Monday, 27 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை பசித்த வயிற்றுடன்தான் படுக்கைக்கு செல்கிறது. 5...

Posted: 27 Oct 2014 05:17 AM PDT

இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை பசித்த வயிற்றுடன்தான் படுக்கைக்கு செல்கிறது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.70 % குழந்தைகள் போதுமான வளர்ச்சியின்றி குறைந்த எடையுடன் தான் உள்ளனர் என சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆன பின்னரும் இங்குள்ள மக்களுக்கு மூன்று வேளை உணவுக்குக் கூட வழியில்லை என்ற அவலநிலை நீடிப்பது நாட்டுக்கு பெரும் அவமானமாகும்.ஊழல் அரசியல்வாதிகளின் கைகளில் நாடு சிக்கித்தவிக்கிறது.இவர்கள் திட்டங்களை தீட்டுவதெல்லாம் தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் வளப்படுத்திக் கொள்வதற்குத் தானே தவிர மக்களின் முன்னேற்றத்திற்காக அல்ல.

via - நந்தினி ஆனந்தன்


மானமுள்ள மனுஷன் குடிக்க மாட்டான் ... குடிக்க விடவும் மாட்டான்... மதுவிற்கு எதிர...

Posted: 27 Oct 2014 03:30 AM PDT

மானமுள்ள மனுஷன் குடிக்க மாட்டான் ...
குடிக்க விடவும் மாட்டான்...

மதுவிற்கு எதிராக
நீ முதலில் மனிதனாக போராடு ..
அப்புறம் தமிழனாக போராடலாம் ..
மதுவிற்கு எதிராக போராடாமல்
கேரளா அரசை விமர்சிக்க
எந்த தமிழனுக்கும் தகுதி இல்லை

-அபூஷேக் முஹம்மத்


Posted: 27 Oct 2014 01:16 AM PDT


இரவு நேரத்தில் கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ... கணவ...

Posted: 27 Oct 2014 12:17 AM PDT

இரவு நேரத்தில்
கணவன் உண்டது போக
மீதமிருப்பதை உண்ணலாம்
என்று காத்திருந்து ...
கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன்
மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ...
மலர்ந்த
முகத்தோடு பாத்திரங்களை ஒதுக்கி விட்டு வரும்
மனைவியிடம் ....
" நீ சாப்பிடவில்லையா ?" என்று
கணவன் கேட்க ....
" எனக்கு பசியாக இருந்தது . அதனால்
நீங்கள் வருவதற்கு முன்னாலேயே உண்டு முடித்து விட்டேன்
" என்று சொல்லும்
மனைவியை வரமாகப் பெற்றவன்....
என்ன செய்வான் ?

சட்டையை மீண்டும்
மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பும்
கணவனிடம்" இப்போதானே வந்தீங்க.
திரும்பவும் எங்க போறீங்க ? "
என்று கேட்டவளுக்கு ...
" ஒரு மாத்திரை வாங்க மறந்துவிட்டேன்"
என்று கூறிவிட்டு ...
சற்று தூரம் அலைந்து நல்ல ஹோட்டலில் ருசியான
உணவு வாங்கி வந்து ...
" இந்தா சாப்பிடு... "
என்று சொல்லும்போது
அவள் கண்கள் லேசாக கசிய...
உண்ணுவாளே....
அதற்குப் பெயர்தான்
அழகான வாழ்க்கை ! ♥

via - நீதானே என் சந்தோசம்


0 comments:

Post a Comment