Relax Please: FB page daily Posts |
- அரசியல்வாதி என்றால் அதற்கான இலக்கணங்கள் வேறு. பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்,...
- அழகு
- வாவ்... சூப்பர் :P
- :)
- பொண்டாட்டிக்கு ஐ-போன் வாங்கி தர்றது மேட்டர் இல்ல பாஸ்... அது நமக்கு ஸ்பை போனா ம...
- மீண்டும் வந்து விட்டது மண்பாண்ட உணவுகள்!! நான் நேற்று கோவை சென்றிருந்தபோது ஒரு...
- ராஜாவின் குடும்பம்
- ஜூஸ் குடுச்சவங்க எல்லாம் வாந்தி எடுங்கப்பா... ஜாமீன் கேன்சலாம்... உண்ணாவிரதம் கண...
- :)
- இந்த அஞ்சு விதிகள பாலோ பண்ணுனா வீட்டு சாப்பாடு ஒரு அருமையான விஷயம்... . 1) என்ன...
- சில ஊர்களின் முழுமையான & மிக பழைய‌ பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக....
- :P
- <3 இனிப்பை ருசிக்க நினைக்கும்போதெல்லாம்.. உன் பெயரைத்தான் சொல்லிக் கொள்கிறேன்....
- :)
- நகைச்சுவை: IT கணவனும் மனைவியும் வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: H...
- ஓடி போகும் பிள்ளைகளே ஒரு நிமிஷம் கேளுங்களேன் (ஒரு தாயின் குமுறல் ) ஓடிப் போகாதீங...
- மாலை வேளைக்கு வடையுடன் காப்பி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :)
- காலை வைத்துக் கண்டுபிடி **************************************** புதிதாகக் கல்லூ...
- "தாயுமானவன் என் தந்தை" 1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில்...
- கருணை என்பது ஒரு மொழி அதை செவிடர்களும் கேட்க முடியும் குருடர்களும் பார்க்க முடிய...
- :)
- தலையில் பெரிய கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தார் நம்ம நாராயணசாமி. "தலையில ஏன் கட்...
- கண் கெட்ட பின்னால் சூர்ய நமஷ்காரம் செய்து என்ன பயன், அத்ற்க்கு முன் கண்ணை பாதுகா...
- !! ஜாமீன் மனு தள்ளுபடி - அதிகாரபூர்வ செய்தி !! #கடல்லேயே_இல்லையாம் !
- இங்கே ஜகுவாரும் தோற்றுபோகும், பி.எம்.டபிள்யு'வும் பின்னோக்கி செல்லும்.. ஞாபகம்...
- :)
- காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை... காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை... கையை...
- இத சொன்னா என்னைய கேனையன்னு சொல்றனுங்க ;-) 1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்...
Posted: 07 Oct 2014 09:00 AM PDT அரசியல்வாதி என்றால் அதற்கான இலக்கணங்கள் வேறு. பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய், பிரிக்க படாத பாம்பாய் மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அப் போது அவருடைய மகள் இந்து மருத்துவ கல்லூரியில் இறுதி தேர்வு எழுதினாள், முதல் வகுப்பில் தேற வேண்டிய அவள் தேர்வில் தவறி விட்டதாக அறிவிக்க பட்டது. சக மானவியரால் இதை நம்ப முடியவில்லை. மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கிமாறு வற்புறுத்தினர். மகள் தந்தையிடம் அனுமதி கேட்கும் பொது அனுமதி கிடைக்க வில்லை. 'மறு மதிப்பீடு செய்து திருத்திய ஆசிரியரின் தவறு கண்டுபிடிக்க பட்டு நீ தேர்ச்சி பெற்றாலும் நான் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவே உலகம் பழி சொல்லும். அதனால் நீ அடுத்த தேர்வுக்கு தயாராவதே நல்லது' என்றார் மொரார்ஜி. இதனால் மனமுடைந்த இந்து தற்கொலை செய்து கொண்டாள். மகளின் இழப்பை மௌனமாக தாங்கிகொண்டார். பாரதத்தின் பிரதமராக, நிதி அமைச்சராக, மாநில முதல்வராக பணியாற்றிய தேசாய், இறுதி நாட்களில் பலர் வாழும் அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் இருந்தார். வீட்டின் உரிமையாளர் தொடுத்த வழக்கின் காரணமாக தேசாய் குடும்பம் வெளியேற வேண்டும் என்று நீதி மன்றம் தீர்பளித்தது. அதிர்ச்சியிலும் அவமானத்திலும் உறைந்து போன மொரர்ஜியின் மருமகள் மனநிலை பாதிக்க பட்டு மாடியில் இருந்து குதித்து மரணத்தை தழுவி கொண்டார். இந்திய பிரதமராக இருந்தவருக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லையென்பது இதிகாச செய்தியன்று. கண் முன்னே நாம் கண்ட நிஜம். என்ன செய்ய???// மொரார்ஜி தேசாய் போல் இத்தனை கடுமையான நிலைப்பாடு தேவையில்லை. சுய நலமற்ற மக்கள் சேவையோடு, சரியான திட்டமிடுதலோடு வாழ்வைக் கொண்டு சென்றால் எளிமையும் இனிமையுமாய் இப்புவியில் வாழ்ந்திட முடியும்.. ஆனால் பொதுச்சேவை என்றாலே லஞ்சமும், ஊழலும்தான் என்று மன நோய் பீடித்து அலைகிறார்களே... இவர்கள் போகும் காலத்தில் குண்டூசியையாவது உடன் எடுத்துப் போக முடியுமா என்ன? பின்னே எதற்காக இத்தனை ஆட்டம்? - Chidambaranathan Rengasamy Relaxplzz ![]() |
Posted: 07 Oct 2014 08:50 AM PDT |
வாவ்... சூப்பர் :P Posted: 07 Oct 2014 08:40 AM PDT |
Posted: 07 Oct 2014 08:30 AM PDT |
Posted: 07 Oct 2014 08:15 AM PDT பொண்டாட்டிக்கு ஐ-போன் வாங்கி தர்றது மேட்டர் இல்ல பாஸ்... அது நமக்கு ஸ்பை போனா மாறிட்டு இருக்கு...!! எப்படின்னு தெரியுமா...??? லீவுக்கு அம்மா வீட்டுக்கு போயிருந்த Wife காலைல போன் பண்ணினா... " நைட் ஏன் போன் பண்ணல..?! " " ரொம்ப டயர்ட்டா இருந்துச்சின்னு தூங்கிட்டேன்..!! " " அப்ப ஏன் Whatsapp-ல Last Seen 1.28 A.M-னு காட்டிச்சு..!! " " ஙே...!!!! பீ கேர்புல்.. ( நான் என்னைய சொன்னேன்..!!! ) :P :P Relaxplzz |
Posted: 07 Oct 2014 08:00 AM PDT |
Posted: 07 Oct 2014 07:51 AM PDT |
Posted: 07 Oct 2014 07:40 AM PDT ஜூஸ் குடுச்சவங்க எல்லாம் வாந்தி எடுங்கப்பா... ஜாமீன் கேன்சலாம்... உண்ணாவிரதம் கண்டினியூ - சதீஷ் குமார் தேவகோட்டை. 18 ஆண்டுகளாக இந்திய நீதித்துறையை ஜெயலலிதா கற்பழித்துள்ளார். இது போல ஒரு வழக்கை இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் இழுத்தடித்தது கிடையாது. வழக்கறிஞரின் மாமனாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதையெல்லாம் காரணம் காட்டி வாய்தா கேட்டனர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு, இவ்வழக்கின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பச்சாபுராவை கதற வைத்தனர். மனம் நொந்த அவர், கடந்த ஆறு மாதங்களாக இவ்வழக்கில் ஒரு முன்னேற்றமும் இல்லை. நான் இந்த நீதிமன்றத்தில் தனியாக எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்திருக்கிறேன். ஏறக்குறைய தனிமைச் சிறையில் இருப்பது போல உணர்கிறேன் என்று அவர் மனம் நொந்து புலம்பினார். அடுத்ததாக இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா மீது கர்நாடக லோக் ஆயுக்தாவில் பொய்யான ஒரு வழக்கை தாக்கல் செய்து, அவரை மனம் நோகச் செய்து, ராஜினாமா செய்ய வைத்தனர். 60 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவருக்கு 66 கோடி ரூபாய் எப்படி வந்தது என்ற மிக மிக எளிமையான வழக்கு இது. ஆனால், 18 வருடங்களாக இந்த வழக்கை இழுத்தடிக்க ஒரு அரசியல்வாதியால் முடிகிறது என்பது, இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு." #அப்பாவித்தமிழன் பணம்கொடுத்து அதிமுகவினர் போராட்டம், உண்ணாவிரதம் நடத்துகின்றனர் - விஜயகாந்த். #ஆமா கேப்டன்... காலையில எந்திரிச்சி 'உண்ணாவிரத வேலைக்கு' போறேன்னு சொல்லிட்டு போறாங்க... அதாவது ஒரு மறைமுக 'வேலை வாய்ப்பை'யே உருவாக்கிருக்காங்க.. - பிரகாசம் பழனி. |
Posted: 07 Oct 2014 07:32 AM PDT |
Posted: 07 Oct 2014 07:17 AM PDT இந்த அஞ்சு விதிகள பாலோ பண்ணுனா வீட்டு சாப்பாடு ஒரு அருமையான விஷயம்... . 1) என்ன சமையல் ன்னு கேக்க கூடாது..இருக்குறத கொட்டிகிட்டு போன்னு திட்டு விழ வாயிப்பு இருக்கு . 2)உப்பு காரம்..ஏதும் இல்லைன்னாலும் ..வெக்க படாம சூப்பரா இருக்குன்னு சொல்லணும்..இல்லாட்டி அடுத்த வேல சாப்பாட்டுக்கு தெருவுல நிக்கிற மாதிரி ஆயிடும்.. . 3)சாப்புடுரப்ப அம்மா சாப்பாடு ஞாபகம் வர கூடாது...வாய உட்டு ..கிடைகிறதும் கிடைக்காம போகலாம்.. . 4)இது தான் செய்யனும்னு சொல்ல கூடாது அவங்களால என்ன முடியுமோ..அத செஞ்சு வைப்பாங்க சத்தம் போடாம சாப்புடனும்... . 5 )இதுதான் முக்கியமானது...ஒரு வேல.. சாப்பாடு புடிக்கலைன்னா ..வேற வழியே இல்ல கண்ணுல தண்ணி வந்தாலும் சகிச்சுகிட்டு எடுத்து உள்ள உட்டுறனும். Relaxplzz ![]() குசும்பு... 3 |
Posted: 07 Oct 2014 06:59 AM PDT சில ஊர்களின் முழுமையான & மிக பழைய பெயர்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்காக. தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு என்று தற்போது வழங்கப்படுகிறது எருமையூர் என்ற தமிழ் பெயர் தான் இன்று மைசூர் என்று அழைக்கப்படுகிறது ,எருமை என்பதை வடமொழியில் மகிசம் என்று சொல்வார்கள்.எனவே தமிழ் பெயரை எடுத்துவிட்டு மகிசூர் என்று மாற்றி பின்னது அது மைசூர் என்றானது குவளாலபுரம் என்பதே மாறுபாடு அடைந்து கோலார்(தங்க வயல்) என்று அழைக்கப்படுகிறது உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க அதன் தொடக்க கால பெயர் என்ன தெரியுமா? ஒத்தை கால் மண்டபம்,ஒத்தை கால் மாந்தை இந்த பெயர்தான் உதகமண்டலம் என்று மாறியுள்ளது ஒகேநக்கலின் உண்மையான பெயர் உகுநீர்க்கல்,புகைநற்கல் என்பதேயாகும் விருதாச்சலம்(வடமொழி) என்ற ஊரின் உண்மையான பெயர் முதுகுன்றம்(தமிழ்) என்பதே வேதாரண்யம் என்ற ஊரின் உண்மையான பெயர் ""திருமறைக்காடு"" வேதாரண்யம் என்பது தமிழ் சொல் அல்ல தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே ,இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார் கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்" ஆகும் பாண்டிபசார் என்பதன் உண்மையான பெயர் "சவுந்தரபாண்டியனார் அங்காடி" என்பதே .அய்யா சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது மதுரை என்பது மதிரை என்ற சொல்லில் இருந்து வந்தது மதி என்றால் நிலவு , பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள் அதான் மதுரை என்று பெயரிட்டனர், குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும் நீலகிரி என்னும் மலையில் இப்பொழுது குன்னூர் என வழங்குவது குன்றூரேயாகும் நெல்லை நாட்டில் பொதிய மலைத் தொடரின் அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் ஒன்று, சிவசைலம் என்று பெயர் பெற்றுள்ளது. வானமா மலை என்னும் நாங்குனேரிக்குத் தோத்தாத்திரி என்ற வடமொழிப் பெயரும் உண்டு. தமிழ்நாட்டில் ஆர்க்காடும், ஆலங்காடும், வேற்காடும், களங்காடும், பிற காடுகளும் இருந்தன என்பது ஊர்ப் பெயர்களால் விளங்கும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும். ஆத்தி மாலை அணிந்த சோழ மன்னனை 'ஆரங்கண்ணிச் சோழன்' என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிக்கின்றது. அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது. மலையின் முடியைக் கோடு என்னும் சொல் குறிப்பதாகும். சேலம் நாட்டிலுள்ள திருச்செங்கோடு சாலப்பழமை வாய்ந்தது. "சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்" என்று சிலப்பதிகாரம் கூறுதலால் திருச்செங்கோடு முருகனுக்குரிய பழம் பதிகளுள் ஒன்றென்பது இனிது விளங்கும். செந்நிறம் வாய்ந்த மலையின் சிகரம் செங்கோடு என்று பெயர் பெற்றதென்பர் ஏர்க்காடு சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று அவ்வூருக்குப் பெயரிட்டார்கள். அது சிதைந்து ஏர்க்காடு என வழங்குகின்றது. திருகோணமலை இறையனார் களவியலுரையில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் கொலு வீற்றிருந்த காலத்தில் பாண்டியரின் தலைநகராக இருந்த 'கபாடபுரம்' என்று குறிக்கப் பெறுவது இன்றும் தமிழீழத்தில் உள்ள இயற்கைத் துறைமுக நகரான திருகோணமலைதான் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குடிதனைப் பெருக்கிக் கொடிதனை நெருக்கி வாழும் கோணமாமலை.... என்று தேவாரப் பாடல் திருகோண மலையைச் சிறப்பிப்பதும் இதை உறுதிப்படுத்தும். Relaxplzz ![]() "தெரிந்து கொள்வோம்" - 2 |
Posted: 07 Oct 2014 06:50 AM PDT |
Posted: 07 Oct 2014 06:40 AM PDT |
Posted: 07 Oct 2014 06:30 AM PDT |
Posted: 07 Oct 2014 06:15 AM PDT நகைச்சுவை: IT கணவனும் மனைவியும் வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in. மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா? கணவன்: no darling, the disk is full. மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா? கணவன்: Access not allowed. மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கினீங்களா? கணவன்: Bad command or file name மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க.... கணவன்: erroneous syntext மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க....நான் வான்கிக்கிறேன். கணவன்: access denied மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது? கணவன்: wrong password மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன் கணவன்: data mismatch மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது கணவன்: by default மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய் கணவன்: virus detedted மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா? கணவன்: too many parameters மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி கணவன்: press contl, alt & del மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன். கணவன்: illegal operation, system shuts down மனைவி: நான் தொலஞ்சு போறன். கணவன்: reboot மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரியும் கணவன்: change user :P :P Relaxplzz |
Posted: 07 Oct 2014 05:57 AM PDT ஓடி போகும் பிள்ளைகளே ஒரு நிமிஷம் கேளுங்களேன் (ஒரு தாயின் குமுறல் ) ஓடிப் போகாதீங்க... காலேஜு போன மக காணாம போயி ட்டாளே கடுதாசி எழுதி வச்சு காதலனோட போயிட்டாளே , பாத்து பாத்து வளர்த்த மக பாதியில போயிட்டாளே கொல்லாம ஏ உசுர கொன்னுபுட்டு போயிட்டாளே ... சந்தையில நிக்கவைச்சு சாதிசனம் ஏசுதே கலங்காத என் ஐய்யனாரு கண்ணீரோட நிக்குதே படுபாவி எங்க போன ,என் பாவிமக எங்க போன பெத்தெடுத்த பாவத்துக்கா சொல்லாம கொள்ளாம ஓடி போன ? காலுல முள்ளு குத்தி கிழிச்சாலும் உழைச்செனே உங் -கலியாண காசு சேக்க கா வயிறா கெடந்தேனே ! உங்கப்பன்கிட்ட உதவாங்கி காலேஜு சேத்தேனே ... நீ காதலிச்சு ஒடுவன்னு கனாக்கூட காணலியே .... பட்டணத்து புள்ள மாதிரி பந்தாவா நீ போக பட்டிக்காட்டு பொம்பள நான் பாத்து பாத்து பூத்தேனே .... பட்ட வலி மறக்குமே பருவமக உன் சிரிப்புல இப்ப பட்டமரம் ஆயிபுட்டேன் பாவி மக உன் நடப்புல .... மொரட்டு மாப்பிள்ளையும் மூத்தவள வெரட்டிபுட்டான் மூணாவது தங்கச்சியும் மூலையில ஒதுங்கிப் புட்டா , எப்படி நான் கர சேப்பேன் ஏ..மாரியாத்தா வழிகாட்டு ஏ மக மேல பட்ட கறையகாலபோக்கில் நீ மாத்து.. பிடிவாதம் பிடுச்சிருந்தால் பிடிச்சவனோட சேத்திருப்பேன் புரியாம போயிட்டாயே..ஏம் மனச புண்ணாக்கி போயிட்டாயே.... உன்னபத்தி நினச்சயே உடன்பிறப்ப நினைச்சயா? நீ படிக்க பாடுபட்ட,அவ பாசவலி ,மறந்தயா ? வாழ்வெல்லாம் கஷ்டப்பட்ட அவளுக்கு இனி வாழ்க்கை கிடைக்குமா ? உன் ஓடுகாலி தனத்துக்கு குடும்பம் மொத்தம் இரையாகுமா? உன்ன நினச்சு அழுவேனா ?உன் சிறுச நினைச்சு அழுவேனா ? ஏம் புள்ள இப்படி செஞ்ச ...என ஏமாத்தி தள்ளி நின்ன ... தலையெல்லாம் வலிக்குதே என் தலைஎழுத்து வாழ்க்கையே தாறுமாறா கிடக்குதே ...என் செல்ல மக அவ சீரோட இருப்பாளோ ,சிரிப்போடு இருப்பாளோ ? சின்னா பின்னமாகி சிதைஞ்சு தான் போவாளோ ... தட்டிகேக்க ஆளு இல்லாம தடுமாறி போவாளோ ? நான் இல்லாம எம்புள்ள நடுங்கித்தான் போவாளோ ? மெத்த பிடுச்ச மாமியாரு மகளாட்டம் நடத்துவாளோ ? இல்ல ,மேனியெல்லாம் வதங்க வேல வெட்டி தருவாளோ ? ஏ குலசாமி காப்பாத்து ...என் குழந்தைய காப்பாத்து... பக்கத்து வீட்டு வசந்தாக்காபலதடவ சொன்னாலே நம்பாம இருந்தேனே ,என் நம்பிக்கையில் மண்ணபோட்டா .. ஒருதடவ சொல்லி இருந்தா அவனப்பத்தி விசாரிச்சுருப்பேன் ... இப்படி கண்டத எண்ணி கவலைப்பட்டு கிடக்க மாட்டேன் ... கொன்னு புட்டு போயிருந்தா நிம்மதியா போயிருப்பேன் , கொத்துயிரும் கொளுயிருமா கிடக்கவச்சு போயிட்டயே... பிறக்கும் போது தந்தது எல்லாம் வலியே இல்ல இப்ப நீ தந்த வலி அதவிட அதிகமடி எல்லாத்தையும் சொல்ற மக ஏண்டீ இத சொல்லல , இந்த அம்மா நினைப்பு அப்ப உனக்கு எப்புடி புள்ள வரல ... உன்ன ஒழுங்கா வளக்கலன்னு ஊரு சனம் பேசுது .. உன்னையும் என்னையும் பத்தி கூசாம கூவுது .... உன்ன தட்டி கேக்க முடியாம பாசம் வந்து தடுக்குது ... பசி பொறுக்காத பச்ச மக சாப்பிட்டையோனு நெஞ்சுக்குள்ள தவிக்குது .... சமுதாயம் மாறலையே ....சாதிசனம் மாறலையே .... காதலுக்கு எதிரியில்ல கலியாணத்த தடுப்பவயில்ல ... நான் பாத்து செஞ்சுவச்சா .,நகநட்டு போட்டுருப்பேன் .... நீ பாத்து செஞ்சுகிட்ட என்னடி உனக்கு நான் செய்வேன் ? ஓடி போகும் பிள்ளைகளே ஒரு நிமிஷம் கேளுங்களேன் ,,, உங்க தாய்முகத்த பாத்தாவது ,முடிவ கொஞ்சம் மாத்துங்களேன் ..... உங்கள நல்ல படியா வளத்தவங்க நம்பிக்கைய கொல்லாதீங்க..... நாலு பேரு மதிக்கும் படி நல்ல வாழ்க்கை தருவாங்க ...... காசு பணம் போயிருந்தா கஷ்டப்பட்டு சேத்திருப்பேன் .... என் கன்னுகுட்டி போயிடுச்சே ...எங்க போய் நான் பாப்பேன் .....? Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 2 |
Posted: 07 Oct 2014 05:45 AM PDT |
Posted: 07 Oct 2014 05:30 AM PDT |
Posted: 07 Oct 2014 05:15 AM PDT காலை வைத்துக் கண்டுபிடி **************************************** புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான். மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன. தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன். பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார். ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன். பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான். அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார். "அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான். தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான். Relaxplzz |
Posted: 07 Oct 2014 04:59 AM PDT "தாயுமானவன் என் தந்தை" 1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, அடிக்கடி தூக்கத்தில் அழுவேன், சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார். 2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார். 3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார். 4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார். 5.இருபத்தி நான்கு வயதில் என் திருமணத்தில், மாப்பிள்ளை வீட்டார் என்ற முருக்குடன் இருந்தவர்கள் முன், தன் தன்மானத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார். 6.எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார். 7.எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார். இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது. என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி தியாகம் செய்த தாயுமானவன் என் தந்தை! -ஆதிரா. Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 1 |
Posted: 07 Oct 2014 04:45 AM PDT |
Posted: 07 Oct 2014 04:30 AM PDT |
Posted: 07 Oct 2014 04:15 AM PDT தலையில் பெரிய கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தார் நம்ம நாராயணசாமி. "தலையில ஏன் கட்டு போட்டுருக்கீங்க?" "என் மனைவி வாழைப்பழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா டாக்டர்" "அதுக்கு உங்க மனைவிதானெ கட்டுபோடணும்... நீங்க ஏன் போட்டுருக்கீங்க?" "அவள் கீழ விழுந்ததைப் பார்த்து கொஞ்சம் சத்தமா சிரிச்சிட்டேன் டாக்டர்" :O :O Relaxplzz |
Posted: 07 Oct 2014 04:01 AM PDT கண் கெட்ட பின்னால் சூர்ய நமஷ்காரம் செய்து என்ன பயன், அத்ற்க்கு முன் கண்ணை பாதுகாக்க என்ன வழி என்று பாருங்கள்.... அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும். கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது. கண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அந்தக் கண்ணுக்கு, நாம் ஏதாவது நல்லது செய்கிறோமா? இல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மட்டும் தான், கண்ணைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். அதற்கு சில ஆலோசனைகள்: * காலையில், சூரிய உதயத்துக்கு முன், எழுந்து கொள்ளுங்கள். வாய் நிறைய தண்ணீரை நிரப்பி, கண்களை இறுக்கி மூடிக் கொள்ளுங்கள். 15 நிமிடத்திற்கு, கைகளால் தண்ணீரை, கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். தண்ணீர், சூடாகவும் இருக்கக் கூடாது; குளிர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. * வெயிலில் அதிக நேரம் நின்றிருந்த பிறகு, உடனே கண்களைக் கழுவக் கூடாது. நீங்கள் நிற்கும் இடத்தின் வெப்ப நிலைக்கேற்ப, உடல் ஆசுவாசப்பட்ட பிறகே, கண்ணையும், முகத்தையும், தண்ணீரால் கழுவலாம். * தூரத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்கும் பொருட்டு, அதிக நேரம் அதை உற்றுப் பார்க்காதீர்கள். கண்களுக்குத் தேவை யான அளவு, கண் சிமிட்டுவது அவசியம். * கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று நோக்கக் கூடாது. * அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும். * இரவு அதிக நேரம் கண் விழித்திருத்தல், சூரிய உதயத்துக்குப் பின்னும் தூங்கிக் கிடத்தல் ஆகியவை, கண்ணுக்கு ஊறு விளைவிக்கும். * தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம். * கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில், நாளொன்றுக்கு 10 முறை அசைத்து, பயிற்சி செய்தால், கண் தெளிவாக இருக்கும். 10 முறை, கண்ணைச் சுழற்றவும் வேண்டும். * கண்ணுக்கு அதிகம் வேலை கொடுக்கும் சமயங்களில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும், இடையில், ஐந்து நிமிடம், உள்ளங்கையால், இரு கண்ணையும் மூடியபடி அமர்ந்து, கண்ணுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். * ஒரு ஸ்பூன் திரிபலா சூர்ணத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். காலையில், தண்ணீரை வடிகட்டி எடுத்து, அந்தத் தண்ணீர் மூலம் கண்ணைக் கழுவினால், கண் பிரகாசமாக இருக்கும். * குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகி யவை, கண்ணையும் பதம் பார்க்கக் கூடியவை. எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும். * கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றை, உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், கண் பார்வை, தெளிவாக இருக்கும். கண்ணுக்கு மையழகு! * பன்னீரில், விளக்கெண்ணெயை கலந்து, பஞ்சில் தோய்த்து, கண் மீது வைத்து, 15 நிமிடம் ஊற வேண்டும். கண் எரிச்சல் மறையும். * வடிகட்டிய டீ தண்ணீரில், பஞ்சைத் தோய்த்து கண்ணில் வைத்தாலும், கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்படும். * கரிசலாங்கண்ணிக் கீரையில் தயாரித்த மை, கண்ணுக்கு, அழகும், குளிர்ச்சியும் சேர்க்கும். * கண்ணை மூடியபடி, வெள்ளரிச் சாறால், கண்ணைக் கழுவலாம்; பஞ்சில் தோய்த்தும், 10 நிமிடம் கண் மீது வைத்துக் கொள்ளலாம். கண்ணுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். * தக்காளிச் சதை, மஞ்சள் பொடி, எலுமிச்சை சாறு, கடலை மாவு ஆகியவற்றை, பசை போல கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள கரு வளையத்தின் மீது பரப்பி, இரண்டு மணி நேரம் ஊறலாம். தூங்கும் நேரத்தில் செய்தால், உங்களுக்கு வசதி. வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வர, கரு வளையம் மறையும். Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 2 |
Posted: 07 Oct 2014 03:58 AM PDT !! ஜாமீன் மனு தள்ளுபடி - அதிகாரபூர்வ செய்தி !! #கடல்லேயே_இல்லையாம் ! |
Posted: 07 Oct 2014 03:45 AM PDT |
Posted: 07 Oct 2014 03:30 AM PDT |
Posted: 07 Oct 2014 03:15 AM PDT காதலியுங்க அது ஒன்னும் தப்பு இல்லை... காதலுக்காக காத்திருங்க தப்பு இல்லை... கையை அறுத்துக்குங்க அதுவும் தப்பு இல்லை.... ஏன் தற்கொலை கூட பண்ணிக்குங்க அது கூட தப்பில்லை.... ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க தகுதியானவங்களா இருக்கணும்...! தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக நீங்க உங்களை வருத்திக்கிறதும் காத்திருக்கிறதும் முட்டாள் தனம்.. அந்த முட்டாள் தனத்த ஒரு போதும் பண்ணாதிங்க... ஒருத்தர்கொருத்தர் அனுசரிச்சு போகலன்னா அந்த காதலே அர்த்தமற்றதாகி விடும். அது ஒரு தலை காதலா கூட மாறிடும். பரஸ்பரம் ரெண்டுபேருக்கும் பிடிச்சிருந்தா தான் காதல்... ஒருத்தங்களுக்கு பிடிச்சிருந்தா அது வெறும் நேசம் நேசத்தை காதல்ன்னு நினைச்சு நீங்களே குழப்பிங்காதிங்க. நேசத்தை காதல்ன்னு நினைச்சு கற்பனை வானில் சிறகடிச்சுப் பறக்காம நடைமுறைக்கு சாத்தியமானதான்னு எதார்த்தமா சிந்திச்சுப் பாருங்க. உங்களை பிடிக்காதவங்களுக்காக உங்கள நீங்கள் வருத்தி வாழுறத விட உங்கள பிடிச்சவங்களுக்காக உங்க தனித்துவத்தோட வாழ்ந்து பாருங்க அதுதான் வாழ்க்கையின் சந்தோஷம்...! அனுபவத்தில் உணர்ந்து கொண்டது.. Relaxplzz |
Posted: 07 Oct 2014 03:03 AM PDT இத சொன்னா என்னைய கேனையன்னு சொல்றனுங்க ;-) 1.சினிமாக் கூத்தாடிகளை கடவுளெனக் கொண்டாடும் தமிழன் இருக்கும்வரை ஒருகோடி ஆண்டுகளானாலும் இச்சமூகம் உருப்படப்போவதில்லை. 2.உங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா? கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா ரிஜக்ட் ஆகிடும்.. 3.ஓட்ஸ் சாப்பிட்டா உடம்பு குறையுதாம், எனக்கென்னமோ ஓட்ஸ் தான் குறையர மாதிரி இருக்கு 4.மனைவி எவ்வளவுதான் திட்டி கழுவி கழுவி ஊத்துனாலும், அசையாம கல்லு மாதிரி கணவன் இருப்பதால்தான், "கல்லானாலும் கணவன்"னு சொல்றாங்க 5.டாஸ்மாக்கை நடத்தும் அரசு விவசாயத்தையும் ஏற்று நடத்தலாம்.. 6.ரெண்டு வீலுக்கும் MRF டயர் போட்டாலும்... பிரேக் புடிச்சாதான் வண்டி நிற்கும்!! 7.படிச்ச ஃபார்முலா, தியரம் எல்லாம் பார்க்கிற உத்தியோகத்துல யூஸ் பண்ணனும்'னா வாத்தியார் வேலைக்கு தான் போகணும் 8.படைப்பை விமர்சிக்க படைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, சிறந்த ரசனையாளனாய் இருந்தால் போதும். - களவாணிபய. Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 3 |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment