Tuesday, 14 October 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:)

Posted: 14 Oct 2014 09:30 AM PDT

:)


மலர் போன்ற நல்ல சிந்தனைகள்.. 1.வேகமாக ஓங்கி வளரும் பனைமரம் ஒருவனுக்கு நிழலைத் த...

Posted: 14 Oct 2014 09:15 AM PDT

மலர் போன்ற நல்ல சிந்தனைகள்..

1.வேகமாக ஓங்கி வளரும் பனைமரம் ஒருவனுக்கு நிழலைத் தரமுடியாது. நிதானமாக செழித்துவளரும் ஆலமரமோ அரசனது படை பரிவாரங்களுக்கும் இடம் தரும். வேகமிருந்தால் போதாது. விவேகமும் தேவை.நிதானமான வளர்ச்சி நிலையான புகழைத் தரும்.

2.உடலை சுத்தமாக வைத்திருப்பவனிடம் நோய் அண்டாது. உள்ளம் சுத்தமாக இருப்பவனிடம் தீமை அண்டாது.

3.மீனுக்கு பலம் நீரினிலே குளவிக்கு பலம் அதன் கொடுக்கினிலே மனிதனுக்கு பலம் அவன் மூளையிலே மனிதனின் பலவீனம் அவன் நாக்கினிலே!

4.தோண்டதோண்ட நீர் சுரக்கும். முயல முயலவே வெற்றி கிடைக்கும்.வெட்டுப்பட்ட மரமும் துளிர்க்கும் குட்டுப்பட்ட நீயும் நிமிர்வாய் நம்பு.

5.மையில்லா எழுதுகோலால் எழுத முடியாது. தூய்மையில்லா மனிதனிடத்தில் நம்பி பழகுதல் கூடாது.

6.மேகமானது வானில் ஒளிவீசும் சூரியனைக் கூட சில நிமிடங்கள் தன் முயற்சியால் மறைத்துவிடுகிறது.அதுபோல விடாமுயற்சி இருப்பின் அடைய முடியாதது எதுவும் இல்லை.

7.தண்ணீர் ஊற்றியவனின் தாகம் தீர்க்கும் தென்னை போல உனக்கு உதவியவனுக்கு சமயத்தில் உதவுவது உன் கடமை.

8.ஒர் அறையின் மையத்தில் ஏற்றிவைக்கப்படும் ஊதுபத்தி அறையைமட்டுமின்றி அதனையும் தாண்டி தன் வாசனையை பரப்புவது போல நாம் கற்கும் கல்வி நமக்கு மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிப்பதாய் இருக்கவேண்டும்.

9.கற்றறியா மரம் கூட மற்றவர்களுக்கு பயனைத்தறுகிறது நிழலாக உணவாக உறைவிடமாக கற்றறிந்த மூடர் நாம் அதை வெட்டலாமோ? சிந்திப்போம் சந்திகள் தோறும் சாலைகள் ஒரம் மரம் வளர்ப்போம்

10.கொழுத்த மீனுக்கு காத்திருக்கும் கொக்கைப்போல உன் இலக்கிற்கு கவனம் சிதறாமல் காத்திரு. காலம் கட்டாயம் கனியும்.

Relaxplzz

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்... 1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட...

Posted: 14 Oct 2014 09:00 AM PDT

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...

1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல்.

{இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.}

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

{இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.}

3. குப்பைகளை கொட்டுவது :

{நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.}

4. வரிசையை முந்தியடித்தல் :

{இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.}

5. விட்டு கொடுக்காத பழக்கம் :

{அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.}

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :

நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....

இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான்.

இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

{முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.}

8. ஜாதி வெறி - மத வெறி – இன வெறி:

நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!!

குறிப்பு:- இதை பதிவதன் நோக்கம், நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க்காக அல்ல....

தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்... இந்த பதிவின் நோக்கம் முழுமை பெரும்..

-மு.மன்சூர் அலி

Relaxplzz


மலேசியாவில் பணப்பட்டுவாடா இயந்திரத்தில் தமிழ். எமது தமிழுக்கு அங்கிகாரம் கொடுத்த...

Posted: 14 Oct 2014 08:50 AM PDT

மலேசியாவில் பணப்பட்டுவாடா இயந்திரத்தில் தமிழ். எமது தமிழுக்கு அங்கிகாரம் கொடுத்த மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி..!!!


அழகு <3

Posted: 14 Oct 2014 08:40 AM PDT

அழகு ♥


:)

Posted: 14 Oct 2014 08:30 AM PDT

:)


மரணப் படுக்கையில் இருந்த ஒரு முதியவர்,தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். "லத...

Posted: 14 Oct 2014 08:15 AM PDT

மரணப் படுக்கையில் இருந்த ஒரு முதியவர்,தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

"லதா,நம்முடைய கடையை மூத்த மகன் ராமுக்குக் கொடுத்துவிடு"

"அதை அடுத்த மகன் ராஜாவுக்குக் கொடுத்து விடுவோம்.அவன் ஒரு புத்திசாலி"

"சரி,நமது லாரியை மூன்றாவது மகன் முருகனுக்குக் கொடுத்துவிடு"

"ஆனால், என் தம்பி தான் அதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் அவன் குடும்பத்துக்கு அது வேண்டுமே?"

"சரி,சரி,கிராமத்திலிருக்கும் வீட்டை நம் மகள் சாந்திக்குக் கொடுத்து விடு"

"உங்களுக்குத் தெரியுமா?சாந்திக்கு அந்த வீடு பிடிக்காது.எனவே அதை இளைய மகள் மீனாவுக்குக் கொடுத்து விடுவோம்"

முதியவர் கோபத்துடன் சொன்னார்,

"இப்போது செத்துக் கொண்டிருப்பது யார்? நீயா, நானா?"

:O :O

Relaxplzz

உலக கோப்பை கிக்பாக்சிங் போட்டிக்கு நெல்லை சட்டக் கல்லூரி மாணவர் தகுதி.. வாழ்த்து...

Posted: 14 Oct 2014 08:00 AM PDT

உலக கோப்பை கிக்பாக்சிங் போட்டிக்கு நெல்லை சட்டக் கல்லூரி மாணவர் தகுதி.. வாழ்த்துக்கள்..! (y) (y)

நெல்லை அரசு சட்டக் கல்லூரி மாணவர் இசக்கி ராஜா. கிக்பாக்சிங் வீரரான இவர் மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற உலக கோப்பை கிக்பாக்சிங் தகுதி சுற்று போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.

இதன்மூலம் அவர் இத்தாலியில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிக்பாக்சிங் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் உலக கோப்பை போட்டியில் 81 கிலோ எடை பிரிவில் விளையாட உள்ளார்.

ஏற்கனவே இசக்கிராஜா ரஷ்யாவில் நடந்த உலக கோப்பை கிக்பாக்சிங் மற்றும் ஆசிய சாம்பியன்சிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Relaxplzz


சகாயம் மட்டுமல்ல..நாமும் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவலாம் கோ ஆப்டெக்ஸ்ல் மாத தவண...

Posted: 14 Oct 2014 07:50 AM PDT

சகாயம் மட்டுமல்ல..நாமும் கைத்தறி நெசவாளர்களுக்கு உதவலாம்

கோ ஆப்டெக்ஸ்ல் மாத தவணையாக 100 முதல் 1000 வரை செலுத்தி, பின்னர் ஆடை வாங்கும் திட்டம் அறிமுகபடுத்தபட்டுள்ளது..உதாரணமாக 9 மாதங்கள் 100 ரூபாய் செலுத்தினால், 1430 ருபாய் வரை ஆடைகள் வாங்கி கொள்ளலாம்..

உங்களின் சிறிய சேமிப்பு, உங்களுக்கு ஆடைகள் வாங்கவும், நெசவாளர்களின் பொருளாதரத்தை மேம்படுத்தவும் சேர்ந்து பயன்படும்..விருப்பம் உள்ளவர்கள் முயற்சித்து பாருங்கள் ..கோ ஆப்டெக்ஸ் ஆடைகள் அனைத்தும் தற்போது அருமையாக இருக்கிறது

http://www.cooptex.com/kanavu.html

Relaxplzz


கேக்-யில் செய்யப்பட்ட அழகிய ஸ்டேடியம்

Posted: 14 Oct 2014 07:40 AM PDT

கேக்-யில் செய்யப்பட்ட அழகிய ஸ்டேடியம்


:)

Posted: 14 Oct 2014 07:30 AM PDT

:)


90 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 50 கோடி பரிசு கிடைத்தது. அவரோட குடு...

Posted: 14 Oct 2014 07:15 AM PDT

90 வயசான ஒருத்தர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 50 கோடி பரிசு கிடைத்தது. அவரோட குடும்பத்தினர்
இந்த விசயத்தை அவரிடம் எப்படி சொல்வது.....
திடீர்னு... சொன்னா ஒருவேளை ...அதிக சந்தோஷத்துல ..." பொசுக்குன்னு போய்ட்டார்னா " யோசனை செஞ்சு பாத்துட்டு...ஒரு டாக்டர் கிட்ட போனாங்க..

விசயத்தை கேட்ட டாக்டர் " ஒ...அவ்வளவுதானே.. ...நீங்க ஒண்ணும்... கவலைப் படாதீங்க நா.... பாத்துக்கிறேன் " எப்புடி...அவர பக்குவமா...பேசி...நான் சரி பண்றேன்னு மட்டும் பாருங்க....பேசி மடக்குரதுலே...நான் ..பெரிய எக்ஸ்பர்ட் ஆச்சே...

ஊர்க்கதை எல்லாம்..பேசிட்டு மெல்லமா "ஐயா ஒரு பேச்சுக்கு கேட்கறேன்....உங்களுக்கு லாட்டரியில 50 கோடி விழுந்தா என்ன ...பண்ணுவீங்க.... "

அதுக்கு அந்த வயசானவர், என்ன...டாக்டர் சார் இப்புடி கேட்குறீங்க...
நீங்க ஆஸ்பிடல் கட்டுரீங்க இல்லையா ...உங்களுக்கு ஒரு அம்பது லட்சத்தை...தூக்கி குடுப்பேன்..."

படார்னு ஒரு...சத்தம்...இத கேட்ட டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு.. பின்னாடி எழுந்திருக்கவே இல்ல.

:P :P

Relaxplzz

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா? இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு...

Posted: 14 Oct 2014 07:00 AM PDT

ATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா?

இயந்திர சாதனம் ஒவ்வொன்றுக்கும் வரலாறு உண்டு. ஏ.டி.எம். (Automatic Teller Machine) உருவான கதை கூட சுவாரஷ்யமானது.

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் மனைவிக்குப் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தனது முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்து விட்டது என்று கவுன்டரை பூட்டி விட்டுச் சென்றுவிட்டார்.

ஜோன் வெறுங்கையோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த சொற்ப சில்லறையை வைத்து, கொஞ்சம் சொக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப்படுத்தலாம் என்று நினைத்து சொக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.

அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப்படுத்தினா லும், பூட்டிய வங்கிக் கவுண்டரும், காசு போட்டால் உதிர்ந்த சொக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. அதன் விளைவுதான் முதல் ஏ.ரி.எம். உருவாக வித்திட்டது.

1969இல் இவர் உருவாக்கிய முதல் ஏ.ரி.எம். வடக்கு லண்டனின் பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல். ஜோனின் மனைவியால் அப்போதைய ஏ.ரி.எம். அட்டைக்கான ஆறு இலக்க குறியீட்டை(Pin Number) ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.

உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கங்களாகக் குறைத்தார். ஏ.ரி.எம்.(ATM) தற்போது ஏராளமான மாற்றங்களைக் கண்டு விட்டாலும், அதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதல்தான்!

Relaxplzz


கொஞ்ச நாளா திருப்பதியில இருக்கற மாதிரியே தெரியறது,எனக்கு மட்டும் தானா...எந்த பக்...

Posted: 14 Oct 2014 06:50 AM PDT

கொஞ்ச நாளா திருப்பதியில இருக்கற மாதிரியே தெரியறது,எனக்கு மட்டும் தானா...எந்த பக்கம் திரும்பினாலும் மொட்டை தலைகளா இருக்கு... :P

தமிழகத்துக்கு இது முடியுதிர் காலமா... :P

- Ilayaraja Dentist

கர்ம வீரர் காமராஜர்... வெவ்வேறு வயதில்...

Posted: 14 Oct 2014 06:40 AM PDT

கர்ம வீரர் காமராஜர்... வெவ்வேறு வயதில்...


:)

Posted: 14 Oct 2014 06:30 AM PDT

:)


விஜயகாந்த் : ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா, உங்களால பதில் சொல்ல முடியுமா...???...

Posted: 14 Oct 2014 06:15 AM PDT

விஜயகாந்த் : ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா,
உங்களால பதில் சொல்ல முடியுமா...???

ரஜினி : கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்...!!!

விஜயகாந்த் : மகாத்மா காந்தியோட பையன் பேரு
என்னன்னு தெரியுமா...???

ரஜினி : தெரியலையே...!!!

விஜயகாந்த் : தினேசன்...!!!

ரஜினி : தினேசனா...???

விஜயகாந்த் : ச்சே... என்ன ரஜினி...??
இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல
டீச்சர் சொல்லிக்கொடுத்ததில்லையா...???

"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...???

ரஜினி : ...!?!?!?! :O :O

:P :P

Relaxplzz

பணம் இல்லாத போது ஹோட்டல்ல வேலை செஞ்சாலும் வீட்ல வந்து சாப்பிடுகிறான் பணம் இருக்...

Posted: 14 Oct 2014 06:00 AM PDT

பணம் இல்லாத போது
ஹோட்டல்ல வேலை செஞ்சாலும்
வீட்ல வந்து சாப்பிடுகிறான்

பணம் இருக்கும் போது
வீட்டுல சமச்சாலும்
ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான்

பணம் இல்லாத போது
வயத்தை நிரப்ப சைக்கிள்ல போறான்

பணம் இருக்கும் போது
வயத்தைக் குறைக்க சைக்கிள்ல
போறான்

பணம் இல்லாத போது
சோத்துக்காக அலைகிறான்

பணம் இருக்கும் போது
சொத்துக்காக அலைகிறான்

பணம் இல்லாதபோது
பணக்காரனாக நடந்து கொள்கிறான்;

பணம் இருக்கும் போது
ஏழையாக காட்டிக் கொள்கிறான்.

நிம்மதியாக இருக்கும் போது
பணத்தைத் தேடுகிறான்

பணம் இருக்கும் போது
நிம்மதியை தேடுகிறான்

# பணம் மட்டுமல்ல
பணத்தை வைத்திருக்கும் மனிதனும்
ஒரு குரங்கு

Relaxplzz


ஒரு தாய், தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை........

Posted: 14 Oct 2014 05:45 AM PDT

ஒரு தாய்,
தனக்கு என்னவெல்லாம் செய்தாள் என்பதை
மனிதன் கடைசிவரை உணர்வதில்லை.....

அவன் அதை உணரும் போது,
அவள் உயிரோடு இருப்பதில்லை...
பலரது வாழ்வில் இது தான் உண்மையுங்கூட..

Relaxplzz


(y)

Posted: 14 Oct 2014 05:30 AM PDT

(y)


சிறிய தூண்டில் --------------------- நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடி...

Posted: 14 Oct 2014 05:15 AM PDT

சிறிய தூண்டில்
---------------------
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் "எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள "டெண்ட்" –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

--இணையத்திலிருந்து

Relaxplzz

மனிதன் கோவில் தத்துவம் நம் உடல் தான் கோவில்...........மனிதன் தான் கடவுள்..... உ...

Posted: 14 Oct 2014 05:00 AM PDT

மனிதன் கோவில் தத்துவம்

நம் உடல் தான் கோவில்...........மனிதன் தான் கடவுள்.....
உடல் கோயில் + ஆன்ம = கடவுள்

உள் + கட = கடவுள். நம் மனதை கடந்தால் நாம் கடவுள் ஆகலாம்

Relaxplzz


ஆண்களைப் பார்த்து பெண்கள் வியக்கும் விசயங்களில் இதுவும் ஒன்று - 'எந்தச் சூழ்நிலை...

Posted: 14 Oct 2014 04:45 AM PDT

ஆண்களைப் பார்த்து பெண்கள் வியக்கும் விசயங்களில் இதுவும் ஒன்று - 'எந்தச் சூழ்நிலையிலும் நண்பனை விட்டுக் கொடுக்காமல் இருப்பது'..

#உண்மை_தான


:)

Posted: 14 Oct 2014 04:30 AM PDT

:)


மிஸ்டர் எக்ஸ் 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந...

Posted: 14 Oct 2014 04:15 AM PDT

மிஸ்டர் எக்ஸ் 50 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில் பிடிபட்டு, வழக்கு விசாரணைக்கு வந்தது

நீதிபதி : எப்படி ஆக்ஸிடண்ட் ஆச்சு?

எக்ஸ்: ஒரே இருட்டு, நான் 80 கி.மீட்டர் வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது, என் காரில் பிரேக் பிடிக்கவில்லை நான் எவ்வளவோ முயற்சி செய்தும், வண்டிய என்னால நிறுத்த முடியல.

நீதிபதி : அப்புறம்?

எக்ஸ்: எனக்கு எதிர்த்தாப்புல ரோட்டுல ஒரு பக்கம், 2 பேர் நடந்து போனதையும், மற்றொருபுறம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன். நீங்களே சொல்லுங்க நீதிபதி ஐயா, நான் என்ன செய்திருக்கனும்?

நீதிபதி : கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கனும்.

எக்ஸ்: அப்படித்தான் சாமி நானு நெனச்சு செஞ்சேன்.

நீதிபதி : !?!?!?!?!?!?!?!?! அப்படினா, வெரும் 2 பேருதான செத்திருக்கனும், எப்படி 50 பேரு செத்தானுங்க?

எக்ஸ் : அப்படி கேளுங்க எசமான், நான் அந்த 2 பேருமேல மோதினபோது, ங்கொய்யால.... ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான். அதுல தான் எசமான் இப்பிடி ஆயிடுச்சு
.
நீதிபதி : ????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :O

Relaxplzz

எங்கிருந்துபுறப்படுகிறோமென்பது முக்கியமல்ல! எங்கேபுறப்படுகிறோமென்பதுதான் முக்கி...

Posted: 14 Oct 2014 04:00 AM PDT

எங்கிருந்துபுறப்படுகிறோமென்பது
முக்கியமல்ல!

எங்கேபுறப்படுகிறோமென்பதுதான்
முக்கியம்!

ஹிந்துவிலிருந்து...
கிறிஸ்தவத்திலிருந்து...
இஸ்லாத்திலிருந்து...

இப்படி
எங்கிருந்துவேண்டுமானாலும்
புறப்படுங்கள்!

ஆனால்
உங்களதுபயணம்
உங்களைநோக்கியதாயிருக்கட்டும்!

வெளியேபுறப்படுவதைத்தான்
பயணமெனநினைக்கிறீர்கள்!

இல்லையில்லை!
வெளியிலிருந்து
புறப்படுங்கள்
அதுதான் பயணம்!

ஏனெனில்
இறைவன் உங்களது
சுயத்திலல்லவா இருக்கிறான்!

ஒன்றைமட்டும்
நினைவிற்கொள்ளுங்கள்!

பயணமென்பது
இடத்தின்மீது
கால்களால்நடப்பதல்ல!

உங்களுக்குள்
உள்ளத்தால் பயணியுங்கள்!

இசையின் பயணம்
காற்றில் தடயமின்றி பயணிப்பதைப்போல

உங்கள் பயணம்
பாதையை கசடாக்காமல்
சுயத்தையடையட்டும்!

- பாலா ஃபீனிக்ஸ்

Relaxplzz


அருமையான படைப்பு

Posted: 14 Oct 2014 03:50 AM PDT

அருமையான படைப்பு


குடித்து குடும்பத்தையே அழிக்கும் பல ஆண்கள் மத்தியில் போற்றப்பட வேண்டிய மனிதர் இவர்.

Posted: 14 Oct 2014 03:40 AM PDT

குடித்து குடும்பத்தையே அழிக்கும் பல ஆண்கள் மத்தியில் போற்றப்பட வேண்டிய மனிதர் இவர்.


:)

Posted: 14 Oct 2014 03:30 AM PDT

:)


#சின்னகுழந்தைகள் வெச்சிருக்கீங்களா....அவசியம் படிங்க ...... முடிந்த வரை Share செ...

Posted: 14 Oct 2014 03:15 AM PDT

#சின்னகுழந்தைகள் வெச்சிருக்கீங்களா....அவசியம் படிங்க ......
முடிந்த வரை Share செய்க...
.
பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும்.
குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும். National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை.

இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?
Immunize<space><குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>
என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள்.

உடனே 'உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது' என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும்.
ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.

Relaxplzz

0 comments:

Post a Comment