Tuesday, 12 August 2014

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


எங்கே போனாய் தாவணியே.... எங்கே போனாய் கடந்த நூற்றாண்டின் காணாமல்போனவைகளின் பட்...

Posted: 12 Aug 2014 04:18 AM PDT

எங்கே போனாய் தாவணியே....

எங்கே போனாய்

கடந்த நூற்றாண்டின்
காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட
காணவில்லை உன் பெயரை.

கிராமபுறங்களில்
விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும்
தொலைந்து போய்விட்டாயே.

வயல்வெளிகளையும்,உன்னையும்
இனிவரும்
தலைமுறை
இன்டர்நெட்டில்தான்
காணமுடியும்.

சுடிதார்,மிடி,ஜீன்ஸ்
என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும்
எடுத்துவிட்டது
நைட்டி.

இன்று
கொஞ்சமாவது
தன் படங்களில்
உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
நன்றி சொல்வாய்...

தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட
தாவணியே...

- ஜெகன் கனேசன்


வெளிநாட்டு மகனின் தந்தையின் கண்ணீர்...! வாங்கிய கடனுக்காக நகையை வட்டி கடையிலும்,...

Posted: 11 Aug 2014 11:47 PM PDT

வெளிநாட்டு மகனின்
தந்தையின் கண்ணீர்...!
வாங்கிய கடனுக்காக
நகையை வட்டி கடையிலும்,
பத்திரத்தை வங்கியிலும்,
என் மகனை வெளிநாட்டிலும்
அடகு வைத்தேன்....
கண்டிபாக ஒரு நாள்
அவனையும்
மீட்டுவிடுவேன்..
ஆனால் அவன் இல்லாத
ஊர் திருவிழாவையும், உறவினர்
திருமணத்தையும், நண்பனின்
மரணத்தையும், செல்போனிலும்
பேஸ்
புக்கிலும் கேட்டு... கேட்டு...
வாழ்கையையும்,
இளமைகாலத்தையும்,
தொலைத்த
அவனை நான்
எப்படி மீட்டுதருவேன்?
வீசாவிற்க்கு பணம் கட்டி,
காதலுக்கு சமாதி கட்டி,
சூழ்நிலைக்கு தாலிகட்டி,
வட்டி கட்ட சென்றவனின்
மனைவியை தவறாகத்தானே
பார்கிறது இந்த சமூகம்...
பையன் பக்கத்தில்
இல்லை என்றால்
பக்கத்து வீட்டுகாரன்கூட
பகைக்க
பார்க்கிறான்...
என் மகன் வந்தால்
சென்ட் வியாபாரியாக,
தைலம் விற்பவனாக,
ஃபாரின் சரக்கு தருபவனாகதான்
பார்க்கிறார்கள்..
ஆனால் என் கண்களுக்குமட்டும்
அவன் வாளருந்த பட்டமாகதான்
தெரிகிறான்...
உங்கள்
குழந்தைகளுக்கு குடிப்பதும்,
புகைப்பதும் குற்றம்
என்று சொல்லி தரும் நீங்கள்
கடன்
வாங்குவதும் குற்றம்
என்று சொல்லிக்
கொடுங்கள்....
வட்டிக்கு விடுவது பாவம்
என்பார்கள்
அதை மாற்றி எழுதுங்கள்
வாங்கியவனே பாவம் என்று..

0 comments:

Post a Comment