Saturday, 9 August 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தமிழனாய் பிறக்க, எந்த ஜென்மத்தில்,என்ன தவம் செய்தோமோ! சங்க காலத்திலேயே எழுதப்பட...

Posted: 09 Aug 2014 07:00 AM PDT

தமிழனாய் பிறக்க, எந்த ஜென்மத்தில்,என்ன தவம் செய்தோமோ!

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."
- கணக்கதிகாரம்

விளக்கம் :

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

இதையும் ஒரு நாள் முயற்சி செய்து பாருங்களேன்!!!

தமிழர்களின் அருமை அப்போது தெரியும்!!!

நன்றி : தமிழ் - பொது குழு


சீனாவில் தமிழிலும் அறிவிப்பு!!! தமிழகத்தில்...!!!? சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்த...

Posted: 09 Aug 2014 06:28 AM PDT

சீனாவில் தமிழிலும் அறிவிப்பு!!! தமிழகத்தில்...!!!?

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்கோபோ ரயில் நிலையத்தில் குடிநீர் குறித்து தமிழில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மொழிகளில் குடிநீர் இருப்பது தொடர்பாக குறிக்கபட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.

சீனாவில் தமிழின் சிறப்பு போற்றப்படுகையில் தமிழகத்தில் தமிழின் நிலை....!?

நன்றி : தமிழ் - பொது குழு


என்னை போல இருக்குற பசங்களூக்கு ஒரே ஆருதல் அம்மா தான் ♥

Posted: 09 Aug 2014 06:14 AM PDT

என்னை போல இருக்குற பசங்களூக்கு ஒரே ஆருதல் அம்மா தான் ♥


0 comments:

Post a Comment