Sunday, 7 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

அராத்து கேள்வி பதில்.. திருவாளர் அராத்து அவர்களே, பெரும்பாலும் எழுத்துத்துறை ஊடகத்துறை சினிமாத்துறை சார்ந்தவர்கள் தங்களது இயற்பெயரை தூக்கியெறிந்துவிட்டு புனைப்பெயர்கள் வைத்துக்கொள்வதில் தனித்துவம், கேட்சியாக இருப்பது, கொஞ்சம் இலைமறைகாய்நிலை தவிர்த்து ஏதேனும் காரணம் இருக்கிறதா? பழம்ங்கள் என்றால் பரவாயில்லை சிலநேரம் சிட்டுக்குருவிகளும் தங்களது ஒரிஜினாலிடி வேண்டாம்என தய்யாதக்கா என குதிப்பது ஏன்? சொந்தப்பெயரிலேயே தனித்துவத்தை கொண்டுவர வாய்ப்பேயில்லயா?!

Posted: 07 Sep 2014 01:03 AM PDT

From J.v. Praveenkumar:

அராத்து கேள்வி பதில்.. திருவாளர் அராத்து அவர்களே, பெரும்பாலும் எழுத்துத்துறை ஊடகத்துறை சினிமாத்துறை சார்ந்தவர்கள் தங்களது இயற்பெயரை தூக்கியெறிந்துவிட்டு புனைப்பெயர்கள் வைத்துக்கொள்வதில் தனித்துவம், கேட்சியாக இருப்பது, கொஞ்சம் இலைமறைகாய்நிலை தவிர்த்து ஏதேனும் காரணம் இருக்கிறதா? பழம்ங்கள் என்றால் பரவாயில்லை சிலநேரம் சிட்டுக்குருவிகளும் தங்களது ஒரிஜினாலிடி வேண்டாம்என தய்யாதக்கா என குதிப்பது ஏன்? சொந்தப்பெயரிலேயே தனித்துவத்தை கொண்டுவர வாய்ப்பேயில்லயா?!

திருவோணம் - ஐயப்பா - கேரள நாட்டிளம் பெண்கள். தீபாவளி கொண்டாடி கொண்டாடி அலுத்துப்போயி காலைல 11 மணிக்கு எழுந்து புள்ளக்கி வெடி கிள்ளி குடுக்குறதுல வந்து நிக்கிது.பொங்கல் அன்னிக்கி வெண்பொங்கலோட எக்ஸ்ட்ரா ஒரு சக்கரைப்பொங்கல். ஓணம் கொண்டாடிப்பாக்கலாம்னு ஆர்வம் புடுங்கிகிட்டு அடிக்க , பொண்டாட்டியோட காலையிலேயே ஐயப்பன் கோயிலுக்கு போயிட்டேன்.சர்வாபிஷேகத்துக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அழகழகா பூக்கோலம் போட்டு , பக்கத்துலயே ஒரு செக்யூரிட்டி காவல் காத்துகிட்டு இருந்தார். தமிழ்நாடு சாமி , தமிழ்நாடு ! கேரள டைப் புடவை அணிந்து கடு கடுவென சில யுவதிகள் கோவிலைச் சுற்றியவண்ணம் இருந்தனர். அழகெல்லாம் மருந்துக்கு கூட இல்லை. மலையாளிகள் என்பதற்கு எந்த ஒரு முகச்சான்றோ , வேறு ஏதேனும் பொதுப்புத்தி சான்றோ , ஏதும் இல்லை. நீண்ட நாட்களாக தமிழகத்திலேயே தங்கி இருப்பதால் , தனித்தன்மை கரைந்திருக்கலாம். இது ஒரே புடவை இல்லை. வேட்டி போல கீழே கட்டி , தனியாக இன்னொரு துணியில் தாவணி போல கட்டியிருக்கிறார்கள் என்றாள் மனைவி. இந்த பொண்ணு மூஞ்சி இப்பிடி இருக்கு. இந்த பொண்ணு புடவை இப்பிடி இருக்கு பாரேன் என்று பல கமெண்டுகளை மனைவியிடம் அடித்த படி அதிகாரபூர்வமாக சைட் அடித்துக்கொண்டு இருந்தேன். அபிஷேகம் ஆரம்பித்தது. கடமைக்கு மாரடிக்காமல் தன்னை ஒப்புக்கொடுத்து , மிகுந்த சிரத்தையுடனும் , வானளாவிய அடிபணிந்த பக்தியுடனும் சிறப்பாக அபிஷேகம் செய்தார்.பாலாபிஷேகம் , பன்னீர் அபிஷேகம் , தேனபிஷேகம் , நெய்யபிஷேகம் , பஞ்சாமிர்தம் , இளநீர் அபிஷேகம் என ஒவ்வொன்றாக திவ்யமாக செய்தார் மலையாள பூசாரி. அனைத்து அபிஷேகங்களும் முடிந்து , ஐயப்பனை தண்ணீரால் குளிப்பாட்டி உடையணிவிக்க வேண்டும். குளியல் முடிந்ததும் , இரண்டு பூசாரிகள் விபூதியை ஐயப்பன் சாமி சிலை மீது தூவி தேய்க்க ஆரம்பித்தனர். ஒட்டிக்கொண்டிருக்கும் சின்னச்சின்ன வஸ்துக்களை நீக்க இந்த நடவடிக்கை. தேய்த்தனர் தேய்த்தனர் , தேய்த்துக்கொண்டேயிருந்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருவரும் தேய்த்துக்கொண்டு இருந்தனர். என்ன ஒரு அர்ப்பணிப்பு ! வேலை வாங்குவதற்கு பல மேனேஜ்மெண்ட் கான்ஸப்ட்கள் இருக்கின்றன. அதையெல்லாம் நினைத்து ,இதைப்பார்த்த எனக்கு உண்மையில் கண்கள் கலங்கி விட்டன.அவர்கள் பூஜை செய்து கொண்டிருப்பதை பார்க்கையிலேயே நன்கு தெரிகிறது , வேறு எந்த எண்ணமும் இல்லாமல் ஐயப்பனுடன் கலந்து கரைந்து நெக்குருக செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்த அர்ப்பணிப்பை இறைவனிடத்தில் தவிர வேறு எங்கும் கோடி ரூபாய் கொடுத்தாலும் கொண்டு வர முடியாது. விபூதி தேய்த்தலுக்குப் பிறகு மீண்டும் தண்ணீர் கொட்டியதும் ஐயப்பன் துலங்க ஆரம்பித்து ஜெக ஜெகவென ஜொலிக்க ஆரம்பித்தார்.மீண்டும் கதவை சாத்தி , அற்புதமான மலரங்காரம் செய்து செண்டை ஒலிக்க , சங்கூத தீபாராதனையுடன் அற்புதமான திவ்ய தரிசனம். இவ்வளவு நேரமும் கோவில் கடும் கூட்டம். அபிஷேகம் ஆரம்பித்த பிறகு மொத்த நேரமும் ஐயப்பனையே பார்த்துக்கொண்டு இருந்தேன். லேசாக ஐயப்பன் மேல் இருந்து கண்ணை எடுத்து வேறு யாரையும் ஒருக்கணம் பார்க்க வைக்கும் அளவுக்கு கூட சலனப்படுத்தும் படி எந்த யுவதியும் இல்லை. ஸ்வாமியே சரணம் ஐயப்பா ! இனிய திருவோணம் வாழ்த்துக்கள்.

Posted: 07 Sep 2014 12:28 AM PDT

Photo - இனிய திருவோணம் வாழ்த்துக்கள் .

Posted: 06 Sep 2014 11:55 PM PDT

இன்றைய நீயா நானாவில் கிடைத்த கேப்பில் கொஞ்ச நேரம் மியாவ்ங் மியாவ்ங் னு கத்துவேன்.

Posted: 06 Sep 2014 10:05 PM PDT

இன்றைய நீயா நானாவில் கிடைத்த கேப்பில் கொஞ்ச நேரம் மியாவ்ங் மியாவ்ங் னு கத்துவேன்.

கேள்வி: காதல் தோல்விகளைக் கடந்து வர யோசனை சொல்லுங்கள் குருவே... ஜேம்ஸ் ஆண்டர்சன் பதில்: எனக்கு இந்த விஷயத்தில் நேரடி அனுபவம் கிடையாது என்பதால் அராத்துவிடம் கேட்டேன். அவர் சொன்னார்: காதலில் தோற்றதும் உடனடியாக அதை விடக் கடுமையாக, தீவிரமாக இன்னொரு பெண்ணைக் காதலிப்பதுதான் ஒரே வழி. மேலும் சாரு கேள்வி பதில் படிக்க http://andhimazhai.com/news/view/charu04.html

Posted: 06 Sep 2014 02:12 AM PDT

Andhimazhai - அந்திமழை -

Andhimazhai - அந்திமழை -

0 comments:

Post a Comment