Monday, 27 October 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


சிறுகதை - உயர்ந்த உள்ளம் தான் வசதி படைத்தவன் என்பதை அனைவரும் அரித்து கொள்ளும் வ...

Posted: 27 Oct 2014 09:15 AM PDT

சிறுகதை - உயர்ந்த உள்ளம்

தான் வசதி படைத்தவன் என்பதை அனைவரும் அரித்து கொள்ளும் வண்ணம் ஆடை, அணிகலன் அணிந்த, பணக்கார இளைஞர் ஒருவர் கைகளில் விலையுயர்ந்த கைபேசியுடன் கடற்கரையில் நின்று கொண்டிருந்தார்.

மனதை சுண்டி இழுக்கும் மணம் மிகுந்த சுண்டலை விற்றுக்கொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுவன் எட்டி நின்று அந்த இளைஞரின் கைபேசியையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே அருகில் வந்த அந்த இளைஞர் சொன்னார், "இது என் அப்பா எனக்கு பிறந்தநாளன்று பரிசாக அளித்தது".

சிறுவன் முகத்தில் வியப்பு "அப்படியா !" என்ற ஆச்சரியத்துடன்.

"உனக்கு அப்படி ஓர் அப்பா இருந்திருக்கலாம்
என்று ஆசைப்படுகிறாயா?" என்று அந்த இளைஞர் கேட்டார்.

சிறுவன் சொன்னான், இல்லை! அப்படியோர் அப்பாவாக நான் என் மகனுக்கும், என்னைப் போன்ற யாருமற்ற ஏழைகளுக்கும் எதிர்காலத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன் என்றான்.

நிச்சயமாக அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட சிறுவனின் நம்பிக்கை, வாழ்வில் அவனை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் !

அப்படித்தானே ? :)

Relaxplzz

"காமராஜர் ஒரு சகாப்தம்" சென்னை கிரிக்கெட் கிளப் முன்பு மெட்ராஸ் கிரிக்கெட் கிளப...

Posted: 27 Oct 2014 09:00 AM PDT

"காமராஜர் ஒரு சகாப்தம்"

சென்னை கிரிக்கெட் கிளப் முன்பு மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் என்று அழைக்கப்பட்டது. அது ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழர்கள் அதுவும் வேட்டி கட்டிய தமிழர்கள் அனுமதியில்லை.

இந்த பிரச்சினை அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் முன் வந்தது. சென்னை மாகாண ஆளும் கட்சித் தலைவர் என்னும் முறையில் கிளப்பில் நுழைந்தார் காமராசர். வெள்ளைக் காரர்கள் சிரித்தனர், தமிழனுக்கெல்லாம் கிரிக்கெட் தெரியுமா என்று.

ஆறடி உயரமும், அஜானபாகுவான உருவமும் காவல் தெய்வம் அய்யனார் போல் ஆகுருதியாக இருந்த காமராசர் ஆங்கிலேயர்களை கிரிக்கெட் போட்டிக்கு அழைத்தார்.

அசால்ட்டாக விளையாண்ட ஆங்கிலேயர்கள் காமராசரின் கிரிக்கெட் திறமையைக் கண்டு அஞ்சினர். ஆங்கிலேயர் வீசிய பந்துக்களை எல்லாம் மைதானத்திற்கு வெளியே சிதறடித்தார். காமராசர் வீசிய பந்துகளை அடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சென்னைத் தமிழர்கள் வென்றனர்.

அன்று அந்த கிளப்பில் தம் பதவிகளை இராஜினாமா செய்து தம் தாய்நாடு இங்கிலாந்து சென்ற ஆங்கிலேயர்கள் அதன் பின் தமிழகம் திரும்பவே இல்லை.

~ ஜெய்ஜி

Relaxplzz


"காமராஜர் ஒரு சகாப்தம்"

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் ஆணும் , பெண்ணும் தனக்கு வர போறவங்க எப்படி இருக்கணும் என்று தா...

Posted: 27 Oct 2014 08:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

ஆணும் , பெண்ணும்
தனக்கு வர போறவங்க
எப்படி இருக்கணும் என்று தான்
நினைப்பாங்களே தவிர
அவங்களுக்கு
நாம எப்படி இருந்த பிடிக்கும்
என்று நினைப்பதே இல்லை
இதுதான் பிரிவின் ஆரம்ப நிலை.

போலீஸ் எச்சரிக்கை : Share plzz பேசி மயக்கும் இந்த அழகிய பெண்ணிடம் கவனமாக இருங்க...

Posted: 27 Oct 2014 08:40 AM PDT

போலீஸ் எச்சரிக்கை : Share plzz

பேசி மயக்கும் இந்த அழகிய பெண்ணிடம் கவனமாக இருங்கள் சென்னை வாலிபர்களே.

இவரைக் கண்டால் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளிக்கவும்.


(y) (y)

Posted: 27 Oct 2014 08:30 AM PDT

(y) (y)


தகவல் துணுக்குகள் # சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் ப...

Posted: 27 Oct 2014 08:15 AM PDT

தகவல் துணுக்குகள்

# சிறுத்தையால் சிங்கத்தைப் போல் கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.

# ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால் தாக்குப் பிடிக்க முடியும்.

# ஒட்டகப் பறவை என்று நெருப்புக் கோழி அழைக்கப்படுகிறது. இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள் தண்ணீர் குடிக்காமலேயே வாழக் கூடியது என்பதால் அதற்கு இந்தப் பெயர்.

# மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.

# காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.

# ஒரு சாதாரண பசு அதன் வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால் கொடுக்கும்.

# உலகிலேயே மிகச் சிறிய பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும் பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.

# டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும் மூடிக்கொண்டு தூங்கும். நீலத் திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும் ஒலிகளிலேயே மிகவும் பலமானதாகும். அதன் அளவு 188 டெசிபல்கள்.

# வேட்டையாடுவது உள்ளிட்ட முக்கியமான பணிகளை பெண் சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம் பெரும்பாலும் ஓய்வெடுப்பதும், குழந்தைகளை கவனிப்பது போன்ற பணிகளை மட்டுமே செய்யும்.

# ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

# பென்குயின்களில் பெண் இனம் முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண் இனம்தான் அடை காத்து குஞ்சு பொரிக்கும் பணியை மேற்கொள்கிறது.

# மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.

# பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள் வரை வெறும் தாய்ப்பாலை மட்டுமே குடிக்கிறது. யானைக்கு 4 பற்கள் உள்ளன. இவை சுமார் நூறு தடவை விழுந்து முளைக்கின்றன.

# கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.

# கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ

# ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.

# சீன் ஆற்றங் கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்

# ஹக்ளி நதிக் கரையில் அமைந்துள்ளது கோல்கட்டதா நகரம்.

# நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

# ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

# நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.

Relaxplzz

தாத்தா செத்ததும் ஒலக்க ஒரல் அம்மி ஆட்டுக்கல்லுன்னு ஒவ்வொன்றுக்கும் போட்டி... கற...

Posted: 27 Oct 2014 08:01 AM PDT

தாத்தா செத்ததும்
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொன்றுக்கும் போட்டி...

கறவமாடும் கண்ணும் எனக்கு
காளையும் கிடாரியும் உனக்கு
அப்பாவும் சித்தப்பாவும்
அத்தனை அடிதடி....

பாயில சுருண்டு கிடக்கும்
பாட்டிய
எனக்கு எனக்குன்னு
யாரும் சொல்லக் காணோம்.....

- செல்வா


"மனம் தொட்ட வரிகள்" - 2

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் காலங்காலமா டைப்பிஸ்ட்டா இருக்கிறவங்களை விட வேகமாக டைப் செய்கி...

Posted: 27 Oct 2014 07:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

காலங்காலமா டைப்பிஸ்ட்டா இருக்கிறவங்களை விட வேகமாக டைப் செய்கிறார்கள், மொபைல் சாட்டிங்கில் கடலைபோடுபவர்கள்!

அருமை

Posted: 27 Oct 2014 07:40 AM PDT

அருமை


:)

Posted: 27 Oct 2014 07:30 AM PDT

:)


ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை...... 1) முதலில் உங்களை...

Posted: 27 Oct 2014 07:15 AM PDT

ஆண்களும் பெண்களும் காதலிக்கும் முன்பு யோசிக்க
வேண்டியவை......

1) முதலில்
உங்களை பற்றி உணருங்கள்.

2) உங்கள்
குடும்பத்தை பற்றி யோசியுங்கள்.

3) நம் குடும்பத்தில்
காதலை ஏற்பாற்களா ? என்று சிந்தியுங்கள்.

4) நாம் காதலிக்க
கூடிய
நபரை பற்றி தெரிந்துக்கெள்ளுங்கள்.

5) அவருடைய
குடும்பத்தை விசாரியுங்கள்.

6) காதலிக்க
நினைக்கும் நபரிடம்
தோழமையோடு பழகி அவருடைய
நல்ல / கெட்ட
விசயத்தை தெரிந்து கெள்ளுங்கள்.

7 ) நீங்கள் காதலிக்கும்
நபரை பற்றி உங்கள்
வீட்டில் பேச
உங்களுக்கு தைரியம்
இருக்கின்றதா என்று யோசியுங்கள்.

8 )காதலிக்கும் நபர்
விட்டு கொடுக்கும்
மணம்
இருக்கின்றதா என்று எண்ணுங்கள்.

9) நம் வீட்டில் உள்ளவர்கள்
ஜாதி பார்பவர்களா என்று பாருங்கள்.

10) அடுத்தவர்கள்
காதலிக்கிறார்கள்
என்று நீங்கள்
காதலிக்காதீர்கள்

இவை அணைத்தும் சரியாக இருந்தால்
நீங்கள் தாராளமாக காதலிக்களாம்....
நீங்கள் ஆராய்ந்தவற்றில் தவறு இருந்தால்
தயவு செய்து காதலிக்காதீர்..
.
நீங்க காதலிச்சு அது நடக்கவில்லை எனில் கஷ்டம்
உங்களுக்கு மட்டும் இல்ல.....
உங்களுக்கும் கஷ்டம்.நீங்க காதலிக்குறவங்களுக்கும் கஷ்டம். உங்கள பெத்தவங்களுக்கும் கஷ்டம்.

இப்படிக்கு
உங்கள் தோழன்.

Relaxplzz

3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம் – க்ரஞ்சஸ் பயிற்சி! இன்றைய இளைஞர...

Posted: 27 Oct 2014 07:01 AM PDT

3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம் – க்ரஞ்சஸ் பயிற்சி!

இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.
செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் எந்த வேலையையும் செய்யாமல் உண்டு உறங்கி வாழ்பவன் மட்டும் சோம்ப...

Posted: 27 Oct 2014 06:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

எந்த வேலையையும் செய்யாமல் உண்டு உறங்கி வாழ்பவன் மட்டும் சோம்பேறி அல்ல. தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை இன்னும் சிறப்பாகச் செய்து முடிக்க தன்னிடம் திறமை இருந்து, வசதி வாய்ப்புகள் காணப்பட்டாலும் அதனைச் செய்யாமல் இருக்கின்றானே அவனும் சோம்பேறி தான்.

- Hifs UR Rahman.

கான்சர் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள மகளுக்கு தாழ்வு மனப்பான்மை போக்க தனது தலையை...

Posted: 27 Oct 2014 06:40 AM PDT

கான்சர் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள மகளுக்கு தாழ்வு மனப்பான்மை போக்க தனது தலையையே மொட்டை அடித்து கொண்டபாராட்ட பட வேண்டிய தாய், தாய்மை இவ்வுலகிலேயே மகத்தானது !


:)

Posted: 27 Oct 2014 06:30 AM PDT

:)


நீங்க ஹிந்தி பேச கற்றுக்கொள்ளவேண்டுமா.... அப்ப உள்ள போங்க.... முதலாவது பாடம்......

Posted: 27 Oct 2014 06:15 AM PDT

நீங்க ஹிந்தி பேச கற்றுக்கொள்ளவேண்டுமா.... அப்ப உள்ள போங்க....

முதலாவது பாடம்....

1. Koyi baath nahi - கோழி குளிக்கிறது இல்ல.

2. Woh baar baar Aathaa hai - அது பார்பரோட ஆத்தா.

3. Udhar pakdo - பக்கோடா எங்க இருக்கு.

4. Thoda thanda paani leke aao - கொஞ்சம் தண்டபானிய கூட்டிட்டு வாங்க.

இன்னைக்கு இது போதும் ஏதோ நம்மலாள முடிஞ்சது....!

:P :P

Relaxplzz

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்... 1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட...

Posted: 27 Oct 2014 06:06 AM PDT

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் விஷயங்கள்...

1. சாலையில் எச்சில் துப்புதல். கண்ட கண்ட இடத்தில் சிறுநீர் கழித்தல். அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றை கணக்கெடுத்தால் நான்கு ஜென்மம் எடுக்கும்.

{இதில் கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு பங்கு உண்டு.}

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

{இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.}

3. குப்பைகளை கொட்டுவது :

{நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்கு படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும், நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.}

4. வரிசையை முந்தியடித்தல் :

{இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம். பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.}

5. விட்டு கொடுக்காத பழக்கம் :

{அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எப்படி...? அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.}

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :

நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல், Etc... Etc.... Etc.....

இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான்.

இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

{முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது. நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும்.}

8. ஜாதி வெறி - மத வெறி – இன வெறி:

நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்......!!

குறிப்பு:- இதை பதிவதன் நோக்கம், நம்முடைய அவலங்களை நாமே பதிந்து, நமது மேல் நாமே அசிங்கத்தை பூசிக்கொள்வதர்க்காக அல்ல....

தனி மனிதன் திருந்தினால் தான், நாடு திருந்தும். இதை படித்த பிறகு ஓரிருவர் திருந்தினால் கூட போதும்... இந்த பதிவின் நோக்கம் முழுமை பெரும்.

Relaxplzz


"சமுக கட்டுரைகள்" -2

:)

Posted: 27 Oct 2014 05:30 AM PDT

:)


நம்ம ஊர் ஏர்போர்ட் அபத்தங்களும் அலப்பரைகளும்... :) * கொஞ்ச நாளா இடுப்பில் கட்டு...

Posted: 27 Oct 2014 05:15 AM PDT

நம்ம ஊர் ஏர்போர்ட் அபத்தங்களும் அலப்பரைகளும்... :)

* கொஞ்ச நாளா இடுப்பில் கட்டுற பெல்ட்டைக் கழட்டிட்டு SCANNER வழியாக வரக் சொன்னாங்க...

அதுல என்ன கொடுமைன்னா பெல்ட் கட்டியுமே நம்ம புள்ளைங்களுக்கு இடுப்புல பேண்ட் நிற்காது. போலிஸ் ரெண்டு கையையும் மேலத் தூக்கி நிக்கச் சொல்லி பரிசோதிக்கும் போதே நிறையாப் பயலுகளுக்கு பேண்ட் அவுந்து விழுந்து மானம் போகும்.

* இப்ப புதுசா இன்னொரு ரூல்ஸ். காலில் மாட்டுற SHOE வையும் கழட்டிட்டு SCANNER வழியா வரச் சொல்றாங்க.

என்னா சார்/மேடம் இப்படி பண்றிங்கன்னு கேட்டா அவுங்களே சிரிக்கிறாங்க.

இன்னும் கொஞ்ச நாளில் சட்டை, பேண்ட் எல்லாம் கழட்டிட்டு வரச் சொன்னாலும் ஆச்சர்யப் பட ஒன்றும் இல்லை...

- சதீஷ் குமார் தேவகோட்டை

அழகு தேவதைகள் <3

Posted: 27 Oct 2014 04:40 AM PDT

அழகு தேவதைகள் ♥


நம்மாளு : டேய் நண்பா... எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்? டாக்டர் நண்பன் : என்ன?...

Posted: 27 Oct 2014 04:15 AM PDT

நம்மாளு : டேய் நண்பா... எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்?

டாக்டர் நண்பன் : என்ன?

நம்மாளு : இல்ல.. மருந்துச்சீட்டுல எழுதிக் குடுக்குறது மருந்துக் கடைக்காரங்களுக்கு மட்டும் புரியுதே...அப்படி என்ன எழுதிக் குடுக்குற...

டாக்டர் நண்பன் : சொல்றேன் ஆனா..யார்கிட்டயும் சொல்ல மாட்டியே?

நம்மாளு : சொல்ல மாட்டேன் சொல்லு...

டாக்டர் : "எனக்கு கிடைச்சுடிச்சு..,நீயும் சுருட்டிக்கோ" :O :O

----------------------------------------------------------------------------------

கிராமத்து அப்பா: எப்புடியோ ஒருவழியா
BSC படிப்ப முடிச்சுட்ட. அடுத்து என்ன செய்ய போற.

மகன்: அடுத்து அரியர்னு ஒரு மேல் படிப்பு
இருக்குப்பா . அதை படிக்கணும்.

அப்பா: அதையும் பெயில் ஆகாமல் படி கண்ணா....

Relaxplzz

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் பணம் , பலர் எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் அலைகின்றனர்...

Posted: 27 Oct 2014 03:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

பணம் ,
பலர் எப்படி செலவு செய்வது
என்று தெரியாமல் அலைகின்றனர்
பலர் செலவுக்கு என்ன செய்வது ...
என்று புரியாமல் அழுகின்றனர

பப்பாளிப் பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 27 Oct 2014 03:41 AM PDT

பப்பாளிப் பழம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:)

Posted: 27 Oct 2014 03:30 AM PDT

:)


மச்சி செமெஸ்டர் ரிசல்ட் நெட் ல வந்துடுச்சு பார்த்தியா? இல்லைடா மச்சி அப்பா வேற...

Posted: 27 Oct 2014 03:16 AM PDT

மச்சி செமெஸ்டர் ரிசல்ட் நெட் ல வந்துடுச்சு பார்த்தியா?

இல்லைடா மச்சி அப்பா வேற வீட்டில இருக்காரு
நீ பாத்துட்டு எனக்கு மெசேஜ் பண்றா!

ஒரு அர்ரியர் என்றால் "Gud Mrng To U" ன்னு பண்ணு

ரெண்டு ன்னா "Gud Mrng To U & Ur Dad" ன்னு பண்ணு மச்சி...

ஓகே

After Few Minutes:
Friend க்கு வந்த மெசேஜ்!
.
.
.
.
.
.
.
"Gud Mrng To U and Ur whole Family".....

:P :P

Relaxplzz

நம் உடலை அறிவோம் ! பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலை...

Posted: 27 Oct 2014 03:00 AM PDT

நம் உடலை அறிவோம் !

பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப்போலவேநாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும்.

மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

Relaxplzz


தகவல் துணுக்குகள்

#ரிலாக்ஸ்_நறுக்ஸ் வயிறு நிரம்பின அப்புறம் நீ சாப்டற இட்லிதான் கம்யுனிசம், அதைய...

Posted: 27 Oct 2014 02:50 AM PDT

#ரிலாக்ஸ்_நறுக்ஸ்

வயிறு நிரம்பின அப்புறம் நீ சாப்டற இட்லிதான் கம்யுனிசம்,

அதையே அடுத்தநாள் வச்சு உப்புமா செஞ்சா அது தீவிரவாதம்.. ;-)

உன்னையே நீ நன்றாக எடை போட்டுப் பார்... உன் வலிமை உனக்குப் புலப்படும்.....!!

Posted: 27 Oct 2014 02:42 AM PDT

உன்னையே நீ நன்றாக எடை போட்டுப் பார்...
உன் வலிமை உனக்குப் புலப்படும்.....!!


"யதார்த்தங்கள் - தத்துவங்கள்"

:)

Posted: 27 Oct 2014 02:30 AM PDT

:)


அந்த தம்பதிக்கு திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. கணவனது அறுபதாவது பிறந்...

Posted: 27 Oct 2014 02:17 AM PDT

அந்த தம்பதிக்கு திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. கணவனது அறுபதாவது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது.

அந்த கோலாகல கொண்டாட்டத்துக்கிடையே மின்னல் கீற்றாக வந்து உதித்தது ஒரு தேவதை. "உங்களின் இணைபிரியாத வாழ்க்கையை மெச்சுகிறேன் எனது அன்பு பரிசாக ஆளுக்கொரு வரம் தருகிறேன் கேளுங்கள்" என்றது.

மனைவி கேட்டாள் "இத்தனை காலம் எங்கள் வாழ்க்கை ஏழ்மையிலேயே கழிந்துவிட்டது. அடுத்த ஊரைக்கூட பார்க்க இயலாத பரிதாப நிலைமையிலேயே இருந்துவிட்டோம் உலகம் முழுக்க நாங்கள் சுற்றிப் பார்க்க உதவி செய்தாலே போதும்"

கண்களை மூடி கைகளைச் சுழற்றி "ஜீபூம்பா" சொன்ன தேவதை அடுத்த விநாடியே கைநிறைய விமான டிக்கெட்டுகளை வரவழைத்துத் தந்தது.

இப்போது கணவனின் முறை. மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி தயங்கித் தயங்கிக் கேட்டான், "என்னைவிட முப்பது வயது குறைந்த பெண்ணுக்கு நான் புருஷனாக வேண்டும்"

அவனது விபரீத ஆசையைக் கேட்டு திடுக்கிட்ட தேவதை சற்றே யோசித்து கண்களை மூடி கைகளைச் சுழற்றி "ஜீபூம்பா" சொன்னது. அவன் தனது மனைவியைவிட முப்பது வயது கூடுதலான குடுகுடு கிழவனாக மாறியிருந்தான்.

#போச்சுடா :P :P

Relaxplzz


குசும்பு... 1

0 comments:

Post a Comment