Saturday, 11 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


ஆண்களை எப்போதெல்லாம் பெண்கள் ரசிப்பார்கள் தெரியுமா?? தெரிஞ்சுகோங்க காற்றில் களைய...

Posted: 11 Oct 2014 06:18 AM PDT

ஆண்களை எப்போதெல்லாம்
பெண்கள் ரசிப்பார்கள்
தெரியுமா?? தெரிஞ்சுகோங்க
காற்றில் களையும் கூந்தலை
வெறும் கைகளால்
கோதிகொள்ளும்போத
ு ரசிப்பார்கள்.
சீவிய தலைமுடியை
கலைக்கும்போதும் ரசிப்போம்.
வச்ச கண்ணு வாங்காம நம்மல
பாத்துட்டு
பாக்காத மாதிரி நடிக்கும்
நடிப்பை ரசிப்போம்.
சிக்னல்ல நிக்கும்போது பைக்
கண்ணாடியில்
தன்னை பாத்துகொள்ளும்ப
ோதும் ரசிப்போம்.
வளந்து வளராத
அரும்பு மீசையை
முறுக்கி பார்க்கையில்
ரசிப்போம்.
டி.வி ரிமொட்டுகாக
தங்கையோடு சண்டைபோடும்போது
ரசிப்போம்.
சிரிப்பை அடக்கிக்கொண்டு
கோவமாய் பேசுவதுபோல்
நடிக்கையில் ரசிப்போம்.
சிரித்துக்கொண்ட
ே செல்போன்னை பார்க்கும்போது ரசிப்போம்.
புருவம்
உயர்த்தி கேள்வி கேட்கும்
போது ரசிப்போம்.
இரண்டு நாள் கிளீன் ஷேவ்
பண்ணாத தாடியை ரசிப்போம்.
குழந்தையின் காதில் ரகசியம்
பேசுகையில் ரசிப்போம்.
நண்பர்களோடு சிரிச்சுபேசும்ப
ோது ரசிப்போம்.
கடந்து செல்லும்போது நம்மை ஓரக்கண்ணால்
பார்க்கையில் ரசிப்போம்.
கவிதை சொல்ல
நினைத்து வார்த்தை வராமல்
தவிக்கையில் ரசிப்போம்.
கைபிடிச்சு கண்
பார்த்து பேசும்போது ரசிப்போம்.
ஐஸ் கிரீம், சாக்லேட்
நமக்கு வாங்கி தரும்போது
வம்பு பண்ணி பதிய
சாப்ட்டு தரும்போது ரசிப்போம்.
பைக்ல போகைல நம்ம அவங்க
தோள்ல
கைபோட்டுகுவோமானு பைக்
கண்ணாடில பாக்கும்
போது ரசிப்போம்.
வேட்டி கட்டி அதிலயும் அத
மடிச்சு கட்டி
நடந்து வரும் தோரணைய
பாத்து ரசிப்போம்.
நாள் முழுக்க போன் பேசிட்டு
போன்ன வைக்க போறப்ப
போன்ன வைக்க
மனசே இல்லன்னு சொல்லுரப்போ ரசிப்போம்.
பொண்ணுக எப்பலாம் பசங்கள
ரசிக்கிரோம்ன்னு
சொல்லிட்டேன்...
இத
படிச்சுட்டு ஏதாவது ஒரு பொண்ண
உங்கள ரசிக்க வைக்க
டிரை பண்ணிட்டு
அந்த பொண்ணு உங்கள
ரசிக்கலேனா அதுக்கு நான்
பொறுப்பில்ல..
- நந்தமீனாள

தற்போதைய தமிழகச் சூழலில் நடிகர் ரஜினிக்கு உகந்தது... 1) தனிக்கட்சி தொடங்குவது 2...

Posted: 11 Oct 2014 05:00 AM PDT

தற்போதைய தமிழகச் சூழலில் நடிகர் ரஜினிக்கு உகந்தது...

1) தனிக்கட்சி தொடங்குவது
2) பாஜகவில் இணைவது
3) அரசியலை தவிர்ப்பது

காலை உணவை தவிர்க்காதீர்கள்!! நமதூரில் பெரும்பாலும் சிலர் காலை உணவை பெரிதும் தவி...

Posted: 11 Oct 2014 01:40 AM PDT

காலை உணவை தவிர்க்காதீர்கள்!!

நமதூரில் பெரும்பாலும் சிலர் காலை உணவை பெரிதும் தவிர்த்துக் கொள்கின்றனர். குறிப்பாக பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தான்.

இதற்க்கு காரணம் பள்ளிகூடத்திற்கு நேரமாகிவிட்டது என்று கூறுகின்றனர்.காலை உணவை தவிர்ப்பதினால் பெரிய பாதிப்புகள் ஏற்படுகிறது .

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும்.

பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

காலை உணவு மிகவும் முக்கியமானது நமது ஆரோக்கியத்திற்கு.ஆகையால் காலை உணவை தவிர்க்காதீர்கள்.

தகவல் : ஆபிதீன் DEE


அருமையான கருத்து... ஒரு இருபது வருடத்திற்கு முன் ஒரு ஆங்கில படம் ஒன்றை பார்த்தே...

Posted: 11 Oct 2014 12:20 AM PDT

அருமையான கருத்து...

ஒரு இருபது வருடத்திற்கு முன் ஒரு ஆங்கில படம் ஒன்றை பார்த்தேன்.

அதில் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் கார் வந்து நிற்கும். அதிலிருந்து ஒருவர் கோட் சூட்டுடன் இறங்குவார். நேராக டாய்லெட் இருக்கும் இடத்திற்கு சென்று மாற்று அறையில் அவருடைய சீருடையை எடுத்து அணிந்து கொள்வார். பிறகு தான் தெரியும் அவர் கழிப்பறையை சுத்தம் செய்பவர் என்று. அழகாக சுத்தம் செய்து முடித்த பிறகு மீண்டும் மாற்று அறைக்கு சென்று மறுபடியும் கோட் சூட்டிருக்கு மாறி ஸ்டைலாக ஒரு ரேபான் கண்ணாடியையும் மாட்டி கொண்டு ஹீரோ போல் வெளியே வருவார்.
What he is doing is his profession otherwise he is one among us. என்ற பாணியில் அப்போதே காட்டியிருப்பார்கள். நிஜத்தை தானே நிழலில் காட்டுகிறார்கள். அன்றைய சூழலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அப்போதே அந்த படம் ஒரு நான்கு ஐந்து வருடம் கழித்து தான் பார்த்தேன். நம் நாட்டில் இது எப்போதாவது நடக்குமா என்று அப்போது நினைத்து கொண்டேன். ஒரு கால் நூற்றாண்டு கடந்து விட்டது இன்னும் நம் தூய்மை பணியாளர்கள் மேலே வந்த பாடில்லை.

தூய்மை பணியை professional அந்தஸ்த்துக்கு உயர்த்த வேண்டும். அவர்களையும் நாம் மனிதர்களாக மதிக்க கற்று கொள்ள வேண்டும். அடுத்த நடவடிக்கை அவர்களுடைய தொழிலுக்கு ஒரு அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும்.
இவர்கள் சமுதாயத்தில் டாக்டர்கள். ஒரு டாக்டர் நம் உடலின் உள்ளே கிருமி இருந்தால் அதை சுத்த படுத்துகிறார். இவர்கள் நம் உடலுக்குள் அந்த கிருமிகள் சென்று விடாமல் சுத்த படுத்துகிறார்கள். இருவருக்கும் உள்ள வேற்றுமை அவ்வளவு தான்.

ரெண்டுமே புனிதமானது.

அன்பார்ந்த face book நண்பர்களுக்கு சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் Network-...

Posted: 10 Oct 2014 11:00 PM PDT

அன்பார்ந்த face book
நண்பர்களுக்கு
சமீபகாலமாக நாம்
உபயோகிக்கும் மொபைல்
Network- ன் net Pack
ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB 30
நாட்கள் கிடைத்தது,
பின்பு ரூ.80
க்கு விலையை உயர்த்தி MBயை 900
MB யாக குறைக்கப்பட்டது
இதுவும் 30
நாட்ளுக்கு ரீச்சார்ஜின்
விலை நாளுக்கு நாள்
கம்பெனியாளர்கள்
உயர்த்தி இன்றைய விலை ரூ.128
க்கு 1GB-2G 28 நாட்களாக,
பின்பு இன்னும்
காலாவரி நாட்கள்
குறைக்கப்பட்டது, ரூ.128
க்கு கிடைத்த 3G 30நாள் netpack
ரூ.198 க்கு 1GB- 3G -28 நாட்கள்
இப்படியாக கம்பெனிகாரர்கள்
விலையை மாற்றிக்கொண்டே இருக்கக்
காரணம் இன்டர்நெட் Internet
நம்முடைய அன்றாட தேவையாக
இருப்பதால்தான், இன்றைய
காலகட்டத்தில் நாம் அனைவரும்
Smart Phone ஸ்மார்ட் போன்
பயன்படுத்துகிறோம்
ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக்
மூலமாக
தனது வருமானத்தை பெருக்கிக்கொண்ட
து. இவர்களுக்கு தெரியும் நாம்
ஒரு போதும்
இதை எதிர்த்து குரல் எழுப்ப
மாட்டோம் என்று. ஆனால்
அது உண்மையல்ல நாம்
இந்தியர் அனைவரும்
ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம்,
வரும் 31 OCT 31 அக்டோபர்
அன்று MOBILE DATA CONNECTION.
DISABLE மொபைல் டேட்டா OFF
செய்து எதிர்ப்பை வெளியிடுவோம்,
31 அக்டோபர் அன்று கர்நாடகம்,
ஆந்திரம், கேரளம், மஹா ராஷ்ட்ரா,
ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப்,
ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப்
பிரதேசம் என
அனைத்து மாநிலங்கலிலும்
இந்தச்
செய்தி மொழிபெயர்ப்புடன்
அனுப்ப பட்டுள்ளது,
ஆகவே 31oct internet
உபயோகிக்க வேண்டாம், இந்தத்
தகவலை எல்லோருக்கும்
FARWARD செய்யவும்.
வெளி நாடுகளில்
இதே போலதான்
எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்,
நமக்கென்ன
போனது என்று இந்த தகவலை
Ignore (நிறாகரிப்பு) செய்ய
வேண்டாம், நாம் நம்
ஒற்றுமையை வெளிகாட்ட
எத்தனையோ முறை முயர்ச்சித்திரு
க்கிறோம் ஆனால்
இம்முறை ஒற்றுமை காண்போம்,
காட்டுவோம். Please farward to all
ur facebook contacts

அக்டோபர் 11: சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று. வேறெந்த ஒன்றாலும் ஈடுசெய்யமுடி...

Posted: 10 Oct 2014 08:07 PM PDT

அக்டோபர் 11: சர்வதேச பெண்
குழந்தைகள் தினம் இன்று.
வேறெந்த ஒன்றாலும்
ஈடுசெய்யமுடியாத கல்விச்
செல்வத்தை, பெண்
குழந்தைகளுக்கு தடையில்லாமல்
கொடுக்க இந்நாளில்
உறுதியேற்போம்.


Female ல் male இருக்கு Woman ல் man இருக்கு She ல் he இருக்கு அடடா... . Mrs ல் M...

Posted: 10 Oct 2014 09:48 AM PDT

Female ல் male இருக்கு
Woman ல் man இருக்கு
She ல் he இருக்கு
அடடா...
.
Mrs ல் Mr ம் இருக்கார்!
கிராமம் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். வறுமை அவர்களை வாட்டியது. ஒரு நாள் அந்த மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தார் . வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.
அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவர் ; அவரைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றார் . அதற்கு அவர் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றார் .

எதிரேயொருவர் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தார் . அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவரிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டார்.
போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரர் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டார்.
கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் அவரைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய் - ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய் - கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்;
அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றார்.
அதற்கு கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என் மனைவியை அறிவேன், என்றார்.

தான் சொல்வதுதான் நடக்கும் என்றார் பக்கத்து வீட்டுக்காரர் . நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் கணவன் அவரது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.
அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான்.
அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து "அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அன்பொழுகக் கேட்டாள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி.

பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான். மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?' என்று கேட்டான்.
''அப்படியொன்றுமில்லை.என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் தைரியத்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த கணவன்.

0 comments:

Post a Comment