Relax Please: FB page daily Posts |
- இங்கிலாந்தின் நடுவில் நியுவார்க் (Newark) என்ற பகுதியில் உணவு அருந்திக் கொண்டிரு...
- உங்களால் முடிஞ்சா இது சுத்துறத நிறுத்துங்க பார்ப்போம்...
- உலகின் மிக உயரமான பெண் (6'9"/2.1மm ) தன் காதலனுடன் (5'4"/1.5)
- இவை அனைத்தும் சேர்ந்த கலவைதான் நமது ராணுவ வீரர்கள்... நம் நாட்டை காக்கும் அவர்க...
- நண்பர்களை தெரிந்து கொள்வோம் ;-) :P ‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... ந...
- ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!! நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங...
- முட்டையை கொடுத்து, காசு வாங்குகிறவன் வியாபாரி. காசை கொடுத்து, முட்டையை வாங்குகி...
- அம்மா <3
- இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது...
- எவ்வளவு வெயிட்? ----------------------------- வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தா...
- அரெஞ்சு கிவி பழங்களில் அழகிய படைப்பு
- :)
- கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க..? மனைவி : நான் அழகாயிர...
- மிகவும் கவனம் நண்பர்களே... படித்துவிட்டு உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்...
- தலைவணங்குவோம் இவர் போன்றவர்களுக்கு (y)
- ஆப்பம் பால் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :)
- இன்னும் கொஞ்ச நாளுல இந்த மாதிரி யெல்லாம் பேப்பர்ல வர வாய்ப்பிருக்கு: “பேஸ்புக்...
- விலை நிலங்கள் எல்லாம் மனைகளாக மாறிக் கொண்டிருக்கும் காலத்திலும் விதை நெல்லை காக்...
- 1947ம் ஆண்டு இந்திய ரூபாய் நோட்டு நேதாஜி படத்துடன். இது போல் மறுபடியும் அச்சிட...
- :)
- உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக SAM...
- ஸ்ஸ் ஸப்பா...ரொம்ப கஷ்டம்.. முடியல... 1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த க...
- அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...? பையன்: போங்கப்பா, உங்களை மாத...
- நம்ப முடிகிறதா..? இது ஒரு ஓவியம்... இந்த ஓவியருக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்..
- :)
- இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர். காய்கறிச்சந்தைக்குச் சென்...
- தகவல் துணுக்குகள் 1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது. 2...
- குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதைவிட குழந்தையின் சிரிப்பில் கவலைகளை ப...
- :)
Posted: 08 Aug 2014 09:00 AM PDT இங்கிலாந்தின் நடுவில் நியுவார்க் (Newark) என்ற பகுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்த எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.. உணவு பரிமாறிய வெள்ளைக்காரரின் கையில் தமிழில் பச்சை குத்தியிருந்தது. அவரிடம் பேசியதில் "ஏதாவது வித்தியாசமாக பச்சை குத்த நினைத்தேன். இந்த மொழியின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. இது தமிழ் மொழி. உலகின் பழமையான மொழி" என்றார். "இது என்னுடைய பெயர். பாருங்கள்.. ஜெ.. ர்.. ரி.." என்று உச்சரித்துக் காட்டினார். தமிழன் என்று சொல்லி தமிழ் பேச வெட்கப்படும் எம்மவர்கள் இந்த ஜெர்ரியைப் பார்த்தாவது மனம் மாறுகிறார்களா பார்ப்போம்.. தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. (y) via Day Tamil ![]() |
Posted: 08 Aug 2014 08:50 AM PDT |
Posted: 08 Aug 2014 08:42 AM PDT |
Posted: 08 Aug 2014 08:30 AM PDT |
Posted: 08 Aug 2014 08:15 AM PDT நண்பர்களை தெரிந்து கொள்வோம் ;-) :P 'மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்'' னு நண்பன் சொன்னா...... # நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம். * ''மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்''னு நண்பன் சொன் னா...... # அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக் கிளம்பலன்னு அர்த்தம். ''மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்''னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா..... # ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம். ''பங்காளி, வாடா சரக்கடிப்போம்'' னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா.... # அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம். ''மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்''னு நண்பன் நம்ம போன வாங்குனா.... # நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம். ''பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்''னு நண்பன் சொன்னா.... # அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம். ''அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி,ரொம்ப ஹெட் வெயிட்டு''ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா... # அந்தப்பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான ்னு அர்த்தம். * ''மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா''ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா... # அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன் ஆளு இருக்குன்னு அர்த்தம். ''மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு''ன்னு பில்லு வர்றப்ப நண்பன் சொன்னா.... # இன்னைக்கு செலவு நம்மோட துன்னு அர்த்தம். ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz |
Posted: 08 Aug 2014 08:00 AM PDT ஒருநிமிடம் இதையும் படியுங்கள் நண்பர்களே!!! நம் பூமி மலட்டு நிலமாவதை தக்க உதவுங்கள் சகோதரர்களே!!!! சகோதரிகளே!!! அதிகம் பகிர்ந்து நம் கண்முன் நடக்கும் அழிவை மற்றவருக்கும் காட்டுங்கள் சொந்தங்களே!! ►கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்பரேஷன் லிமிட்டட் என்ற அமெரிக்க நிறுவனம் நம் தமிழ்நாட்டில் மீதேன் வாயு எடுக்க மத்திய அரசிடமும்,மாநில அரசிடமும் அனுமதி பெற்றுள்ளது.. ►மீதேன் வாயு எடுக்கப்படும் விதமும் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவை. • முதற்கட்டமாக நிலத்தடியிலுள்ள 1500 அடி ஆழத்திலுள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள்... • அதன் காரணமாக நிலத்தடியில் நீரை வெளிஎர்ரியப் பின்னர் அவ்விடத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாக அங்கு கடல்நீர் உட்புகுந்துவிடும். • நிலத்தடி நீர் உப்பானால் அங்கு விவசாயம் செய்ய முடியாது. • குடிப்பதற்கு கூட நீர் இல்லாமல் போகும். • பயிர்களும் மரங்களும் கருகி போகும்.. ►மீதேன் வாயுவை எடுக்க உங்களிடம் அமெரிக்க நிறுவனமான GELCL உங்களிடம் நிலத்தை நாப்பது வருட குத்தகைக்கு கேட்கும். ►நாப்பது வருடத்திற்கான குத்தகை பணத்தை ஒரே காசோலையில் கொடுத்து விடுவார்கள். ►நம் நிலம்தான் நாப்பது வருடத்தில் நம் கையிக்கு கிடைத்து விடுமே, அத்துடன் விவசாயம் செய்தாலும் நாப்பது வருடத்தில் இவ்வளவு சம்பாதிக்க முடியாதே என்று ஏமாந்து நீங்களும் நிலத்தை கொடுத்து விடுவீர்கள். ►நாற்பது வருடத்தில் உங்கள் நிலம் உங்கள் கையிலும் கிடைத்துவிடும் ஆனால் சக்கையாகி, எதற்கும் உதவாத பாலைவன நிலமாகத்தான் அது இருக்கும். ►ஏற்கனவே ஆற்று நீரும், குளத்து நீரும் இல்லாம போன நிலையில், நிலத்தடி நீரும் இல்லாமல் போய்விடும் ►எனவே இவர்கள் உங்களிடம் நிலத்தை குத்தகைக்கு கேட்டால் தயவு செய்து கொடுத்துவிடாதீர்கள். ►நம் எதிர்கால சந்ததியினரை வஞ்சிக்காதீர்.. ►நம் எதிர சந்ததியினருக்கு நம் பசுமையான தமிழ்நாட்டை விட்டுசெல்வோம் பாலைவனத்தை அல்ல.. ►ரத்தம் சிந்தி ஈன்றெடுத்த சுதந்திரத்தை மீண்டும் அயல்நாட்டு முதலாளியிடம் அடகு வைத்து விடாதீர்.. ►மயிலாடுதுறை நண்பர்களே இந்த திட்டம் முதல் கட்டமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியான திருவிடைமருதூர், நரசிங்கன்பேட்டை உட்பட்ட சில பகுதிகளில் எடுக்கப்பட உள்ளது. நம் நிலம் மலடாவதற்கு நீங்களே துணைபோகாதீர்கள் நண்பர்களே.. via Day Tamil.com ![]() |
Posted: 08 Aug 2014 07:45 AM PDT |
அம்மா <3 Posted: 08 Aug 2014 07:30 AM PDT |
Posted: 08 Aug 2014 07:15 AM PDT இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்: 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும். 4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும். 5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம். 6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம். 7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும். 8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும். 9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும். 10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும். 11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும். 12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது. ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz |
Posted: 08 Aug 2014 07:01 AM PDT எவ்வளவு வெயிட்? ----------------------------- வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார். "இது எவ்வளவு வெயிட் இருக்கும்?" 100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள். "இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல" வாத்தியார் தொடர்ந்தார். "இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?" "ஒண்ணுமே ஆகாது சார்" "வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?" "உங்க கை வலிக்கும் சார்" "ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…" "உங்க கை அப்படியே மரத்துடும் சார்" "வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?" "இல்லை சார். அது வந்து…" "எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?" "கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்" "எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?" # இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.. (y) ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz ![]() "நீதி கதை" |
Posted: 08 Aug 2014 06:45 AM PDT |
Posted: 08 Aug 2014 06:30 AM PDT |
Posted: 08 Aug 2014 06:15 AM PDT கணவன் : எப்படி நீ அழகாவும் இருக்க, முட்டாளாவும் இருக்க..? மனைவி : நான் அழகாயிருக்கறதுனாலதான், உங்களுக்கு என்னை பிடிச்சுருக்கு..., நான் முட்டாளாயிருக்கறதுனாலதான், எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.... ( அய்யோ...அய்யோ....) ஆனா, எவ்ளோ பெரிய உண்மையான, அறிவாளித்தனமான பதில்...!!! :P :P |
Posted: 08 Aug 2014 06:01 AM PDT மிகவும் கவனம் நண்பர்களே... படித்துவிட்டு உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.. கீழ்காணும் செய்தி போல ஃபேஸ்புக்கில் எங்காவது கண்டால் உடனே க்ளிக் செய்யாதீர்கள்.. I have changed my F-B color ♥ :) change yours now --> https://apps.facebook.com/black__?ref=63 or hey guys change your f-b color ♥ :) Its awesone --> https://apps.facebook.com/change-theme-now?ref=86 அது ஒரு வைரஸ்.. இதன் மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கு முடங்கவும் வாய்ப்புள்ளது.. பேஸ்புக்கில் உங்கள் கணக்கின் கலரை மாற்றும் முறை எதுவும் இல்லை. இது விஷமிகள் சிலரால் பரப்பபடும் ஒரு வைரஸ்.. முடிந்தால் பேஸ்புக்கிற்க்கு ரிப்போர்ட் (using report option, choose spam or scam ) செய்யுங்கள், அல்லது கண்டுகொள்ளாமல் விடுங்கள் படித்துவிட்டு உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.. ![]() |
Posted: 08 Aug 2014 05:50 AM PDT |
Posted: 08 Aug 2014 05:40 AM PDT |
Posted: 08 Aug 2014 05:30 AM PDT |
Posted: 08 Aug 2014 05:15 AM PDT இன்னும் கொஞ்ச நாளுல இந்த மாதிரி யெல்லாம் பேப்பர்ல வர வாய்ப்பிருக்கு: "பேஸ்புக் கமெண்ட் எதிரொலி - வாலிபருக்கு கத்திக்குத்து...!" "லைக் எதுவும் விழாததால், வாலிபர் தற்கொலை...!" "கணவன் போட்டோவிற்கு, மனைவி லைக் போடாததால் விவாகரத்து...!" "தினமும் லைக் போட ஆள் தேவை - ஒரு லைக் ரூ 1 ...!" "FB Status messageக்கும், இனி Patent rights ரிஜிஸ்டர் பண்ணலாம்...!" "இனி அலுவலகங்களில் தினம் ஒரு மணி நேரம் FB பார்க்க அனுமதி வேண்டும்- ஊழியர்கள் உண்ணாவிரதம்...!" (நீங்களும் இதுபோல எதாவது யோசிச்சி சொல்லுங்க ) :) |
Posted: 08 Aug 2014 05:02 AM PDT விலை நிலங்கள் எல்லாம் மனைகளாக மாறிக் கொண்டிருக்கும் காலத்திலும் விதை நெல்லை காக்க 'நமது நெல்லைக் காப்போம்' என்ற பெயரில் ஓர் இயக்கம். நெல் உற்பத்தியின் அவசியம், இயற்கை விவசாயம் செய்ய வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை முன்வைக்கும் இந்த இயக்கம், அழிந்து போகும் நிலையில் உள்ள நம்முடைய பாரம்பரிய நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் முக்கியப் பணியைச் செய்கிறது. அப்படி அவர்கள் பாதுகாத்து வைத்த விதை நெல்லை, ஊர் ஊராக சென்று விவாசயிகளுக்குத் தந்து அதை பயிர் செய்ய சொல்வதன் மூலம் பாரம்பரிய நெல்வகைகளை பெருகச் செய்திருக்கிறார்கள். முதன் முதலில் இப்படி ஊர் ஊராகச் சென்று விதை நெல்லை வழங்கியவர் கட்டிமேடு ஜெயராமன் தான்(படத்தில் இருப்பவர்) விதை நெல்லை வாங்கிப் பயிர் செய்யும் விவசாயிகள் நெல்லுக்குப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. பதிலாக, அந்த நெல் விளைந்தவுடன் நான்கு கிலோவாக திருப்பித் தர வேண்டும். இப்படி 2001-ல் நமது நெல்லைக் காப்போம் என்ற பிரசார இயக்கம் ஆரம்பித்ததன் பலனாக, இன்று 13,000-த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாரம்பரிய விதைகளின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்கள். முன்பு விவசாயிகளைத் தேடிப்போய் நெல்லைக் கொடுத்த நிலை மாறி, இப்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆதிரெங்கத்தில் இருக்கும் இவர்களுடைய பண்ணையைத் தேடிவந்து வாங்கிச் செல்கிறார்கள் விவசாயிகள். அது சரி, இயற்கை விவசாயம் என்றால் என்ன? அப்படி எந்த பாரம்பரிய விதை நெல்லை பாதுகாக்கிறார்கள். அதன் அவசியம் தான் என்ன? ஆராச்சி செய்து கண்டுப்பிடிக்கப் படுகிற நவீன நெல் வகைகள் மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக் கூடியவை. ரசாயனத்தால் விளையும் அவை மனிதனின் உடலில் அந்த ரசாயனத்தை இறக்கி வைத்துவிடுகின்றன. அதாவது உரம் மற்றும் பூச்சு மருந்து தெளித்து வளர்க்கபடுபவை. ஆனால்,நம் பாராம்பரிய நெல் வகைகளில் ஒவ்வொரு வியாதிக்கும் ஓர் அரிசி, மருந்தாகவே பயன்பட்டு இருக்கிறது. மாப்பிள்ளை சம்பாவும், காட்டுயானமும் உடலில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தி வைக்கும் நல் மருந்துகள். விதைத்து விட்டு வந்தால், அறுவடைக்குத்தான் வயலுக்குப்போக வேண்டும். இடையில் எந்த உரமும் பூச்சி மருந்தும் அடிக்கத் தேவை இல்லை. அதனால், அதில் ரசாயனம் ஏறாது. சாப்பிடுகிறவருக்கும் வியாதியைத் தராது. அதனால்தான் இந்த நெல் ரகங்களைப் பாதுகாக்க வேண்டும். இதுவே இயற்கை விவசாய முறை. இப்படி இயற்கை விவசாயம் அழியாமல் இருக்கவும், அந்த விதை நெல் மூலம் பல விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்திய திரு. ஜெயராமன் அவர்களை மனதார பாராட்டுவோம். விவசாயம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன என்று அரசாங்கமே இங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சுயநலமின்றி இந்த இயக்கத்தில் இணைந்து சேவை செய்யும் அனைத்து விவசாயிகளையும் நெஞ்சம் நெகிழ்ந்து பாராட்டுவோம். Source: http://www.valaitamil.com/namathu-nellai-kappom_12170.html#.U-S7NGOVqyE Wiki : http://ta.wikipedia.org/wiki/இரா._ஜெயராமன் ![]() "பசுமைப் புரட்சி - தோட்டக்கலை" |
Posted: 08 Aug 2014 04:47 AM PDT 1947ம் ஆண்டு இந்திய ரூபாய் நோட்டு நேதாஜி படத்துடன். இது போல் மறுபடியும் அச்சிட வேண்டுமென பகிரவும் இதை. . . ![]() சும்மா... சும்மா... 5 |
Posted: 08 Aug 2014 04:30 AM PDT |
Posted: 08 Aug 2014 04:15 AM PDT உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...! 1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய. 2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய. 3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும். 4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய. 5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock). 6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த. 7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய. 8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய. 9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண. 10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய. 11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண. 12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய. 13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய. 14)#*3888# -சாம்சங் போன்களின் Bluetoothயின் தகவல்களை அறிய. 15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க. 16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய. ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது. நன்றி படித்ததும் பகிரவும் |
Posted: 08 Aug 2014 04:01 AM PDT ஸ்ஸ் ஸப்பா...ரொம்ப கஷ்டம்.. முடியல... 1.மதியம் 2 டு 4 வகுப்புல தூங்காம பாடத்த கவனிக்கறது. 2.தேர்வில் தெரியாத கேள்விக்கு, பதில் எழுதற மாறியே பாவனை பண்றது. 3.கடும் குளிர்ல விடிய காலலைல எழுந்தறிப்பது. 4.பிடித்த உணவ, குறைவா சாப்பிடுவது. 5.பிடித்தவர்களிடம் பேசாமல் இருப்பது. 6.புதிதாய் பொய் சொல்லும் போது, சிரிக்காமல் சொல்வது. 7.எடுத்த பொருள எடுத்த இடத்துலேயே மறக்காம வைக்கறது. 8.வச்ச பொருள வச்ச இடத்துலேயே சரியாய் தேடறது. 9.புதுசா காதலிக்க ஆரம்பிச்சவன் பக்கத்துல அரை நாள் இருப்பது 10.சீரியஸா சீரியல் பாக்கறவங்க கைல இருந்து டிவி ரிமோட்ட வாங்கறது. 11. கம்ப்யூட்டர் ல எதையாவது கிளிக் செஞ்சிட்டு ஓபன் ஆகற வரை இன்னொரு முறை கிளிக் செய்யாமல் இருப்பது. 12. தலைவன் எப்ப கைய தூக்குவான், கால தூக்குவான் நாம கத்தலாம்னு காத்திருக்கிற கூட்டத்துக்கு நடுவுல தியேட்டர்ல ஒரு சினிமா பார்ப்பது. -ஆதிரா. ![]() குசும்பு... 1 |
Posted: 08 Aug 2014 03:50 AM PDT அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...? பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது :O :O |
Posted: 08 Aug 2014 03:40 AM PDT |
Posted: 08 Aug 2014 03:30 AM PDT |
Posted: 08 Aug 2014 03:15 AM PDT இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர். காய்கறிச்சந்தைக்குச் சென்றார்கள். அங்கு குடை மிளகாய் பார்த்தனர். இது என்ன பழம்?, ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே என்று வியாபாரியிடம் கேட்டனர்!. அவர் பேசும் தமிழ் இவர்களுக்கு புரியவில்லை. இவர்கள் பேசும் ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை. சரி இரண்டு பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள். முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் காரமாக இருந்ததால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. கண்ணீரைப் பார்த்த நண்பன் கேட்டான், 'ஏன் அழுகிறாய்'.? 'இல்லை 10 வருடத்திற்கு முன் என் மாமாவை தூக்கில் போட்டார்கள். அவரை நினைத்ததால் அழுகை வந்தது' என்றான். பிறகு 'இந்தா நீயும்சாப்பிடு' என்று இன்னொரு மிளகாயை நண்பனிடம் கொடுத்தான். நண்பனும் ஆர்வத்துடன் சாப்பிட்டான். காரத்தால் அவனுக்கும் கண்ணீர்வந்தது. அடப்பாவி, உண்மையை மறைத்து விட்டானே என்று கோபம் கோபமாய் வந்தது. அவன் கண்களில் கண்ணீரைக்கண்டதும், முன்னவன் கேட்டான், 'நீ ஏன் அழுகின்றாய்?' இவன் பதில் சொன்னான். 'இல்லை 10 வருடத்திற்கு முன் உன் மாமாவை தூக்கில் போட்ட போது ஏன் உன்னையும் சேர்த்து போடவில்லை என்று நினைத்தேன்' என்றான் :P |
Posted: 08 Aug 2014 03:06 AM PDT தகவல் துணுக்குகள் 1. உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது. 2.தண்ணீர் இருப்பதை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே வாசனை மூலம் தெரிந்துகொள்ளும். 3. யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை வரை இருக்கும். 4. ஆப்ரிக்கன் யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது. 5. நன்கு வளர்ந்த ஆப்ரிக்கன் யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் வரை இருக்கும். 6. யானை துதிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது. 7. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும். 8. ஆப்ரிக்கன் யானைகள் சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்கு முதலில் தண்ணீரை எடுத்து தனது உடலில் தெளிக்கும் பின் புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். அந்த சகதி லேயர் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ளும். பூச்சிகடியில் இருந்தும் இப்படித்தான் காத்துக்கொள்ளும். 9. யானையின் துதிக்கையின் நுனியில் உள்ள இரண்டு விரல்கள் மூலம் சின்ன குண்டுஊசியை கூட எடுத்துவிடும். 10. யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும். 11. சராசரியாக சுமார் எழுபது வருடம் வரை உயிர்வாழும் 12. யானையின் தகவல் தொடர்பு பூனையை போன்றே இருக்கும். 13. பொதுவாக ஒரு யானை கூட்டத்தில் ஓன்று முதல் ஆயிரம் யானைகள் வரை இருக்கும், கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானைதான். 14. பொதுவாக யானை கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். வயது வந்த ஆண் யானைகள் கூட்டத்தை விட்டு பிரிந்து விடும். 15. நான்கு வருடத்திற்கு ஒரு முறைதான் குட்டி போடும், அதிசயமாக சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். 16. 24 மணிநேரம் தண்ணீர் அருந்தவில்லை எனில் உயிரை விட்டுவிடும். 17. யானை துதிக்கை சுமார் 1,50,000 தசைகளால் ஆனது. மனிதன் உடம்பில் மெத்த தசைகளே 640 தான். 18. தாய்லாந்து நாட்டின் தேசிய விலங்கு யானைதான். ![]() தகவல் துணுக்குகள் |
Posted: 08 Aug 2014 02:45 AM PDT |
Posted: 08 Aug 2014 02:29 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment