Friday, 10 October 2014

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூ...

Posted: 10 Oct 2014 09:15 AM PDT

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

"இது எவ்வளவு வெயிட் இருக்கும்?"
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

"இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல"

வாத்தியார் தொடர்ந்தார். "இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?"
"ஒண்ணுமே ஆகாது சார்"

"வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?"
"உங்க கை வலிக்கும் சார்"

"ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…"
"உங்க கை அப்படியே மரத்துடும் சார்"

"வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?"

"இல்லை சார். அது வந்து…"
"எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?"
"கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்"

"எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?"

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.

Relaxplzz

இனி திருந்துமா இந்தியா?? ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவ...

Posted: 10 Oct 2014 09:00 AM PDT

இனி திருந்துமா இந்தியா??

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, "பென்ஸ்' மோட்டார் தொழிற்சாலையில், "பிட்டர்' ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.
பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பல அரிய தகவல்கள் கிடைத்தன.
அது: தம்பி... இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது... ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, "டாட்டா' கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது... நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்!

இதுக்கு காரணம் என்ன தெரியுமா? ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்... இங்கே லேபர், "சீப்!' அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, "அட்வான்டேஜ்' ஆகிப் போகிறது.

இந்தியாவில் லேபர் எவ்வளவு, "சீப்' என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி...' என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.

ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்... இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்... ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்... ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்...

இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க!

கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்... ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,' என்றார் அந்த நண்பர்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசியம்.

via - தமிழா நீ ஒரு சகாப்தம்

Relaxplzz


தீபங்களால் மின்னும் மீனாட்சி அம்மன் கோவில், பொற்றாமரை குளம்.

Posted: 10 Oct 2014 08:50 AM PDT

தீபங்களால் மின்னும் மீனாட்சி அம்மன் கோவில், பொற்றாமரை குளம்.


அழகியல்!

Posted: 10 Oct 2014 08:40 AM PDT

அழகியல்!


:)

Posted: 10 Oct 2014 08:30 AM PDT

:)


கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்.. மனைவி அவன் சட்டையை சோதனை இட்ட...

Posted: 10 Oct 2014 08:15 AM PDT

கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்..
மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்..
ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . .

"ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?"

இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..
.
"கிழட்டு மாடுகளுடன் கூட சகவாசமா..? வெட்க மா இல்லே..?"

மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..

"அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?"

# எப்படி உங்க கூட வாழுறது....????

:O :O

Relaxplzz

" ஒரு ரூபாயில் ஒரு உயிர் " இருபத்தி நான்கு மணி நேர மருத்துவ சேவை செய்யும் சாதனை...

Posted: 10 Oct 2014 08:00 AM PDT

" ஒரு ரூபாயில் ஒரு உயிர் " இருபத்தி நான்கு மணி நேர மருத்துவ சேவை செய்யும் சாதனை தமிழன் காஜா மொய்தீன் !

ஒரு ரூபாயில் ஒரு உயிர்

இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள்
பார்த்திருப்பீர்கள். ஆனால், தனியொரு நபராக இருபத்தி நான்கு மணி நேர மருத்துவச் சேவை புரியும் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? இத்தனைக்கும் அவர் ஒரு டாக்டரோ, நர்ஸோ கிடையாது. பள்ளியில் வெறும் எட்டாம் வகுப்பை மட்டும் முடித்திருக்கும் அவர், அப்படியென்ன மருத்துவச் சேவை செய்துவருகிறார் ?

தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் காஜா
மொய்தீன், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் சொந்தமாக ஒரு காலணிக் கடை வைத்திருக்கிறார். மாத வருமானம் பத்தாயிரம் ரூபாயிற்குள்தான். தன் வியாபாரத்திற்கிடையே இவர் செய்துவரும் அந்த அரிய சேவை அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தி, நெகிழவைத்து விடும்.காஜா மொய்தீனின் கையில் எப்போதுமே இரண்டு செல்போன்கள் (9363119202, 9597693060) தயார் நிலையில் இருக்கின்றன. மாறி மாறி இரண்டிற்குமே அழைப்புகள் வந்து
கொண்டிருக்கின்றன.அனைத்தையும் பொறுமையாகக்கேட்டு, விவரங்களைக் குறித்துக் கொள்கிறார். பின்னர், அவர்கள் போகவேண்டிய இடம், பார்க்க வேண்டிய நபர் குறித்த விவரங்களைத் தெளிவான விலாசத்தோடு அவர்களது தொடர்பு எண்களைச் சொல்லி, தன்னிடம் போனில் பேசுபவர்களுக்கு வழிகாட்டுகிறார். பேசியவர்களுக்கு என்ன பிரச்சினை ? அவர்களை எங்கே
போகச் சொல்கிறார் ? யாரைப் பார்க்கச் சொல்கிறார் ?
மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை, உயிர் வாழ மாற்றுச் சிறுநீரகம் பொருத்த வேண்டிய அவசியம், அட்மிட் ஆன ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகப் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம். இதுமாதிரி அவசரச் சந்தர்ப்பங்களில் அனாதரவாக நிற்பவர்கள் எல்லாம் காஜா மொய்தீனைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் உதவி கேட்டு போன் செய்கிறார்கள்.அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்கான வசதி வாய்ப்புகள் அவரிடம் இல்லைதான். ஆனாலும், சம்பந்தப்பட்ட நோயாளிகளின்

ஆபரேஷனுக்கோ அல்லது மாற்றுக் கிட்னி பொருத்தவோ, ஆஸ்பத்திரிச் செலவுகளுக்கோ அவர்கள் யாரைத் தொடர்புகொண்டால் உடனடி உதவி கிடைக்கும் என்கிற விவரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார். உயிர் காப்பதற்கு உதவி செய்யும் நல்ல மனிதர்களிடம், உரிய சமூக சேவை நிறுவனங்களிடம் அல்லது மருத்துவ உதவி புரியும் டிரஸ்ட்களிடம் சம்பந்தப்பட்டவர்களை அனுப்பி வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் காஜா மொய்தீன்.அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ' காப்பீட்டுத் திட்டத்தின்' கீழ் நோயாளிகள் எப்படி உதவிகளைப் பெறலாம் என்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கிறார். அவசியம் ஏற்பட்டால் நேரடியாக இவரே போய் முன்னின்று நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, உரிய விதத்தில் அவர்கள் பலன் பெற உதவி புரிகிறார். இதற்கெல்லாம் இவர் வசூலிக்கும் சேவைக் கட்டணம் எவ்வளவு தெரியுமா ? "அன்பு ஒன்றைத்தான் கட்டணமாகப் பெறுகிறேன்.
அவர்கள் குணமடைந்து வீடு திரும்புகிறபோது அன்போடு சொல்கிற நன்றிகள் கோடி பெறுமே"என்று அமைதியாகச் சிரிக்கிறார் காஜா மொய்தீன். இப்படி இவரால் இதுவரை மேஜர் ஆபரேஷன்கள் செய்து கொண்டு பலனும், நலனும் பெற்றவர்களின் எண்ணிக்கை 800.
பத்தொன்பது வருடங்களாக இடைவிடாமல் தொடரும் இந்தச் சேவையில், கூடுதலாக தனக்குத் தோன்றிய இன்னொரு சேவைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி அதையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார் காஜா மொய்தீன்.

அந்தத் திட்டத்திற்கு இவர் வைத்திருக்கும் பெயர்தான்:
'ஒரு ரூபாயில் ஓர் உயிர்'.இவரது சேவை மனப்பான்மையை அறிந்து, அதில் தங்களையும் இணைத்துக் கொண்ட கோவையைச் சேர்ந்த ஜெயகாந்தன், செந்தில்குமார், ஸ்டீபன், ராஜசேகர் ஆகிய நண்பர்கள் இவருக்குப் பக்கபலம். இவர்களின் துணையோடு, ஆபரேஷனுக்காக உதவி கேட்டுவரும் நோயாளி எந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், சிகிச்சைக்கான செலவுத் தொகை எவ்வளவு என்பதை கேட்டுக்கொள்கிறார்.அத்தனை விவரங்களையும் ஒருபக்க அளவுக்கு நோட்டீஸாக அடித்து, கோவை மாவட்டத்தில்
உள்ள கல்லூரிகளை அணுகி, அந்த நிர்வாகத்தின் அனுமதியுடன் மாணவர்களிடம் அதையொரு கோரிக்கையாக முன்வைக்கிறார். 'ஒவ்வொரு மாணவனும் ஒரு ரூபாய் கொடுங்கள் போதும். உங்கள்
அனைவரின் உதவியாலும் ஓர் உயிர் பிழைக்கப்போகிறது' என்பதை உணர்வுப்பூர்வமாக எடுத்துச் சொல்கிறார். அங்கேயே ஒரு உண்டியலையும் வைத்துவிட்டு வந்துவிடுகிறார்.ஆபரேஷன் தேதிக்கு முன்னதாக அங்கே மறுபடி சென்று அதுவரை சேர்ந்திருக்கும் பணத்தை, தன் கையால் தொடாமல் அந்த மாணவர்களில் இரண்டு பேரின் உதவியோடு சேகரிக்கிறார். அருகிலுள்ள வங்கிக்குச் சென்று,
கிடைத்த தொகையை ஆஸ்பத்திரியின் பெயருக்கே டி.டி.யாக எடுத்துக் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகிறார்.

இப்படி இவரது உதவியால், மிகச் சமீபத்தில் சிவநேசன் என்ற சிறுவனுக்கு இதயத்தில் ஏற்பட்டிருந்த துளையை அடைக்க கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியிலும், நதியா என்ற பள்ளி மாணவிக்கு மூளைக்கு அருகில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்ற கோவை மெடிக்கல் சென்டரிலும் வெற்றிகரமாக ஆபரேஷன்கள் நடந்திருக்கின்றன.இதற்கான மருத்துவச் செலவுகளுக்கு கோவை
மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா பெண்கள் கல்லூரி மாணவிகளும் மற்றும் பி.எல்.பி. கிருஷ்ணம்மாள், எஸ்.எஸ்.என்.
ராஜலட்சுமி, பிஷப் அப்பாசாமி, கிருஷ்ணா கல்லூரிகளைச் சேர்ந்த
மாணவர்களும் 'ஒரு ரூபாயில் ஓர் உயிர்' திட்டத்தின்கீழ் உதவி
புரிந்திருக்கிறார்கள்.இந்தப் புதுமையான மருத்துவச் சேவைக்கு கல்லூரி மாணவர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறதாம். தமிழ்நாடு முழுக்க உள்ள கல்லூரிகளுக்கு விசிட் அடித்து, பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைக் காப்பாற்றுவதையே தன்
வாழ்நாளின் லட்சியமாகக் கொண்டிருக்கும் காஜா மொய்தீனின் அடுத்த திட்டம். கல்லூரி மாணவர்கள் மூலம் பத்து லட்ச ரூபாய் வசூலித்து, கோவையில் இரண்டு டயாலிசிஸ் கருவியைப் பொருத்துவதுதான்.

திருப்பூர், மேட்டுப்பாளையம், ஈரோடு என்று பல ஊர்களில் இருந்தும் கிட்னி செயல் இழந்தவர்கள் டயாலிசிஸ் செய்ய இரண்டு நாளைக்கொரு முறை கோவைக்கு வந்து, படும் சிரமங்களைப் பார்த்த பின்புதான் இப்படியொரு திட்டத்தைக் கொண்டுவர நினைத்தேன். இன்னும் மூன்று மாதங்களில் அதை நிறைவேற்றி விடுவேன் என்று
நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் திடமாக.தனிமரம் தோப்பாகாது என்பது பழைய மொழி. தனிமனிதன் நினைத்தால் ஒரு தோப்பையே
உருவாக்க முடியும் என்பது புது மொழி. அதை, உயிர் காக்கும் சேவை
மூலம் சத்தமில்லாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார் காஜா மொய்தீன்.

நன்றி : ஜாகிர் ஹுசைன் நெல்லை

Relaxplzz


பாரிஸில் உள்ள ஒரு பசுமை உணவகம்

Posted: 10 Oct 2014 07:45 AM PDT

பாரிஸில் உள்ள ஒரு பசுமை உணவகம்


:)

Posted: 10 Oct 2014 07:30 AM PDT

:)


1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not) உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ...

Posted: 10 Oct 2014 07:15 AM PDT

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!

- Rafi Hassan

Relaxplzz

இந்த சிறுவனின் செயல் எனக்கு சிரிப்பை வர வழைத்தாலும் மறுபக்கம் கவலையடைய வைக்கிறது...

Posted: 10 Oct 2014 07:00 AM PDT

இந்த சிறுவனின் செயல் எனக்கு சிரிப்பை வர வழைத்தாலும் மறுபக்கம் கவலையடைய வைக்கிறது!

இது யாருடைய தவறு ???
இப்படி சிறு குழந்தையிடம் சிகரட்டை கொடுத்து பற்ற வைக்க சொல்லி ,அதை புகைப்படமெடுத்து இப்படி சமூக வலைத்தளங்களில் வளம் வர
வைக்கிறீர்களே,அவ்வளவு பெருமைப்படக்கூடிய விஷயமா இது ???

இது விளையாட்டுக்கே செய்திருந்தாலும் பின்னாளில் அதுவே அவன் வாழ்வை திசைதிருப்பக் கூடியதாகவும் அமையலாம் என்பதை நீங்கள் ஏன் உணரவில்லை ?

நீங்களே அவர்கள் தவறான வழிக்கு செல்ல வழி காட்டலாமா ??

பெற்றோர்களே குழந்தைகள் இவ்வாறான செயல்களை செய்வதை அவ்வப்போதே தடுப்பது நல்லதாகும்.. அவர்கள் குறும்புக்காக செய்கிறார்கள் என்று இப்படி புகைப்படமெடுத்து ரசித்தீர்கள் என்றால் பின்னாளில் மது,சிகரட்,சீட்டு போன்ற பழக்கங்களால் அவர்களின் வாழ்க்கை சீரழிவதை பார்த்து கண்ணீர் சிந்தும் நிலைமை வரும்..

குழந்தைகளின் மனது வெள்ளை காகிதம் போன்றது..அதில் நல்லதை மட்டுமே எழுதிட வேண்டும்.நாளைய நம் சமுதாயம் இன்றைய குழந்தைகள் கைகளில் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சில நேரங்களில் என்ன செய்கிறோம் என்று யோசிக்காமல் செய்து,பிறகு வருந்துகிறோம்...
இது போன்றவற்றைத் தவிர்க்கலாமே!

என் வார்த்தைகள் சற்று கடுமையாக இருக்கலாம் ஆனால் சற்று சிந்தித்து பாருங்கள்..அதனுள் இருக்கும் உண்மை புரியும்!

-அமீனா

Relaxplzz


நண்பர்களே உங்கள் அறிவுக்கு ஒரு சவால், இந்த பையன் தப்பிப்பதற்கொரு வழிசொல்லுங்கள்...

Posted: 10 Oct 2014 06:45 AM PDT

நண்பர்களே உங்கள் அறிவுக்கு ஒரு சவால், இந்த பையன் தப்பிப்பதற்கொரு வழிசொல்லுங்கள் பார்ப்போம்..


:)

Posted: 10 Oct 2014 06:30 AM PDT

:)


669999999996666666666999999999966 669999999999966666699999999999966 669999999999...

Posted: 10 Oct 2014 06:15 AM PDT

669999999996666666666999999999966 669999999999966666699999999999966 669999999999966666699999999999966 669999999999966666699999999999966 669999999999966666699999999999966 669999999999966666699999999999966 669999999999966666699999999999966 669999999999966666699999999999966 669999999999966666699999999999966 669999999996666666666999999999966 669999999999999999999999999999966 669999999999999999999999999999966 669999996666699999996666699999966 669999666666666999666666666999966 669996666666666696666666666699966 669996666666666666666666666699966 669999666666666666666666666999966 669999996666666666666666699999966 669999999966666666666669999999966 669999999999666666666999999999966 669999999999966666669999999999966 669999999999996666699999999999966 669999999999999666999999999999966 669999999999999969999999999999966 669999999999999999999999999999966 669999999999999999999999999999966 669996666666669999966666666699966 669999966666999999999666669999966 669999966666999999999666669999966 669999966666999999999666669999966 669999966666999999999666669999966 669999966666999999999666669999966 669999966666999999999666669999966 669999966666999999999666669999966 669999966666699999996666669999966 669999996666669999966666699999966 669999999966666666666669999999966 669999999999666666666999999999966 669999999999999999999999999999966

1) முதலில் 'LIKE' செய்க
2) அடுத்து F3 பட்டனை க்ளிக் செய்யவும்.
3) இறுதியாக 6 ஆம் இலக்கத்தை டைப் செய்யவும்.
4) and click high light all

YOU CAN READ NOW MY SECRET MESSAGE..!

# சீக்ரெட் நு சொல்லி ஊருக்கே சொல்லிடோமோ? ;-)

Relaxplzz

இதுக்கு பேருதான் வரலாறோ?? திருமலை நாயக்கர் மஹால் பற்றிய கேள்விக்கு, ' நாயக்கர்...

Posted: 10 Oct 2014 06:00 AM PDT

இதுக்கு பேருதான் வரலாறோ??

திருமலை நாயக்கர் மஹால் பற்றிய கேள்விக்கு, ' நாயக்கர் மஹால் மதுரையில் உள்ளது.அது மிகவும் அழகாக இருக்கும். அந்த மண்டபத்தில் தான் இம்சை அரசன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது, அதை என் சித்தி பையன் சென்று பார்த்துள்ளான். இதை பாண்டியர்களுக்கு கீழ் உள்ள கொத்தனார்கள் நிருவியமையால், பாண்டியர்களுக்கு அந்த பெருமை வந்தது என்று பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு மாணவன் எழுதியுள்ளான்.

சினிமா ஆர்வம் இருக்க வேண்டிதான் ஆனா இந்த அளவுக்கு ஆர்வம் நாட்டுக்கு ஆகாது தம்பி.

:P :P

Relaxplzz


ஓவியர் இளையராஜா ஓவியர் இளையராஜா நவீன கால ஓவியர் கிராமிய பெண்களை ஓவியம் வரைவதில்...

Posted: 10 Oct 2014 05:45 AM PDT

ஓவியர் இளையராஜா

ஓவியர் இளையராஜா நவீன கால ஓவியர் கிராமிய பெண்களை ஓவியம் வரைவதில் மிகவும் வல்லவர் . ஒளி அளவுகளை மிக துல்லியமாக புகைபடத்திற்கு நிகராக பிரதிபலிக்கும் படி வரைய கூடிய திறமைசாலி. கும்பகோணம் அருகில் உள்ள செம்பியவரம்பல் என்னும் கிராமத்தை சேர்த்தவர் . இவர் வரைந்த ஓவியங்கள் பெரும்பாலும் முகநூல்களில் அதிகம் உலாவுகின்றன .ஆனால் அது யாருடைய ஓவியம் என தெரியாமலேயே நிறைய பேர் லைக் செய்கிறார்கள் . அந்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர் தான்.இவர் வரையும் ஒவ்வொரு ஓவியத்திலும் உயிரோட்டம் இருக்கும் .

Relaxplzz


:)

Posted: 10 Oct 2014 05:30 AM PDT

:)


ரயிலை நிறுத்திய நெய் !! ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திரு...

Posted: 10 Oct 2014 05:15 AM PDT

ரயிலை நிறுத்திய நெய் !!

ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.

'இது எதுக்கு பாட்டி?' என்று கேட்டான் அவன்.

"தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டா தான் நீ பலமா வளரமுடியும்' என்றார் பாட்டி. இதை எப்பவும் மறந்துடாதே!"

அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. "நெய் சாப்பிட்டா பலமாயிட முடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை" என்று நினைத்தான்.

ஆனாலும் பாட்டி மனம் கோணக் கூடாதே என்பதற்காக வாங்கிக் கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.

அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்க தான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். 'சிவப்புக் கலரில்' ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.

அந்தப் பட்டிக்காட்டானுக்குத் தெரியாது, அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில் என்று. டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.
சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். "யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?"

"நான் தான்ங்க. ஏன்?" அப்பாவியாக விசாரித்தான் இவன்.

"யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!"

அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது.
"எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!" என்று நெகிழ்ந்தான்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜென் குரு அவன் தலையில் குட்டினார்.

டிஸ்கி : "முட்டாளே, ஒருவர் நிலாவைச் சுட்டிக் காட்டினால், நிலாவைப் பார்க்கப் பழகு. சுட்டிக் காட்டுகிற விரலையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை வீணடிக்காதே!" என்றார்.

:) :)

Relaxplzz

நண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம் பணத்திற்காக நம் பாமரம...

Posted: 10 Oct 2014 05:00 AM PDT

நண்பர்களே இன்றய ஊடகங்களால் மறைக்கப்பட்ட சதி எனவும் கூறலாம் பணத்திற்காக நம் பாமரமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி.....! MUST SHARE.....

நண்பர்களே (முக்கியம்) படித்துவிட்டு பகிருங்கள்......

ஓரியோ பிஸ்கட்
ஒரு போதைபொருள் போல
செயல்படுகிறது!
குழந்தைகளின் பிரியா பிஸ்கெட்
ஆகிவிட்டது ஓரியோ.
கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும்
ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது.
அதே பாணியை பயன்படுத்தி பல
பிஸ்கெட்
நிறுவனங்கள் புதிதாக கிரீம்
பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஆனால்
ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும்
குழந்தைகளின் மூளை கோகைன்
போதைப்பொருளை உண்ட
உற்சாகத்தை அடைவதாக
அமெரிக்க ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக கனெக்டிகட்
கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள்
ஓரியோ பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக்
கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மூளைச் செல்களில்
கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம்
ஏற்பட்டது.
மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக
சர்க்கரையும், அதிக கொழுப்பும்
அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப்
பொருளை ஒத்துள்ளது என்று கூறியுள்ளார்.
கண்டிப்பாக பகிரவும்!

Source: http://www.medicalnewstoday.com/articles/267543.php

http://www.startribune.com/lifestyle/health/228378591.html

http://www.forbes.com/sites/alicegwalton/2013/10/16/why-your-brain-treats-oreos-like-a-drug/


இது தான் தாய்லாந்தில் வரிசையாக நிற்கும் முறை! ! ! !

Posted: 10 Oct 2014 04:45 AM PDT

இது தான் தாய்லாந்தில் வரிசையாக நிற்கும் முறை! ! ! !


:)

Posted: 10 Oct 2014 04:30 AM PDT

:)


அறிவியல் உண்மை ( ஆன்மீகம் ) முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்...

Posted: 10 Oct 2014 04:15 AM PDT

அறிவியல் உண்மை ( ஆன்மீகம் )

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.
இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.
குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.
காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா?
இல்லை,
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது.
அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!
ஆச்சர்யம்தான்.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?

தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.
ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும்.
மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.
அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.
அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது!
இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது..

படித்ததும் பகிரவும்!!!

Relaxplzz

நாம் பெருமைபடவேண்டிய விசையமா ? இல்லை வெட்கபடவேண்டிய விசையமா ? உலகில் ஒரே ஒரு நா...

Posted: 10 Oct 2014 04:00 AM PDT

நாம் பெருமைபடவேண்டிய விசையமா ? இல்லை வெட்கபடவேண்டிய விசையமா ?

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறத ு.

அது மொரீசியசு (Mauritius) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1,௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே .

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிளப்புனடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது .

Relaxplzz


அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே... பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும்..

Posted: 10 Oct 2014 03:45 AM PDT

அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே...

பலருக்கு பயன் உள்ளதாக இருக்கும்..


:)

Posted: 10 Oct 2014 03:30 AM PDT

:)


ஆசிரியர் (நாராயணசாமியிடம்): என்ன சார் 'அமெரிக்காவை கண்டுபிச்சது யாரு'ன்னு கேட்டா...

Posted: 10 Oct 2014 03:15 AM PDT

ஆசிரியர் (நாராயணசாமியிடம்): என்ன சார் 'அமெரிக்காவை கண்டுபிச்சது யாரு'ன்னு கேட்டா உங்க பையன் 'நான் இல்லை சார்' ன்னு பதில் சொல்றான்

நாராயணசாமி: அவன் எப்பவுமே அப்படிதான் சார். என் சட்டையில் இருந்து காசை அடிக்கடி திருடிவிடுவான். கேட்டா 'நான் இல்லை' ன்னு முதலில் பதில் சொல்லுவான். ரெண்டு அடி கொடுத்து கேட்பேன். அப்புறமா ஒத்துப்பான்....

அமெரிக்காவைக்கூட இவன்தான் சார் கண்டு பிடிச்சிருப்பான். நாலு அடி கொடுத்து கேளுங்க. உண்மையை ஒத்துப்பான்.

:P :P

Relaxplzz

இங்கு நான் தங்கியிருக்கும் (துபாய்) வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும...

Posted: 10 Oct 2014 03:00 AM PDT

இங்கு நான் தங்கியிருக்கும் (துபாய்) வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரபி வீட்டில் கடந்த முப்பது வருசமாக வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒரு அம்மாவின் கதை இது...கிட்டத்தட்ட அவங்களை பதிமூணு வருசமா எனக்கு தெரியும்.இப்போ அவங்களுக்கு அறுபது வயசாகுது,சின்ன வயசுலேயே குடும்பத்தை பிரிந்து வந்ததாலோ என்னவோ,எல்லோர் மீதும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த கூடியவர்.

அவங்க வேலை பார்த்த அந்த அரபி வீட்டின் ஒட்டு மொத்த நிர்வாகமும் இவங்க கையில்தான் இருந்தது,இவங்களும் ரொம்ப நேர்மையா கிட்ட தட்ட அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே இருந்தாங்க,அந்த அம்மாவுக்கு இரண்டு மகள்கள்,ஆறு பேரன் பேத்திகள்...எல்லோரும் இலங்கையில்தான் இருக்காங்க,தன்னோட இந்த முப்பது வருஷ வருமானம் அனைத்தயும் தன்னோட இரண்டு மகள்களுக்குதான் செலவு செய்தார்களே தவிர தனக்கென அஞ்சு பைசாகூட அவங்க வச்சிக்கிட்டது கிடையாது.

சரி...அறுபது வயசாயிடுச்சி,வேலை பார்த்தது போதும் இனிமே நம்ம மகள்கள் நம்மள கவனிச்சுப்பாங்கன்னு சொல்லி ரொம்ப நமபிக்கையோட,இங்கிருந்து கிளம்பி ஊருக்கு போயிட்டாங்க...ஆனா அவங்களை அனுப்ப அந்த அரபி குடும்பதுக்கு மனசே இல்லை,இருந்தாலும் நான் என்னோட கடைசி காலத்தை என் மகள்களோடும் பேரன் பேத்திகளோடும் கழிக்கணும்னு சொல்லி அந்த அரபி குடும்பத்தை ஒரு வழியா சமாதான படுத்திட்டு இலங்கைக்கு போனாங்க.

அவங்க ஊருக்கு போயி நாளே மாசம்தான் ஆகுது,அதுக்குள்ளே அவங்களோட ரெண்டு மகள்களுக்குள்ளும் சண்டை வந்து,அம்மா உனக்குத்தான் எல்லாம் செஞ்சாங்க அதுனாலே நீதான் பாத்துக்கணும் ஒரு மகளும்,இல்லே உனக்குத்தான் எல்லாம் செஞ்சாங்க அதுனாலே நீதான் பாத்துக்கனும்ன்னு சொல்லி இன்னொரு மகளும் மாறி மாறி சண்டை போட்டிக்கிட்டு கடைசிலே ரெண்டு பேருமே இவங்களை கவனிக்கமே விட்டுட்டாங்க...

எதார்த்தமா ஒரு நாள் இவங்க வேலை பார்த்த இந்த அரபி அவங்களுக்கு சும்மா நலம் விசாரிக்கிறதுக்காக போன் பண்ணியிருக்கார்,அப்போ அவங்க மஞ்ச காமலையும் டைபாயிடு காய்ச்சலும் வந்து,கவனிக்க யாருமே இல்லாமே தன்னோட சொந்தகாரங்க வீட்ல படுத்த படுக்கையா இருந்திருக்காங்க.இதை கேள்விப்பட்ட அந்த அரபி உடனே வெளிநாட்ல படிச்சிட்டு இருந்த தன்னோட மகனுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி உடனே போயி அவங்களை இங்கே கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு..அந்த அரபியோட மகனும் உடனே லண்டனில் இருந்து கிளம்பி இலங்கைக்கி போயி அவங்களை கொண்டு வந்து கொழும்பில் உள்ள பெரிய மருத்தவமனையில் ஒரு வாரம் வைத்து சிகிச்சை அளித்து அவங்க ஓரளவு குணம் அடைந்தவுடன் துபாயிக்கு கொண்டு வந்து,இங்கயும் ஒரு வாரம் மருத்துவமனையில் வைத்து கிகிச்சை அளித்து பூரண குணமானவுடன் இப்போ அந்த அரபியோட வீட்லயே கூட்டிட்டு வந்து வச்சிருக்காங்க.

இப்போ விசிட் விசாலதான் வந்திருக்காங்க,அறுபது வயசுக்கு மேலே இங்கே வீட்டு வேலை செய்பவர்களுக்கு விசா அடிக்க முடியாது...இருந்தாலும் தன்னுடைய தனி அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு விசா அடிப்பதாகவும்,வேலை எதுவும் செய்ய வேண்டாம் இங்கு இருக்கும் மற்ற வேலையாட்களை வைத்து வீட்டை கவனிச்சிட்டு நீங்க சும்மா இருந்தாலே எங்களுக்கு போதும்ன்னும் அந்த அரபியும் அரபியின் மனைவியும் சொல்லிட்டாங்களாம்.

இத எல்லாம் அவங்க சொல்லிமுடிக்கும்வரை,அவங்க கண்ணுல இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிஞ்சிட்டே இருந்துச்சு...அவங்களுக்கு என்ன ஆறுதல் சொல்லுறதுன்னு தெரியலே.சரிம்மா உங்களோட இந்த கதையே நான் பேஸ்புக்ல எழுதபோறேன்னு சொன்னேன்,நீ எந்த புக்குளையும் எழுதிக்கோ ஆனா கடைசி காலத்துல பெத்த புள்ளைங்கள நம்பி இருந்திட வேணாம்ங்றத மட்டும் தெளிவா எழுதிடுன்னு சொன்னாங்க.இறைவன் ஒரு கதவை அடைச்சா மறுகதவை திறப்பான்னு கேள்வி பட்டிருக்கேன்,ஆனா உங்க விசயத்துலதான் அத நேர பாக்குறேம்மான்னு சொல்லிட்டு வந்தேன்.

நன்றி : S.p. Kani

Relaxplzz


தமிழ்நாட்டில், பரவலாக கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று இதுவாகத்தான் இருக்க முடியும...

Posted: 10 Oct 2014 02:45 AM PDT

தமிழ்நாட்டில்,

பரவலாக கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று இதுவாகத்தான் இருக்க முடியும்.

"நீங்க நம்மாளுகளா?"

#தெரிஞ்சிகிட்டு சொத்துல பாதி எழுதி குடுப்பானுங்க போல!

- Muthazhagan Ma

:)

Posted: 10 Oct 2014 02:30 AM PDT

:)


நடு இரவில் மனைவி திடீர்ன்னு கணவனிடம் "ஏங்க என் மேல உண்மையில் நீங்க பாசம் வச்சிர...

Posted: 10 Oct 2014 02:15 AM PDT

நடு இரவில் மனைவி திடீர்ன்னு கணவனிடம்

"ஏங்க என் மேல உண்மையில் நீங்க பாசம் வச்சிருக்கீங்களா ?"

"மணி ரெண்டரையாகுது....இந்த அர்த்தஜாமத்தில், உனக்கு ஏண்டி இந்த சந்தேகம்?"

"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?"

பக்கத்தில் உறங்கும் மூன்று குழந்தைகளை காட்டி கணவன் சொன்னான் ,

" இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"

:P :P

Relaxplzz

0 comments:

Post a Comment