Wednesday, 29 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


Posted: 29 Oct 2014 09:00 AM PDT


காதலித்து கண்ணீர் சிந்துவதை விட, செடி நட்டு தண்ணீர் ஊற்றுங்கள்.... - நான் தான் :P

Posted: 29 Oct 2014 07:30 AM PDT

காதலித்து கண்ணீர்
சிந்துவதை விட,
செடி நட்டு தண்ணீர்
ஊற்றுங்கள்....

- நான் தான் :P

கடந்த மாத‌ம் இந்தியாவில் இளைஞனொருவன் சிறுத்தையின் கூண்டில் சிக்கிக்கொண்டு தப்பிக...

Posted: 29 Oct 2014 06:30 AM PDT

கடந்த மாத‌ம் இந்தியாவில் இளைஞனொருவன் சிறுத்தையின் கூண்டில் சிக்கிக்கொண்டு தப்பிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் மிகவும் பரவலாக பேசப்பட்டது. அனைத்து உள்ளங்களை சஞ்சலப்படுத்திய விடயம் இது. இதே போன்ற இன்னுமொரு சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் லைட் ரொக் மிருகக்காட்சி சாலையிலுள்ள சிறுத்தைக் கூண்டுக்குள் சிறுவன் ஒருவன் விழுந்து, தாக்கப்பட்டு, பலத்த காயங்களோடு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தை மற்றும் தாத்தாவுடன் மிருககாட்சிசாலைக்கு சென்றுள்ளான் இந்த சிறுவன், 16 அடி உயரமான கூண்டின், பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த கம்பிகளுக்கு மேல் சிறுவனை அமரவைத்து, தந்தை புகைபடங்கள் எடுத்துக்கொண்டிருக்கையில், கால் தடுமாறி சிறுவன் கூண்டிற்குள் விழுந்துள்ளான்.

கூட்டிலிருந்த இரு சிறுத்தைகளும், சிறுவனின் கழுத்திலும், காலிலும் கடித்துள்ளது. உடனடியாக அந்த இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர், தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி சிறுவனை காப்பாற்றியுள்ளனர். பலத்த காயங்களுக்ககுள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவனின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

#சித்தரிக்கப்பட்ட வீடியோ பதிவு இதோ உங்களுக்காக...
- http://youtu.be/wfwu7jGQfzw

- Admin


நண்பர் ஒருவரின் 5மாத குழந்தை இதயத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக சென்னை MMM மர...

Posted: 29 Oct 2014 05:04 AM PDT

நண்பர் ஒருவரின் 5மாத குழந்தை இதயத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக சென்னை MMM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

பெயர்-சனா மர்யம்..

நாங்கள் உங்களிடம் கேட்பதெல்லாம் உங்களின் உளமார்ந்த பிரார்த்தனையை மட்டும் தான்...

குழந்தையின் அறுவைச்சிகிச்சை எளிதாக,நலமாக நடக்கவும், நலமுடன்,வளமுடன் வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்...

நன்றி - பெருவை மைந்தன்


தன் கனவுகளுக்கு வடிவம் கொடுத்த செல்ல மகளை திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்க்கு அ...

Posted: 29 Oct 2014 03:43 AM PDT

தன் கனவுகளுக்கு வடிவம் கொடுத்த செல்ல மகளை திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்க்கு அனுப்பும் அந்த நிமிடம் , பெண்களின் பிரசவவலியை விட வேதனை மிகுந்த நிமிடங்கள் என்பது பெண் குழந்தைகளை பெற்ற அப்பாக்களுக்கு தான் புரியும் !


0 comments:

Post a Comment