Tuesday, 28 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


Posted: 28 Oct 2014 12:23 PM PDT


பெண்கள் உதடுகளால் பேசும் வார்த்தைகளை விட, கண்களால் பேசும் வார்த்தைகள் அழகாகவும்...

Posted: 28 Oct 2014 12:14 PM PDT

பெண்கள் உதடுகளால்
பேசும் வார்த்தைகளை
விட,

கண்களால் பேசும்
வார்த்தைகள்
அழகாகவும்
கவித்துவமாகவும்
இருக்கிறது.
:P

@சதீஷ் குமார்
தேவகோட்டை

Ten sages of the world kept in MDIS institute singapore. Louis Pasteur, Albert...

Posted: 28 Oct 2014 11:46 AM PDT

Ten sages of the world kept in MDIS institute singapore.

Louis Pasteur,
Albert Einstein, Ibn Khaldoun, Samuel
Johnson, Aristotle, Thiruvalluvar,
Plato, Confucius, Socrates, Maria
Montessori.

உலகில் தோன்றிய பத்து ஞானிகள் சிலையில் நம் திருவள்ளுவரை வைத்துள்ள சிங்கப்பூர் MDIS கல்வி நிறுவனம்.

#தமிழன்_டா


சிங்கப்பூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற எம்.டி.ஐ.எஸ் (MDIS) கல்வி வளாகத்தில் த...

Posted: 28 Oct 2014 11:22 AM PDT

சிங்கப்பூரில்
அமைந்துள்ள உலகப்
புகழ்பெற்ற எம்.டி.ஐ.எஸ்
(MDIS) கல்வி வளாகத்தில்
திருவள்ளுவர்!

உலகில்
இதுவரை தோன்றிய மிகச்
சிறந்த பத்து அறிவர்களுள்
திருவள்ளுவரும் ஒருவர்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது!

#தமிழன்_டா

படம் : மோகன் ராஜ்


கத்தி படத்தில் விஜய் அவர்கள் பேசும் வசனங்களை பொதுமேடைகளிலும் பேச வேண்டும் - முரு...

Posted: 28 Oct 2014 10:55 AM PDT

கத்தி படத்தில் விஜய்
அவர்கள் பேசும்
வசனங்களை பொதுமேடைகளிலும்
பேச வேண்டும் -
முருகதாஸ்.

சார் எங்களயெல்லாம்
காப்பத்த எதோ ப்ளான்
பண்றிங்க...
புரியுது... பண்ணுங்க
பண்ணுங்க...

@பூபதி


தெரு பைப்பில் வரிசையா நின்னு சண்டை போடாம தண்ணி பிடிக்க மாட்டோம்..... ஏதாவது டிக...

Posted: 28 Oct 2014 07:05 AM PDT

தெரு பைப்பில் வரிசையா நின்னு சண்டை போடாம தண்ணி பிடிக்க மாட்டோம்.....

ஏதாவது டிக்கெட் கவுண்டரில் வரிசைல நின்னு டிக்கெட் எடுக்குறதை கவுரவ குறைச்சலா நினைப்போம்.

ஓட்டுக்கு பணம் வாங்குவோம்....

காசு கொடுத்தா போதும் பொதுக்கூட்டம் பேரணின்னு மொத ஆளா போய் நிற்போம்...

பில் இல்லாம பொருள் வாங்குவோம்....

யாராச்சும் நியாயமா இருங்கன்னு சொன்னா யாருதான் நியாயமா இருக்கான்னு குறை சொல்லுவோம்....

லஞ்சம் குடுத்து காரியம் சாதிச்சிக்குவோம்....

பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிரச்சனைனா உள்ளுக்குள்ள சந்தோஷப்படுவோம்....

நம்மளை விட ஒருத்தன் முன்னேறிட்டா உள்ளுக்குள் குமைவோம்.....நிறைய அவதூறை அள்ளி அள்ளி வீசுவோம்....

இப்பிடி நிறைய நிறைய நிறைய குறைகள் நம்மக்குள்ள இருக்கு.

எங்கேயாவது அணு உலை வந்தா நமக்கென்ன கவலை....நம்ம வீட்ல உலை கொதிச்சா போதும்....

மீத்தேன் திட்டம் வருவதை யாராவது எதிர்த்தா எனக்கென்ன என் வீட்டில் மீன் குழம்பு வக்கிறாங்களா அது போதும்....

இப்பிடி சுத்தி சுத்தி நிறைய நிறைய தப்பு நம்மக்கிட்டே இருந்துதான் தொடங்குது.....

மேலே சொன்ன விஷயங்களை யோசிங்க...நான் சொன்னது தப்புன்னா விட்டுடுங்க...இல்லேன்னா சுத்தியிருக்கிறவனை மாத்துங்க..

கொஞ்சமாவது தப்புன்னு தெரியிற சமூக நிகழ்வுகளை எதிர்க்க பழகுங்க....

அதுதாங்க நம்மளையும் நம்ம சந்ததியையும் காப்பாத்தும்...

@விஜய் சிவானந்தம்

உண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள் -------"கத்தி" படமும் "சூரியூர்" கிராம...

Posted: 28 Oct 2014 05:34 AM PDT

உண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள்

-------"கத்தி" படமும் "சூரியூர்" கிராமமும்-------

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் "சூரியூர்". ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான்.

திருச்சியை சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த மானாவரி பூமி தான். தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டபோதும் முப்போகமும் விளைந்த பூமி தான் சூரியூர். காரணம், சூரியூரை சுற்றி முன்னோர்கள் விட்டுசென்ற எண்ணற்ற ஏரிகளும், குளங்களும்தான் நிலத்தடிநீரை வற்றாமல் பார்த்துக்கொண்டது.

இதை செயற்கைக்கோள் உதவியோடு சூரியூரில் உள்ள தண்ணீர் வளத்தை கண்டறிந்த பெப்சி நிறுவனம், தனது தொழிற்சாலையை நிறுவ ஆசைப்பட்டது. பெப்சி(Pepsi) நிறுவனத்தின் ஆசையை நிறைவேற்ற அவர்களுடன் கைகோர்த்தது திருச்சியில் உள்ள LA Bottlers Pvt Ltd நிறுவனம். LA Bottlers Pvt Ltd நிறுவனத்தின் உரிமையாளர் அடைக்கலராஜ் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தொடர்ந்து 3 முறை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

சூரியூரில் பாட்டில் (Glass Bottle) தயாரிக்கும் தொழிற்சாலை வரப்போவதாக தவறான தகவலை அப்போதைய சூரியூர் ஊராட்சிமன்ற தலைவர் மலர்விழி மூலம் சொல்லி தொழிற்சாலையின் கட்டிட வேலையை தொடங்கி 2012 ம் ஆண்டுமுதல் தொழிற்சாலை இயங்கியது. அடுத்த மூன்றே மாதத்தில் படிப்படியாக விவசாய கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது. அப்போதுதான் சூரியூர் மக்களுக்கு தெரியவந்தது இயங்கிகொண்டிருப்பது பெப்சி குளிர்பான கம்பெனி என்று. இதையறிந்த பெப்சி நிர்வாகம் உடனடியாக சூரியூரில் உள்ள சிலருக்கு தினக்கூலியாக வேலை வழங்கப்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து கிணற்றில் தண்ணீர் வற்றியதால் 2012, டிசம்பர் மாதம் சூரியூர் விவசாய சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சில நண்பர்களுடன் சூரியூர் சென்று அங்குள்ள நிலவரத்தை ஆராய்ந்தோம். அப்போது ஆபத்தான, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அங்குள்ள நிலங்களில் நேரிடையாக கலக்கவிட்டனர்.

அன்றுமுதல் சூரியூரை சார்ந்த திரு. ராஜேந்திரன் பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளில் இருந்து தொழிற்சாலையின் உரிமம் சம்மந்தமாக ஆவணங்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது திடுக்கிடும் உண்மை வெளிவந்தது. இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமலே கட்டப்பட்டிருப்பதை நகர் ஊரமைப்பு துறை மூலம் தெரியவந்தது.

அதுமட்டுமில்லாமல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து உரிமம் பெறப்பட்டுள்ளது.

இன்னும் பல ஆவணங்களை ஒன்றிணைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. அதனால் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு " உலக தண்ணீர் தினம் – 2014 அன்று உண்ணாவிரதம் இருக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி கோட்டாசியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், அரசு நிர்வாகம் பெப்சி தொழிற்சாலைக்கு மட்டுமே ஆதரவாக பேசியதை தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடந்தது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பெப்சி தொழிற்சாலைக்கு உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

இருப்பினும் இன்றுவரை மாவட்ட நிர்வாகம், சில பத்திரிக்கை, ஊடகம் என்று பல கதவுகளை தட்டிவிட்டோம். ஆனால் அதிகார பலமும், பண பலமும் பாதாளம் வரை சென்று அறவழியில் போராடும் சூரியூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கவிடவில்லை.

தற்போது வெளிவந்துள்ள "கத்தி" திரைப்படத்தின் மூலம் அனைத்துதரப்பட்ட மக்களுக்கும் "தண்ணீரின் அவசியமும், உரிமையும்" தெரியவந்துள்ளது. நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய ஏரிகளும், குளங்களும் நம் தலைமுறைகளின் தாகத்தை தணிக்கவேண்டுமே தவிர, அந்நிய நாட்டவர்களின் பணபசிக்கும், நம் நாட்டு துரோகிகளின் ஆடம்பர பசிக்கும் விட்டுவிடக்கூடாது.

"கத்தி" திரைப்படத்தில் வரும் கற்பனை கதையை பார்த்துவிட்டு கண்ணீர் விடும், ஆதங்கப்படும், கோபப்படும் ரசிகர்களே !
சூரியூரில் பெப்சி கம்பெனிக்கு எதிராக நடைபெறும் போராட்டதுக்கு என்ன செய்யபோகிறீர்கள்.

தன்னால் மட்டும் என்ன செய்யமுடியும் என்று விலகிபோகிறீர்களா? அல்லது "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்று எங்களுடன் இணையபோகிறீர்களா?

மனசாட்சியுள்ளவர்கள், மானமுள்ளவர்கள் இந்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க எங்களின் அறப்போராட்டத்தில் இணையவார்கள் என்று நம்புகிறோம்.


சோழநாடு சோறுடைத்து அன்று! இனி சோழநாடு மீத்தேனுடைத்து தான்!!

Posted: 28 Oct 2014 05:17 AM PDT

சோழநாடு சோறுடைத்து அன்று!
இனி சோழநாடு மீத்தேனுடைத்து தான்!!


வர வர சினிமா நடிகர்கள், தங்கள் படங்களை தியேட்டரில் மட்டுமே பாருங்கள் என்று வைக்க...

Posted: 28 Oct 2014 04:05 AM PDT

வர வர சினிமா நடிகர்கள், தங்கள் படங்களை தியேட்டரில் மட்டுமே பாருங்கள் என்று வைக்கும் ஒப்பாரி நாளுக்கு நாள் கூடிக்கொண்டேச் செல்கிறது. எதற்காக தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும்?

கோடி கோடியாக கறுப்புப் பணத்தைக் கொட்டி, குப்பை சினிமாவை எடுத்து, அதற்கும் வரி விலக்கு கேட்கும், சினிமாக்காரன் எடுக்கும் படங்களை, இனி சி.டி யில் மட்டுமே தான் பார்க்கவேண்டும். கொள்ளையாக லாபம் வருமாம், அதற்கு வரியையும் கட்ட மாட்டானாம். ஆனால் பொது மக்கள் மட்டும் திரைப்படங்களை சினிமா கொட்டகைக்கு சென்று பார்க்கவேண்டுமாம். முடியாது.

திரைத்துறைக்கான வரிவிலக்கை முழுவதும் ரத்து செய்து, அவர்கள் கேளிக்கை வரியை கட்டும் வரையில், சி.டி யில் மட்டுமே நாம் படங்களைப் பார்க்க வேண்டும்.

பத்து ரூபாய் தந்து வாங்கும் சி.டி யால் அதை விற்பவனுக்கு, ஒரு வேளை சோற்றுக்காவது உதவும்.

சம்பாதிக்கும் பணத்திற்கு ஒழுக்கமாக வரி கட்ட முடிந்தால் மட்டும் படங்களை எடுங்கள். இல்லையெனில் கல்குவாரிக்கு வேலைக்குச் சென்று உழைத்துப் பிழையுங்கள்.

@துரை மோகன்

விஜயும் முருகதாசும் கொக்கோகோலா கம்பெனிக்கு எதிராககத்தி திரைப்படத்தில் பேசுவதற்கு...

Posted: 28 Oct 2014 02:32 AM PDT

விஜயும் முருகதாசும்
கொக்கோகோலா கம்பெனிக்கு எதிராககத்தி திரைப்படத்தில்
பேசுவதற்கு ரொம்ப
நாளைக்கு முன்னமே நம்ம
வைகை புயல்
வடிவேலு இம்சை அரசன்
23ஆம் புலிகேசியில்
கொக்கோகோலா கம்பனிக்கு எதிராக
ஒரு மெஸேஜ்
சொல்லியிருக்கிறார்.

@சூர்யா

"சாப்டியா ?" என Message அனுப்பும் காதலியாக வேண்டாம்...! "சாப்பிடு" என ஊட்டிவிடு...

Posted: 28 Oct 2014 12:58 AM PDT

"சாப்டியா ?" என Message அனுப்பும் காதலியாக வேண்டாம்...!

"சாப்பிடு" என ஊட்டிவிடும் மனைவியாக வேண்டும்...!

"Take care" என்று சொல்லும் காதலியாக வேண்டாம்...!

"I will take care for you" என இருக்கும் மனைவியாக வேண்டும்...!

உன் தாய் தந்தையருக்கு தெரியாமல் உரையாடும் காதலியாக
வேண்டாம். உன் தாய் தந்தையரோடு உரையாடும் மனைவியாக வேண்டும்...!

கண்ணில் கனவுகளோடு காத்திருக்கும் காதலியாக வேண்டாம்...!

நெஞ்சில் உன்னை சுமக்கும் மனைவியாக வேண்டும்...!

உன் அழகை ரசிக்கும் காதலியாக வேண்டாம்...!

உன்னை அழகாய் ரசிக்கும் மனைவியாக வேண்டும்...!


பொறக்க இருந்த பொன் கொழந்தைங்கள வயித்துலயே கொன்னுட்டானுங்க அந்த காலத்து கிறுக்கனு...

Posted: 28 Oct 2014 12:12 AM PDT

பொறக்க இருந்த பொன் கொழந்தைங்கள வயித்துலயே கொன்னுட்டானுங்க அந்த காலத்து கிறுக்கனுங்க. பொண்ணு கெடைக்கணும்னா, அத்தி மரம் வன்னி மரம்னு ஏழெட்டு மரத்துக்கு மஞ்சக்கயிறு கட்டணும்னு சோசியக்காரர் பரிகாரம் சொல்றார். மரத்துக்கு எங்க போக ? அதான் இருந்த மரத்தெல்லாம் வெட்டி ஊரு பூரா கான்க்ரீட் தொட்டி கட்டி வெச்சுருக்கீங்களே. பொண்ணு கெடக்காம இத்தன வயசாகியும் கன்னிப் பையனாவே ஒருத்தன் இருக்கானே, அவம் பாவம் ஒங்களயெல்லாம் சும்மா விடாது.

@கார்த்திக் பாலாஜி

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சற்று தூரம் பயணித்தால் "வேப்பத்தூர்" என...

Posted: 27 Oct 2014 10:38 PM PDT

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரிலிருந்து சற்று தூரம் பயணித்தால் "வேப்பத்தூர்" என்ற கிராமம் நம்மை வரவேற்கிறது, இங்க செங்கல் கோயில் ஒண்ணு இருக்காமே? என்று கேட்டதும், இன்னும் கொஞ்சம் தூரம் போய் அந்த காட்டுக்குள்ள நடங்க தம்பி என்ற பதில் வருகின்றது, சற்று தூரம் பயணித்து, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு முட்புதருக்கு நடுவே செல்லும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்று கொண்டே இருந்தால் 100 மீட்டர் தொலைவில் நம்மை வரவேற்கிறது ஒரு பிரம்மாண்டமான செங்கல் கட்டிடம். அங்கோர் வாட் கோயிலுக்கு வந்துவிட்டோமா? அல்லது இது ஏதேனும் வேற்று கிரகமா? என்ற குழப்பத்தில் பின்னால் திரும்பிப் பார்த்து, என்னுடன் பயணித்த என் நண்பர்களின் பேச்சு சத்தம் கேட்டு சமாதானம் ஆகிறேன்.

OMG!! அந்த கட்டிடத்தை நெருங்க நெருங்க உரக்க கத்த வேண்டும் போல் தோன்றியது, செங்கலில் இத்தனை உயர கட்டிடமா? இதென்னப்பா அநியாயம் எத்தனை லட்சம் செங்கல் இந்த ஒரு கோயிலுக்காக மட்டும் அறுத்திருப்பார்கள்! எப்படி இத்தனை கற்கள் மேலேறி இருக்கும்! அதுவும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவுகளில் வடிவங்களில் செங்கல்கள் உள்ளது! எப்படி இந்த இடத்தில் இது போன்ற வடிவில் செங்கல் வேண்டும் என்று முன்னரே திட்டம் தீட்ட முடிந்தது! அதற்கேற்றாற் போல் தயாரிக்க முடிந்து! அடக் கடவுளே, தஞ்சை பெரிய கோயில் செங்கல்லில் கட்டி இருந்தால் இப்படித் தானே இருந்திருக்கும்? படத்தில் பாருங்கள் என்ன உயரம்! எத்தனை கம்பீரம்! இந்த கோயிலின் வயது தெரியுமா? ஏறக்குறைய 1200 வருடங்கள்! பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்டது. அதாவது தஞ்சை பெரிய கோயிலை விட 200 ஆண்டுகள் பழமையானது!. நேற்று கட்டிய அப்பர்ட்மெண்ட் இன்றைய மழைக்கு விழுந்துவிடும் இதே மண்ணில் ஒரு செங்கல் கட்டுமானம் 1200 வருடங்கள் கடந்து இன்றும் கம்பீரமாக நின்றுகொண்டுள்ளது!.

ஆச்சர்யம் கலையாத அதே பார்வையில் கோயிலை நெருங்கி மெல்ல சுற்றி வருகிறோம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களில் இருக்கும் செங்கற்க்களைப் போல் மிக வழவழப்பாக இருந்தது அந்த கற்கள்! இது என்ன வகை தொழில் நுட்பம்! உடன் பயணித்த கட்டிடத் துறையில் பணியாற்றும் நண்பர் தேவநாதன், இன்றைக்கும் இருக்கும் தொழில்நுட்பத்தையும் அதைக் காட்டிலும் 1000 வருடங்களுக்கு முன்பு கட்டிடங்கள் எழுப்ப அவர்கள் பயன்படுத்தி இருக்கும் முறைகளையும் அந்த கோயிலை காட்டி விளக்கிக்கொண்டிருன்ததுஆச்சர்யத்தை மேலும் அதிகரித்தது.

சுற்றி பார்த்துவிட்டு கோயில் கருவறைக்குள் சென்றோம் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்ததால் ஒரு கட்டையின் துணை கொண்டு மறுபுறம் சென்று உள்ளிருக்கும் கருவறை சுவரில் சில ஓவியங்கள் அழிந்த நிலையில் காணக்கிடைகின்றது. இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் தமிழ்நாட்டிலேயே பல்லவர்,சோழர்,விஜயநகர பேரரச மன்னர்களின் ஓவியங்கள் அனைத்தும் ஒரே இடத்தில இங்கு மட்டுமே காண முடியும், ஆனால் நம்முடைய அலட்சியத்தால் கவனிப்பாரின்றி போய் இன்றைக்கு அதன் சுவடுகள் மட்டும் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றது.

இருட்டிக்கொண்டே இருந்தது கோயிலை விட்டு பிரிய மனமில்லை, மீண்டும் பல முறை இங்கு வரவேண்டும் என்று உள்மனம் சொன்னது, அந்த பிரம்மாண்டமான கோயிலை திரும்பி பார்த்துக்கொண்டே மீண்டும் அந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கத் துவங்கினோம். அடுத்து வருபவர்கள் காப்பாற்றுவார்கள் என்று பல்லவன் கோயிலை எழுப்பினான், அதை சோழன் காப்பாற்றி மேம்படுத்தினான், அதை விஜய நகரப் பேரரசும் வலுவூட்டி கஷ்டப்பட்டு காப்பாற்றி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டது, பாவம் அவர்களுக்கு தெரியாது எல்லாவற்றிற்கும் ஒரு நாள் முடிவு உண்டு என்று, அதை இந்த தலைமுறை செய்யும் என்று!.

—சசி தரன்


கணேசன் புதுவை எடுகெட்ஐயன்(Education) என்று எழுதிவிட்டு அதை எஜுகேஷன் என்று படிக்...

Posted: 27 Oct 2014 10:36 PM PDT

கணேசன் புதுவை

எடுகெட்ஐயன்(Education) என்று எழுதிவிட்டு அதை எஜுகேஷன் என்று படிக்க வேண்டும்.

அப்பிலே(Apple) என்று எழுதிவிட்டு ஆப்பிள் என்று படிக்க வேண்டும்.

ஓராங்கே(Orange) என்று எழுதிவிட்டு ஆரஞ்ச் என்று படிக்க வேண்டும்.

இது போல பல வார்த்தைகளை சொல்லலாம்.

ஆங்கில வார்த்தைகள் ஒவ்வொன்றும் தனி தனியாக உச்சரிப்பை கற்க வேண்டும்.

இதுபோல் எந்த சிக்கலும் இல்லாமல் எழுத்தை உச்சரிக்க கற்றுக்கொண்டால் யார் வேணுமானாலும் சரளமாக எந்த தடையும் இல்லாமல் வாசிக்க முடியும் தமிழ் மொழியின் சிறப்பை நினைத்து பார்க்கிறேன்.

0 comments:

Post a Comment