Wednesday, 10 September 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

Thanks sir

Posted: 09 Sep 2014 11:22 AM PDT

தமிழ் சினிமாவில் பெண் குழந்தையை வைத்து பாட்டு போட்டால் , பாட்டு படு ஹிட் ஆகிவிடுகிறது. அது ஓகே ! ஆனால் பெண் குழந்தையை வைத்து போடும் பாடல்கள் எல்லாமும் மென்சோகமாக மனதை உருக்கி , நெகிழ வைத்து , அழுது மூக்கை சிந்த வைப்பதாகவே இருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. ஆண் குழந்தையை வைத்து பாடும் பாடல்கள் கொண்டாட்டமாக , மகிழ்ச்சியாக , இரைச்சலாக , தெனாவெட்டாக இருக்கின்றன. இந்த நெகிழ்ச்சி , மூக்கு சளிக்கெல்லாம் வேலை கிடையாது. பெண் குழந்தை என்றால் , பிரிய வேண்டும். எவனாவது தடிமாட்டு தாண்டவராயனுக்கு தாரை வார்த்து அவன் கூட போயிடுவா என்ற ஃபீலிங்கில் போடுகிறார்களா ? இப்போதெல்லாம் ஆண் குழந்தையோ , பெண் குழந்தையோ , பிராக்டிக்கலாக ஒரு வயதுக்குப் பிறகு பெற்றோர்களை பிரிந்துதான் வாழ்கிறார்கள். இனிமேலாவது பெண் குழந்தையை வைத்து பாடல் கம்போஸ் செய்கையில் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவிக்கொண்டு கீபோர்டை நோண்டாமல் , குதூகலமாக பாடல் போட்டால் நன்றாக இருக்கும்.

Posted: 09 Sep 2014 07:08 AM PDT

ரொம்ப லேட் ரியாக்‌ஷன்தான். சுதந்திர தினத்தன்று மோடி குண்டு துளைக்காத கூண்டை தவிர்த்து விட்டு வெட்ட வெளி மேடையில் நின்று உரையாற்றியதை பலரும் வீரம் என்று பேசிகொண்டு இருந்ததை காண முடிந்தது. பிரதமருக்கு வீரத்தை விட விவேகம்தான் தேவை! வீரம் என்று சொல்லிவிட்டு கருப்பு பூனை படை இல்லாமல் செல்ல முடியுமா ? என்னதான் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தாலும் , இந்திய பிரதமர் என்பவர் ஹை ரிஸ்க் உள்ளவர்.யாரை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கியோ , மிரட்டியோ என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது. பிரதமருக்கு ஏதேனும் அசம்பாவிதம் சுதந்திர தின விழாவில் நடந்தால் , அது மோடி உயிர் சம்மந்தப்பட்ட பிரச்சனை மட்டும் அல்ல , இந்தியாவின் கௌரவம் சம்மந்தப்பட்ட விஷயமும் ஆகும். ராணுவ தளபதிகள் வீரம் காட்டட்டும். பிரதமர் வீரத்தை ஊட்டுவதோடு நிறுத்திக்கொண்டு விவேகத்தை காட்டுவதே சிறந்தது.

Posted: 09 Sep 2014 06:37 AM PDT

அதிமுக ஆட்சி வந்த பிறகு பொது மக்களிடையே பெரிய குறைபாடு ஏதும் உணரப்படாமல்தான் இருந்தது. எதிர் கட்சிகள் ஏதேதோ சொன்னாலும் , அதெல்லாம் சப்பை மேட்டர் என அம்மா மேல் அன்பாகத்தான் இருந்தார்கள். திமுக என்ன செய்வது எனத் தெரியாமல் உட்கட்சி பஞ்சாயத்தில் பிஸியானது. எவ்வளவு நாட்கள்தான் இப்படியே ஓடும் ? யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப்போட்டுக்கொள்வது போல , திமுக , அதிமுக இரண்டுமே எதிர் கட்சிகளுக்கு வேலை வைக்காமல் நன்றாக போய்க்கொண்டு இருக்கும் தருணங்களில் தன் தலையிலேயே தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் வழக்கமுடையவைகள்தான். உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் ,பாஜக கடைசி நேரத்தில் மனுவை வாபஸ் வாங்கி , அதிமுக வேட்பாளர் ஜெயித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது பொதுமக்களை முதன்முறையாக முகம் சுளிக்க வைத்திருக்கிறது. சில இடங்களில் கடத்தல் என்று வேறு புகார் இருக்கிறது. தமிழகத்தில் பாஜக ஒரு மேட்டரா? அம்மாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என நிர்வாகிகள் இப்படி செய்தார்களோ ? அல்லது அம்மாவின் ஆசீர்வாதத்தோடுதான் செய்தார்களோ ? எப்படி இருந்தாலும் , முதல் கோணல் மற்றும் முகச்சுளிப்பு ஆரம்பம். திமுக இங்கேயிருந்து ஆரம்பித்தால் போதுமானது. அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்கிறதா எனத் தெரியவில்லை!

Posted: 09 Sep 2014 01:30 AM PDT

0 comments:

Post a Comment