Tuesday, 29 July 2014

FB Posts by Araathu அராத்து: 29 July 2014

ஓவியமாய் வரைய முடியாது பாட்டாய் பாட முடியாது நடனமாய் ஆட முடியாது இப்படில்லாம் எந்த கலைஞராவது சொல்லியிருக்கிறார்களா? இந்த ரைட்டருங்க மட்டும்தான் கொஞ்சம் கூட வெட்கமேயில்லாமல் , அதை "வார்த்தைகளால் விளக்க முடியாது" ன்னு எழுதிட்டு போயிட்டே இருக்காங்க.



Posted: 28 Jul 2014 10:12 AM PDT
இலக்கிய விழாவுக்கு போகும் தோழியுடன் ஒரு உரையாடல் தோழி : ஹேய் ஶ்ரீ உனக்கு விஷயம் தெரியுமா ? ரொம்ப ரொம்ப எக்ஸேட்டட்.. யார் கிட்டயாவது சொல்லனும். எழுத்தாளர் புண்ணியாத்மாவின் நண்பர்கள், என்னையும் அடுத்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவசியம் வரணும்னு கூப்பிடறாங்க அப்புறம் "தொண்டைக்குழி " ன்னு ஒரு கூகிள் க்ரூப் - என்னையும் அதில சேர்த்து விட்டுட்டாங்க. திருதிருன்னு விழிக்கறேன். எல்கேஜிலேருந்து நேரா +1க்கு ப்ரமோட் பண்ணமாதிரி அராத்து : எஞ்சாய் . அதே எக்சைட்மெண்டோட போ , போன வேகத்துல எங்கிட்டயே திரும்ப வந்துடுவ ! தோழி : புரியலையே... புயா பிடிச்சா ஸ்ரீயின் தோழி இல்லையா?புண்ணியாத்மாவை ஆசான்னு கூப்பிடறாங்க அந்த குரூப்ல ! அராத்து : அப்பிடி சொல்லலை தோழி : ஐயோ அப்ப எதாவது தப்பா நடந்துப்பாங்களா ? அராத்து :அடச்சீ , போய் வாயைக்கழுவு .தப்பா நடந்துப்பாங்களான்னு கேக்கறியே ? நியாயமா ? தப்பாவும் நடந்துக்க மாட்டாங்க , சரியாவும் நடந்துக்க மாட்டாங்க. தோழி : ஏய் என்னாடா கொழப்புற ? அராத்து : நீ உன் ப்ரொஃபைல்ல 70 வயசுன்னு போட்டிருந்தியா ? தோழி : இல்லையே ஏன் ? அராத்து : அந்த குரூப் ஆளுங்க 60 வயசுக்கு மேல ஆன பொண்ணுங்க கிட்ட மட்டும்தான் போன்லயே பேசுவாங்க. 70 வயசு ஆனாதான் கூட்டத்துக்கு எல்லாம் குப்பிடுவாங்க.உன்னை எப்பிடி கூப்டாங்கனு தெரியலையே. தோழி : அப்புறம் ஏன் என்னை போன வேகத்துலயே திரும்பி வந்துடுவேன்னு சொன்ன ? அராத்து : அதுவா ? அது ஒரு பஜனை கோஷ்டிகிட்ட மாட்டிகிட்ட மாதிரி இருக்கும்டி உனக்கு. தோழி : பஜனை கோஷ்டின்னா ? ஏதாவது டபுள் மீனிங்கா ? ஏதாச்சும் தப்பா பண்ணுவாங்களா ? அராத்து : ஏய் டென்ஷன் பண்ணாத நீ. நீயே போய் அந்த குரூப்ல யாரையாச்சும் கட்டிப்பிடிச்சி கிஸ் பண்ணாக் கூட உன்னை தள்ளி விட்டுட்டு கலவரமா ஓடிப்போயி , புண்ணியாத்மா கிட்ட சொல்வாங்க.அவரு உன்னை ஏதாச்சும்ம் பைத்தியக்கார மடத்துல சேத்துடுவாரு. தங்கமான பசங்க, அவங்களைப்போய் தப்புத் தப்பா பேசிகிட்டு. உன்னை எப்பிடி கூப்டாங்கன்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன். ஏன்னா இளம் பெண்களை கண்டாலே அந்த குரூப் ஆளுங்களுக்கு உதற வேண்டியதைத்தவிர மத்த எல்லாம் உதறுமே !....இரு இரு .....உனக்கு கல்யாணம் ஆவலை , வூட்ல பாத்துகிட்டு இருக்காங்கன்னு ஏதாச்சும் சொன்னியா ? ஏன்னா அவங்க கன்னிப்பொண்ணுங்களுக்கு கல்யணம் பண்ணி வச்சிடுவாங்க , அதனாலதான் கேக்கறேன். தோழி : ஏய் என்னாடா போறதுக்கு முன்னாலயே இப்பிடி கொழப்புற? நான் போய் பாத்துட்டுதான் வரப்போறேன். அராத்து : போ போ , நான் வேணாம்னு சொல்லலை. ஆனா நீ அங்க போய் ......அங்க நடக்கப்போகும் காமடியை நினைச்சாத்தான் சிரிப்பு தாங்க முடியலை. தோழி : நல்லா சிரிச்சிக்கோ. அந்த தொண்டைக்குழி குரூப்ல சேர்ந்த பிறகு இலக்கியம்ன்னா என்னன்னு கண்டுபிச்சுட்டேன் ஶ்ரீ... "உன் நினைவுகள் அக்குள் வியர்வை போன்ற நசநசப்பு"ன்னு எழுதறது அப்புறம், சாலையை கடக்க முயன்ற குட்டி நாய் மண்டை உடைந்து வயிறு நசுங்கி டயர் அடியில் துடிப்பதையும், தாய் நாய் ரத்தத்தை நக்குவதையும் துள்ளியமா விவரிப்பது அராத்து : நல்லா இருந்த பொண்ணை இப்பிடி கெடுத்துட்டானுங்களே ! அது இருக்கட்டும் , திடீர்னு இளம்பெண்கள் கிட்ட பேசுற தைரியம் இந்த குரூப்புக்கு எப்புடி வந்திச்சி ?
 -------------------------------
Photo - அப்பா...இந்த ஸ்டார் எல்லாம் எப்டிப்பா வருது..??? . அதாவது ..ஆழி...இறந்து போன நல்லவங்க எல்லாம்..மேல போய் ஸ்டார் ஆயிடுவாங்க.. கெட்டவங்க எல்லாம்..பேய் ,பிசாசுன்னு ஆயி இங்கயே சுத்துவாவாங்க..!! . அப்ப .....இந்த பவர்ஸ்டார்...சூப்பர்ஸ்டார்...சுப்ரீம்ஸ்டார்..இவுங்கெல்லாம்...ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்......வாய மூடாத.....பேசவுடுப்பா... . வேண்டாப்பா..அப்பாவ இப்பவே ஸ்டார் ஆக்கிறாத...!!ஏற்கனவே மேப்போட சுத்றாணுவ...நீ வேற ஆப்பு வைச்சிறாத... . அய்யோ..ஆப்பு எல்லாம் மாப்பு தான் வைப்பாங்க ..இல்ல மம்மீ.. . அவ்வ்வவ்வ்.... :) . அய்...மம்மீ அவ்வ்வவ்வ்...சொல்லிட்டாங்கோ...ஹஹஹா.. :)
Posted: 28 Jul 2014 09:10 AM PDT

0 comments:

Post a Comment