Facebook Tamil pesum Sangam: FB page posts |
- அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணம்! பெண் என்னும் தேவதை! கருவில் அரும்பி உருவம...
- "எதுக்கும் பயப்படாதீங்க!” டிராஃபிக் ராமசாமி... 'அட, அவருக்கு வேற வேலை இல்லைப்ப...
- உதவுங்கள் நண்பர்களே!! குடந்தையில், அரசு மருத்துவமனையில் உள்ள நண்பரின் மனைவிக்கு...
- ஈசியா டீ போடுவது எப்படி ?? எல்லாரும் ரெடியா??
- ஜூஸா… பழமா? எது நல்லது? ‘பாட்டில் டிரிங்க்கா? வேண்டவே வேண்டாம். அதுக்கு ஜூஸா கு...
- பிறரின் மனைவியை பார்க்கும் போது, குருடனாக இருங்கள்... தேவையில்லாத விஷயங்களை பேச...
- வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!! கடும் குளிர் காலத்தில் நம் மூக்கி...
- தயவுசெய்து பகிருங்கள் யாருக்கேனும் பயன்படலாம்...! # Ashiq Ali
- ஓர் ஆதங்கம் ! மீசை வைத்தவன் எல்லாம் சரித்திரம் படைத்தவன் என்றால் வெள்ளையனைஅட...
- அழவே தெரியாதபோது இறையவனிடம் இணைந்த அம்மாவுக்கு, உங்கள் அன்பிற்காய் ஆர்ப்பரிக்கு...
- ஆணும் , பெண்ணும் தனக்கு வர போறவங்க எப்படி இருக்கணும் என்று தான் நினைப்பாங்களே தவ...
- எத்தனை முறை தோற்றாலும் ஜெயித்தே தீரவேண்டும் என்ற வெறி நமக்கு கேம்(Game) இல் மட்ட...
- இனி மனிதனை மிருகத்தனமானவன் என்று திட்டாதீர்கள் பிறகு மிருகத்திர்க்கு தான் அவமானம...
- பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று..: சிறப்பு பகிர்வு * இனம் காட்டும் நிறம்...
- உழைப்பு உயர்வு தரும் என்றால் விவசாயிகள் அனைவருமே இப்போது எட்டடுக்கு மாளிகையில் இ...
- 01/10/2014! இன்று சர்வதேச சிறுவர்/முதியோர் தினம்.. சிறுவர்களுக்கு வாழ்த்து சொல்...
- அற்புதமான 5 தத்துவம்....! 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால்...
- நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போதும் தான் ... இல்லாதவற்றையும் இழந்தவ...
- மனிதத்தின்... புனிதம் பல நேரங்களில் .. மிருகங்களால் மண்ணில் ... புதைக்கப்படுவதுண...
- செவ்வாய் கிரகத்துக்கு வண்டி விட்டிங்களே.! இந்த பிள்ளைகளுக்கு ஒரு வண்டி விடக்கூட...
- வேலை இல்லைன்னா இப்படித்தான் மூளை பிதுங்கிகிட்டு வரும்..
- அரபு நாடுகள் வியந்து ஒரு பெண்மணியை பார்க்கின்றன. அப்பெண் மேஜர் மரியம் அல் மன்சூர...
- குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? 1. வருமானம் 2. ஒத்துழைப்பு 3. மனித நேயம் 4. பொழ...
- படியுங்கள்! அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்கை...
- அன்பு நண்பர்களே ... . ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து தேவையற்ற விவாதங்கள...
- டெல்லியில் புலி தாக்கி இறந்த அந்த வாட்ஸ் அப் காணொளியை பார்த்த பிறகு, இரவு தூக்கம...
Posted: 07 Oct 2014 07:00 AM PDT அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணம்! பெண் என்னும் தேவதை! கருவில் அரும்பி உருவம் தரித்து பருவம் அடையுமுன் பலப்பல பக்குவங்கள்... பதறாமல் பெறுபவள்...! அரும்பும் மலராய் அழகாய் மணம்வீசி அன்பின் ஆழத்தை அனைவரிடமும் காட்டி வலம் வருகின்ற வண்ணத் தேர்...! எதையும் இயன்றவரை எடுத்துச் செய்திடும் உறுதியான உள்ளத்துடன் உலகை வலம் வரும் உன்னத படைப்பு...! அகத்தில் அன்புடனும் புறத்தில் பண்புடனும் பெண்மைக்கு உண்மையுடனும் பிரமிக்கும் திறமையுடனும் பிரகாசிக்கும் சுடர்...! பொறுமைக்கு இலக்கணமாய் புனிதத்திற்கு பொருத்தமாய் அடக்கம் அறிந்தவளாய் அகங்காரம் தொலைத்தவளாய் அன்பிற்கு பணிபவள்...! ஆயிரம் அலுவல் செய்தும் அலுக்காத அன்னையுள்ளம்... அன்பாய் ஓர் வார்த்தைக்காய் அடை காக்கும் பெண்ணுள்ளம் பெண் என்னும் தேவதை! ![]() |
Posted: 07 Oct 2014 05:02 AM PDT "எதுக்கும் பயப்படாதீங்க!" டிராஃபிக் ராமசாமி... 'அட, அவருக்கு வேற வேலை இல்லைப்பா... சும்மா எதுனா கேஸ் போட்டுட்டே இருப்பார்!' என அலுத்துக்கொள்வார்கள் சிலர். ஆனால், அந்த ஒரு நபரின் முனைப்புதான், தாதுமணல் கொள்ளை விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தைத் தலையிடவைத்து, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒட்டுமொத்த வில்லங்கத்தையும் மீண்டும் விசாரிக்க வைத்திருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஆரம்ப நாட்களில் விறுவிறுக்கவைத்து, இப்போது இறுதிக்கட்டத்தை எட்டவைத்திருக்கிறது. சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இவர் தொடர்ந்த வழக்குதான், தலைநகரில் விதிமீறல் கட்டடங்களுக்குக் கடிவாளம் போட்டது. நோக்கு வர்மம், களறி சண்டை என சட்டத்தைக் கையில் எடுக்காமல், சட்டரீதியாகப் போராடும் இந்தத் 'தமிழன்' தாத்தாவுக்கு வயது 82. என்னைச் சுத்தி ஏதோ ஒரு விஷயம் சரியில்லைனா, நான்தானே அதைச் சரி செய்யணும். 'என் வீட்டுக்கு வெளியே என்ன நடந்தா எனக்கு என்ன'னு போக முடியுமா? காந்திஜி அப்படி நினைச்சிருந்தா, இப்போ நான், நீங்கள்லாம் இப்படி சுதந்திரமா உலாத்திட்டு இருக்க முடியுமா? இதே சென்னையில்தான் நான் பிறந்தேன்; வளர்ந்தேன். அப்போ எல்லாம் இந்த ஊர் எப்படி இருக்கும் தெரியுமா? பொதுமக்களும் அரசாங்க ஊழியர்களும் எவ்வளவு பொறுப்போடு இருப்பாங்க தெரியுமா? பின்னி மில்லில் வேலை பார்த்தேன். ஓய்வுக்குப் பின்னாடி ஊர்க்காவல் படையில் சேர்ந்தேன். தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையைத் தொடங்கினதே நான்தான். இப்போ அது போலீஸுக்கு கமிஷன் வசூலிச்சுத் தரும் அமைப்பா மாறிடுச்சு. மனைவி, ஒரே பொண்ணு. பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நான் போடும் பொதுநல வழக்குகளால் என் குடும்பத்துக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். வீட்டுக்கே வந்து மிரட்டுவார்கள்; அடிப்பார்கள். அதனால் என் மனைவி பயந்தார். குடும்பமா, சமூகமானு யோசிச்சப்ப, சமூகம்தான் முக்கியம்னு முடிவு எடுத்தேன். இப்போ 12 வருஷமா ஒரு மாடி ரூம்ல தங்கித்தான் என் வேலைகளைப் பார்த்துட்டு இருக்கேன். காலை, மதியம், இரவு... மூணு வேளையும் காபி, மோர், இவைதான் எனக்கு நீர், ஆகாரம் எல்லாம். ரெண்டையும் மாத்தி மாத்திக் குடிச்சுப்பேன். தாம்பரத்தைத் தாண்டினா மட்டும், காலையில் ரெண்டு இட்லி சாப்பிடுவேன். மூணு வேளை சாப்பிட்டு, பல வருஷங்கள் ஆச்சு. ஒருவேளை சாப்பாட்டு மேல ஆசையில்லாம போனாத்தான், சமூகம் மேல அக்கறை வருமோ என்னவோ!'' ''பயப்படாதீங்க. எதுவா இருந்தாலும் விடாப்பிடியா எதிர்த்து நில்லுங்க. எதிர்ப்புகள் விலகிப்போகும். சொந்த இழப்புகளைச் சந்திக்க தயாரா இருங்க. எதிராளி பெரிய ஆளா இருந்தா, அஞ்சி ஒதுங்கிடாதீங்க. நியாயம் நம் பக்கம் இருக்குனு துணிஞ்சு இறங்குங்க. இதுக்கெல்லாம் தயாரா இருந்தா, யார் வேணும்னாலும் சமுதாயப் பணி செய்ய வரலாம்!'' ![]() |
Posted: 06 Oct 2014 10:08 AM PDT உதவுங்கள் நண்பர்களே!! குடந்தையில், அரசு மருத்துவமனையில் உள்ள நண்பரின் மனைவிக்கு பிரசவத்திற்கு O NEGATIVE ரத்தம் தேவை படுகிறது தாங்களுக்கு தெறிந்தவர் யாராவது O NEGATIVE BLOOD இருந்தால் உதவுங்கள் தொடர்புக்கு 8344313670. 9750581637 |
Posted: 06 Oct 2014 09:50 AM PDT |
Posted: 05 Oct 2014 07:30 AM PDT ஜூஸா… பழமா? எது நல்லது? 'பாட்டில் டிரிங்க்கா? வேண்டவே வேண்டாம். அதுக்கு ஜூஸா குடிக்கலாம்' என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள். இன்றைக்கு அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல பெருகி வருகின்றன ஜூஸ் கடைகள். சிறு நகரங்கள் தொடங்கி, மாநகரம் வரை ஜூஸ் வியாபாரம் சக்கை போடு போடுகிறது. ஜூஸ் நல்லதா? நல்லது. அதைவிடப் பழம் நல்லது! 'எந்தப் பழமாக இருந்தாலும் ஃப்ரெஷ்ஷாக, அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியம். குறிப்பாக, ப்ளூபெர்ரி, திராட்சை, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை அப்படியே சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புக் குறையும். ஆனால் அதையே நீங்கள் ஜூஸாகக் குடித்தால் எதிர்மறையான விளைவுகள் வந்து சேரும்' என்கிறது ஒரு புதிய ஆய்வு முடிவு. இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அமெரிக்காவில் இதற்கான ஆய்வை நடத்தினார்கள். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பலரிடம் நடந்தது ஆய்வு. இந்த ஆய்வில் 1,87,000 பேர் கலந்து கொண்டார்கள். டாக்டர்கள், நர்ஸ், பிற துறைகளில் பணிபுரிவோர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். அவர்களுடைய உடல் ஆரோக்கியம் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் கண்காணிக்கப்பட்டது. அவர்களுடைய உணவுப் பழக்கம், உடல் எடை, புகைப்பிடிக்கும் பழக்கம், உடல் உழைப்பு, வாழ்வியல் முறை சார்ந்த நடவடிக்கைகள் உள்பட அனைத்தும் கேள்விகளாகக் கேட்கப்பட்டன. அதற்கு ஆய்வில் கலந்து கொண்டவர்கள் சொன்ன பதில்களின் அடிப்படையில் குறிப்புகள் தயாராயின. விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வின்போது, 6.5 சதவிகிதம் தன்னார்வலர்கள், நீரிழிவு நோய்த் தாக்குதலில் இருந்து தப்பித்தார்கள். அவர்களுக்கு வாரத்துக்கு இருமுறை ஆப்பிள், ப்ளூபெர்ரி, திராட்சை உள்ளிட்ட பழங்கள் கொடுக்கப்பட்டன. மாதத்துக்கு ஒருமுறைக்கும் குறைவாக பழங்களை சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடும்போது, இவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைந்த அளவில் (23%) இருந்தது. ''சில பழங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும் தன்மை இருக்கிறது. இதை எங்கள் ஆய்வு நிரூபித்திருக்கிறது'' என்று குறிப்பிட்டிருக்கிறார் 'ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்' நிறுவனத்தில் நியூட்ரிஷியன் துறை பேராசிரியராகப் பணியாற்றும் குய் சன் (Qi Sun). அதே நேரம், பழங்களை ஜூஸாக தினமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை குடித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 21 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 'பழங்களை சாப்பிடுவதற்கும் ஜூஸ் ஆக குடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஒன்று திரவம் மற்றொன்று திடப் பொருள். அவ்வளவுதான். திடப் பொருளை விட, திரவம் வெகு வேகமாக வயிற்றுக்குள் சென்றுவிடும். அதாவது, அந்த வேகம் குளுகோஸையும் இன்சுலினையும் ரத்தத்தில் உடனே கலக்கச் செய்து, பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். பழங்களை அப்படியே சாப்பிடும் போது, மெதுவாக வயிற்றுக்குள் செல்வதால் அந்த பிரச்னை இல்லை. சத்தும் முழுமையாகக் கிடைக்கிறது' என்கிறது அந்த ஆய்வு. ![]() |
Posted: 05 Oct 2014 06:40 AM PDT |
Posted: 05 Oct 2014 05:24 AM PDT |
Posted: 05 Oct 2014 05:07 AM PDT வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!! கடும் குளிர் காலத்தில் நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரக் கூடும். மூக்கு அடைபடும்; தொண்டை கட்டும். இந்தச் சமயத்தில் இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனைகள் உடனடியாகச் சரியாகும். வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறுகிறது. இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும். டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெரும்பாலான பெண்களையும், சில ஆண்களையும் பருக்கள் படாத பாடு படுத்தும். எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால்தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன. இந்தப் பருக்களை விரட்ட தொடர்ந்து வெந்நீரைக் குடித்து வாருங்கள். பருக்கள் அகலும்; முகமும் பொலிவடையும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும். நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் வெந்நீரில் கரைந்து விடும். இரத்த ஓட்டத்தைப் போலவே குடல் இயக்கமும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். மலச் சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான சுடுநீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும். இன்றைய காலக்கட்டத்தில் அதிக உடல் எடை என்பது பெரும்பாலானவர்களுக்கு சர்வ சாதாரணமாக ஏற்படும் ஒரு குறையாகும். தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான் சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து, எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும். மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். மெதுவாகவே வயதாகும். - அறிவியல் ![]() |
Posted: 03 Oct 2014 05:30 AM PDT |
Posted: 03 Oct 2014 04:30 AM PDT ஓர் ஆதங்கம் ! மீசை வைத்தவன் எல்லாம் சரித்திரம் படைத்தவன் என்றால் வெள்ளையனைஅடித்து வெளியேற்றிய சுதந்திர போராட்ட வீரனை என்ன சொல்வது மக்களுக்காக தன்னை தியாகம் செய்யும் சமுக சேவகர்களை என்ன சொல்வது மனதில் சுதந்திர தாகம் வைத்து கண்ணில் ஒரு ஏக்கம் கொண்டு பாட்டில் பாட்டாளி மக்களை ஒன்று திரட்டி உணர்ச்சியால் பல பாரதிகளை உருவாக்கி ஈன்ற சுதந்திரம் ... இன்று வலுயிழந்திருக்க உன் பாட்டை கூட திக்கு திசை எங்கும் ஒலிக்கவில்லை என்று எமக்கு ஒரு ஆதங்கமாயிற்றே ! via - கண்ணன் ![]() |
Posted: 03 Oct 2014 02:38 AM PDT அழவே தெரியாதபோது இறையவனிடம் இணைந்த அம்மாவுக்கு, உங்கள் அன்பிற்காய் ஆர்ப்பரிக்கும் புத்திரன் புனைவது, ஏழெட்டு வயதிருக்கும். எனக்கொன்றும் தெரியாது. நினைவற்று நீண்டிருந்த உங்கள் நாளிகைகளின் மூச்சு திடீரென நிற்க, நீங்களும் நிரந்தரமாய் எனை விட்டு விரைந்து விட்டீர்கள். அன்றிரவு.. மூன்றாம் சாமம். விழிக்கத் தெரியாத நான் புரண்டிருந்தேன்.. திடீரெனவோர் அழுகுரல்.. சகோதரிகளுள் சகோதரமானவள்.. நீங்கள் பிரிந்ததாய் கண்ணீர் சொறிந்தாள். புரிந்துகொள்ள முடியவில்லை என்னால்... வீடு முழுவதும் பௌர்ணமிகள் தோன்றியிருந்தன. அங்குமிங்கும் அண்ணார்ந்தேன். காணவில்லை தந்தையை.. ஏன்... என் சந்தோஷங்களையும் தான்.. காண முடிந்தது சில முகங்களைத்தான். தூக்கத்திலிருந்து விழித்த எனக்கு முளிப்பத்தை தவிர வேறேதும் தெரியவில்லை. விடியும் வரை வேலைகள் விரைவாகின. விடிந்தது... மையத்து வீடு (மரண வீடு).. அம்மா.. நம் வீடு மையத்து வீடு. மரணித்தது... மரணித்தது நீயாம். அப்போதும் புரிந்துகொள்ள முடியவில்லை என்னால். மூன்று நாட்களுக்கு முன் வெறிச்சோடி வெளியே போன நீ வந்தாய். வீட்டைச் சுற்றி முகங்கள். அவரவரை பற்றியபடி அகம்வரை அழுகைகள். அங்கே அப்பா... இங்கே அக்கா... எங்கும் சொந்தங்கள்... நானோ... நடப்பது புரியாமல் நடமாடினேன். இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை! நீ மண்ணுள் செல்லும் வரை மகன் நான் நான் மலர்ந்தும் மனம் அதுவரை புரிந்துகொள்ள முடியவில்லையம்மா...! நேரம் தவறாமல் நேரம் தொடர... கத்தங்களும்.., அதன் சத்தங்களும்.., நீ இல்லாத யுத்தங்களும்.., கண்ணீர் ரத்தங்களும்.., தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. இதுவரையுமே புரிந்துகொள்ள முடியவில்லை என்னால்..! ஒரு சொட்டும் கண்ணீர் இல்லை. கவலை இல்லை. ஏதோ ஒரு உணர்வு. ஆனால், என்ன செய்வது எதுவும் புரியவில்லை. கபடமற்று காலக் கோலத்தை வைத்த கண் வாங்காமல் தாங்கினேன். அப்போது... அப்படியே இருந்துவிட்டேன்... ஏனெனில்... என்ன நடக்கிறது. புரிந்துகொள்ள முடியவில்லை என்னால்... இப்போது... இப்படியே இர்தயம் இறக்கிறது... ஏனெனில்... புரிகிறது. இப்போது புரிகிறது. விம்முகிறேன். தினம் தினம் விம்முகிறேன். நினைவுகலேன்று சொல்லவும் எதுவும் நிட்கவில்லையம்மா.. இப்போது... நீ வேண்டும்... ஆம்... நீதான் வேண்டுமம்மா... வரமாட்டாயா? எவ்வளவு துன்பங்கள். எவ்வளவு அழுகைகள். எவ்வளவு கவலைகள். அழுகைகள் ஆழ் மனக்கடலில் அடைத்து வைத்து அடக்கி வைத்து... மனம் சுழல்கிறது சுனாமியாய்... இப்போதெல்லாம்... எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடிகிறது. சிரித்து விளையாடி சிறகு விரித்த காலமெல்லாம் நீ என்னுடனேயே இருந்தாய். இவ்வளவு கவலைகளின் போது மட்டும் ஏன் அம்மா நீ இல்லை? அனைத்து நண்பர்களும் அன்னையுடன் அன்பைக் கொஞ்சும் போது நான் மட்டும்... தனிப் பிரபஞ்சமொன்ரில் தவிப்பது போலுள்ளதம்மா..! இப்போது நீ வேண்டும்... ஆம்... நீதான் வேண்டுமம்மா... வரமாட்டாயா?? மடியில் சாய்ந்து என் சோகம் சொல்லியழ ஒரு சொந்தம் இல்லையம்மா... என் சோகங்களையெல்லாம் உன்னிடம் சொல்லியழ வேண்டுமம்மா... உன் மடியில் சாய்ந்து சுகம் பெற வேண்டுமம்மா... தலை கோதும் உன் கரத்தை காண வேண்டுமம்மா... இப்போது நீ வேண்டும்... ஆம்... நீதான் வேண்டுமம்மா... வரமாட்டாயா?? இனிமேல் நீ வரமாட்டாய். என்பது தெரிந்தும் தாங்க முடியவில்லையம்மா... என்னால்... பாசத்திட்காய் என்ன செய்வது எதுவும் புரியவில்லையம்மா... தாயே...! உன் பாசத்திற்காய் தவிக்கின்றேன். துடிக்கின்றேன். தாயே...! இனி நீயாய் யார் எனக்கு? உனக்காய் உன் பாசத்திட்காய் அழுகையுடன் அல்லலுறுகிறது காலங்கள். எழுத்துக்கும் உணர்வுக்கும் சொந்தக்காரன் - இவன் என் அன்பு நண்பர் Mohomed Winsar (29-11-2009) (வெளிநாடு செல்லும்போது இவர் எனக்காய் விட்டு சென்ற அவரின் நினைவான சொந்த உணர்வுகளைக் கக்கும் கவிதை நூலில் இருந்து..) -அனஸ் அப்பாஸ். ![]() |
Posted: 03 Oct 2014 01:35 AM PDT |
Posted: 01 Oct 2014 10:00 PM PDT |
Posted: 01 Oct 2014 07:30 PM PDT |
Posted: 01 Oct 2014 07:10 PM PDT பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று..: சிறப்பு பகிர்வு * இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்! * 'இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங ்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்! * நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்க ு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்! * தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்! * மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்! * இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்! * மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்! * தான் முதலமைச்சரானபோத ு தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்! * தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்! * 'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்! * விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்ட ாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர். * கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது! * ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்! * இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2- ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்! ![]() |
Posted: 01 Oct 2014 08:38 AM PDT |
Posted: 30 Sep 2014 10:55 PM PDT 01/10/2014! இன்று சர்வதேச சிறுவர்/முதியோர் தினம்.. சிறுவர்களுக்கு வாழ்த்து சொல்லும் பலர் ஏன் இன்று முதியோர் தினமும் கூட என்பதனை மறந்து விட்டீர் ? வாழ்வின் அர்த்தங்களையும் நிதர்சனங்களையும் நமக்கு ஊட்டிய அந்த முதுசம்களுக்கு எமது பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கத்தின் மனமார்ந்த (வாழ்த்த வயதில்லை, இருந்தாலும்) வாழ்த்துக்கள்..... உயிர் தந்த தந்தைக்கும் உணர்வு தந்த தாய்க்கும் உலகத்தில் நீ தருகின்ற உன்னதங்கள் என்னென்ன? உடம்பு சரியில்லாமல் ஒவ்வொரு முறை நீ தவித்த போதும் உன்னைவிட தவித்தவள் உன் தாயல்லவா? உடல் சுருக்கி நீ வயிற்பிடித்துக் குமட்டுகையில் நீ எடுக்கும் வாந்தியை சற்றும் முகசுழிப்பின்றி ஏந்திப் பிடித்தவள் உன் தாயல்லவா? மருத்துவர் உனக்குப் போட்ட ஒரே ஊசிக்காக ஓராயிரம் முறைகள் உன் புட்டத்தைத் தடவிக் கொடுத்தது உயிர் கொடுத்த உன் தந்தையல்லவா? உன் ஒருவேளை உணவுக்காகப் பகலிரவின்றி வேலைபார்த்து பொருளுக்காய் அலைந்து தினம் உழைத்தவர் உன் தந்தையல்லவா? ஒவ்வொரு முறை உனக்கு ஊட்டிய உணவு போக மீந்ததை உணவாகக் கொண்டு வாழ்ந்தவள் உன் தாயல்லவா? உன்னுடைய படிப்புக்காகப் பத்துவட்டிக்கும் தயங்காமல் கடன் வாங்கி உன்னைக் கனவானாக்கியது உன் தந்தையல்லவா? உனக்கான ஒரு வாழ்வை உருவாக்கிக் கொடுத்து விட்டு தனக்காக எதுவுமின்றித் தடுமாறித் தவிப்பவர் உன் தந்தையல்லவா? உனக்காக இல்லம் கட்ட உழைத்த காசு பத்தாமல் பகுதி நேர உழைப்புக்கும் பண்புடன் சென்றவர் உன் தந்தையல்லவா? உலகத்தில் எல்லாமே நீயென்று வாழ்ந்தவர்கள் கடைசியில் வாழ்வதற்கு நீ காட்டிய இடம் முதியோர் இல்லமல்லவா? (எனையீன்ற தாய்க்கும் , உயிர் கொடுத்த தந்தைக்கும் இப்படைப்பு சமர்ப்பணம்!) ![]() |
Posted: 30 Sep 2014 10:29 PM PDT அற்புதமான 5 தத்துவம்....! 1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா? 2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான். 3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது. 4.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை. 5.என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகனும் .... இதுதான் வாழ்க்கை. |
Posted: 30 Sep 2014 02:22 AM PDT |
Posted: 30 Sep 2014 12:26 AM PDT மனிதத்தின்... புனிதம் பல நேரங்களில் .. மிருகங்களால் மண்ணில் ... புதைக்கப்படுவதுண்டு...! புதைகுழிகளின்... விளிம்பில் நாங்கள்.. விதியை நினைத்து.. விஷமத்தில் அழுகிறோம்..! புதை படாமல் இருக்க... இப்புவிதனிலெமக்கு... புண்ணியம் செய்பவர்.. உண்டோ என்று..! இருட்டுகளில் .. இருண்ட .. இறுதியாத்திரையை.. எதிர்நோக்கி...! மனிதம்... மண்ணறைக்குள்... மறையும் முன்... மனிதாபிமானாய்..எமை.. காப்பவர் உண்டோ என்று..! via - இஸ்மாயில்.இ.பி ![]() |
Posted: 29 Sep 2014 07:00 PM PDT |
Posted: 29 Sep 2014 11:30 AM PDT |
Posted: 29 Sep 2014 10:30 AM PDT அரபு நாடுகள் வியந்து ஒரு பெண்மணியை பார்க்கின்றன. அப்பெண் மேஜர் மரியம் அல் மன்சூரி (y) ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விமானப்படை வீராங்கனையான இவர், போர் விமானங்களை அனாயசமாக செலுத்துவதில் வல்லவர். இவர் எமிரேட்ஸின் முதல் பெண் விமானி என்ற பெருமைக்குரியவர் ஆவார். 38 வயதான மரியம் சிரியாவின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய அரபு நாட்டுக் கூட்டுப் படை போர் விமானத்தை செலுத்திய வி்மானிகளில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #ஹிஜாப் மறைப்பது எங்கள் தலையைத்தான் அறிவை அல்ல... ![]() |
Posted: 29 Sep 2014 09:30 AM PDT |
Posted: 29 Sep 2014 08:00 AM PDT படியுங்கள்! அம்மா/மனைவி யிடம் சொல்லுங்கள் : பின்பற்றுங்கள்: ஆரோக்கியமான வாழ்க்கையை கையாளுங்கள் :) *சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது. *உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும். *வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும். *ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது. *காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும். காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. *பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும். *நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும். *காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும். *சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது. *சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும். *முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது. இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும். *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும். *தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும். ![]() |
Posted: 29 Sep 2014 06:30 AM PDT அன்பு நண்பர்களே ... . ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து தேவையற்ற விவாதங்கள் எதுவும் செய்யவண்டாம் ... . அது தொடர்பான படங்கள் கேலி சித்திரங்கள் எதையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் ... . சமீபத்திய தமிழ் நாடு அரசின் சைபர் கிரைம் சட்டத்தின் படி . ஜாமீனில் வெளி வரமுடியாத அளவுக்கு ... . குண்டர் சட்டத்தில் உள்ளே தூக்கி போட வாய்ப்புள்ளது ... . நண்பர்களே ... . உஷாராய் இருங்க ... ![]() |
Posted: 29 Sep 2014 05:00 AM PDT டெல்லியில் புலி தாக்கி இறந்த அந்த வாட்ஸ் அப் காணொளியை பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது... !!! .. மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும். .. அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன்...! என்னுள் எழும்பிய அந்த ஒரு கேள்வி ?? .. கற்றலினால் ஆன பயன் என்ன? .. எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம். எல்லாம் சரிதான். .. ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன? ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே.. .. ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே.. .. அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம். .. ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம். .. கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம். .. "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே." .. என்ற பாடலை காரணமேயில்லாமல், வக்கனையாய் மனப்பாடமாய் அறிந்து வைத்திருக்கிறோம். .. ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா? .. அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும். ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை. .. ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள். .. அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது. இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம். .. காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை. மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும். .. கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும். .. இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்? .. ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்? .. அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும். .. இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன? .. தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள். .. மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது? .. விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை? .. மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி? .. இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன? .. இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ஒரு ஆசிரியனாய் நான் வெட்கப்படுகிறேன் .. ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது. .. மெக்சூத்தே.. இளம் வாலிபனே- .. என்னை.. எங்களை மன்னித்து விடு..! மார்க் எவாங் லிஸ்ட்.. via - சாம் மகேந்திரன் ![]() |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment