இந்திய திரைத் துறைக்கு புது வரவு ஹீரோயின் 'சிறுமி' ஷ்ரியா ஷர்மா. ஆமாங்க மேஜர் ஆகாத பெண்ணை சிறுமி என்று அழைப்பது தானே முறை.
'சில்லுனு ஒரு காதல்', ரோபோ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிச்ச சிறுமி. இப்ப கொஞ்சம் வளர்ந்துட்டதால ஹீரோயின். போன மாசம் தான் 17 வது பிறந்த நாளைக் கொண்டாடுனாங்க...
கதாநாயகிகளே கிடைக்காத 1960 கால கட்டத்தில் திருமணமான பெண்கள் கதாநாயகிகளாக நடித்தனர்.
1980 களில் 'இளம்' ஹீரோயின்களின் படையெடுப்பு... அதாவது திருமணம் ஆகாதவர்கள். திருமணம் ஆகி விட்டால் மார்க்கெட் இல்லாத கதாநாயகி.
தற்போது 'இளம்' என்பதற்கு அடுத்த கட்டத்தை அடைய வேண்டும் அல்லவா. பதின்ம வயது சிறுமிகள். அதாவது
பூப்படைந்து இருந்தால் போதும் நீ கதாநாயகி. 16-17 வயதில் காதல், டூயட் பாட்டு பாட வந்து விடுகிறார்கள்.
இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இளம் ஹீரோயின்... இளம் ஹீரோயின்... என்று உங்களின் அடுத்த இலக்கு பால்யம் மாறாத பச்சிளம் குழந்தையாகத் தான் இருக்கும்.
முதல் படத்தில் விரசம் இல்லா காட்சிகளுடன் நடிக்கத் துவங்குகிறார்கள்.
அடுத்த படத்தில் பெரும் பட்ஜெட் படம். பெரிய நடிகர். அதனால் வியாபாரத்திற்காக கொஞ்சம் கிளாமர் சேர்ப்பார்கள்.
மூன்றாவது படங்களில் "கதைக்குத் தேவை" என்று டைரக்டர் சொல்லுவார். 2 பீஸ் அணிய, லிப் லாக் முத்தக் காட்சி வேண்டும் என.
18 வயசு ஆகாத பொண்ணு எந்த முடிவையும் எடுக்க தகுதி இல்லாதவங்கன்னு சட்டம் சொல்லுது.
18 வயசு ஆகாத சிறுவர்கள் வேலை செய்யக் கூடாதுன்னு 'குழந்தைத் தொழிலாளர்' சட்டம் சொல்லுது.
"சின்னப் பொண்ணு சார், இப்ப தான் ஸ்கூல் போறா... அதுக்குள்ள அவளுக்கு லவ் கேட்குதா... அவ வாழ்க்கை என்ன ஆகுறது" என ஒரு டைரக்டர் கண் கலங்க பத்திரிக்கைக்கு பேட்டி குடுக்குறார்.
இன்னொரு டைரக்டர் 15-16 வயசு பொண்ணை வச்சு லவ் சீன் எடுக்குறார்.
திரைப் படத்தின் தாக்கம் கொஞ்சம் கூட நம்ம வீட்டிலும் நம்ம பிள்ளைகளிடமும் நம்மளிடமும் நம்ம சுத்தி இருப்பவர்களிடமும் இல்லைன்னு நீங்க சொல்றிங்கன்னா நீங்க வேற்றுகிரக வாசியா இருக்கணும்.
ஜீன்ஸ்க்கு ஷோல்டரை வெறப்பா வச்சுக்கிட்டு பேசுற பெண் ஈய வாதிகள் சிறுமிகளை 2 பீஸ்ல நடிக்க வைக்கும் கலைத் துறையைப் பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை. மொத்தத்தில் உங்களுக்கு தான் செய்யிற செயலை, உடுத்துற உடையை யாரும் குறை சொல்லிறக் கூடாது என்ற சுயநலம் தான். அதுக்கு இந்த ஈயம் ஒரு போர்வை.
"திரைப்படம் பொழுது போக்கு தம்பி... பார்த்துட்டு அப்படியே மறந்திரனும்" என்பவர்களுக்கு திரையில் பார்க்கும் போது சிரிப்பா தான் இருக்கும். நாளைக்கு பக்கத்து வீட்டிலும் நம்ம வீட்டிலும் இவை எல்லாம் நடக்கும் போது பார்த்துட்டு மறந்துருங்க...
குய்யோ... முய்யோன்னு கத்த கூடாது..
- சதீஷ் குமார் தேவகோட்டை

0 comments:
Post a Comment