாடு சென்று சம்பாதித்துப் பணம் அனுப்பி அ ந் நியச் செலாவணி பெருக்குபவர்கள். முழுமையான கல்வியறிவு பெற்றவர்கள். அனைவரின் வாய்ப்பையும் தட்டிப்பறித்து இமயமலையில் கூட ஒரு ஹிமாச்சலியை விட அதிகமான டீக்கடை போட்டிருப்பவர்கள். இவர்கள் மா நிலத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆரோக்கியமான அரசியல் கொண்ட மா நிலம். பல விஷயங்களில் இந்தியாவிற்கே வழிகாட்டி எனலாம். ஆனால் சமீப காலமாக மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள். இந்தியாவின் மதுபானத் தலை நகரம் திருவனந்தபுரம்தான். வீட்டிற்குச் சென்றால் கூட காஃபி, டீக்குப் பதில் மதுதான் தருவார்கள். அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து மதுவருந்தும் காட்சி இங்கு சில வீடுகளில் காணலாம். இங்கு மது கிடைக்கவில்லை என்பதால் இந்தச் சோகம்..." என்றார். எமன் மண்டை காய்ந்து " மது கிடைக்கவில்லையென்று சோகமா? என்ன அவமானம்?" கையசைப்பில் கேரளா காலி. அடுத்தது ஆந்திரா. அவர்களும் மிக்க புலம்பல் மற்றும் அழுகை. செக்ரட்டரி "... அது வந்து பிரபு... இவர்கள் சினிமா ப்ரியர்கள். மற்றபடி விவசாயத்தில் முதன்மை பெற்ற மா நிலம். இவர்கள் விளைவித்த அரிசியைச் சாப்பிடத இந்தியர்களே இல்லை எனலாம். உணவு வகைகளும் ஏராளம். க்ருஷ்ணா, கோதாவரி என்ற கடல் போன்ற இரு நதிகளாலும், திருப்பதி ஏழுமலையானின் அருளாலும் குறைவற்ற வாழ்வு வாழ்பவர்கள். கடுமையான உழைப்பாளிகள். ஆனால் இங்கு சிரஞ்சீவியின் சினிமா பார்க்கக் கிடைப்பதில்லை என்று இந்தக் கவலை..." என்றார். வெறுப்புடன் எமன் கையசைக்க ஆந்திரா ஆல் அவுட். அடுத்து... யெஸ்... நாம்தான். ஆனால் இங்கு வினோதம். ஷார்ட் ப்ரேக் முடிந்து சித்ரவதைகளும் ஆரம்பித்து விட்டன. எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியுடனும், வாய்கொள்ளா சிரிப்புடனும் சித்ரவதைகளை அனுபத்து என்ஜாய் செய்து கொண்டிருந்தார்கள். ஒரே சந்தோஷக் கூச்சல். கோலாகலம். கும்மாளம். தான் இருப்பது சொர்க்கத்திலா, நரகத்திலா என்று சந்தேகமே வந்து விட்டது எமனுக்கு. செக்ரட்டர் அவசரமாக. " குழப்பம் வேண்டாம் மஹா பிரபு... தாங்கள் இருப்பது நரகத்தில்தான்... இவர்கள் யாருக்கும் புரியாத புதிர்... வஞ்சிக்கும் இயற்கை, பொய்த்துப்போகும் மழை, மக்களைச் சென்றடையாத அரசுத் திட்டங்கள், லஞ்சம், இமாலய ஊழல், பெருகும் கொலை, கொள்ளைகள், அருவறுப்பான அரசியல்வாதிகள், பொய்க்கால் குதிரை சினிமா ஹீரோக்கள், அழுகை வளர்த்து, அறிவை மழுங்க வைக்கும் மீடியாக்கள், எங்கும் கலப்படம், வருமானத்தை மீறிய அடிப்படைத் தேவைகளுக்கான செலவு, எலிகள் சிசுக்களைக் கடித்த்க் குதறும் அரசு மருத்துவமனைகள், பள்ளிக்குழந்தைகளைப் பலியாக்கும் வாகனங்கள், சுய நலம், தான் வாழப் பிறாரைக் கெடுக்கும் வஞ்சகம், காசு வாங்கித் தவறானவர்களுக்கு ஓட்டளிக்கும் நீசத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் மின் தடையால் நசிந்து போன தொழில்கள் மற்றும் வாழ்க்கை... இவற்றிலேயே உழன்றதால் இவர்களுக்கு நரகம் கூட சந்தோஷத்திற்குரிய இடமாகத் தோன்றுகிறது... இதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை..." செக்ரட்டரி முடிக்குமுன் ஒருவன் கொதிக்கும் எண்ணெய்க்கொப்பறைக்குள்ளிருந்து ஒருகை எண்ணையை எடுத்து எமனின் மேல் வீசினான். "... தலைவா... கொஞ்சம் கவனிங்க... இங்கயும் ஊழல்... ஒரு வாரமா எண்ணையை மாத்தாமப் பழைய எண்ணையிலேயே எங்களை ஃப்ரை பண்றாய்ங்க..." செக்ரட்டரி திகைப்புடன் எமனைப் பார்க்க, எமன் அதிர்ச்சியில் இறந்து போயிருந்தார் - நிரந்தரமாக. ###### - முக நூல்காரன் Relaxplzz ![]() |
Posted: 11 Oct 2014 05:45 AM PDT |
Posted: 11 Oct 2014 05:30 AM PDT |
Posted: 11 Oct 2014 05:15 AM PDT ஒரு பொண்ணு அவ லவ்வருடன் ஓடிப்போச்சி. அவ குடும்பமே சோகத்துல இருக்குக்க... . .. . மூணு நாள் கழிச்சி அவ வீட்டுக்கு திரும்பி வந்தாள். அப்பா : எதுக்குடி இங்க வந்த...?. . . . . . . . .. .. . . . . . .. பொண்ணு : நோக்கிய சின்ன பின் சார்ஜர் வேணும்......?. அப்பா : !!!? #நீதி : நோக்கியா போனை ஒரு தடவை சார்ஜ் பண்ணினா மூணு நாள் பண்ணவேண்டியதில்லை. :P :P Relaxplzz |
Posted: 11 Oct 2014 05:00 AM PDT நீங்கள் அனுபவித்து பாருங்களேன்இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று..? மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும். பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால் கைது என்று அறிவித்தால் எப்படி இருக்கும்? வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போத ும் தாமதப்படுத்தும் போதும் எப்படி உணர்வீர்கள்?சுத ந்திரமாக? போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும்இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை .அப்படின்னா காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்புகொள்வீர்களா? உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம்முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா ?அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோ மா?இல்லை கொல்வோமா? கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே? வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும்அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே? உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாகநீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும்பட்சம் தாக்கப்படுவீர்கள். சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்ப ினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம். கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.ஆயுதங ்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.அடி உதைக்கு பயந்து அவர்சும்மானாச்சும் ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்த ி மல்லாக்க படுக்க வைத்தோம். ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற ஊற்றப்பட்டது.வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றைகேட்குமா? தேசிய கீதம் பாடுமா? எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம். -சதிஸ் செல்லதுரை எல்லை படை அதிகாரி Relaxplzz ![]() |
Posted: 11 Oct 2014 04:45 AM PDT |
Posted: 11 Oct 2014 04:30 AM PDT |
Posted: 11 Oct 2014 04:15 AM PDT காதலை சொல்வது எப்படி ..? 1. நான் இருக்கும் போது உங்க அப்பா ஏன் மாப்பிளை தேடனும்.. 2.உங்க வீட்ல மாப்பிள்ள பாக்க ஆரம்பிச்சதும் என் போட்டோவ கொடுத்துறு இந்தா வச்சுக்க.. ... 3.உங்கம்மா எனக்கு மாமியாரா வந்தா நான் சாமியாராப் போக மாட்டேன்..அவ்வ் 4.உங்கள பாத்தா என் 1st Wife மாதிரியே இருக்கு.பை தி வே எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல 5.உன் கையால அடிவாங்கனும்... வாழ்க்கை பூரா உன்கிட்ட அடிவாங்கனும்... அடிப்பியா? :P :P Relaxplzz |
Posted: 11 Oct 2014 04:00 AM PDT குரங்கு ஒன்று அசிங்கத்தை தொட்டு விட்டு.. அதை தன்னிச்சையாக கையைத் தன்மீதே துடைத்து கொண்டது. அதன் துர்நாற்றம் தாங்க முடியாது அந்த இடம் விட்டே ஒடி.. மணம் வீசும் மலர்த்தோட்டத்துக்கு சென்றது.. அங்கும் துர்நாற்றம் தொடர.. செய்வதறியாது தவித்தது..! அது எங்கு சென்று ஒளிந்தாலும். தானே பூசி கொண்ட துர்நாற்றத்தில் தப்பமுடியாது. இதுபோல கோபம்.., பொறாமை.., சந்தேகம் போன்ற குணங்களை வளர்த்தவர்கள் சொர்கத்தில் வைத்தாலும் வேதனையில் அவர்களாலேயே விடுபட முடியாது!!! Relaxplzz ![]() |
Posted: 11 Oct 2014 03:50 AM PDT |
Posted: 11 Oct 2014 03:40 AM PDT |
Posted: 11 Oct 2014 03:30 AM PDT |
Posted: 11 Oct 2014 03:15 AM PDT வீதிகளில் உலவும் நாய் ஒன்றும் , வீட்டில் சகல மரியாதைகளுடன் வளர்க்க பட்ட நாய் ஒன்றும் சந்தித்தன . வீதி நாய் : ஏண்டா ! நீ இப்படி சும்மா தின்னுட்டு, குடிச்சுட்டு சும்மாவே இருக்கியே. இதெல்லாம் ஒரு பொழப்பா?.ஏண்டா இப்படி இருக்க? வீட்டு நாய் : நான் ஒன்றும் உன்னை போல் அல்ல . ஒரு உயரிய லட்சியத்திற்காக தான் இங்க இருக்கேன் வீதி நாய் : என்னடா அது ? வீட்டு நாய் : இந்த வீட்டு பொண்ணு ஒரு பையனை விரும்புரா. வீதி நாய் : அதனால் உனக்கு என்னடா ? வீட்டு நாய் : அந்த விஷயம் அவ அப்பாக்கு தெரிந்து விட்டது வீதி நாய் : அதுக்கு நீ என்னடா செய்ய முடியும் ? வீட்டு நாய் : அவ அப்பா அவ கிட்ட "உன்ன ஒரு நாய்க்கு கட்டி வச்சாலும் வைப்பேன் ஆனால் இவனுக்கு மட்டும் கட்டி வைக்க மாட்டேன்"னு சொன்னாரு அதுக்காக தான் எல்லாத்தையும் பொருத்து கிட்டு காத்துகிட்டு இருக்கேன்... :O :O Relaxplzz |
Posted: 11 Oct 2014 03:00 AM PDT அவசியம் நண்பர்களுக்கு பகிரவும்:- மாரடைப்பு ஏற்பட்டால்... செய்ய வேண்டிய முதல் உதவி...! யாரோ நம்முடைய மார்புப் பகுதியை அழுத்துவதுபோன்றகடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்பாகக்கூடஇருக்கலாம். * 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால்,அது மைனர் ஹார்ட் அட்டாக். * 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது சிவியர் ஹார்ட் அட்டாக். * இதில் எந்த வகையாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. * மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரை ரத்தம் உறைதலைத் தடுப்-பதுடன், கட்டிப்போன ரத்தத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும். * மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேரம் ஆகும் என்றால், அவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளிக்கலாம். * மாரடைப்பின் போது, இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும். Relaxplzz ![]() |
Posted: 11 Oct 2014 02:50 AM PDT |
Posted: 11 Oct 2014 02:40 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment