FB Posts by Araathu அராத்து |
- இந்தியா என்ற ஒரு நாடு பழங்காலத்தில் இல்லை. சரி ! சுதந்திரம் வாங்கிய பிறகே பல சமஸ்தானங்களை இணைத்து இந்தியா உருவானது . இதுவும் சரிதான் ! உலகம் தோன்றிய போதே எந்த நாடுதான் தோன்றி இருந்தது ? எல்லா நாடுகளும் காலப்போக்கில் உருவானதுதான். என்னா பிரச்சனைன்னா ? இந்தியான்னு ஒரு நாடே இல்லைன்னு சொல்றப்ப எதுக்கு இவ்வளோ சந்தோஷம் ? அதை நீங்க சொல்றப்ப உங்களை மீறி வெளிப்படும் சந்தோஷம்தான் வித்தியாசமா இருக்கு ! வேற எந்த நாட்டுக்காரனாவது , இதுக்கு முன்னால இந்த நாடே இல்லைன்னு சந்தோஷமா கத்திகிட்டு திரியிறானா ?
- தற்கொலை கவிதைகள் யாருமில்லா அலுவலகத்தில் இரு விரல்களுக்கு இடையில் ரெனால்ட்ஸ் பேனாவை வைத்து ஆட்டிக்கொண்டிருந்தான். மேஜையில் வேகமாக கடந்த கரப்பான் பூச்சியை பேனாவின் பின் பக்கத்தால் நிமிண்டினான். மல்லாக்க அடித்து மார் மார் அடித்துக்கொண்டது பூச்சி. வெறிக்கப்பார்த்துப் பின் பேனாவின் முன் பக்கத்தால் குத்தினான். அப்படியே எடுத்து பேனா ஸ்டேண்டில் நிற்க வைத்தான். குத்துயிரும் கொலையுயிருமாய் பறந்து கொண்டிருந்தது கரப்பான் பூச்சி. மொபைல் மூலம் எதிர்பாரா தொகைக்கு ஆர்டர் உறுதியாயிற்று. தண்ணீர் பாட்டிலினுள் பேனா நுழைத்து தண்ணீர் எடுத்து திரும்பவும் மல்லாக்க படுக்க வைக்கப்பட்டிருக்கும் பூச்சியின் வாயில் சொட்டு சொட்டாக பேனா முள் மூலம் பதட்டத்துடன் கூடிய கருணையுடன் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறான்
- காமிக்ஸ் சின்ன வயதில் கடன் வாங்கியும் , கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து விலைக்கு வாங்கியும் வெறி கொண்டு காமிக்ஸ் படித்தவன் தான் நானும். ஃபேஸ்புக்கில் சில வருடங்களாக ஆஹா காமிக்ஸ் , ஓஹோ காமிக்ஸ் என பலரும் பதிவு போட , திரும்பவும் வெறி கொண்டு ஆயிரத்தி சொச்சமோ ரெண்டாயிரத்தி சொச்சமோ ரூபாவுக்கு சென்னை புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸோ முத்து காமிக்ஸோ , அதுகூட நியாபகம் இல்லை மொத்தமாக கிலோ கணக்கில் வாங்கினேன். வாங்கி மூன்று வருடத்திற்கு மேல் இருக்கும். ஒரு காமிக்ஸ் கூட படிக்க முடியவில்லை. எப்படிச்சொல்வது ? சுத்தமாக மைண்ட் செட் ஆகவில்லை. எகித்துகிட்டு அடிக்கிது. (சிலருக்கு இப்போதும் சுவாரசியமாக இருக்கலாம் - எதுக்கு ஒம்பு ? ) இனி இதைப்போல நாஸ்டால்ஜியாப் பதிவுகளைப் பார்த்து நாம் இரையாகக்கூடாது என நினைத்துக்கொண்டேன்.எட்டாவது படிக்கும்போது தாவணி போட்ட ஷைலுவை சைட் அடிச்ச கதையை நெனைச்சி , இப்ப அவ விட்டுக்கு போய் , வாப்பா ! எப்டி தம்பி இருக்கன்னு? அவ கேட்டு பல்பு வாங்கினது போல ஆயிப்போச்சி !
Posted: 12 Aug 2014 10:16 PM PDT இந்தியா என்ற ஒரு நாடு பழங்காலத்தில் இல்லை. சரி ! சுதந்திரம் வாங்கிய பிறகே பல சமஸ்தானங்களை இணைத்து இந்தியா உருவானது . இதுவும் சரிதான் ! உலகம் தோன்றிய போதே எந்த நாடுதான் தோன்றி இருந்தது ? எல்லா நாடுகளும் காலப்போக்கில் உருவானதுதான். என்னா பிரச்சனைன்னா ? இந்தியான்னு ஒரு நாடே இல்லைன்னு சொல்றப்ப எதுக்கு இவ்வளோ சந்தோஷம் ? அதை நீங்க சொல்றப்ப உங்களை மீறி வெளிப்படும் சந்தோஷம்தான் வித்தியாசமா இருக்கு ! வேற எந்த நாட்டுக்காரனாவது , இதுக்கு முன்னால இந்த நாடே இல்லைன்னு சந்தோஷமா கத்திகிட்டு திரியிறானா ? |
Posted: 12 Aug 2014 05:54 AM PDT தற்கொலை கவிதைகள் யாருமில்லா அலுவலகத்தில் இரு விரல்களுக்கு இடையில் ரெனால்ட்ஸ் பேனாவை வைத்து ஆட்டிக்கொண்டிருந்தான். மேஜையில் வேகமாக கடந்த கரப்பான் பூச்சியை பேனாவின் பின் பக்கத்தால் நிமிண்டினான். மல்லாக்க அடித்து மார் மார் அடித்துக்கொண்டது பூச்சி. வெறிக்கப்பார்த்துப் பின் பேனாவின் முன் பக்கத்தால் குத்தினான். அப்படியே எடுத்து பேனா ஸ்டேண்டில் நிற்க வைத்தான். குத்துயிரும் கொலையுயிருமாய் பறந்து கொண்டிருந்தது கரப்பான் பூச்சி. மொபைல் மூலம் எதிர்பாரா தொகைக்கு ஆர்டர் உறுதியாயிற்று. தண்ணீர் பாட்டிலினுள் பேனா நுழைத்து தண்ணீர் எடுத்து திரும்பவும் மல்லாக்க படுக்க வைக்கப்பட்டிருக்கும் பூச்சியின் வாயில் சொட்டு சொட்டாக பேனா முள் மூலம் பதட்டத்துடன் கூடிய கருணையுடன் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறான் |
Posted: 12 Aug 2014 04:47 AM PDT காமிக்ஸ் சின்ன வயதில் கடன் வாங்கியும் , கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து விலைக்கு வாங்கியும் வெறி கொண்டு காமிக்ஸ் படித்தவன் தான் நானும். ஃபேஸ்புக்கில் சில வருடங்களாக ஆஹா காமிக்ஸ் , ஓஹோ காமிக்ஸ் என பலரும் பதிவு போட , திரும்பவும் வெறி கொண்டு ஆயிரத்தி சொச்சமோ ரெண்டாயிரத்தி சொச்சமோ ரூபாவுக்கு சென்னை புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸோ முத்து காமிக்ஸோ , அதுகூட நியாபகம் இல்லை மொத்தமாக கிலோ கணக்கில் வாங்கினேன். வாங்கி மூன்று வருடத்திற்கு மேல் இருக்கும். ஒரு காமிக்ஸ் கூட படிக்க முடியவில்லை. எப்படிச்சொல்வது ? சுத்தமாக மைண்ட் செட் ஆகவில்லை. எகித்துகிட்டு அடிக்கிது. (சிலருக்கு இப்போதும் சுவாரசியமாக இருக்கலாம் - எதுக்கு ஒம்பு ? ) இனி இதைப்போல நாஸ்டால்ஜியாப் பதிவுகளைப் பார்த்து நாம் இரையாகக்கூடாது என நினைத்துக்கொண்டேன்.எட்டாவது படிக்கும்போது தாவணி போட்ட ஷைலுவை சைட் அடிச்ச கதையை நெனைச்சி , இப்ப அவ விட்டுக்கு போய் , வாப்பா ! எப்டி தம்பி இருக்கன்னு? அவ கேட்டு பல்பு வாங்கினது போல ஆயிப்போச்சி ! |
You are subscribed to email updates from FB-RSS Feed for Araathu அராத்து (via Thenali Raman Vaarisu) To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment