#ஈரானில் கற்பழிக்க முயன்றவனை கொன்ற பெண்ணுக்கு தூக்கு!!
ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழிக்க முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் 08/10/2014 அன்று அவர் தூக்கிலிடப்பட்டார்.. #Admin
-------------------------------------------------------------------------------------
கனகேஸ்வரனின் கவிவரிகளில் >>
எந்த உயிராக இருந்தாலும்
தன்னை பாதுகாத்துக்கொள்ள
அதற்க்கு பூரண உரிமையும்
பொறுப்பும் கடமையும்
ஆசையும் உண்டு.....
அது ஒர் அறிவுள்ள உயிர் முதல்
ஆறு அறிவுள்ள மனிதன் வரை
அனைவருக்கும் பொருந்தும் ....
பெண்கள் உயிர்கள் தான் ...
அவர்களுக்கும் ரத்தம் சதை உணர்வு
வலி எல்லாமே உண்டு ....
வெறும் சதைக்கு இடையில்
சூடு தேடும் பலருக்கு ஏனோ
தெரியவில்லை பெண்கள்
சுகம் தரும் போதை அல்ல என ....
தன் மானம் காத்துக்கொள்ள
தன் உயிரை துச்சமென நினைத்து
ஒரு காமுகனிடம் இருந்து தன்
கற்ப்பை பாதுகாக்க ஒரு போராட்டத்தில்
அவள் போராளி ஆகிறாள்....
அவன் ஆண் உறுப்பை அறுத்து
உயிர் வலி உணர்த்தி இருக்கலாம் ..
ஆனால் நடந்தது ?....
அப்படியென்றால்
தன் கற்ப்பை விலை கொடுத்து தான்
பெண்கள் உயிர் வாழ வேண்டுகிறதா
உங்கள் சட்டம் ?....
சட்டம் மனிதனால்
மனிதனுக்கு தவறுகள் செய்தவர்களால்
தான் உருவாக்கப்பட்டது ......
கற்ப்பை காத்தவளுக்கு தூக்கு தான்
தண்டனை என்றால்
அறுத்து எறியுங்கள் உங்கள்
ஆண்மையின் அடையாளத்தை .....
-KG KG

0 comments:
Post a Comment