Thursday, 21 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

கத்தி பட தயாரிப்பாளர் இலங்கையைச் சேர்ந்த லைகா நிறுவனத்தின் ஓனர் என்பதுதான் கத்தி படத்துக்குப் பிரச்சனை. விஜய் படம் என்ன எம்ஜியார் படமா? எல்லா படமும் லாபம் சம்பாதித்துக் கொடுக்க ?கடந்த சில வருடங்களில் துப்பாக்கியைத் தவிர அனைத்து விஜய் படங்களும் சங்குதான். லைகா ஓனரை விஜய் ஊத்திக்கவுக்கப் போறார் என இதை ஏன் பாஸிடிவாக பார்க்கக்கூடாது.

Posted: 21 Aug 2014 12:09 AM PDT

தற்கொலை கவிதைகள் நின்று நின்று பார்த்தேன் மழை விடுவதாயில்லை நனைந்து கொண்டு வந்து துவட்டி உடை மாற்றி பால்கனியில் நின்று பார்த்தேன் மழை கொட்டிக்கொண்டு இருந்தது கேவலமாயிருந்தது.

Posted: 20 Aug 2014 12:12 PM PDT

தற்கொலை கவிதைகள் நின்று நின்று பார்த்தேன் மழை விடுவதாயில்லை நனைந்து கொண்டு வந்து துவட்டி உடை மாற்றி பால்கனியில் நின்று பார்த்தேன் மழை கொட்டிக்கொண்டு இருந்தது கேவலமாயிருந்தது.

தற்கொலை கவிதைகள் செருப்பு தேய்ந்து விட்டது தேய்ந்த செருப்பை என்ன செய்வது என சொல்லிக்கொடுக்கப்படவில்லை. செருப்பு பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் செருப்பு தொலைந்து போவதும் குறைந்து விட்டது. இல்ல , பைக்ல போறப்ப கிரிப் இல்ல என்று சொல்வது பந்தாவாக இருப்பது போலுள்ளது. செருப்பால் அடித்தாலும் நன்கு இதமாகத்தான் இருக்கும் போலுள்ளது. ஒவ்வொரு புது செருப்பு வாங்கும்போதும் கீழே தேய்ந்து போன பழைய செருப்பு பட்டா போட்டு சாவடிக்கிறது.

Posted: 20 Aug 2014 11:59 AM PDT

தற்கொலை கவிதைகள் கடைசி குழந்தையும் மிஸ்ஸும் தனியறையில் வகுப்பறையில். மிஸ் ஸ்மார்ட் போனை பதட்டத்துடன் நோண்டிக்கொண்டும் குழந்தை மிஸ்ஸை தனியாக அன்பு செலுத்திக்கொண்டும். வகுப்பறையை பெட்ரூமாக நினைத்து குழந்தை பென்ச்சில் படுக்க , மிஸ் பேசிக்கொண்டே குழந்தையின் அருகில் வந்து அமர ஆட்டோக்காரர் சிகப்பு சிக்னலில் ஆக்ஸிலேட்டரை முறுக்கிக்கொண்டு.

Posted: 20 Aug 2014 11:43 AM PDT

தற்கொலை கவிதைகள் தொலைந்து விடும் குழந்தைகளைப்பற்றி குழந்தைக்கு சொன்னேன் குழந்தை தொலைந்துப்போவதை வேறு வழியில்லாமல் பார்த்துக்கொண்டே !

Posted: 20 Aug 2014 11:31 AM PDT

தற்கொலை கவிதைகள் தொலைந்து விடும் குழந்தைகளைப்பற்றி குழந்தைக்கு சொன்னேன் குழந்தை தொலைந்துப்போவதை வேறு வழியில்லாமல் பார்த்துக்கொண்டே !

தற்கொலை கவிதைகள் பறவைகளுக்கு தற்கொலை எண்ணம் வர வாய்ப்பில்லை பாழாய்ப்போன கவிஞனுக்கு வந்தது. பறவை தன் சிறகை ஒடுக்கிக்கொண்டது கீழே விழவில்லை. சாகவும் இல்லை.

Posted: 20 Aug 2014 11:18 AM PDT

தற்கொலை கவிதைகள் பறவைகளுக்கு தற்கொலை எண்ணம் வர வாய்ப்பில்லை பாழாய்ப்போன கவிஞனுக்கு வந்தது. பறவை தன் சிறகை ஒடுக்கிக்கொண்டது கீழே விழவில்லை. சாகவும் இல்லை.

#அராத்துமேனேஜ்மெண்ட்கான்ஸப்ட் கடைசியாக வந்து தவறுகள் கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல, தவறுகளே நடக்காமல் திட்டமிட வேண்டும்.

Posted: 20 Aug 2014 11:07 AM PDT

#அராத்துமேனேஜ்மெண்ட்கான்ஸப்ட் கடைசியாக வந்து தவறுகள் கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல, தவறுகளே நடக்காமல் திட்டமிட வேண்டும்.

இளநீர் வெட்டிதருபவனுக்கு ஸ்ட்ரா எடுத்துத்தர பொண்டாட்டி # ஃபேமிலி பிஸினஸ்.

Posted: 20 Aug 2014 10:54 AM PDT

இளநீர் வெட்டிதருபவனுக்கு ஸ்ட்ரா எடுத்துத்தர பொண்டாட்டி # ஃபேமிலி பிஸினஸ்.

குழந்தைகளுக்கு உடம்பு சரியாகிவிட்டால் அடுத்த நொடியில் காட்டிவிடும்.நோயும் இருக்காது , குழந்தையும் இருக்காது.

Posted: 20 Aug 2014 10:52 AM PDT

குழந்தைகளுக்கு உடம்பு சரியாகிவிட்டால் அடுத்த நொடியில் காட்டிவிடும்.நோயும் இருக்காது , குழந்தையும் இருக்காது.

அதிகாலை அரைத்தூக்கத்தில் ராட்சஸி போல காலை மேல் தூக்கிப்போட்டு கட்டி அணைக்கையில் நான் , பின்னந்தலையில் தட்டிக்கொடுக்க வேண்டுமா ? புரட்டிப்போட்டு , மேலேறிப்படுத்து , கீழிறங்கி சுண்டு விரலை கடித்து ஆரம்பிக்க வேண்டுமா? அரைத்தூக்கத்திலும் ஆணாதிக்க ஹேங்க் ஓவர் !

Posted: 20 Aug 2014 10:49 AM PDT

அதிகாலை அரைத்தூக்கத்தில் ராட்சஸி போல காலை மேல் தூக்கிப்போட்டு கட்டி அணைக்கையில் நான் , பின்னந்தலையில் தட்டிக்கொடுக்க வேண்டுமா ? புரட்டிப்போட்டு , மேலேறிப்படுத்து , கீழிறங்கி சுண்டு விரலை கடித்து ஆரம்பிக்க வேண்டுமா? அரைத்தூக்கத்திலும் ஆணாதிக்க ஹேங்க் ஓவர் !

அன்பா ? அன்புன்னா என்னா ? http://charuonline.com/blog/?p=1482

Posted: 20 Aug 2014 10:43 AM PDT

ஒரு சந்திப்பு, ஒரு நாய்க்குட்டி, ஒரு கவிதை… « Charu's blog

சமீபத்தில் ஒருநாள் திடீரென்று குமரகுருபரன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். கவிஞன் என்றால் என்னுள் கொண்டிருந்த பிம்பம் வேறு. பரட்டைத் தலை. ஒல்லியான தேகம். பீடி. ரப்பர் செருப்பு. பசித்த பார்வை. சரி, இப்போதைய கவிஞர்கள் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் பழைய கவியின் தோ…

சயனைட் குறுங்கதைகள் - ஹை பட்ஜெட் இந்த சயனைட் குறுங்கதைகளை மயிலாடுதுறையில் நடப்பது போல எழுதலாம். ஃபேஸ்புக்கில் என்ன லோ பட்ஜட் , ஹை பட்ஜட் ? கதையை தூக்கு அமெரிக்காவுக்கு.கதாசிரியர் அமெரிக்கா போய்த்தான் எழுத வேண்டும் என்பது இன்றைய பின் நவீனத்துவ சூழலுக்கு தேவையா ? மின்னசோட்டா , சாரி , ஹை பட்ஜட் இல்லையா ? மின்ன படா மாகாணத்தில் ஒரு அபார்ட்மெண்ட் இருந்தது . எப்புடீ? அந்த அபார்ட்மெண்டின் உச்சியில் , எந்த நாடா இருந்தா என்னா? மொட்டை மாடிதான் இருக்கும்.இருந்தது. அந்த மொட்டை மாடியில் , காதல் தோல்வியுற்ற ஒருவன் அமர்ந்திருந்தான்.அவன் காதல் அப்போதுதான் தோல்வியுற்று இருந்தது. கிட்டத்தட்ட 2 நிமிடங்கள் இருக்கலாம்.அவன் அதை எதிர்பார்த்தோ என்னவோ ஏற்கனவே சரக்கு போட்டிருந்தான். காதல்கள் தோல்வியடைந்தால் தேவலாம் என்ற எதிர்பார்ப்போடு இன்னொருவன் தண்ணி அடித்துக்கொண்டு இருந்தான். இந்த கதைக்காகவெல்லாம் இல்லை , உண்மையிலேயே இருவரும் ஆபத்தான 37வது மாடியில் உட்கார்ந்து இருந்தார்கள். பேசுவதற்கு ஏதுமில்லாத சூழலில் இருவரும் மொபைலில் ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டு இருக்கையில் , 2 நிமிடத்துக்கு முன்பு காதல் தோல்வி அடைந்தவன் , நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் என்றான். நண்பா, எதற்கும் பயிற்சி வேண்டும். முதலில் இந்தப்பக்கம் குதித்து பயிற்சி எடுத்துக்கொண்டு அந்தப்பக்கம் குதி என வெட்ட வெளியைக் காட்டினான் , நண்பன். இந்தப்பக்கம் குதிக்க வேண்டும் என தெளிவாக யோசித்த காதல் தோல்வி , மெனக்கெட்டு , ஆடி ஆடி , பேலன்ஸ் செய்து , தடுமாறி , வெட்டி வெளியில் , குதித்தான். இந்தக்கதையை எடிட் செய்கையில் , குதித்தான் என்பதை மட்டும் விழுந்தான் என மாற்றினான் நண்பன்.

Posted: 20 Aug 2014 09:54 AM PDT

சயனைட் குறுங்கதைகள் - ஓவர் டேக் நேஷனல் ஹைவேஸ் , 80 கிலோமீட்டரிலியே புல்லட் ஸ்பீடா முள் 20 நிமிடமாக துடித்துக்கொண்டு இருக்கிறது.உள்ளங்கைகளின் பின்புறம் கிதாரின் இறுக்கிக்கட்டிய நரம்புகள். மனம் எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கிறதா என்ன? பல எஸ் வளைவுகளைத்தாண்டி ஒரு இன்னுமொரு எஸ் வளைவு.ஆச்சரியமாக புகை கக்காமல் சென்று கொண்டிருக்கும் ஒரு லாரி. மூளை எரிச்சலாகி , தன்னுடைய வேலையை கைகளுக்கும், கண்களுக்கும் , கால்களுக்கும் பிரித்துக்கொடுத்து விட்டு, பின்னால் போய்க்கொண்டிருக்கும் மரங்களை பார்த்துக்கொண்டிருக்கிறதோ என்ன எழவோ. எஸ் வளைவில் , ப்ளைண்ட் கர்வில் எண்பதில் , புகை கக்கா லாரியை , மூளைத்தவிர்த்து மற்ற உறுப்புக்களால் புல்லட் ஓவர் டேக் செய்கையில் , எதிரில் , இதே போல புலன்களால் ஓட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கார் 100 கிமீ பர் அவரில். இரண்டு மூளைகளும் விழித்துக்கொண்டன.சாரி , மூன்று !

Posted: 20 Aug 2014 09:34 AM PDT

ஷாரூக் கான் சல்மான் கான் அமீர் கான் எல்லாம் பாம்பே தாதாவா நடிக்க வாய்ப்பேயில்லையா?

Posted: 20 Aug 2014 09:21 AM PDT

ஷாரூக் கான் சல்மான் கான் அமீர் கான் எல்லாம் பாம்பே தாதாவா நடிக்க வாய்ப்பேயில்லையா?

கூட்டத்துடன் லிஃப்டின் உள்ளே நிற்கையில் எங்கே பார்ப்பது ?

Posted: 20 Aug 2014 08:56 AM PDT

கூட்டத்துடன் லிஃப்டின் உள்ளே நிற்கையில் எங்கே பார்ப்பது ?

எப்போதும் அம்மணமாய் திரியும் குழந்தைகள் , குளிக்க உடை அவிழ்க்கச் சொல்லும்போது மட்டும் , நீங்க ஷேம் ஷேம் சொல்லுவீங்க ...!

Posted: 20 Aug 2014 08:52 AM PDT

எப்போதும் அம்மணமாய் திரியும் குழந்தைகள் , குளிக்க உடை அவிழ்க்கச் சொல்லும்போது மட்டும் , நீங்க ஷேம் ஷேம் சொல்லுவீங்க ...!

ஆழி டைம்ஸ் ஆழியுடன் பைக்கில் வேளச்சேரி சென்று கொண்டு இருந்தேன். வழியில் ஏதோ கலர் கலராக கட்சிக்கொடி . எனக்கே என்ன கட்சி என்று தெரியவில்லை. ஆழி ஏதோ கேட்டுக்கொண்டே வந்தேன். ஹெல்மெட் போட்டிருப்பதால் காதில் விழவில்லை. பைக்கை ஓரங்கட்டி நிறுத்தி , என்னாடா என்றேன் ? ஜெயலலிதா வராங்களாப்பா ?

Posted: 20 Aug 2014 08:45 AM PDT

ஆழி டைம்ஸ் ஆழியுடன் பைக்கில் வேளச்சேரி சென்று கொண்டு இருந்தேன். வழியில் ஏதோ கலர் கலராக கட்சிக்கொடி . எனக்கே என்ன கட்சி என்று தெரியவில்லை. ஆழி ஏதோ கேட்டுக்கொண்டே வந்தேன். ஹெல்மெட் போட்டிருப்பதால் காதில் விழவில்லை. பைக்கை ஓரங்கட்டி நிறுத்தி , என்னாடா என்றேன் ? ஜெயலலிதா வராங்களாப்பா ?

அராத்து கேள்வி பதில்../ இணையநாயகன் இளம்பெண்டிரின் இதயநாயகன் அராத்து அவர்களுக்கு.. தங்களைப்போலவே(!) லட்சாதிலட்ச வாசகர்களை கொண்டுள்ள கல்கி, அகிலன், மு.வ, நா.பா வகையறாக்களில் கூட வணிக எழுத்துக்களை நீக்கி விட்டார்களாமே.. எஸ்ராவும் கூட சிறந்த 100 சிறுகதைகளில் அவைகளை சேர்க்காது தொகுப்பு வெளியிட்டு கருத்தும் கூறியிருக்கிறாரே.. "வணிக எழுத்து" விவகாரம் பற்றி சமீபத்திய சமந்தா அளவுக்கு கொஞ்சம் தாராளமாக திறந்து பதிலளித்தால் மகிழ்ச்சியுறுவோம்.

Posted: 20 Aug 2014 02:13 AM PDT

From J.v. Praveenkumar:

அராத்து கேள்வி பதில்../ இணையநாயகன் இளம்பெண்டிரின் இதயநாயகன் அராத்து அவர்களுக்கு.. தங்களைப்போலவே(!) லட்சாதிலட்ச வாசகர்களை கொண்டுள்ள கல்கி, அகிலன், மு.வ, நா.பா வகையறாக்களில் கூட வணிக எழுத்துக்களை நீக்கி விட்டார்களாமே.. எஸ்ராவும் கூட சிறந்த 100 சிறுகதைகளில் அவைகளை சேர்க்காது தொகுப்பு வெளியிட்டு கருத்தும் கூறியிருக்கிறாரே.. "வணிக எழுத்து" விவகாரம் பற்றி சமீபத்திய சமந்தா அளவுக்கு கொஞ்சம் தாராளமாக திறந்து பதிலளித்தால் மகிழ்ச்சியுறுவோம்.

0 comments:

Post a Comment