Saturday, 9 August 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை திமுகவின் பொதுக்குழு முடிவு செய்யும் - கருணாநி...

Posted: 09 Aug 2014 09:13 PM PDT

முதலமைச்சர் வேட்பாளர்
யார்
என்பதை திமுகவின்
பொதுக்குழு முடிவு செய்யும்
- கருணாநிதி
#
இதை இட்லின்னு சொன்னா சட்னிகூட
நம்பாது தலிவரே!

- நம்பிக்கை ராஜ்

”வெட்கப்படும் ஒரே மிருகம் மனிதன் தான். வெட்கபடவேண்டிய ஒரே மிருகமும் மனிதன் தான்....

Posted: 09 Aug 2014 09:06 PM PDT

"வெட்கப்படும்
ஒரே மிருகம் மனிதன்
தான்.
வெட்கபடவேண்டிய
ஒரே மிருகமும் மனிதன்
தான்." - மார்க் ட்வைன்.

#ரக்ஷாபந்தன் ,சேட்டு பொண்ணுங்க வடநாட்டுல கொண்டாடுற ஒரு பண்டிகை,நம்ம பொண்ணுங்க ஏன...

Posted: 09 Aug 2014 08:41 PM PDT

#ரக்ஷாபந்தன்
,சேட்டு பொண்ணுங்க
வடநாட்டுல
கொண்டாடுற
ஒரு பண்டிகை,நம்ம
பொண்ணுங்க ஏன்
கையில கயிற
தூக்கிட்டு சுத்துறாளுக...

மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,641 கோடி வருமானம்!: மதுவிலக்கு சாத்தியமில்லை -...

Posted: 09 Aug 2014 08:00 PM PDT

மது விற்பனை மூலம்
அரசுக்கு ரூ.21,641
கோடி வருமானம்!:
மதுவிலக்கு சாத்தியமில்லை -
நத்தம் விசுவநாதன்.

//மது வியாபாரத்தைவிட
விபச்சாரவிடுதிகள்
நடத்தினால் பணமும்
அதிகம் கிடைக்கும்,
குற்றங்களும்
குறையும்.
சின்னக்குழந்தைகள்
நிம்மதியாக வெளியில்
நடமாடும்.

ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான பள்ளிப்படைக் கோயில், திருப்புறம்பியம், தஞ்சை ம...

Posted: 09 Aug 2014 11:04 AM PDT

ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான பள்ளிப்படைக் கோயில்,
திருப்புறம்பியம், தஞ்சை மாவட்டம்.


அழகிய ஈழம்! அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்.

Posted: 09 Aug 2014 09:55 AM PDT

அழகிய ஈழம்! அரியாலை கிழக்கு, யாழ்ப்பாணம்.


பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ராஜீவ் நிறைவேற்றவில்லை! பழ.நெடுமாறன் ''ராஜீ...

Posted: 09 Aug 2014 05:35 AM PDT

பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ராஜீவ் நிறைவேற்றவில்லை!
பழ.நெடுமாறன்

''ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார்'' என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, 'One life is not enough'(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.

பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை?
1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இலங்கைத் தூதுவராக இருந்த தீட்சித், புலனாய்வுத் துறையின் தலைவர் எம்.கே.நாராயணன் மற்றும் பல உயர் அதிகாரிகள் பிரபாகரனைச் சந்தித்து இலங்கையுடன் இந்தியா செய்துகொள்ளப்போகும் உடன்பாட்டினை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள், ஒரு கட்டத்தில் மிரட்டினார்கள். பிறகு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை தில்லிக்கு வரவழைத்து பிரபாகரனுடன் பேசும்படி செய்தார்கள்.
இந்திய - இலங்கை உடன்பாட்டினை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணத்தை எம்.ஜி.ஆர் கேட்டார். பிரபாகரனும் பாலசிங்கமும் அதற்குத் தக்க பதில் கூறினார்கள். அதற்குப் பிறகு பிரபாகரனின் நிலைப்பாட்டை ஆதரித்த எம்.ஜி.ஆர், ''இந்தப் பிரச்னையில் பிரபாகரன் எத்தகைய முடிவு எடுக்கிறாரோ, அதற்கு தனது முழு ஆதரவும் இருக்கும்'' என்று கூறினார்.
அதற்குப் பிறகு ஜூலை 28-ம் நாள் நள்ளிரவில் பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் பிரதமர் ராஜீவ் சந்தித்தார். ''உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக அறிந்தேன். அதில் உள்ள குறைபாடுகள் குறித்து எனக்கு விவரமாகக் கூறுவீர்களா?'' என்று கேட்டார். ''ஒற்றையாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டிருக்கிற இலங்கையில் இந்த உடன்பாட்டின்படி அதிகாரப் பகிர்வு செய்வது என்பது இயலாத காரியம். மேலும், மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மிகவும் குறைவானது. இந்த உடன்பாடு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானது'' என்றார் பாலசிங்கம்.
அதற்கு ராஜீவ்காந்தி, ''உங்கள் நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்'' என்றார்.
இறுதியாக, வடகிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. இடைக்கால ஆட்சியின் அதிகாரம், செயற்பாடு போன்ற விஷயங்களை ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு காண்பதாக ராஜீவ் உறுதி அளித்தார்.

தமிழர்களின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல் துறை நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கூறினார். அதற்கு ராஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார்.

''ஆயுதங்கள் ஒப்படைப்புப் பற்றிய பிரச்னையில் சிறிதளவு ஆயுதங்களை புலிகள் ஒப்படைத்தால் போதும்'' என ராஜீவ் கூறினார்.

இந்தப் பேச்சு முடிவடைந்த நேரத்தில், அருகே இருந்த தமிழக அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் பாலசிங்கம், ''ராஜீவ் காந்தி - பிரபாகரன் உடன்பாடு பற்றி இங்கு பேசப்பட்டது. பிரதமரும் பல வாக்குறுதிகள் அளித்திருக்கிறார். இவை அனைத்தையும் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடம் இருந்தும் கையொப்பம் பெற்றால் நல்லது. அது இந்த ரகசிய உடன்பாட்டுக்கு வலிமை சேர்க்கும்'' எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த ராஜீவ், ''நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். இது எழுதப்படாத உடன்பாடாக இருக்கட்டும்'' என ராஜீவ் கூறினார். அதற்குப் பிறகு, ''புலிகளின் தியாகம் பெரிது. அவர்களின் தியாகம் இல்லாவிட்டால், ஜெயவர்த்தனா இந்த உடன்பாட்டுக்கு வந்திருக்கவே மாட்டார் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்'' என்று கூறினார்.

இவ்வாறெல்லாம் கூறிய ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனாவுடன் உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாட்டில் சொல்லப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனா மறுத்தபோது அவரைத் தட்டிக் கேட்கவில்லை.

1. பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் சிறைவைக்கப்பட்டத் தமிழர்களை விடுதலை செய்யவில்லை.

2. வடகிழக்கு மாநிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவில்லை. இடைக்கால அரசு அமைந்த பிறகே, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது மீறப்பட்டு, போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டன.

3. சிங்கள ஊர்க்காவல் படையிடம் இருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெறவில்லை.

உடன்பாட்டில் கண்ட மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ஜெயவர்த்தனா மறுத்தபோது, திலீபன் சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார். சிங்கள அரசு செய்யத் தவறியவற்றை உடனே நிறைவேற்றுமாறு இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றுதான் அவர் கேட்டார். ஆனால், பிரதமர் ராஜீவ் காந்தி வாயைத் திறக்கவில்லை. இதன் விளைவாக திலீபன் உயிரைத் தியாகம் செய்ய நேரிட்டது.

சென்னையில் உள்ள தங்கள் அலுவலகத்தைக் காலிசெய்து, அங்கிருந்த ஆவணங்களை எடுத்து வருவதற்காக இந்திய ராணுவத் தளபதியின் அனுமதிபெற்று புலேந்திரன், குமரப்பா உள்பட 17 பேர் சென்ற படகை நடுக்கடலில் 1987-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மறித்த சிங்களக் கடற்படை, அவர்களைக் கைது செய்தது. ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்த அமைதிப்படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹர்ஹரத் சிங் சிங்களக் கடற்படையின் செயலைக் கண்டித்தார். சிங்கள ராணுவக் கட்டுப்பாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 17 புலிகளைக் காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவத்தை அவர்களைச் சுற்றி நிறுத்தினார். இதை ஜெயவர்த்தனா விரும்பவில்லை.

17 விடுதலைப் புலிகளுக்கு ஏதேனும் நேருமானால், அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என அமைதிப்படையின் தலைமைத் தளபதியான திபீந்தர் சிங் தில்லிக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனால், அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கானது. முழுமையாக ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த ராஜீவ், யாருடைய அறிவுரையையும் கேட்க மறுக்கிறார். எதிலும் தலையிட வேண்டாம் என அமைதிப்படையின் தளபதிக்குச் செய்தி அனுப்புகிறார். இதன் விளைவாக 17 புலிகள் சிறைவைக்கப்பட்டிருந்த இடத்தைக் காவல் காத்துவந்த இந்திய அமைதிப்படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர். சிங்கள ராணுவ வீரர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டனர். இதன் விளைவாக 17 புலிகளும் நச்சுக் குப்பிகளை கடித்தனர். 12 பேர் உயிர்த் தியாகம் புரிந்தனர். எஞ்சிய ஐவர் மருத்துவமனையில் பிழைத்துக்கொண்டனர்.

ஒருபுறம் பிரபாகரனுக்கு வாக்குறுதிகள் தந்து அவரிடம் இருந்து ஆயுதங்களை ஒப்படைக்க வைத்த ராஜீவ் காந்தி, மறுபுறம் துரோக இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களைக் கொடுத்து விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு ஏவிவிட்டார். அவர்களை இந்திய ராணுவத் துணையுடன் இலங்கைக்கு அனுப்பிவைத்தார். விடுதலைப் புலிகளிடம் இடைக்கால அரசை ஒப்படைப்பது என்ற நோக்கம் ராஜீவ் காந்திக்கு இருந்திருந்தால், துரோக இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி ஏவிவிட்டது ஏன்?

இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த திபீந்தர் சிங், 'இலங்கையில் இந்திய அமைதிப்படை' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் போருக்குக் காரணம் யார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன. பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் போரைத் தொடங்கவில்லை என்று இந்த விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

புலிகளுடன் உடனடியாகப் போர்த் தொடுக்காவிட்டால், இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டை ரத்துசெய்யப்போவதாக ஜெயவர்த்தனா பயமுறுத்தினார். இதைக் கண்டு அச்சமடைந்த ராஜீவ் காந்தி, இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கே.சி.பந்த், இந்தியப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோரை கொழும்புக்கு அனுப்பினார். அவர்களுடன் திபீந்தர் சிங்கும் சென்றிருந்தார். இந்த மூன்று பேர் முன்னிலையில் மீண்டும் ஜெயவர்த்தனா மேற்கண்ட மிரட்டலை விடுத்தார். பதறிப்போன அமைச்சர் பந்த், உடனடியாக ராஜீவுடன் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்தார்.

உடன்பாடு ரத்து செய்யப்படுமானால் தனது செல்வாக்கு அதலபாதளத்துக்குச் சரிந்துவிடும் என்பதை உணர்ந்த ராஜீவ் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தார். போஃபர்ஸ் ஊழலினால் சரிந்துவிட்ட தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தவே இலங்கையுடன் உடன்பாடு செய்த ராஜீவ், அது ரத்தானால் தனது உலக மரியாதையே போய்விடும் என்ற பயத்தில் ஜெயவர்த்தனாவை திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரானார்.

புலிகளுடன் போர்த்தொடுக்குமாறு இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிடப்பட்டது. ராஜீவ் என்ற தனிமனிதனின் போலி கௌரவத்தை நிலைநிறுத்த இந்திய நாட்டின் கௌரவம் சீரழிக்கப்பட்டது. போஃபர்ஸ் பிரச்னையில் தன்மீது படிந்த ஊழல் கறையை ஈழத் தமிழர்களின் குருதியைக்கொண்டு கழுவ ராஜீவ் முடிவு செய்தார். இதன் விளைவாக பெரும்போர் மூண்டது.

துரோகம் செய்தது ராஜீவே தவிர, பிரபாகரன் அல்ல என்பதை வரலாற்றுச் சான்றுகள் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன!

- ஜூனியர் விகடன்


அழகு ஒக்கேனக்கல் அருவி!

Posted: 09 Aug 2014 05:15 AM PDT

அழகு ஒக்கேனக்கல் அருவி!


இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... பெறுமதியை சொல்வார்கள்...! ► ஒரு மில்லி செகண்டி...

Posted: 09 Aug 2014 04:45 AM PDT

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... பெறுமதியை சொல்வார்கள்...!

► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற
ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

>>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை...


இது ஜோக் அல்ல ************************ குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது, "...

Posted: 09 Aug 2014 02:00 AM PDT

இது ஜோக் அல்ல
************************
குழந்தை வெகுளித்தனமாக
தன் தாயை கேட்டது,
"அம்மா, நம்
வீட்டு வேலைக்காரியிடம்
உன்னுடைய
பர்ஸையும்,
நகைகளையும் கொஞ்ச
நேரம்
குடுத்து பார்த்துக்கொள்ள
சொல்வாயா?"
"அதெப்படி முடியும்…
அவளை நான்
நம்புவதில்லை"
"அப்பறம் ஏன்
என்னை மட்டும்
அவளிடம்
விட்டு செல்கிறாய் ?"
-jayant

பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் தமிழே ஆட்சி மொழியாக இருந்தது; தமிழ்ப் புலவர்கள்...

Posted: 09 Aug 2014 01:45 AM PDT

பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் தமிழே ஆட்சி மொழியாக இருந்தது; தமிழ்ப் புலவர்கள் தமிழரசர்களால் ஆதரிக்கப்பட்டனர்.

தமிழில் கம்ப ராமாயணம், பெரிய புராணம்போன்ற பேரிலக்கியங்களும் படைக்கப்பட்டன.

தேவாரம் உள்ளிட்ட சமய இலக்கியங்கள் வளர்ச்சியுற்றதும் இக்காலத்தில்தான்.

சமயத்தைக்காழ்ப்புடனேயே பார்த்துப் பழகிய திராவிட வாதிகள் இதனைப் பொருட்படுத்தாததில் பெரும் ஆச்சரியமேதுமில்லை.

சமய/தத்துவ கருத்தாக்கங்களில் வடமொழி ஆதிக்கம் இருப்பினும் கூடஆட்சி மொழியாகவும் பண்பாட்டு மொழியாகவும் தமிழ்இருந்தமை ஈண்டு கவனிக்கத்தக்கது

.ஆனால் விசயநகர ஆட்சியும் அதன் கிளையான நாயக்கர் ஆட்சியும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது தெலுங்கு ஆட்சி மொழியாக்கப்பட்டது.

இவர்கள்தெலுங்கு மரபினர்; பலிஜா நாயுடு வகுப்பினர் (ஆதாரம்:http://en.wikipedia.org/wiki/Balija_dynasties). இவர்தம் ஆட்சிக் காலத்தில்தெலுங்கு ஆட்சிமொழியாக்கப்பட்டதோடு, வட மொழி வலுவான நிலையை அடைகிறது.

தமிழ் இலக்கியங்கள் முடக்கப்பட்டு அரசர் புகழ் பாடும் சிற்றிலக்கியங்கள் தலையெடுத்தன. பல நாயக்க மன்னர்கள் தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளில் மேதமை கொண்டு அம்மொழிகளில் இலக்கியம் படைத்துள்ளனர்

. இந்தக் காலத்தில்தான் நம் மரபான தமிழிசை கர்நாடக இசையாகத் திரிக்கப்பட்டது. நம் தமிழிசை மூவர் மறைக்கப்பட்டு சங்கீத மும்மூர்த்திகள் முன்னிறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்ப் பண் வளர்த்த காவிரி மண் தெலுங்கு பாடத் தொடங்கிற்று.நாயக்க மன்னர் கொண்டு வந்த நில மானிய முறையில் எல்லா நிலமும் அரசனுக்கே சொந்தமாகக் கருதப்பட்டது

. இது தமிழரசர்களின் காணியாட்சி முறைக்கு முற்றிலும் முரணானது.

மதுரை நாயக்க மன்னர் கொண்டு வந்த பாளையப்பட்டு முறையில் மொத்தமுள்ள 72 பாளையப்பட்டுகளுள் தெலுங்கு,கன்னட மரபினருக்கு 61 பாளையப்பட்டுகளும் தமிழ் மரபினருக்கு 11 பாளையப்பட்டுகளும் வழங்கப்பட்டன.

இதுவே இன்று வரையிலும் தமிழகத்தில் பெரும்பான்மை நிலவுடைமையாளர்களாகத் தெலுங்கர் வேரூன்ற வழி வகுத்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இவர்களுக்கு உதவியாக நிலம் பெயர்ந்து வந்த பிற தொழில் செய்பவர்களும் இங்கு குடியேற்றம் செய்யப்பட்டனர்.

அவ்வம் மரபினர் இன்றைக்கும் தமிழகத்தில் கால் கொண்டு, வேரூன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்குத் திராவிட வாதம் பேசித் தமிழரசர்களின் ஆட்சியை விமர்சிப்பவர்கள் நாயக்கர் ஆட்சியை விமர்சிக்காததன் உள்ளடக்கம் என்ன? அவர்தம் நோக்கம்தான் என்ன?

Posted: 09 Aug 2014 12:45 AM PDT


0 comments:

Post a Comment