Therinthu Kolvom: Tamil Facebook Wall posts |
- அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்... அம்மா சுட்டு வந்த தோச...
- தனியார் பள்ளி முதலாளிகள் ஊழல் அம்மாவை ஆதரித்து நாளை தங்கள் பள்ளிகளை (வியாபார கூட...
- என்னதான் விஞ்ஞானம் முன்னேறி விட்டது, கம்ப்யூட்டர் தவறு செய்யாது என்றெல்லாம் கூறி...
- தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ண...
- #இரக்கம் காட்டுபவன் : இளிச்சவாயன் #அக்கறை காட்டுபவன் : அதிகபிரசங்கி #மரியாதை த...
- #Farewell #Orkut
- அவசரம் பகிரவும்.. பெயர் : கரீம்பாஷா 8 யூனிட் O -ve (ஓ நெகட்டிவ்) இரத்தம் தேவை. இ...
- சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்... படம் 1...
- ஒ௫ ஐந்து நிமிடம் செலவிட்டு., தவறாம படிக்கவும்..... சில நாட்கள் ஏன்தான் உதிக்கிறத...
- பரிதாபமாக போன ஒரு மனித உயிர். மனித உயரைவிட புலி உயீர் பெருசு என்ற அர்த்தம் இந்த...
- ‘பெரும் புகழுக்குரியவர்கள்!’ “சிறந்ததோர் எதிர்காலத்தைச் சமைப்பதற்காகத் தற்போதைய...
- இன்றைய காலத்து சிறுவர்களின் நிலை....
- எச்சரிக்கை
- #சிரிக்க_மட்டும்
- அம்பானியை முந்திய அலிபாபா ஜாக் மா: ஐபிஓ எதிரோலி ஒரு சாதாரண ஆங்கில ஆசிரியரால்...
- இந்தியாவின் நிலை...
- படிப்பின் அருமை தெரிந்தவர்....
- Menu உலகம் மோடியின் அமெரிக்க வருகையை எதிர்த்து போராட்டம்: அணி திரளும் அமைப்புகள்...
Posted: 05 Oct 2014 10:04 PM PDT அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்... அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது. அப்பா : "நல்ல முறுகலா இருக்கே" என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா. அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள், மகள் : "அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?". அப்பா சொன்னார், "உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும், கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும். ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை". அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது. குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன. ![]() |
Posted: 05 Oct 2014 09:53 PM PDT தனியார் பள்ளி முதலாளிகள் ஊழல் அம்மாவை ஆதரித்து நாளை தங்கள் பள்ளிகளை (வியாபார கூடங்களை) மூடுகிறார்களாம். பிள்ளைகளுக்கு எப்படி இதை சொல்வார்கள்? 1. நமது நாட்டில் 66 கோடி மக்கள் பணத்தை மாநில முதல்வர் கொள்ளை அடித்தால் தவறில்லை. ஆனால் நீ பக்கத்தில் இருக்கும் நண்பனின் பென்சிலை திருடினால் தவறு. 2. நமது நாட்டில் நீதிமன்ற வழக்கை 18 வருடங்கள் இழுத்தடிக்கலாம். ஆனால் அதற்கு தண்டனை கொடுப்பது தவறு. வீட்டு பாடம் செய்யவில்லை என்றால் உடனடியாக தண்டனை கொடுப்போம். 3. நாங்கள் இப்பொழுது பள்ளி விடுமுறை விட்டு ஆதரவு காட்டினால் தான் நாளை நாங்கள் அடிக்கும் கொள்கைகளுக்கு அவர்கள் ஆதரவு அளிப்பார்கள். சின்ன பிள்ளைகள் ஏன் பள்ளி விடுமுறை என்று கேட்கும் போது வேறு எப்படி விளக்கம் சொல்வீர்கள்? உங்களிடம் தான் நாங்கள் எங்கள் வருங்கால சமுதாயத்தை அடகு வைத்துள்ளோம் என்று எண்ணி வெட்கி தலை குனிகின்றோம். இது போல ஒரு போராட்டம் நடத்துவதற்கு பதிலாக இந்த கொள்ளை கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் 4 முழம் கயிறு வாங்கி...... |
Posted: 05 Oct 2014 07:22 AM PDT என்னதான் விஞ்ஞானம் முன்னேறி விட்டது, கம்ப்யூட்டர் தவறு செய்யாது என்றெல்லாம் கூறிக் கொண்டாலும் ATM லிருந்து பணம் எடுத்ததும் அதை எண்ணிப் பார்க்காமல் பையில் வைத்துக் கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை..!!!! # நம்பிக்கை |
Posted: 04 Oct 2014 11:05 PM PDT |
Posted: 04 Oct 2014 10:59 PM PDT தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... தப்புங்க தப்பு,,, ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி... 2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்.... இதுவும் தப்பு சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ... . 3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்... இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை ) ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்....... 4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... சூடு அல்ல சுவடு... சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.... 5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்.... அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ... காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்... ![]() |
Posted: 02 Oct 2014 09:17 AM PDT |
Posted: 30 Sep 2014 09:57 PM PDT |
Posted: 30 Sep 2014 11:04 AM PDT |
Posted: 30 Sep 2014 10:42 AM PDT |
Posted: 29 Sep 2014 11:50 AM PDT |
Posted: 29 Sep 2014 11:03 AM PDT |
Posted: 29 Sep 2014 11:03 AM PDT சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்... படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று , கயிறு ஒன்றில் மாட்டி ,மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல் துடித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் காகம். படம் 2 : மாட்டி இருக்கும் அந்த கயிறை கண்டறிந்து அதை எப்படி மின்சார கம்பியில் படாமல் கழற்றலாம் என பார்க்கும் காகம் . படம் 3,4 : வழியை கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம். படம் 5 : காப்பாற்றியதும் , இரண்டும் சந்தோஷமாக பறக்கும் அற்புதமான காட்சி...! ![]() |
Posted: 29 Sep 2014 10:54 AM PDT ஒ௫ ஐந்து நிமிடம் செலவிட்டு., தவறாம படிக்கவும்..... சில நாட்கள் ஏன்தான் உதிக்கிறதோ என்று தோன்றும்.அந்த லிஸ்ட்டில் தான் கடந்த 23ம் தேதியும் சேர்ந்திருக்கிறது. .. எல்லாரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது டில்லி உயிரியல் பூங்கா.அந்த 15 நிமிட வீடியோ காட்சி நம் கண் முன்னேயே நிழலாடுகிறது. .. மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும். .. அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று முதலில் சொல்லப்பட்டது. .. இன்று, அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இரண்டு முறை அந்த வாலிபர் புலி இருக்கும் இடத்தில் குதிக்க முயற்சித்ததாகவும், ஆனால் பூங்கா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டார் என்றும், அதன் பின்னர் பாதுகாவலர்களின் கண்களை மறைத்து, அந்த வாலிபர் உள்ளே குதித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. .. இதில் பல்வேறு கேள்விகள் எழும்புகிறது. .. 1.மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றால் அவரோடு அவரது நண்பர்கள் எப்படி வந்தார்கள்? 2.மன நிலை பாதிக்கப்பட்டவர் பள்ளி சீருடை அணிந்திருந்தது ஏன்? 3.இரண்டு முறை கீழே குதிக்க இருந்த அந்த வாலிபனைத் தடுத்த பாதுகாவலர்கள், ஏன் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ அல்லது காவல்துறையிடமோ ஒப்படைக்க முன் வர வில்லை? 4.உடன் வந்த நண்பர்களும் ஏன் அவரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயற்சிக்கவில்லை? .. கேள்விகள்..கேள்விகள்..எங்கெங்கும் விடையில்லாக் கேள்விகள். .. சரி..இந்தக் கேள்விகளால் தான் என்ன பயன்? இந்தக் கேள்விகளுக்கு விடையளித்துவிட்டால் மட்டும் அந்த வாலிபன் மீண்டு வரப் போகிறாரா? .. இல்லை..இல்லவேயில்லை. .. ஆனால் இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது. .. அது – .. கற்றலினால் ஆன பயன் என்ன? .. எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம். எல்லாம் சரிதான். .. ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன? ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே.. ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே.. .. அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம். .. ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம். .. கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம். .. "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே." .. என்ற பாடலை காரணமேயில்லாமல், வக்கனையாய் மனப்பாடமாய் அறிந்து வைத்திருக்கிறோம். .. ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா? .. அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும். ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை. .. ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள். .. அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது. இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம். .. காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை. மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும். கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும். .. இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்? .. ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்? .. அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும். .. இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன? .. தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள். .. மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது? .. விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை? .. மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி? .. இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன? .. இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. ![]() |
Posted: 29 Sep 2014 06:18 AM PDT பரிதாபமாக போன ஒரு மனித உயிர். மனித உயரைவிட புலி உயீர் பெருசு என்ற அர்த்தம் இந்த சம்பவத்தை குறிக்கிறது. பூங்காவில் வெள்ளை புலி ஒன்று தான் உள்ளது,அதனால் சுட மறுத்துவிட்டனர் என்று சிலர் கூரகேட்கிறோம்(?) இதுவே ஒரு பிரபலமனவரோ,அல்லது அவருடைய மகனாக இருந்தால் இதுபோல் நடந்து இருக்குமா ?? மனிதாபிமானத்துடன் சிந்தித்து செயல்படுங்கள். (( மனிதர்களே விலங்குகளை துன்புறுத்தினால் அதன் விளைவு என்னவென்று வீடியோ பார்த்தவர்களுக்கு புரிந்து இருக்கும் )) ![]() |
Posted: 28 Sep 2014 10:33 AM PDT |
Posted: 28 Sep 2014 04:54 AM PDT 'பெரும் புகழுக்குரியவர்கள்!' "சிறந்ததோர் எதிர்காலத்தைச் சமைப்பதற்காகத் தற்போதைய இன்பங்களைத் தியாகம் செய்து இடையறாது செயல்படுங்கள். உங்களுடைய குறிக்கோளை அடையும்வரை, தீ போல் சுடும் துன்பங்களை ஏற்றுத் தியாகம் செய்ய முன் வாருங்கள். உங்களுடைய லட்சியத்தின் ஈடில்லா மேன்மையில் அழுத்தமான நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுடைய குறிக்கோள் உயர்ந்தது; விழுமியது; நீங்கள் மேற்கொண்டுள்ள பணி பெருமைக்குரியது. எந்த மக்களிடையே பிறந்தோமோ, அந்த மக்களுக்காகப் பணியாற்ற வேண்டியது நம் கடமை என்று விழிப்புணர்வு பெற்று, வீறுகொண்டு எழுந்தவர்கள் வாழத்துக்குரியவர்கள். தங்களுடைய நேரத்தை, திறமைகளை, மற்றுமுள்ள அனைத்தையும் அடிமை விலங்கை உடைப்பதற்காக அளிப்பவர்கள் பெருமைக்குரியவர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், தங்கள் மனித உரிமைகளைப் பெறும்வரை, பெருந்துன்பங்களுக்கும், அச்சுறுத்தும் ஆபத்துகளுக்கும் இடையில் செயலாற்றி – அடிமைப்படுத்தப்பட்டுக் கிடக்கும் மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுபவர்கள் பெரும் புகழுக்குரியவர்கள்!" - பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர். Thanks: www.mrpamaran.com ![]() |
Posted: 28 Sep 2014 04:50 AM PDT |
Posted: 27 Sep 2014 02:58 AM PDT |
Posted: 26 Sep 2014 09:31 PM PDT |
எச்சரிக்கை Posted: 26 Sep 2014 05:29 AM PDT |
#சிரிக்க_மட்டும் Posted: 26 Sep 2014 04:51 AM PDT |
Posted: 26 Sep 2014 04:18 AM PDT |
Posted: 25 Sep 2014 09:42 AM PDT அம்பானியை முந்திய அலிபாபா ஜாக் மா: ஐபிஓ எதிரோலி ஒரு சாதாரண ஆங்கில ஆசிரியரால் இதை செய்ய முடியுமா என்று யோசிக்கக் கூடிய விஷயத்தை செய்திருகிறார் ஜாக். இப்போது அந்த ஆங்கில ஆசிரியர் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரர்! சீனாவின் இ- காமர்ஸ் ஜாம்பவானான அலிபாபா ஐபிஓவில் வரலாறு படைத்ததோடு மட்டுமல்லாமல் அதன் நிறுவனர் ஜாக் மா'வை (வயது 50) ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காராக்கியுள்ளது! கடந்த வாரம் அலிபாபா நிறுவனம் ஐபிஓ வந்தது. பங்கு நியூயார்க் சந்தையில் பட்டியலிட்டப் போது ள் 38% உயர்ந்து $93.89 என முடிந்தது. இதன் மூலம் அலிபாபாவின் நிகர மதிப்பு 231 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது இதில் ஜாக் மாவின் பங்கு மட்டும் 26.5 பில்லியன் டாலர்கள்! புலூமேர்க் பில்லினியர்ஸ் தகவலின்படி $ 23.2 பில்லியன்களுடன் மூன்றாவதாக இருந்த இந்தியாவின் முகேஷ் அம்பானியையும், $ 25.1 பில்லியன்களுடன் இரண்டாவதாக இருந்த சீனாவின் லீ ஷா கீ'யையும் முந்தி ஒரே பாய்ச்சலில் ஆசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராக உருவாகியுள்ளார் மா! ![]() |
Posted: 24 Sep 2014 09:50 PM PDT |
Posted: 24 Sep 2014 11:26 AM PDT |
Posted: 23 Sep 2014 10:37 PM PDT |
Posted: 23 Sep 2014 09:48 PM PDT Menu உலகம் மோடியின் அமெரிக்க வருகையை எதிர்த்து போராட்டம்: அணி திரளும் அமைப்புகள் Updated: Tue, 23 Sep 2014 14:34 | பி.டி.ஐ. பிரதமர் நரேந்திர மோடி. | கோப்புப் படம்: பி.டி.ஐ. பிரதமர் நரேந்திர மோடியின் வாஷிங்டன் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வருகையின்போது கருப்புக் கொடி ஆர்ப்பட்டம் நடத்த அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்துள்ளனர். நியூயார்க்கில் 26-ஆம் தேதி நடக்கவுள்ள ஐ.நா. மன்றக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதன் மறுநாள் (27–ஆம் தேதி) அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். தனை அடுத்து, இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கும் அவர் செல்லவுள்ளார். அவரது வருகைக்காக நியூயார்க்கில் பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒருபுறம் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய அமைப்புகள் திட்டமிட்டு வரும் நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' முடிவு செய்துள்ளது. அந்த அமைப்புடன் இன அழிப்புக்கு எதிராக போராடும் ஏ.ஜெ.ஏ. மற்றும் சில அமெரிக்க வாழ் இந்திய அமைப்புகள் இதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இது குறித்து 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' கூறும்போது, "2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை தூண்டிவிட்ட நரேந்திர மோடியின் வருகைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். செப்டம்பர் 30-ஆம் தேதி வாஷிங்டனின் ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஒபாமாவை அவர் சந்திக்கவுள்ளார். அப்போது, வெள்ளை மாளிகைக்கு எதிரே அமைந்திருக்கும் அதிபர் பூங்காவில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது. அதே போல, ஏ.ஜெ.ஏ. அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கும் சீக்கிய குழுக்குகளுக்கும், "பிரதமர் மோடியின் வருகைக்காக கருப்புக் கொடி காட்டுவோம்" என்று அழைப்பு விடுத்துள்ளன. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை ரத்து செய்ய வேண்டும் என 'நீதிக்கான சீக்கிய அமைப்பு' அந்நாட்டு அதிபர் ஒபாமாவுக்கு மனு அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. |
You are subscribed to email updates from அறிந்துகொள்வோம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment