Relax Please: FB page daily Posts |
- :)
- ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒ...
- மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன் மருத்...
- :P
- 900 வருடங்கள் பழமையான நார்வேயில் உள்ள போர்கன்ட் ஸ்டேவ் ஆலயம் 900 Years Old Borg...
- :)
- மனைவி : என்ன செய்யறிங்க? கணவன் : ஒன்னும் செய்யல.... மனைவி : ஒன்னும் செய்யலயா.....
- 80 % நோய்கள் தானாகவே குணமடையும்! (படித்து பகிரவும்) உங்களுக்கு தெரியுமா உலகில்...
- அழகிய வெள்ளை மயில்
- உங்களுக்கு பிடித்த காமெடி நடிகர் இவர்களில் யார்? 1. கவுண்டமணி. 2. செந்தில். 3....
- :)
- நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய் காற்று வீசிக்கொண்டு இர...
- அலெக்சாண்டரை வீழ்த்திய போரஸ் (புருசோத்தமன்) தமிழ் மன்னன் என்பது எத்தனை பேருக்கு...
- எத்தனை முறை சண்டை போட்டாலும்... தேடிவந்து பேசும் தெய்வம் என் தாயை தவிர வேறேதும்...
- :)
- குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவர், தன் மனைவிக்கு தான் குடித்தது தெரிந்து வி...
- # நீதிபதிகளுக்கு ஒரு வேண்டுகோள் # நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் ஒரு அமைப்பி...
- நொங்கு வண்டி உருட்டுனவங்க லைக் பண்ணுங்க.....
- பயங்கற பசியோட இருக்குற இது உங்கள துரத்தினா... என்ன பண்ணுவீங்க....? ஆனா உங்க கைய...
- :)
- இந்தியர்களை எளிதில் கண்டுபிடிக்க எளிய வழிகள் சில… 1. ருபாய் 25000க்கு மொபைல் வா...
- எங்கே போனாய் தாவணியே.... எங்கே போனாய் கடந்த நூற்றாண்டின் காணாமல்போனவைகளின் பட்...
- விரும்பினால் மட்டும் விரும்புவது அன்பு அல்ல...♡ வெறுத்தாலும் விடாமல் இருப்பது தா...
- :)
- தமிழ் படிக்க தெரியுமா? எங்க இதனைப் படிங்க பார்ப்போம்! புத்திசாலிகளால் மட்டும்...
- எல்லோருக்குமே வாழ்க்கையில் கடைசி நாட்கள் என்று ஒன்று உண்டு. அப்போது என்ன செய்வா...
- தன் தாயை எங்கும் தன் தோளில் சுமக்கும் மகன்.. தாய் மீதான பாசத்திற்க்கு ஈடு இணையில...
- :)
- ஒரே நேரத்துல.. ஒன்பது ரியாக்சன் கொடுப்பது பெண்களின் குணம்.. ஒன்பதில், ஒன்னுமே ப...
Posted: 11 Aug 2014 09:30 AM PDT |
Posted: 11 Aug 2014 09:15 AM PDT ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான். பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான். பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார் ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் Relaxplzz |
Posted: 11 Aug 2014 09:00 AM PDT மருந்துச் சீட்டையும் தமிழில் எழுதும் தமிழ் பற்றாளரான மருத்துவர் க. கணேசன் மருத்துவர் கா. கணசேன் அரியலூரில் தமிழ் அன்னை மருத்துவமனை நடத்தி வருகிறார் . ஆங்கில வழி மருத்துவமுறையை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1968 ல் படித்து முடித்தவர் இவர் . தற்போது இவருக்கு வயது 71 . மருத்துவராக இருந்தாலும் தமிழ் மீது அதீத பற்று கொண்ட இவர் தன்னுடைய மருத்துவ சீட்டையே தமிழில் எழுத துவங்கி உள்ளார் என்றால் பாருங்களேன் . ஏறத்தாள 17 ஆண்டுகளாக இவர் தமிழ் மொழியில் தான் மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார். தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு தமிழில் பேசுமாறு அறிவுறுத்துகிறார். ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிர்க்கச் சொல்கிறார் . இவரிடம் வரும் நோயாளிகளும் இவரிடம் தூய தமிழ் மொழியிலேயே உரையாடுகிறார்கள். மருந்து சீட்டில் தமிழர்களுக்கு தமிழ் உணர்வு ஏற்படும்படியான வாசகங்களை எழுதி உள்ளார் . தமிழன் நீ என்றால் ஆங்கில கலப்பின்றி இனிய தமிழில் பேசு ' போன்ற வாசகங்களை எழுதியிள்ளார் . தன்னுடைய மருத்துவ பட்டப் படிப்பையும் தமிழில் மொழி பெயர்த்து சுருக்கியும் எழுதி உள்ளதை பார்க்கலாம் . மேலும் தமிழர்களின் தி. பி. திருவள்ளுவர் ஆண்டையும் எழுதுகிறார் . கிபி ஆண்டையும் குறிப்பிடுகிறார் . தமிழ் ஆண்டையும் தமிழ் மாதத்தையும் குறிப்பிட்டு எழுதும் உலகில் ஒரே மருத்துவர் இவராகத் தான் இருப்பார். மேலும் ஆங்கில மருத்துகளை தமிழில் எழுதும் போது ஒலி அளவில் வேறுபாடு வரும் . இதனால் மருந்து வழங்குவோருக்கு குழப்பம் ஏற்படும் . அக் குழப்பத்தை நீக்கும் வகையில் மருந்து சீட்டில் இடது புறத்தில் ஆங்கில ஓசைக்கு நிகரான தமிழ் வரி வடிவத்தையும் குறிப்பிட்டு காட்டியுள்ளார். இப்படியான தமிழ் பற்று உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று நாம் கேட்கையில் , அவர் 'எனக்கே தெரியவில்லை தமிழ் பற்று எனக்கு இப்போது முற்றிவிட்டது' எனக் கூறினார். அருகில் உள்ள ஸ்டார் மொபைல் என்ற அலைபேசி கடைக்கு விண்மீன் கைபேசியகம் என்று தமிழ் பெயராக மாற்றுமாறு அறிவுரை செய்துள்ளார் . யாரை பார்த்தாலும் தூய தமிழில் உரையாட வலியுறுத்துகிறார். 'தமிழா நீ தமிழில் பேசு' என்ற நூலையும் இப்போது வெளியிட உள்ளார் இவரை போன்ற சிறந்த மொழிப் பற்றாளர்கள் இருக்கும் வரை தமிழுக்கு என்றுமே அழிவில்லை என்பது மட்டும் உறுதி. மருத்துவத்துறையில் ஆங்கிலம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது என நினைபவர்கள் இவரை பார்த்து திருந்த வேண்டும் . தமிழ் மொழியை மருத்துவத்துறையில் வளர்க வேண்டும் . இவருக்கு சிறந்த தமிழ் பற்றாளர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவிக்க தமிழர் பண்பாட்டு நடுவம் முடிவு செய்துள்ளது. விரைவில் மருத்துவர் கணேசன் அவர்களின் படத்தை வெளியிடுகிறோம் . வாழ்க தமிழ் ! via-சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா ![]() பொது செய்திகள் - 1 |
Posted: 11 Aug 2014 08:50 AM PDT |
Posted: 11 Aug 2014 08:40 AM PDT |
Posted: 11 Aug 2014 08:30 AM PDT |
Posted: 11 Aug 2014 08:19 AM PDT மனைவி : என்ன செய்யறிங்க? கணவன் : ஒன்னும் செய்யல.... மனைவி : ஒன்னும் செய்யலயா....? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது..... ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' கணவன் : ம்ம்....இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்... :P :P ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் Relaxplzz |
Posted: 11 Aug 2014 08:04 AM PDT 80 % நோய்கள் தானாகவே குணமடையும்! (படித்து பகிரவும்) உங்களுக்கு தெரியுமா உலகில் உள்ள நோய்களில் சுமார் 80 சதவீதமான நோய்கள் தானாகவே குணமடையும் தன்மைக் கொண்டவை. அவற்றை குணப்படுத்த எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. ஆனால் நம்மில் சிலர் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தேவையில்லாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால் அவர்கள் மிகப்பெரிய பக்க விளைவுகளுக்கு ஆளாகுவதுடன், சில நேரங்களில் அது உயிராபத்தையும் ஏற்படுத்திவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் எல்லா மருந்துகளும் ஏதோ ஒரு வகையில் நமக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. எப்படி அது நோய்களை குணப்படுத்துகின்றதோ அதே அளவுக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் அதன் விலை, தேவை போன்றவற்றை கருத்தில் கொள்வதுடன், தேவை இருந்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்துங்கள். அந்த வகையில் மருந்து மாத்திரைகள் தொடர்பாக பின்வரும் விடயங்களை நீங்கள் அறிந்து வைத்துக் கொள்வது, உங்களுக்கு ஓரளவாவது பயன்தரக் கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம். முடியுமானவரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் இருக்கப் பழகி கொள்வது நல்லது. கருவுற்ற தாய்மார்கள், மருந்து மாத்திரைகள் சாப்பிடாமல் இருந்தால் அவர்கள் நலமாக இருப்பதை உணர்வார்கள். அவர்களுடைய அனுபவத்தை நாம் பாடமாக எடுத்துக் கொள்ளலாம். கட்டாயம் மருந்து எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்ற நிலை வந்தால், குறைவாக எடுத்துக் கொண்டு, விரைவிலேயே அதனை கைவிடுவது சிறந்தது. நீங்கள் சாப்பிடும் மருந்து மத்திரைகள் நேரடியாக கடைகளில் வாங்க கூடியதாக இருந்தாலும் அம்மருந்தை வைத்தியரிடம் காட்டி அவரது ஆலோசனைகளை பெறுவது நல்லது.நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் செயல், அதன் பக்க விளைவுகளைகள், அதற்கான மாற்று மருந்து போன்ற விடயங்களை மருத்துவ இதழ்கள் பத்திரிகை மற்றும் இணையத்தளங்களின் மூலமாக அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு அடிக்கடி மருந்து மாத்திரைகளை கொடுக்காதீர்கள். முடிந்தளவு அவற்றை தவிர்த்துக் கொள்ள பாருங்கள். மருந்து தயாரிப்பாளர்களின் ஆடம்பர விளம்பரங்களை அப்படியே நம்பி விடாதீர்கள். ff3(1)தானாக குணமடைந்து விடும் நோய்களுக்கு, தேவையில்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். அப்படியே மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவற்றை வாய் வழியாகவே எடுத்துக் கொள்ளுங்கள். சிலர் ஊசியின் மூலம் செலுத்திக் கொண்டால் அது விரைவாக செயல்படும் என நினைக்கின்றார்கள், அதில் உண்மையில்லை. இரு முறைகளும் ஒரே செயலாற்றல் கொண்டவைகள் தான். விலை குறைந்த மருந்துகளை பரிந்துரைக்குமாறு மருத்துவரிடம் கேளுங்கள். குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற நோய்களுக்கு மருந்துகள் பல்வேறு விலைகளில் கிடைக்கின்றன. அவற்றில் விலை குறைவான மருந்துகளை பெற்றுக் கொள்ளுங்கள். வைத்தியரை சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு தடவையும் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகளை உடன் எடுத்துச் செல்லுங்கள்.ஒரே நேரத்தில் அதிகளவான மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். அப்படியே உட்கொள்ள நேர்ந்தால், அவற்றை குறுகிய காலத்துக்கு மாத்திரம் பயன்படுத்துங்கள். நீண்ட காலத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டாம். உங்கள் நோய்க்கு முடியுமான வரைக்கும் மருந்து மாத்திரை இல்லாமல் ஏதேனும் சிகிச்சை முறைகள் இருக்கின்றனவா என்பதை வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால் அம்மருந்து பற்றிய விளக்க குறிப்புகளை எப்போதும் உங்களுடனேயே வைத்திருங்கள். அவசரமான தருணங்களில் அக்குறிப்புகள் மிகவும் பயனளிக்கும். இவ்வாறான சில அம்சங்களை பின்பற்றுவதன் மூலம் மருந்து மாத்திரைகளால் உங்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்த்துக் கொள்வதுடன், அதற்காக விரயமாகும் செலவுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களையும் முறையான உடற்பயிற்சிகளையும் செய்வதுடன், உடல் நலத்தை கருத்தில் கொண்டு எமது நாளாந்த செயற்பாடுகளை செய்து வந்தாலே எந்த நோய்களும் எம்மை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ள முடியும். Thanks: TamilMirror ![]() "சமுக கட்டுரைகள்" - 1 |
Posted: 11 Aug 2014 07:50 AM PDT |
Posted: 11 Aug 2014 07:40 AM PDT உங்களுக்கு பிடித்த காமெடி நடிகர் இவர்களில் யார்? 1. கவுண்டமணி. 2. செந்தில். 3. வடிவேலு. 4. சந்தானம். 5. விவேக். 6. நாகேஷ். 7. கருணாஸ். 8. கஞ்சா கருப்பு. 9. சத்யன். 10. சூரி. 11. மயில்சாமி. 12. தம்பி ராமையா. 13. M.S.பாஸ்கர். 14. மனோபாலா. 15. தாமு. 16. சார்லி. 17. சின்னி ஜெயந்த். 18. குமரிமுத்து. 19. மதன் பாப். 20. சிட்டி பாபு. 21. பாண்டு. 22. ஜனகராஜ். 23. ஓமகுச்சி நரசிம்மன். 24. வெண்ணிறாடை மூர்த்தி. 25. லூஸ் மோகன். 26. ரோபா ஷங்கர். 27. அமுதவானன். 28. வடிவேல் பாலாஜி. 29. 'லொள்ளு சபா' ஜீவா. 30. 'லொள்ளு சபா' சுவாமிநாதன். 31. 'லொள்ளு சபா' மனோகர். 32. இமான் அண்ணாச்சி. 33. N.S.கிருஷ்ணன். 34. சந்திரபாபு. 35. T.S.பாலையா. 36. சதிஷ். 37. சுருளிராஜன். 38. தேங்காய் சீனிவாசன். 39. மற்ற காமெடி நடிகர்கள் (பிடித்தால் குறிப்பிடவும்). |
Posted: 11 Aug 2014 07:30 AM PDT |
Posted: 11 Aug 2014 07:15 AM PDT நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய் காற்று வீசிக்கொண்டு இருந்தது. காற்றை கண்டதும்' அமைதி ' என்ற முதல் மெழுகுவர்த்தி ' ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது. 'அன்பு ' என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது' என்று அணைந்துவிட்டது. அறிவு ' என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது. நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சில நொடிகள் போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.'அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான். அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்' என்றது. சிறுவன் உடனே …… ' நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து " உன் பெயர் என்ன ?"என்று கேட்டான் . நம்பிக்கை என்றது மெழுகுவர்த்தி. நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது. (y) (y) ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் Relaxplzz |
Posted: 11 Aug 2014 07:00 AM PDT அலெக்சாண்டரை வீழ்த்திய போரஸ் (புருசோத்தமன்) தமிழ் மன்னன் என்பது எத்தனை பேருக்கு தெரியும். தமிழர்களிடமே யானைப்படை இருத்தது. 2300 ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளி பகுதியில் தமிழர்களே இருந்தனர். அலக்சாண்டர் தோற்றார் என்பதை உலகம் மறைத்தது. அவன் தமிழன் என்பதை இந்தியா மறைக்கிறது. உலகை வெல்ல புறப்பட்டவன் தமிழன் வீசிய ஈட்டி விசத்தில் சிக்கி நோய்வாய்பட்டு மாண்டான். அவன் இறப்புக்கு காரணம் நண்பனின் மரணம் என்று வேறு கதை கூறுகின்றனர். நண்பனும் புருசோத்தமனுடனான போரிலயே மாண்டான். இவர் சோழ மன்னர் என்று கூறுகின்றனர். வடக்கில் பஞ்சாப் பகுதியை ஆண்டவர். சில இடங்களில் பாண்டியமன்னன் எனவும் கூறுகின்றனர். எது எப்படியோ அவர் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம். தமிழனின் பெருமையை உலகறிய செய்ய இதை ஷேர் செய்யலாமே ! நன்றி : அன்பரசன் தரணி ![]() "தமிழ் - தமிழர் பெருமை" - 1 |
Posted: 11 Aug 2014 06:45 AM PDT |
Posted: 11 Aug 2014 06:30 AM PDT |
Posted: 11 Aug 2014 06:15 AM PDT குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவர், தன் மனைவிக்கு தான் குடித்தது தெரிந்து விடக் கூடாது என நினைக்கிறார். உடனே தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்வது போல் அமர்ந்து கொள்கிறார். அப்போது அங்கே மனைவி வருகிறார். "குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?" "இல்லையே..." "பொய் சொல்லாதீங்க... எனக்குத் தெரியும் நீங்க குடிச்சிட்டுத் தான் வந்திருக்கீங்க..." கணவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. "எப்படிக் கண்டுபிடிச்ச...?" எரிச்சலுடன் மனைவி சொல்கிறார்... "ம்க்கும்... இதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும் ... அதான் பார்த்தாலே தெரியுதே...." மேலும், கணவர் ஆச்சர்யத்துடன் கேட்கிறார்... "எப்படி..?" "நீங்க லேப்டாப்புனு நினைச்சு மடில வைச்சு வொர்க் பண்ணிட்டு இருக்கறது என்னோட சூட்கேஸ்" "...?????" :O :P ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் Relaxplzz |
Posted: 11 Aug 2014 06:00 AM PDT # நீதிபதிகளுக்கு ஒரு வேண்டுகோள் # நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் ஒரு அமைப்பில் உள்ள குறைகளை முன்னாள் நீதிபதி கட்ஜூ கிழித்துத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும்போது நீதிபதி லோதா அந்த முறையில் நல்ல நீதிபதிகளும் வந்திருக்கிறார்கள், எனவே அதைக் கைவிடக் கூடாது என்கிறார். முன்பல் மூன்றுதான் உடைந்திருக்கிறது, கடைவாய்ப்பல் நன்றாகத்தானே இருக்கிறது என்று சொல்வதுபோல் இருக்கிறது இந்த வாதம். நீதிபதிகளிடமே முழு அதிகாரமும் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அளித்துக் கொள்ளும் விடுமுறைகள்தான். பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்த காலங்களில் இருந்த நீதிபதிகள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கோடைகாலங்களில் வெப்பம் தாங்க முடியாமல் விடுப்பு எடுத்துக் கொண்டு மலைப்பிரதேசங்களுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிடுவார்கள். ஆனால் இந்தியா விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆண்டுக்கு 50 நாட்கள் நீதிபதிகள் கோடை விடுமுறையில் செல்வது எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த நாட்களில் நீதிமன்றங்கள் இழுத்து மூடப்படுகின்றன. "நான் இறந்தால் கூட நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடாதீர்கள்" என்று ஒருமுறை வேண்டிக்கொண்டார் இந்த விடுமுறைகளை எதிர்க்கும் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி. சமீபத்தில் எம்பிக்கள் மீதான வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற மோடியின் கோரிக்கைக்கு, எல்லா வழக்குகளையும் விரைவுபடுத்த கூடுதல் நீதிபதிகளை நியமிக்க நீதிமன்றங்களை உருவாக்க முதலில் அரசு பாடுபடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மிகச்சரி, ஆனால் அதற்கு முன் இதுபோன்ற தேவையில்லாத விடுமுறைகளை அவர்கள் குறைக்க வேண்டாமா? கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ள நிலையில் ஒரு ஏகாதிபத்திய வழக்கத்தைத் தொடர்ந்து பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதற்கு என்ன நியாயம் இருக்க முடியும்? அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. தங்கள் வசதிகளைத் தாங்களே தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நீதியரசர்கள் கூட இப்படித்தான் நடந்து கொள்வார்கள் போல. எம்பிக்கள், மந்திரிகள் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக்கொள்ளும் வசதிகள் இப்படியானவைதான். நீதிபதிகள் நியமனம், இதர பல வசதிகள் போன்றவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒரு பொதுவான குழுவிடம் ஒப்படைத்து நீதியரசர்கள் அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று ஒரு எளிய குடிமகனாக ஆசைப்படுகிறேன். - ஷான். ![]() |
Posted: 11 Aug 2014 05:50 AM PDT |
Posted: 11 Aug 2014 05:40 AM PDT |
Posted: 11 Aug 2014 05:31 AM PDT |
Posted: 11 Aug 2014 05:16 AM PDT இந்தியர்களை எளிதில் கண்டுபிடிக்க எளிய வழிகள் சில… 1. ருபாய் 25000க்கு மொபைல் வாங்கி மிஸ்டுகால் கொடுப்பது. 2. பஸ்ல இருந்து ஏரோப்லேன் வரை ஜன்னல் சீட்டுக்கு சண்டைபோடுவது. 3. 10 லட்சம் ருபாய்கு கார் வாங்கினாலும் எலுமிச்சைபழத்தை தொங்கவிடுவது. 4. ஓட்டலுக்கு போனால் மெனுகார்டு பார்க்காமல் அடுத்தவன் சாப்பிடுவதை பார்த்து ஆர்டர் செய்வது. 5. வயிற்றில் இடம் இல்லாவிட்டாலும் கடைசியில் ஒரு ஆப்பாயில் சாப்பிடுவது. 6. பஸ்ல 1.50 ருபா டிக்கெட்டுக்கு 100 ருபாய் கொடுத்து சீன் போடுவது. 7. முகப்பருவுக்கு கூட கேன்சர் இருக்குமோனு பயப்படுவது. 8. கடைக்காரர்கிட்ட 2 ருபாய்க்கு அரைமணி நேரம் பேரம் பேசுவது. 9. வெறும் ஊறுகாய் வச்சு அசால்டா ஒரு ஃபுல் அடிப்பது. 10. தாய்மொழி தவிர மத்த அனைத்து மொழியிலும் சரியா பேசுவது. வேறு ஏதாவது இருக்கா….?? ![]() குசும்பு... 3 |
Posted: 11 Aug 2014 04:59 AM PDT எங்கே போனாய் தாவணியே.... எங்கே போனாய் கடந்த நூற்றாண்டின் காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட காணவில்லை உன் பெயரை. கிராமபுறங்களில் விளைநிலங்களோடு சேர்ந்து நீயும் தொலைந்து போய்விட்டாயே. வயல்வெளிகளையும்,உன்னையும் இனிவரும் தலைமுறை இன்டர்நெட்டில்தான் காணமுடியும். சுடிதார்,மிடி,ஜீன்ஸ் என மேற்கத்திய எதிரிகள் உன்னை குற்றூயிராய் போட.. மிச்ச உயிரையும் எடுத்துவிட்டது நைட்டி. இன்று கொஞ்சமாவது தன் படங்களில் உன்னை வாழவைத்து கொண்டிருக்கும் தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு நன்றி சொல்வாய்... தொலைந்துபோன அல்லது தொலைக்கப்பட்ட தாவணியே... - ஜெகன் கனேசன் ![]() # படித்ததில் பிடித்தது # - 3 |
Posted: 11 Aug 2014 04:46 AM PDT விரும்பினால் மட்டும் விரும்புவது அன்பு அல்ல...♡ வெறுத்தாலும் விடாமல் இருப்பது தான் உண்மையான அன்பு..! ♡ ![]() "யதார்த்தங்கள் - தத்துவங்கள்" |
Posted: 11 Aug 2014 04:30 AM PDT |
Posted: 11 Aug 2014 04:15 AM PDT தமிழ் படிக்க தெரியுமா? எங்க இதனைப் படிங்க பார்ப்போம்! புத்திசாலிகளால் மட்டும் தான் இத படிக்க முடியுமாம். உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில், கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும். பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. பிடித்தவர்கள் பிறருக்கும் பகிரவும் (y) ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்தில் Relaxplzz |
Posted: 11 Aug 2014 03:59 AM PDT எல்லோருக்குமே வாழ்க்கையில் கடைசி நாட்கள் என்று ஒன்று உண்டு. அப்போது என்ன செய்வாய்? அழகாய் லேமினேட் செய்து மாட்டியிருக்கும் கல்லூரிப் பட்டச் சான்றிதழைக் கட்டிக் கொள்வாயா? இல்லையே! கேரஜுக்கு கூட்டிட்டுப் போங்க. என் காரில் ஒரு முறை உட்காந்து பார்க்க வேண்டும் என்று சொல்வாயா?இல்லையே! லாபம் தந்திருக்கும் வருமானக் கணக்கினை மீண்டும் ஒரு முறை வாசித்து சந்தோசப் படுவாயா? இல்லையே! நீ வகித்த பதவிகளும் , நீ காட்டிய அதிகாரங்களும் உனக்கு அனைத்து தரும் என்று நினைக்கிறாயா..? இல்லையே.! அப்போ எதுதான் முக்கியம் உனக்கு அந்த நேரத்தில்? சுற்றியிருக்கும் மனுஷங்க தானே.....? அந்த நேரத்தில் மனுஷங்க முக்கியம் என்றால்.... நீ வாழும் எல்லா நேரத்திலும் அதே மனுஷங்க முக்கியம்தானே? :) - Ilangovan Balakrishnan ![]() "மனம் தொட்ட வரிகள்" - 1 |
Posted: 11 Aug 2014 03:47 AM PDT தன் தாயை எங்கும் தன் தோளில் சுமக்கும் மகன்.. தாய் மீதான பாசத்திற்க்கு ஈடு இணையில்லை ♥ ![]() சும்மா... சும்மா... 2 |
Posted: 11 Aug 2014 03:30 AM PDT |
Posted: 11 Aug 2014 03:19 AM PDT ஒரே நேரத்துல.. ஒன்பது ரியாக்சன் கொடுப்பது பெண்களின் குணம்.. ஒன்பதில், ஒன்னுமே புரியாமல் தவிப்பது.. ஆண்களின் மனம்.. ;-) #குடும்பஸ்தன்_பாடசாலை - த. முத்துக்குமார் ![]() குடும்பஸ்தன்_பாடசாலை |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment