ilovemynative: Facebook page wall posts in Tamil |
- போன், ஸ்மார்ட் ஆனது... மனிதன், சோம்பேறி ஆனான்...!!! -அருள்
- புதுத்துணி எடுத்ததும் அதை அணியும்முன் அடிக்கடி எடுத்துப் பார்க்கும் குழந்தையின்...
- எல்லையோர கிராம மக்களுக்கு ராணுவ பயிற்சி - மத்திய அரசு தமிழக மீனவ கிராம மக்களுக்...
- புரூஸ்லீ மறு பிறவியில் மனைவியின் ரூபத்தில் பிறந்து விட்டார்..! #என்னா_அடி :( @...
- :P
- ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்படுகிறது! # 2006 ம் ஆண்டு ஆரம்பிக்கப்...
- பெரிய ஷாப்பிங் மால்களில் உள்ள உணவகங்கள்,KFC சிக்கன் சென்டர்கள்,பெரிய பெரிய உணவு...
- கோபத்தின் உச்சியிலும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தை பேசாததிலும், ஒரு பெண்ணை ரசிக்...
- கொடும்பாவி... சோறு படைத்த சோழநாட்டோட கடைமடை பகுதி எங்க பூர்வீகம்... மண்ணையும் ம...
- பொறியியல் பட்டதாரி நண்பர்களுக்கு யோசிக்க ஒரு நிமிடம் ........., நம்மில் பலபேருக...
- காலைல கீரைக்கார அம்மாவிடம் கீரை வாங்கிவிட்டு வரும்போது எதிர் வந்த நண்பர் ஒருவர்,...
- கட்டுப்பாடு என்பது பெண்ணின் உடைக்கு மட்டும் இல்லை ஆணின் கண்ணுக்கும் தான்! :)
- பேருந்தில் "புகை பிடிப்பதை" தடை செய்யப்பட்டது போல் கைபேசியில் (குறிப்பாக china m...
- எங்க பார்த்தாலும் தீபாவளி "ஆப்"பர் கள்.. . # போன மாசம் வரை ரூ.7200 க்கு வித்ததெல...
- தமிழக முதல்வர் என்ற பதவிக்குரிய முழுமையான அந்தஸ்தும், கெளரவமும், ஓ.பன்னீர் செல்வ...
- பாடப்புத்தகங்களில் செம்மொழி வாழ்த்தை மறைப்பதில் காட்டிய ஆர்வத்தையும், வேகத்தையும...
- ஐயா., சாமி "போனஸ்" போடுங்கையா உங்களுக்கு புண்ணியமா போகும்...
- நடுவுல நிக்கிறாரே... அவருதான் ஜட்ஜய்யா... சில வருஷம் சென்னை உயர்நீதிமன்றத்த ுல ந...
- நான் பிரதமரான பின் 50 படகுகளை பாகிஸ்தான் விடுவித்துள்ளது: பிரதமர் //இலங்கை 50 ப...
- வாழ்க்கையின் மதிப்பு என்னவென்பதை, வீணாக்கப்பட்டக் காலத்தை விட வேறெதுவாலும் தெளிவ...
- இங்க ரொம்ப பேருக்கு இந்திய எல்லை என்றால் பாகிஸ்தான் எல்லை பகுதி வாகா பார்டர் இந்...
- ஜீவா படத்தை பத்தி வாயே தொறக்காம இருந்த ஆனந்த விகடன் கடைசியா வாய தொறந்து வெளக்கெண...
- உத்தவ் தாக்கரேயின் துணிச்சலும், தில்லும், தமிழ் நாட்டில் ஏதாவதொரு அரசியல்வாதிக்க...
- சமைக்கும் போது வாசம் வந்தா அது அம்மாவின் சமையல்.... சமைக்கும் போது வாசம் வருதான...
- #தீக்குளிப்பு செய்ய விரும்புவோர் முதலிலேயே தகவல் தெரிவித்தால்... Eyes, Kidneys,...
- கைகளால் மென்மையாக அகாழாய்வு செய்யப்பட வேண்டிய மண்டபங்கள் jcp கொண்டு தோண்டப்படுகி...
- தமிழ்நாடு என்று பெயர் வழங்குவதற்கு காரணமாக இருந்த ஈகி சங்கரலிங்கனார் அவர்களை இந்...
Posted: 13 Oct 2014 12:29 PM PDT போன், ஸ்மார்ட் ஆனது... மனிதன், சோம்பேறி ஆனான்...!!! -அருள் |
Posted: 13 Oct 2014 12:10 PM PDT புதுத்துணி எடுத்ததும் அதை அணியும்முன் அடிக்கடி எடுத்துப் பார்க்கும் குழந்தையின் சந்தோஷத்தை சொல்ல வார்த்தையில்லை! @விவிகா சுரேஷ் |
Posted: 13 Oct 2014 11:13 AM PDT |
Posted: 13 Oct 2014 09:55 AM PDT புரூஸ்லீ மறு பிறவியில் மனைவியின் ரூபத்தில் பிறந்து விட்டார்..! #என்னா_அடி :( @வெங்கடேஷ் ஆறுமுகம் |
Posted: 13 Oct 2014 08:52 AM PDT |
Posted: 13 Oct 2014 08:30 AM PDT ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்படுகிறது! # 2006 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலை, சிறப்பு பொருளாதார மண்டல சலுகையின்படி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நூறு சதவீதம் வரிச்சலுகை பெற்று, அதன் பின் சில வருடங்களுக்கு 50% வரிச்சலுகை பெற்று கோடி கோடியாய் சம்பாதித்து விட்டு, இன்னும் தமிழக அரசுக்கு 2500 கோடி வரி பாக்கி வைத்து விட்டு, திடிரென மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்று விட்டு இடத்தை காலி பண்ணிட்டாங்க. இப்போ அந்த வரி பாக்கயையே காரணம் காட்டி மைக்ரோசாப்ட் இதை மூடி விட்டது.6000 தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்தாச்சு..! திருநேல்வேலி மாவட்டத்தில் கடந்த வருடம், கல்விக் கடனையும் விவசாயக் கடனையும் கட்டத் தவறிய ஏழை பாமர மக்களின் போட்டோவை நடுத்தெருவில் பெரிய விளம்பர பலகை வைத்து மிரட்டி அவமானப்படுத்திய அரசு வங்கிகளுக்கும் அரசாங்கத்திற்கும், ஆயிரமாயிரம் கோடிகளை ஏப்பம் விடும் பன்னாட்டு கம்பெனிகளிடம் மாத்திரம் வரியை வசூலிக்க தெரியவில்லையோ? எங்கள் மண்ணையும், இயற்கை வளத்தையும் மனித உழைப்பையும் சுரண்டிய உலக முதலாளிகள் பணம் கொழிக்க வாழ்கிறான். சொந்த மண்ணில் வாழ்க்கையோடு போராடுகிறார்கள் எம் மண்ணின் மைந்தர்கள். தொழிற்புரட்சி என்று வாய்கிழிய முழங்கும் எமது அரசாங்கமே, உங்கள் சட்டமும் அதிகாரமும் எளியோரையும் பாமரனையும் மட்டும் தான் அடக்கி ஆளுமோ? இதுதான் உங்கள் நாட்டு முன்னேற்றமா? @உவரி அனிதன் ![]() |
Posted: 13 Oct 2014 08:27 AM PDT பெரிய ஷாப்பிங் மால்களில் உள்ள உணவகங்கள்,KFC சிக்கன் சென்டர்கள்,பெரிய பெரிய உணவு விடுதிகள் என்று தாங்கள் போகும் உணவகங்களில் அவன் குடுக்கிற மெனு கார்டில் உள்ள உணவுகளின் விலையைப் பற்றி எந்த எதிர் கேள்வியும் கேட்காத நம் மக்கள்தான் காலை நேரத்தில் சைக்கிளில் வைத்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிய படி இளநீர் விற்று வருபர்களிடம் ஒரு ருபாய் இரண்டு ரூபாய் குறைத்துத் தர சொல்லி பேரம் பேசுபவர்கள். @விஜய் |
Posted: 13 Oct 2014 08:09 AM PDT |
Posted: 13 Oct 2014 07:00 AM PDT கோபத்தின் உச்சியிலும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தை பேசாததிலும், ஒரு பெண்ணை ரசிக்கிறேன் என்ற பெயரில் அவள் கூனிக் குறும்படி அவள் அங்கங்களை வர்ணிக்காததிலும், எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமாகாமல் இருத்தலிலும் தான், ஆண்மையின் வீரம் இருக்கிறது. உடலில் இருப்பதல்ல வீரம். செய்யும் செயலிலும்,பேசும் வார்த்தைகளிலும், மனதில் இருக்கும் எண்ணங்களிலும் இருப்பதே வீரம். அத்தகைய வீரத்தை உடையவனே உண்மையான ஆணழகன்.. -ஆதிரா |
Posted: 13 Oct 2014 06:00 AM PDT |
Posted: 13 Oct 2014 04:45 AM PDT கொடும்பாவி... சோறு படைத்த சோழநாட்டோட கடைமடை பகுதி எங்க பூர்வீகம்... மண்ணையும் மழையையும் சார்ந்து வாழற மருத நிலத்துக்கு சொந்தக்காரங்க நாங்க.... காவிரித்தாயோட மார்ல சுரந்து வர பால முன்னாடி இருக்க குழந்தைங்க எல்லாம் உறிஞ்சி குடிச்சுட்டு விட்டப்புறம் மிச்சமிருந்தாதான் எங்களுக்கு கிடைக்கும்... எங்க விவசாயத்துக்கு முக்கியமான நீராதாரம் மழையும்.. அப்படி பெயர மழைல நிறைஞ்சு கெடக்கும் ஏரி குளங்களும் , வற்றாமல் சுரக்கும் கேணிகளும் தான்... ஐப்பசி மாசம் மின்னல் வெட்டி, இடியோட பொனுபொனுன்னு தூற ஆரம்பிச்சு.. கொஞ்சம் கொஞ்சமா வலுக்கும் மழை.... ஐப்பசி முடிஞ்சு கார்த்திகை முச்சூடும் அடை மழையா பெய்யும்.... இந்த சுழற்சி வருஷா வருஷம் நடக்குறது தான.... பருவகால மாற்றத்துல எல்லா ஊர்லயும் இப்படித்தான நடக்கும்... ?? ஆமாம்.. நீங்க .சொல்றதும் சரிதான்.... இந்த சுழற்சி எப்போதும் போல இந்த கட்டுரைக்கு வேலையே இல்லாம .போயிருக்கும்.. திடீர்னு ஏதாவது ஒரு வருஷ காலத்துக்கு சுத்தமா மழையே பெய்யாது... வறட்சி தாண்டவமாடும்.. ஏரி குளமெல்லாம் வறண்டு போய் பாளம் பாளமா பொருக்கு வெடிச்சு கெடக்கும்... மாடு கண்ணுகளுக்கு குடிக்க தண்ணி கெடைக்காது... கேணில எல்லாம் தண்ணி வத்தி போய்டும்... மர மட்ட எல்லாம் காஞ்சு சருவா தொங்கும்... அனல்காத்தா அடிக்கும்....... அந்த மாதிரி நேரத்துல எங்க ஊரு பக்கம் , ஊருல இருக்க முச்சந்தில வைக்கோல் பிரிய சுத்தி அதுல , களிமண்ணை பூசி ஒரு ஆள் மாதிரி செஞ்சு படுக்க வச்சிருப்பாங்க... இதுதான் வருண பகவான வம்புக்கிழுக்கிற வேலை... எங்கூரு நம்பிக்கை படி அது வருணபகவானோட பொணம்.... வருண பகவான் செத்து போயிட்டார்.. அதனால தான் மழ தண்ணி இல்லாம போச்சுன்னு ஒரு மாயையை ஏற்படுத்துறது... எங்கூர்ல இருக்க எல்லோரும் ராத்திரி சாப்பாட்ட ஏழு எட்டு மணிக்கெல்லாம் முடிச்சுட்டு, அந்த பொணம் கிடக்குற இடத்துக்கு வந்திடுவாங்க.... வந்த ஆம்பளைங்க எல்லாம் ஒரு பக்கமா உக்காந்து ஏதாவது கதை பேசுவாங்க.... பொம்பளைங்க எல்லாம் அந்த களிமண் பொணத்த சுத்தி உக்கார்ந்து ஒப்பாரி வைப்பாங்க.... நெஞ்சுல அடிச்சுகிட்டு சுத்தி சுத்தி அழுவாங்க.... ஏ.... மானத்து ராசாவே.... மழபேயும் மந்திரியே.... கொட்டந்தரையில..... நா.. கோலத்த போட்டுவச்சேன்.... என்கோலம் அழியலையே... ஒரு கொள்ள மழ பேயலையே.... இப்படியா அடுத்தடுத்த பல்லவியோட நீளும் அந்த ஒப்பாரி பாட்டு.... அந்த ஒப்பாரில ஒரு ஆத்மார்த்தம் இருக்கும்.. தார தாரயா கண்ணீரு பெருக பெருக அழுது ஒப்பாரி வைப்பாங்க.... அப்படி அங்க அழும்போது, எங்க அம்மா அழுவுதேன்னு நானும் சேர்ந்து அழுத கதையெல்லாம் கூட உண்டு.... சரி அத விடுங்க.... இப்படி ஒரு வாரம் ஒப்பாரி வச்சு அழுவாங்க.... ஏழாம் நாள் ராத்திரி அழுது, ஊரு ஒறவு மொறைல இருக்க மாமன் மச்சினன் எல்லாம் சம்மந்த கொட்டு கொட்டிகிட்டு சேலை, நெல்லு எல்லாம் கொண்டு வந்து போடுவாங்க.... எட்டாம் நாள் காலைல அந்த வருண பகவானோட பொணத்த ( கொடும்பாவிய) இழுத்து கொண்டு போய் வறண்டு கெடக்குற ஏரில போட்டுட்டு வந்திடுவோம்....சொன்னா நம்ப மாட்டீங்க... அதிக பட்சம், அழுவ ஆரம்பிச்ச நாலாம் நாளே மழை வந்துடும்... தவறி போனா... ஏரில கொண்டு போய் போட்டுட்டு வந்தன்னிக்கு ராத்திரி மழை பின்னி எடுக்கும்.. கொட்டோ கொட்டுன்னு கொட்டி தீத்துடும்... அதாவது.." நான் இன்னும் செத்துப்போகல....உயிரோடதான் இருக்கேன்.. இது என்னோட பொணம் இல்ல.." னு வருண பகவானே மழையா இறங்கி வந்து , .. அந்த பொம்மைய (கொடும்பாவிய) கரைச்சு விட்டுடுவாராம்..... வானம்பாத்து விவசாயம் பண்ணி உலகத்துக்கே சோறு போடுற விவசாயிங்களோட நம்பிக்கை அந்த கொடும்பாவி.... இப்போ மழையும் இல்ல.. ஏரியும் இல்லாம போச்சு.... விவசாயமே இல்லாம போச்சே...நாங்க எங்க இருந்து வருண பகவான வம்புக்கு இழுக்க??? @Senthil K Nadesan ![]() |
Posted: 13 Oct 2014 03:45 AM PDT பொறியியல் பட்டதாரி நண்பர்களுக்கு யோசிக்க ஒரு நிமிடம் ........., நம்மில் பலபேருக்கு ரெயில்வே வேலைவாய்ப்பு பற்றிய எந்த ஒரு அடிப்படை அறிவும், போதிய விளக்கமும் இருந்ததே இல்லை , இதில் நானும் விதிவிலக்கு அல்ல . ரெயில்வே தேர்வு என்பது ஏதோ மிகவும் கடினம் என்பது போன்ற ஒரு மாயை நம் தமிழக மாணவர்களிடம் உருவாக்கப் பட்டுள்ளது . இந்த ஒரு எண்ணத்தை இல்லாமல் செய்வதுதான் இந்த பதிவின் நோக்கம் . தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு தெரிந்தது எல்லாம் போலீஸ் வேலையும் , TNPSC ஐ பற்றிய அறிவு மட்டும் தான் . இதை விட எளிதன தேர்வு முறைகளை உள்ளடக்கிய ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாமல் போய்விட்டது . இதன் காரணமாகத்தான் பல வடஇந்திய மாணவர்கள் நம்முடைய தமிழகத்தை குறிவைத்து இங்குள்ள vacancy போஸ்ட் களுக்கு விண்ணப்பம் செய்து எளிதில் வேலைவாய்ப்பை பெற்று விடுகிறார்கள் , அமைதி பூங்கவான தமிழகத்தில் நிலை கொண்டு விடுகிறார்கள் . நம்மவர்களோ டாஸ்மார்க்கிலும், கால் சென்டரிலும் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு வாழ பழகிகொண்டோம் . இந்த இழி நிலை மாற வேண்டும் , தற்சமயம் ரயில்வே தேர்வு மையம் (Railway Recruitment Board ) வழியாக பொறியியல் பட்டதாரிகள் , டிப்ளோமோ பட்டதாரிகள், மற்றும் கலை அறிவியல் பட்டதாரிகள், +2 & 10 வது மாணவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளிடப் பட்டுள்ளது , இந்த அரியதொரு சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கைபற்றுங்கள். www.rrbchennai.gov.in/என்ற முகவரியல் தங்களுக்கு தேவையான எல்லா விளக்கங்களும் தரப்பட்டு உள்ளது. ஆன்லைன் முலமாகவே எளிதாக விண்ணப்பிக்க முடியும் . (CENTRALISED EMPLOYMENT NOTICE No.02/2014) ஆன்லைன் விண்ணப்பதிற்கான கடைசி நாள் 19.10.14. நண்பர்களே உங்களால் ஆனதொரு சின்ன உதவி , இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்குள் பகிர்வு செய்யவும், தமிழக மாணவர்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடைய உதவுங்கள் ![]() |
Posted: 13 Oct 2014 02:55 AM PDT காலைல கீரைக்கார அம்மாவிடம் கீரை வாங்கிவிட்டு வரும்போது எதிர் வந்த நண்பர் ஒருவர், என்னங்க இவங்ககிட்டயா கீர வாங்குவீங்க, Reliancefreshல வாங்க வேண்டியது தான, இங்க கட்டு 10ரூபா , அங்க 9ரூபா தாங்க அப்படின்னார்.. சரி இதுல என்னங்க இருக்கு 1ரூபா தான்னு சொன்னதுக்கு, என்னமோங்க எனக்கு பிடிக்காது, இவங்க காலைல குளிக்கவும் எடுக்கவும் மாட்டாங்க, ஒரு சுத்தமும் இல்ல, இவுங்ககிட்ட போய் வாங்கிகிட்டு, உங்க இஷ்டம்னார்.. # அட பாவமே, அப்ப அம்பானி மட்டும் என்ன, காலைலயே குளிச்சிட்டு, துண்ட கட்டிகிட்டு, கீர வெட்ட போறாரா.. அட போங்கப்பா நீங்களும் உங்க logicக்கும்.. |
Posted: 13 Oct 2014 02:03 AM PDT கட்டுப்பாடு என்பது பெண்ணின் உடைக்கு மட்டும் இல்லை ஆணின் கண்ணுக்கும் தான்! :) |
Posted: 13 Oct 2014 01:54 AM PDT பேருந்தில் "புகை பிடிப்பதை" தடை செய்யப்பட்டது போல் கைபேசியில் (குறிப்பாக china model கைபேசியில்) ஒலிபெருக்கியை (loud speaker) உபயோகப்படுத்தி பாட்டு கேட்பதை தடை செய்ய வேண்டும்!! தான் கேட்கும் பாடலை மற்றவரும் கேட்க வேண்டும் என்று விரும்புவதும் ஒரு வித குற்றமே!! |
Posted: 13 Oct 2014 01:46 AM PDT எங்க பார்த்தாலும் தீபாவளி "ஆப்"பர் கள்.. . # போன மாசம் வரை ரூ.7200 க்கு வித்ததெல்லாம் இந்த மாதம் 9500 MRP க்கு மாறி 20 சதவீத அதிரடி தள்ளுபடியில் வெறும் ரூ 7600க்கு... @விஜய் பிரசாத் |
Posted: 13 Oct 2014 01:40 AM PDT தமிழக முதல்வர் என்ற பதவிக்குரிய முழுமையான அந்தஸ்தும், கெளரவமும், ஓ.பன்னீர் செல்வத்திற்குக் கிடைத்தது போலத் தெரியவில்லை. அவரை முதல்வராக தமிழக அரசு கருதுவது போலவும் தெரியவில்லை. அவரது பெயரைக் கூட போடாமல் வெறும் முதல்வர், முதலமைச்சர் என்று மட்டுமே போட்டு அரசு அறிக்கைகள், அறிவிப்புகள் வெளியாவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பெயருக்கு முன்பு ஏகப்பட்ட அலங்கார வார்த்தைகள் இருக்கும். ஆனால் பன்னீர் செல்வத்துக்கோ, அவரது பெயரைக் கூட போடமல் அறிக்கைகளை அரசு வெளியிட்டு வருகிறது. அவரது பெயரை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்று சொல்வதேயே அறிக்கைகளில் தவிர்க்கிறார்கள். அதேபோல முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயர்ப் பலகை கூட தலைமைச் செயலகத்தில் இல்லையாம். பன்னீர் செல்வத்தின் அரசு வீட்டிலும் கூட அப்படி பெயர்ப் பலகை மாட்டவில்லையாம்... |
Posted: 13 Oct 2014 01:39 AM PDT பாடப்புத்தகங்களில் செம்மொழி வாழ்த்தை மறைப்பதில் காட்டிய ஆர்வத்தையும், வேகத்தையும், ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படம் படத்தை அகற்றுவதில் காட்ட மறுக்கும் ஆட்சியாளர்கள் தமிழகத்திற்கு கிடைத்த சாபக்கேடு : டாக்டர் ராமதாஸ் #இவருக்கு என்னாச்சுன்னு தெரியல ... திடீர் திடீர்னு உண்மையை பேசிடுறார். @ஜெயந்த் |
Posted: 13 Oct 2014 01:27 AM PDT |
Posted: 13 Oct 2014 01:16 AM PDT நடுவுல நிக்கிறாரே... அவருதான் ஜட்ஜய்யா... சில வருஷம் சென்னை உயர்நீதிமன்றத்த ுல நீதிபதியா இருந்தாரு. ரொம்ப நாள், சுரங்கம் மற்றும் கனிமங்கள் தொடர்பான வழக்குகளை கவனிக்கும், நீதிமன்றத்தில் இருந்தாரு. இப்போ ரிட்டயராயிட்டார ு... இப்பபோ நியூஸ்7 சேனல்ல, வேலைக்கு சேந்திருக்காரு. இவருதான் எடிட்டோரியல் குழுவுக்கு தலைவராம். இப்போ இவருக்கு கனிமக்கொள்ளையன் வைகுண்டராஜன்தான் முதலாளி. பட் ஒரு டவுட். வைகுண்டராஜன் இப்போதான் இவருக்கு முதலாளியா, இல்ல, நீதிபதியா இருக்கும்போதே முதலாளியா சொல்லுங்க?? @சங்கர் ![]() |
Posted: 13 Oct 2014 12:48 AM PDT நான் பிரதமரான பின் 50 படகுகளை பாகிஸ்தான் விடுவித்துள்ளது: பிரதமர் //இலங்கை 50 படகுகளை சிறைபிடித்து கடந்த வாரம் அதை உடைத்து 8 இலட்சத்திற்கு ஏலத்துக்கு விட்டுள்ளது மகுடியாரே (மோடி என்றால் மகுடி என்று அர்த்தமாம்) |
Posted: 13 Oct 2014 12:45 AM PDT வாழ்க்கையின் மதிப்பு என்னவென்பதை, வீணாக்கப்பட்டக் காலத்தை விட வேறெதுவாலும் தெளிவாகப் புரியவைக்க முடியாது. @கனா காண்கிறேன் |
Posted: 13 Oct 2014 12:44 AM PDT இங்க ரொம்ப பேருக்கு இந்திய எல்லை என்றால் பாகிஸ்தான் எல்லை பகுதி வாகா பார்டர் இந்தபக்கம் சீன மக்மோகன் எல்லைகோடு இதுதான் தெரியும் இப்புடியே கொஞ்சம் கீழ இறங்கி வாங்கடா ஸ்ரீலங்கா தமிழ்நாடு பக்கமும் ஒரு எல்லை இருக்கு அங்கையும் சாகுறது இந்தியன்தான் இதை உணராமல் பாகிஸ்தானையும் சீனாவையும் நாலு அர்ஜூன் படம் ரெண்டு விஜயகாந்த் படம் பார்த்துட்டு குல்லா போட்டவனையும் தாடி வச்சவனையும் தீவிரவாதியா மனதில் உருவகப்படுத்தி தேசிய கீதம் கேட்டதும் (அதுவும் இந்தியர்களுக்கு எழுதல வெள்ளைக்காரனுக் கு எழுதியது) விறைப்பா நிக்குற நாலு ஹீரோவா மனசுல நினைச்சிக்கிட்ட ு வாழும் சராசரி நிலையில் இருந்து வெளிய வாங்க |
Posted: 13 Oct 2014 12:42 AM PDT ஜீவா படத்தை பத்தி வாயே தொறக்காம இருந்த ஆனந்த விகடன் கடைசியா வாய தொறந்து வெளக்கெண்ணைல வெண்டக்கா பொறியல் செஞ்சா மாதிரி வழவழா கொழக்கொழான்னு ஒரு விமர்சனத்தை எழுதிட்டு கடைசில செலக்ஷன்ல இருக்கிற சாதி அரசியல பேசிட்டு பெட்டிங் ஊழல பத்தில்லாம் ஒன்னுமே பேசலைன்னு சொல்லியிருக்கு! அடவிமர்சனம் எழுதின அப்ரசண்டிகளா அந்த படம் இந்திய அணி செலக்ஷன பத்தியோ இந்திய கிரிக்கெட் அணிய பத்தியோ எடுக்கலைடா தமிழ்நாட்டு கிரிக்கெட் அசோசியேஷன் சாதி பாகுப்பாட்டையும் ரஞ்சி செலக்ஷனையும் மட்டுமே பத்தின படம் தான் ! இவனுங்கள கை நீட்டி குத்துனா அப்படியே நைசா அடுத்தவன் மூக்க காட்டி டைவர்ட் பன்னுறானுங்க பாருங்க! பேஷ் பேஷ்! |
Posted: 12 Oct 2014 11:52 PM PDT உத்தவ் தாக்கரேயின் துணிச்சலும், தில்லும், தமிழ் நாட்டில் ஏதாவதொரு அரசியல்வாதிக்கு இருக்கிறதா? - சிவா சேனை ஆட்சிக்கு வந்தால், ஜைதாதாபூர் அணு மின் திட்டம், விரட்டியடிக்கப்படும். - யாருக்கு இந்த திட்டம் தேவையோ அவர்கள் அதை குஜராத்தில் நிறுவட்டும். மகாராஷ்டிரா குஜராத்திலிருந் து மின்சாரம் வாங்கிக் கொள்ளும். - உத்தவ் தாக்கரே. |
Posted: 12 Oct 2014 11:47 PM PDT சமைக்கும் போது வாசம் வந்தா அது அம்மாவின் சமையல்.... சமைக்கும் போது வாசம் வருதானு கேட்டா...அது மனைவியின் சமையல்.... @பனிமலர் |
Posted: 12 Oct 2014 11:15 PM PDT #தீக்குளிப்பு செய்ய விரும்புவோர் முதலிலேயே தகவல் தெரிவித்தால்... Eyes, Kidneys, Liver, Heart போன்றவைகளை எடுத்துவிட்டு.. மேலும் விவரங்களுக்கு: http://www.tnos.org/ ~ Nagarajan ![]() |
Posted: 12 Oct 2014 11:14 PM PDT கைகளால் மென்மையாக அகாழாய்வு செய்யப்பட வேண்டிய மண்டபங்கள் jcp கொண்டு தோண்டப்படுகிறது,,,,#அநியாயம்! திருவரங்கத்தில் மறைந்திருந்த 2 யானை சிலைகள் வெளியே தோண்டி எடுக்கப்பட்டது, ஆயிரங்கால் மண்டபத்தின் பின்பகுதியில் 4 மாதங்களுக்கு முன்பு அகழாய்வு செய்யப்பட்டது,,, மேலும் ஒரு மண்டபமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் அறிஞர்களின் கைகளால் மென்மையாக அகாழாய்வு செய்யப்பட வேண்டிய மண்டபங்கள் jcp கொண்டு தோண்டப்படுகிறது,,,, ![]() |
Posted: 12 Oct 2014 11:06 PM PDT தமிழ்நாடு என்று பெயர் வழங்குவதற்கு காரணமாக இருந்த ஈகி சங்கரலிங்கனார் அவர்களை இந்நாளில் தமிழ்த் தேசிய மக்கள் நினைவு கூர்வோம் ! அவரின் புகழ் பரப்புவோம் ! தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் - 13.10.1956 1953ஆம் ஆண்டு 'விசாலா ஆந்திரா' கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர் பொட்டி சிறிராமுலு. அது போலவே சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரியும், மொழிவழித் தமிழ் மாகாணம் கோரியும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்தவர் ஈகி சங்கரலிங்கனார் ஆவார். 1955ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் மொழிவாரியாக பிரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது. அதனோடு இணைந்து சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் கோரிக்கையும் அப்போதே எழுந்தது. 29.11.1955இல் தமிழரசு கழகக் செயற்குழு கூட்டத்தில் முதன் முதலில் ம.பொ.சிவஞானம் அவர்களால் "தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கின்றது, மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பே தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்து 1953இல் ம.பொ.சி.யார் சட்டமன்ற மேலவையில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 19.1.1956இல் ஜி.உமாபதி இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு தாலுக்காக்களை கோரியும், தட்சிணா ராஜ்ஜியத் திட்டத்தை எதிர்த்தும், சென்னை ராஜ்ஜியத்திற்கு தமிழ்நாடு பெயரிடக் கோரியும் 20.2.1956இல் முழு கடை யடைப்பு நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ம.பொ.சி. அண்ணாதுரை, பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், சீவானந்தம், சி.பா.ஆதித்தனார் ஆகியோர் பங்கேற்றனர். அதன்படி பிப்.20ஆம் நாளன்று தமிழகமெங்கும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தேறியது. 28.3.1956இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மாநில புனரமைப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. அம்மசோதா விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.சீவானந்தம் பங்கேற்று தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையின் தேவையை வலியுறுத்திப் பேசினார். அன்றைய காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசோ சென்னை என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்று கூறி பெயர் மாற்றக் கோரிக்கையைப் புறக்கணித்தது. இந்நிலையிலே தான் சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருது நகரில் ஓலைக்குடிசையில் பேராயக்கட்சி கொடி பறந்திட உண்ணாநிலையைத் தொடங்கினார். அவர் நடத்திய உண்ணாநிலைப் போரை பச்சைத் தமிழன் காமராசரின் ஆட்சி அலட்சியப்படுத்தியது. பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம், "இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற சமாச்சாரம். அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது" என்று நழுவலாகப் பதிலளித்தார். அவரின் உண்ணாநிலைப் போரை நிறுத்தும் படி ம.பொ.சி, அண்ணாதுரை, சீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்தார். அப்போது, "எல்லையை வாங்க முடியாதா? இதில் என்ன கஷ்டம்? இதய சுத்தியோடு ஆந்திரா சர்க்காருடன் பேசினால் காரியம் நடக்காதா? என்று கண்ணீர் சிந்தியபடி கேட்டதாக அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவரின் உண்ணாநிலைப் போர் 60 நாட்களைத் தாண்டியும் காமராசரின் கல்மனம் கரையவில்லை. அப்போது ஜனசக்தி துணையாசிரியர் தியாகி ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார். அதில், "காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ விருப்பமில்லை" என்று மனம் வெதும்பி எழுதியிருந்தார். அவரின் போராட்டத்திற்கு ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சி முழுமையாகத் துணை நின்றது. நான் இறந்த பிறகு அக்கட்சியினரிடமே உடலை ஒப்படைக்கும் படி சங்கரலிங்கனார் இறுதியாக வேண்டிக் கொண்டார். அவர் உயிருக்குப் போராடிய நிலையில் மதுரை எர்ஸ்கின் (அரசு இராசாசி மருத்துவனை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கும் உண்ணாநிலையை தொடர்ந்தார். நாடி நரம்புகள் ஒடுங்கின. 79வது நாளில் அவர் உயிர் பிரிந்தது. 1952இல் பொட்டி சிறிராமுலுவின் மரணம் தெலுங்கர்களை விழிக்க வைத்து ஆந்திரா பெயரில் தனி மாகாணம் கண்டது. ஆனால் சங்கரலிங்கனாரின் மரணமோ காங்கிரசின் துரோகத்தாலும் திராவிட கட்சிகளின் 'திராவிட நாடு' குழப்பத்தாலும் தமிழர்களை தூங்க வைத்தது. 1956இல் மைசூர் இதர பகுதிகள் கர்நாடகமானது. ஹைதரபாத் இதர பகுதிகள் ஆந்திராவானது. திருவிதாங்கூர் இதர பகுதிகள் கேரளவானது. சென்னை மாகாணமோ இதர பகுதிகளோ தமிழ்நாடாக மாற வில்லை. சரியாக 11 ஆண்டுகள் கழித்து அண்ணா முதல்வரான பிறகே சென்னை மாகாணம் தமிழ்நாடானது. தமிழர்கள் தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டும் முன்னே தெலுங்கர்கள் தம் நிலத்திற்கு பெயர் சூட்டிய கையோடு சும்மா நிற்க வில்லை. அதற்காகவே உழைத்து மடிந்த பொட்டி சிறிராமுலுவை போற்றிடவும் முன் வந்தனர். ஆந்திர அரசு ஹைதரபாத்தில் 'பொட்டி சிறிராமுலு தெலுங்கு கழகம்' நிறுவியும், அவர் நினைவாக நெல்லூர் மாவட்டத்தை 'பொட்டி சிறிராமுலு' மாவட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளது. மத்திய அரசு பொட்டி சிறிராமுலுவிற்கு அஞ்சல் தலையையே வெளியிட்டு விட்டது. இதை விடப் பெரிய கொடுமை என்னவெனில், "சென்னை இல்லாத ஆந்திரம் தலையில்லாத முண்டம்" என்று பேசிய பொட்டி சிறிராமுலுவிற்கு சென்னையிலேயே நினைவுச் சின்னத்தை எழுப்பியும் விட்டனர். பொட்டி சிறிராமுலுவின் ஈகத்திற்கு எந்த விதத்திலும் சங்ரலிங்கனாரின் ஈகம் குறைந்ததல்ல. ஆனால் அவரை தமிழர்களாகிய நாம் என்றாவது கொண்டாடி இருக்கிறோமா? இல்லையே? அவர் மறைந்து 57 ஆண்டுகள் கழித்து இப்போது செயலலிதா அரசு நினைவுச் சின்னம் எழுப்பப் போகிறதாம். வெட்கக்கேடு! தமிழ்நாடு பெயர் சூட்டவும், தமிழ்மண் மீட்கவும் போராடிய சங்கரலிங்கனாரை தமிழர்களாகிய நம்மைத் தவிர வேறு யாராலும் நினைக்க முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடமாகும்! நன்றி - கதிர் நிலவன் ![]() |
You are subscribed to email updates from சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment