Wednesday, 20 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

ஓவரா டாக்ஸ் போட்டு ,சிகரட் விலையை அநியாயத்துக்கு ஏத்திட்டு போனா என்ன நடக்கும் ? கள்ளச் சாராயம் போல கள்ள சிகரட் புழக்கத்துக்கு வரும். வந்துடுத்து. ஒரு நபரைப் பார்த்தேன். பேரீஸ் என ஈஃபில் டவர் படம் போட்ட சிகரட் பாக்கேட்டில் இருந்து சிகரட் எடுத்து அடிக்க ஆரம்பித்தார். இது என்னா சிகரட் ? எவ்ளோன்னு நைசா பேச்சுக் கொடுத்தேன். அது என்னான்னு தெரியலை. 20 சிகரட் இருக்கு பாக்கெட்ல , 50 ரூவா சொன்னான், எம் ஆர் பி பாத்தேன் , இல்லை. எம் ஆர்பி ஏ இல்லையேன்னு கேட்டேன். சரி 40 ரூவா குடுங்கன்னான். ரெகுலரா வாங்குறதால இப்ப 38 ரூவா , கிங்க்ஸை விட நல்லா இருக்கு , அப்பிடின்னாரு. ஒரு சிகரட் 1.90 /- , கிங்க்ஸ் - 10 .00 /-

Posted: 19 Aug 2014 08:33 PM PDT

பாகிஸ்தான் தூதர் எப்பவுமே ஒழுங்கா ஆஃபீஸ் வேலை பாக்க மாட்டார்.அதுதான் வரலாறு. இப்ப பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்னு இந்தியா கண்டனம் தெரிவிச்சிட்டு ,பாகிஸ்தான் கூட நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டது. வாஜ்பாயும் முஷாரஃபும் பேசியே ஒரு தயிரும் கடைய முடியலை.இதுல பாகிஸ்தான் தூதர்கிட்ட பேசி என்னா தயிர் கடைய போறாங்க. பாவம் பிரிவினை வாதிகள். ஜஸ்ட் டைம் பாஸ். இதை ஏன் இந்தியா இவ்ளோ சீரியஸா எடுத்துக்குது ?பாகிஸ்தான் தூதரெல்லாம் ஒரு ஆளா ?

Posted: 19 Aug 2014 08:28 PM PDT

நாளைக்கு புல்லட்ல பெங்களூர் போறேன். போயி ? அப்பிடியே எங்கனாவது திரிஞ்சிட்டு பத்து நாள் கழிச்சி வீட்டு நெனப்பு வந்ததும் ஒடியாந்துட வேண்டியதுதான். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம , ஆம்பள பசங்கல்லாம் , நானும் வரேன்னு இன்பாக்ஸுக்கு வராதீங்கப்பா ப்ளீஸ். பி.கு : இந்த ஸ்டேட்டஸ் இளம் பெண்களுக்கு சூசகமாக தகவல் தெரிவிக்கும் ஸ்டேட்டஸ் என யாரேனும் கண்டுபிடித்து கமெண்ட் இடுவார்கள். சூசகம்லாம் இல்ல :-)

Posted: 19 Aug 2014 09:32 AM PDT

லிங்குசாமியண்ணே , 20 நிமிஷம் படத்தை குறைச்சிட்டதா கேள்விப்பட்டேன். அந்த 20 நிமிஷம் எடுக்குறதுக்கு என்னா ஒரு 5 கோடி செலவாயிருக்குமா? நறுக்கித்தள்ளுங்கணே ! மிஞ்சி மிஞ்சிப் போனா இந்த 5 கோடியில எவனாவது புது டேரக்டர் ஒரு லோ பட்ஜட் படத்தை எடுத்து ஹிட் ஆக்கியிருப்பான். எவனாவது ஒரு ஹீரோ , ஒரு குணச்சித்திர நடிகர் , கொஞ்சம் டெக்னீஷியன்ஸ் தமிழ் சினிமாவுக்கு கிடைச்சிருப்பாங்க. அதனால என்னண்ணே புண்ணியம் ? அவங்களும் வளர்ந்து கடைசில உங்களைப்போல அஞ்சான் ஹை பட்ஜட் படம்தானே பண்ணப்போறாங்க ? உங்களுக்குத் தெரியாததா ? நீங்களும் அப்பிடி இருந்து வந்தவர்தானே ? அது சரிண்ணே , இந்த 20 நிமிஷத்தையும் வெட்டினது அதே எடிட்டரா ? இல்ல ஸ்பெஷலா அப்பாயிண்ட்மெண்ட் பண்ணீங்களாண்ணே ? அண்ணே கடைசியா ஒரு விண்ண்ப்பம் ! சமந்தா சீன்ல ஒண்ணுல கூட கை வக்கக்கூடாது !

Posted: 19 Aug 2014 08:28 AM PDT

பிச்சைக்காரர்கள் தனித்தனியே போய் பிச்சையெடுத்தால்தானே நிறைய சம்பாதிக்க முடியும்? சில பிச்சைக்காரர்கள் கும்பல் கும்பலாக சென்று பிச்சையெடுப்பதை பார்த்து , இது என்ன லாஜிக் என குழம்பியிருக்கிறேன்.கிடைக்கும் பிச்சைப் பணத்தை பகிர்ந்து கொள்வார்களாம். பிச்சை எடுக்கக் கூட தனியாக செல்ல துப்பு இல்லை. சில கோஷ்டிகள் பஜனை பாடிக்கொண்டே கும்பலாக சென்று பிச்சை எடுப்பார்கள். சில அல்லக்கை அரசியல்வாதிகளும் கும்பலாக சென்று நன்கொடை பிச்சை எடுப்பதையும் பார்த்திருக்கிறோம். நாய் வாலாட்டினால் பயப்படுபவர்கள் கூட கும்பலாக சேர்ந்து கல்லெறிந்து விட்டு ஓடுவதையும் பார்த்திருக்கிறோம். இன்னும் யாரெல்லாம் கும்பலாக சேர்ந்து என்னென்ன செய்கிறார்கள் என யோசித்துப் பாருங்கள் :-) இந்த வரிசையில் லேட்டஸ்டாக ஃபேஸ்புக்கில் கும்பல் கும்பலாக லைன் கட்டி வருவது அதிகரித்திருக்கிறதாம். என்னை உஷார் படுத்தி பிளாக் செய்ய சொன்னார்கள் நண்பர்கள். ஊரு சுத்திகிட்டு இருப்பதால் , உடனடியா கவனிக்க முடியலை ! எப்ப ஒக்காந்து , இதையெல்லாம் பாத்து செய்யப்போறேனோ ! இருக்குற வேலையில தினுசு தினுசா புதுசா வேற சேந்து....யப்பா :-)

Posted: 19 Aug 2014 07:23 AM PDT

0 comments:

Post a Comment