Friday, 8 August 2014

Tamil Facebook Wall posts Kanjikku Lottry Kaikku Battery Page

Tamil Facebook Wall posts Kanjikku Lottry Kaikku Battery Page


ஏர்டெல் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!

Posted: 07 Aug 2014 06:31 PM PDT

ஏர்டெல் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!


மின்சாரத்திற்கு அல்லாடும் தமிழகத்தில்.. தில்லான தள்ளுவண்டிக்காரர்..! விழுப்புரம...

Posted: 07 Aug 2014 06:28 PM PDT

மின்சாரத்திற்கு அல்லாடும் தமிழகத்தில்..
தில்லான தள்ளுவண்டிக்காரர்..!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் நிற்கிறது தள்ளுவண்டி ஜூஸ் கடை. இந்த கடையின் மேல்கூரை சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்கும் solar panel-களால் ஆனது. இந்தக் கடையின் உரிமையாளர் ராமதாஸ், தனக்கு வித்தியாசமாக தோன்றிய ஐடியாவை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சொல்லி செயல்வடிவம் கொடுத்துள்ளார்.
5 அடி அகலம், 10 அடி நீளம் என 50 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் solar panel மூலம் 1000 watts-க்கு உட்பட்ட மிக்ஸி, சிறிய அளவிலான பிரீசர் (Freezer) , மின் விளக்கு போன்ற கடைக்கு தேவையான சாதனங்கள் இயங்குகின்றன.
இதனால் வழக்கமாக வீட்டு மின்சாரத்தை உறிஞ்சி பிறகு கடையில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தேவையில்லை. டீசலை உறிஞ்சும் ஜெனரேட்டர்களும் தேவையில்லை. சோலார் பேனல்களுக்கு 25 வருடங்கள் கியாரண்டி இருப்பதால், முதல்முறை செலவுசெய்தால் பிறகு 25 வருடங்கள் வரை செலவு செய்யத் தேவையில்லை.
'மற்ற தள்ளுவண்டி கடைகளில் தினசரி 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை மின் சக்திக்கென ஆகும். ஆனால் எனக்கு அந்தப்பிரச்சினை இல்லை. இந்த சோலார் பேனலுடன் கூடிய கடையை வடிவமைக்க ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகியது. காலப்போக்கில் நான் போட்ட பணம் வந்துவிடும். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத மன நிம்மதியும் எனக்கு கிடைக்கும்' என்கிறார் ராமதாஸ்.
ஒரு நகரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகள் அனைத்தும் இதுபோன்று வடிவமைக்கப்பட்டால், சேமிக்கப்படும் மின்சாரம் மற்றும் டீசலின் அளவு எவ்வளவு இருக்கும் என்று நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. குஜராத்தில் நர்மதா நதியின் மேல் போடப்பட்டுள்ள சோலார் திட்டத்தைப் பார்த்து அதிசயத்திருக்கிறோம். அதைவிட கூடுதலாக பல வாய்ப்புகள் தமிழக்த்தில் இருக்கின்றன என்பதற்கு இந்த தள்ளுவண்டி கடை ஒரு உதாரணம்.


0 comments:

Post a Comment