Tuesday, 29 July 2014

Relax Please: FB page daily Posts : 29/07/2014

Posted: 29 Jul 2014 09:15 AM PDT
என் அம்மா ♥

1. நான் பிறந்து ஆறு மாதம் வரை , ஓர் நாள் இரவு கூட அவளால் உறங்கமுடியவில்லை. கண் விழித்து என் அழுகைக்கு விடை கண்டு பிடித்தே விடிந்து விட்டன அவளின் இரவுகள்.

2. நான் தத்தி தத்தி பூமியில் கால் பதிக்க முயலும் வரை, சேலையை எனக்கு தொட்டில் ஆக்கி அதை ஆட்டிக்கொண்டே தன் அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவாள்.

3.நடக்க ஆரம்பித்த போது அடிக்கடி விழுந்துவிடுவேன். உடனே ஓடிவந்து தூக்க மாட்டாள்.நான் என்ன செய்கிறேன் என்பதை கூர்ந்து கவனித்துவிட்டு, பின்னரே தூக்குவாள். விழுந்தால், நீயாக தான் எழ வேண்டும் என்பதை அன்றே கற்றுக் கொடுத்து விட்டாள்.

4.பள்ளி செல்ல ஆரம்பித்த போது, எனக்கு இரட்டை ஜடை பின்னவும், சீருடை மாட்டவும், சாப்பாடு ஊட்டவும் என்னுடன் போராடியே அவளின் காலைப்பொழுது கழிந்தது.

5.நான் என்று தின்பண்டங்கள் உண்ண தொடங்கினேனோ, அன்றே அவள் உண்பதை நிறுத்திவிட்டாள். வீட்டில் எல்லாருக்கும் போக, கடைசியாய் அவள் கைக்கு வரும் அந்த சுண்டு விரல் அளவில் இல்லா பங்கை கூட என் கையில் கொடுத்து இன்பம் கொண்டாள்.

6.பூப்படைந்த சேதி கேட்டதும், பூரிப்படைந்தது அவளின் முகம் மட்டுமே. நெஞ்சமெல்லாம் நெருப்பை சுமப்பது போல் பயத்தை சுமக்க ஆரம்பித்துவிட்டாள்.



7.பெட்டிக் கடைகளைப் போன்ற சின்ன சின்ன நகைக் கடைகளைத் தேடித் தேடி மாத சீட்டு போட்டு, மாதங்கள் தோறும் அவள் தேவைகளில் ஒன்றைக் குறைத்துக்கொண்டு பணத்தை கட்டினாள். என் கையில் ஒரு கிராம் மோதிரம் தங்கத்தில் போட அவள் ஒருவருடம் போராடினாள்.

8.அவளின் அஞ்சறைப் பெட்டி சில்லரைகளாலும், கட்டிப் போட்ட வயிற்றினாலும் நிறைய ஆரம்பித்தது என் நகைப் பெட்டி.

9.கல்லூரிக்குள் நுழைந்தேன். நான் பட்டம் வாங்க வேண்டும் என்று அவள் வெறும் பத்திய சாப்பாட்டைப் போல் பசிக்காக மட்டுமே உண்டாள்.

10.இதுவரை ஒரு தீபாவளிக்கும் அவள் புது உடை உடுத்தி நான் பார்த்ததில்லை. அன்றும் அடுக்களையே அவளின் சொர்க்கம். வடையும் சுளியனுமே அவளின் தீபாவளி.

11.எனக்குத் திருமணமாம். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லாதவள் என்ன போடுவீர்கள் என்று கேட்பதற்கு முன்னரே , என்ன போடுவேன் என்பதை உரைக்கிறாள்.

12.கசாயத்தில் மறைந்து விடும் அவளின் காச்சல். அரச மர இலையில் மறைந்து விடும் அவளின் தீ காயங்கள். இஞ்சி தேநீரில் மறைந்து விடும் அவளின் சளியும் இருமலும். பாட்டி வைத்தியங்களை மட்டுமே தனக்கு செய்து கொண்டு நான் தும்மினால் கூட மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றாள். தன் உறங்காத இரவுகளால் என்னை உறங்கவிடாத கனவுகளை என்னுள் விதைத்தவள்!

இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றின் பின்னும், எண்ணில் அடங்கா அவளின் இழப்பு இருக்கிறது.

எழுதப் படிக்க தெரியாமலேயே எனக்கு
எழுத்தறிவு தந்த ஏட்டில் அடங்கா கவிதை என் அம்மா! ♥ ♥


# படித்ததில் பிடித்தது # - 1

எவ்வளவு வெயிட்? ----------------------------- வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தா...
Posted: 29 Jul 2014 09:00 AM PDT
எவ்வளவு வெயிட்?
-----------------------------
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

"இது எவ்வளவு வெயிட் இருக்கும்?"

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

"இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல"

வாத்தியார் தொடர்ந்தார். "இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?"

"ஒண்ணுமே ஆகாது சார்"

"வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?"

"உங்க கை வலிக்கும் சார்"

"ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…"

"உங்க கை அப்படியே மரத்துடும் சார்"

"வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?"

"இல்லை சார். அது வந்து…"

"எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?"

"கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்"

"எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?"

# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு. :)
அடுத்தவரிடம் கையேந்தாமல் 70 வயதான இந்த ராஜம்மாள் நடைபாதை வியாபாரிகளிடம் “பெட்ரோம...
Posted: 29 Jul 2014 08:45 AM PDT
அடுத்தவரிடம் கையேந்தாமல் 70 வயதான இந்த ராஜம்மாள் நடைபாதை வியாபாரிகளிடம் "பெட்ரோமாக்ஸ்" விளக்கிற்கு கெரசின் விற்பனை செய்து வரும் இவரது உழைப்பிற்கு...

ஒரு பாராட்டு கொடுப்போம்... (y)

:)
Posted: 29 Jul 2014 08:30 AM PDT
:)

தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்.... 1.மச்சி நான் full steady...
Posted: 29 Jul 2014 08:17 AM PDT
தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்....

1.மச்சி நான் full steady டா....

2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா....

3.நான் போதையில உளறுரேன்னு மட்டும்
நினைக்காதடா....

4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி ....

5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்.....

6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா....

7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா....

(Last but Not least....பசங்க சொல்லும் மெகா தத்துவம்.....)

8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா....!

:P :P

வேற ஏதாவது இருந்தா நீங்க சொல்லுங்க... ;-)


குசும்பு... 1
அழகிய ஆலமரம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
Posted: 29 Jul 2014 08:00 AM PDT
அழகிய ஆலமரம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

கற்பழிக்க பட்ட பெண்ணுடய தாயின் கதறல்... அட கொடியவனே! பத்து மாதம் ஆசைக்கொண்டு உய...
Posted: 29 Jul 2014 07:43 AM PDT
கற்பழிக்க பட்ட பெண்ணுடய தாயின் கதறல்...

அட கொடியவனே! பத்து மாதம் ஆசைக்கொண்டு
உயிர்கொடுத்தேன் என் உத்தமிக்கு!
.
உன் பத்து நிமிட ஆசைக்காக
உயிர்எடுத்தது ஏனோ?
.
பட்டினிக்கொண்டு பால் வார்த்தேனே
என் பார்வதிக்கு!
.
இந்த ஒட்டுதுணிஇல்லா கோலத்தில்
பார்க்கதானா? அட மிருகமே!
.
விலைமகள் ஆயிரம் இருக்க
என் கலைமகளை தேர்ந்தெடுத்தது ஏனோ?
.
உளிகொண்டு செதுக்கிய என் சிற்பத்தை!
காமவலிதந்து சிதைத்தது ஏனோ?
.
அட காமவெறியனே! உன் குடிபோதை
என் குலராதையை அல்லவா அழித்துவிட்டது!
.
ஐயஹோ! கண்மைஅழிந்தாலே கதறுவாளே
என் கண்மணி!
இன்று கற்பழிந்து கிடக்குறாளே என் செய்வேனோ?
.
சிலிர்க்க வைக்கும் அற்புதம் செய்யும் சிவபெருமனே!
என் கண்ணகி கற்பழியும் வேலை
வெறும் சிலைஆனது ஏனோ?
.
பண்பாடோடு வாழும் தமிழகமே!
என் பெண்படும் பாடு புரியலையோ?
.
பூமியையே வயிற்றில் சுமக்கும் பூமாதேவியே!
என் பூமகள் கற்பழியும் தருணம்
உன் கர்ப்பமே களைவதுபோல் உணரலையோ?
.
அப்பாவி மக்களை அழித்த ஆழிஅலையே!
இந்த படுபாவிகளை மட்டும் விட்டு வைத்தது ஏனோ?
.
விதிகணக்கு எழுதிய எமதர்மனே!
உன் தாமத்தால்
என் மகளை காமஅரக்கன் அல்லவா தீண்டிவிட்டான்!
.
நீதியின் குலமகளே!
ஒரு நிமிடம் கண் விழித்து என் கற்பகம்
கற்பழிந்து கிடப்பதை பார்
.
இன்னும் ஏன் இந்த மௌனம்?
உன் கண்களை மூடி இருப்பது கருப்பு துணியா?
இல்லை செல்வந்தர்களின் கருப்பு பணமா?
.
கற்புக்கரசி கண்ணகியே!
உன் மகளின் கற்பைகாக்க தவறியது ஏனோ?
ஓர் வேளை.....
உன் கற்பை காத்துகொள்ள ஒளிந்து கொண்டாயோ..?
.
பெற்ற வயுறு பற்றி எரிகிறது
என் மகளுடய உடலுடன் சேர்ந்து...
.
பெண்களிடம்....
வெறும் சதயை மட்டும் பார்க்கும் இந்த சமுதாயத்தில்
33 சதவீதம் கொடுத்து மட்டும் என்ன பயன்?
.
அட அரக்கர்களே அடக்குங்கள் உங்கள் காம தாகத்தை...!
.
வாங்கி சேர்க்காதே பெண்களின் சாபத்தை...!
காக்கவிடு எங்கள் மானத்தை ...!
இல்லை அழித்துவிடுவோம் இந்த உலகத்தை...!
.
உயிர் கொடுக்க முடிந்த என்னால்
உயிர் எடுக்கவும் முடியும்மடா!
.
இருந்தும் விட்டு விடுகிறேன்
பிள்ளையை இழந்து நான் படும்பாடு
உன் தாயிற்கும் நேரிடா வேண்டாம்......!!


"மனம் தொட்ட வரிகள்" - 1
:)
Posted: 29 Jul 2014 07:30 AM PDT
:)

தெரிந்து கொள்வோம் வாங்க... வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்...
Posted: 29 Jul 2014 07:15 AM PDT
தெரிந்து கொள்வோம் வாங்க...

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..

குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சு விடவும், முழுங்கவும் முடியும்..

புதுப் பேனாவை எழுதக் கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணியைத் தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைப்படத்தை தபால் முத்திரையாகப் பயன்படுத்த
முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகளும் கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழப்பான்.

சுவீடனில், ஒரு ஹோட்டல் ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும்
மீண்டும் கட்டப்படும்.

பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டகச் சிவிங்கி மட்டும் தான் வலது, வலது, இடது, இடது
என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கைக்கடிகாரம் விளம்பரத்தில் காட்டப்படும் 10:10 என்ற நேரம்
புன்னகையைக்
குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதியடையச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயனத்தை
அமைதியாக வைத்திருப்பதற்காகச் சுரக்கின்றது.

லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால் வரையவும்
செய்வார்.

15 எழுத்து ஆங்கில வார்த்தை, ஒருமுறை வந்த எழுத்து திரும்ப வராத வார்த்தை:
uncopyrightable

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6
வயதில் தான் வளர்கிறது.

வறுக்காத முந்திரிக் கொட்டை விஷத் தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ்
எனப்படும்.

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz
இது மாதிரி விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)
Posted: 29 Jul 2014 07:00 AM PDT
இது மாதிரி விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)

இந்தப் படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?
Posted: 29 Jul 2014 06:45 AM PDT
இந்தப் படத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

:)
Posted: 29 Jul 2014 06:30 AM PDT
:)

பயம்.. எப்பொழுது வரும்..? (குட்டிப் பேய் கதை) ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவ...
Posted: 29 Jul 2014 06:10 AM PDT
பயம்.. எப்பொழுது வரும்..? (குட்டிப் பேய் கதை)

ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.

இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.

அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.

மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.

அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.

அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் "அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா...." என்று சொன்னது.

அதற்கு அம்மா பேய்.... "வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்" என்றது.

இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை. "எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் " என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.

உம்ம்ம்... ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.
இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்... "தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாளி இவன் தான்" என்றது.
அதற்கு அம்மா பேய்... "அவன் தைரியசாளி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார்" என்றது.

குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது. அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான்.

குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... "அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்..?" என்று கேட்டது.

இதற்கு அம்மா பேய், "மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.

அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்" என்றதாம்.
(உண்மை தானா...?)

(Thanks:Dinesh Kumar Aslan)
மருத்துவரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசுவின் படம்...
Posted: 29 Jul 2014 05:50 AM PDT
மருத்துவரின் விரலை பிடித்தவாறு தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசுவின் படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ரான்டி அட்கின்ஸ்- அலிசியா அட்கின்ஸ் தம்பதிக்கு, கடந்தாண்டு நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இக்குழந்தைக்கு நிவியா என பெயரிட்டுள்ளனர். மனைவிக்கு பிரசவம் நடந்த போது, ரான்டி உடனிருந்தார்.

அப்போது தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த குழந்தை, மருத்துவரின் கை விரலை அழகாக பிடித்துக் கொண்டிருந்தது.

இதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த மருத்துவர், இதுகுறித்து ரான்டியிடம் தெரிவிக்க அவரும் அதை படம்பிடித்தார்.

இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர். மேலும் படத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்தும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்...

:)
Posted: 29 Jul 2014 05:30 AM PDT
:)

சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன்...
Posted: 29 Jul 2014 05:15 AM PDT
சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார்.

அருகில் இருந்தவர்கள் ''வெகு தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே பரவாயில்லையா?'' என்றனர்.

அதற்கு அவர் ''உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களும் வலிக்கும்.

ஆனால்,
எனக்கு ஒரு கால்தான் வலிக்கும்'' என்றார் புன்சிரிப்புடன்.

தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.

(y) (y)
தாயின் மடியில்.... அது ஒரு வசந்தகாலம்
Posted: 29 Jul 2014 05:00 AM PDT
தாயின் மடியில்.... அது ஒரு வசந்தகாலம்

"அழகு தமிழ்நாடு" இடம் : மேகமலை, தேனி மாவட்டம்
Posted: 29 Jul 2014 04:45 AM PDT
"அழகு தமிழ்நாடு"

இடம் : மேகமலை, தேனி மாவட்டம்

:)
Posted: 29 Jul 2014 04:30 AM PDT
:)

குட்டிக்கதை: ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர...
Posted: 29 Jul 2014 04:15 AM PDT
குட்டிக்கதை:

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.

ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.

வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.உடனே வெங்காயம்,

அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி "ஐஸ் கிரீம்
செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி செத்தப்ப நான் அழுதேன்.. ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா
எனக்குன்னு அழ யாரு இருக்கா"ன்னு கேட்டுச்சாம்..

அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!

அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
வருதாம்..!!

:P :P
குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது : அம்மா, நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்ன...
Posted: 29 Jul 2014 04:00 AM PDT
குழந்தை வெகுளித்தனமாக தன் தாயை கேட்டது :
அம்மா, நம் வீட்டு வேலைக்காரியிடம் உன்னுடைய பர்ஸையும், நகைகளையும் கொஞ்ச நேரம் குடுத்து பார்த்துக்கொள்ள சொல்வாயா ?

அம்மா : அதெப்படி முடியும்...அவளை நான் நம்புவதில்லை.

குழந்தை :அப்பறம் ஏன் என்னை மட்டும் அவளிடம் விட்டு
செல்கிறாய் ?

குழந்தை கேட்டது சரியா... தவறா??

கான்சர் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள மகளுக்கு தாழ்வு மனப்பான்மை போக்க தனது தலையை...
Posted: 29 Jul 2014 03:45 AM PDT
கான்சர் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள மகளுக்கு தாழ்வு மனப்பான்மை போக்க தனது தலையையே மொட்டை அடித்து கொண்டபாராட்ட பட வேண்டிய தாய், தாய்மை இவ்வுலகிலேயே மகத்தானது !

:(
Posted: 29 Jul 2014 03:30 AM PDT
:(

அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள். ஆசை ஆசையாய்...
Posted: 29 Jul 2014 03:10 AM PDT
அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்.

ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.

அவள் வருத்தத்திலிருந்த போது

சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.

"உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா? மிக்க நன்றி" என்றார்.

நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்

எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும். பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz
இன்னமும் தமிழன் இளிச்சவாயந்தானா? (Kindly share this plzz dear friends) சிவில் ச...
Posted: 29 Jul 2014 02:50 AM PDT
இன்னமும் தமிழன் இளிச்சவாயந்தானா? (Kindly share this plzz dear friends)

சிவில் சர்விஸஸ் தேர்வினை முடித்து பயிற்சிக்காக டேராடூன் சென்றிருந்த போது நிகழ்ந்த சம்பவம் இது.

உடன் பயிற்சியில் இருந்த உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த பேட்ஜ் மேட்டுக்கு அன்று பிறந்த நாள். டிரக்கிங்கில் இருந்த இரண்டு வார காலகட்டத்தில் இந்த நாள் வந்தது. நண்பர்கள் சிலரோடு சேர்ந்து அவர் அறையைத் தட்டி " ஹேப்பி பர்த் டே வர்மாஜி " என்றோம் கோரஸாக.

அதற்கு அவர் தந்த பதில் திகைப்பை ஏற்படுத்தியது. கூலாக " ஸேம் டூ யூ"- என்று பதில் தந்தார் தனது தொப்பையைத் தடவியபடி.

வட நாட்டுக்காரர்களின் ஆங்கில மொழி அறிவு இந்த லட்சணந்தான்.

ஆங்கிலத்தை அறிவாகச் சுட்டுவதில் எனக்கும் சம்மதம் இல்லைதான். ஆனால் இந்தியாவில் அனைத்து சட்டம், நிர்வாக புத்தகங்களும் ஆங்கிலத்தில் இருக்கிறது. உலக அளவிலான புதிய நிர்வாகச் சங்கதிகளை ஆங்கிலத்திலேயே பெற முடிகிறது. இச்சூழலில் இந்தியா போன்ற ஆயிரக்கணக்கான மொழி புழங்கும் தேசத்தில் தொடர்புக்கான ஆங்கிலத்தின் அடிப்படை மொழி அறிவு கூட இல்லாத ஒரு நபருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பதவி தூக்கிக் கொடுக்கப் படுகிறது என்றால் அதில் நியாயம் எப்படி இருக்க முடியும்?

சரி. வாதத்துக்காக ஒப்புக் கொள்கிறேன். இவருக்கு போதுமான நிர்வாக அறிவு இருக்கிறது. ஆங்கில மொழி அறிவு மட்டுமே குறைவு பதிலாக ஹிந்தி மொழி அறிவு இருக்கிறது. எனவே இவரைப் போன்றவர்களை உயர் பதவியில் அமர்த்துவது தவறில்லை என்ற சமாதானத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

அப்படியானால் இவரைப் போலவே போதுமான நிர்வாக அறிவும் ஆங்கில மொழி அறிவுக் குறைவும், அதற்குப் பதிலாக தமிழ் உட்பட தத்தம் தாய் மொழி அறிவு மட்டுமே கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இதர மாநிலத்து மாணவர்களை இந்த ஹிந்திக்காரனுக்கு நிகராக உயர்த்தி வைக்குமா அரசாங்கம்?

ஒரு போதும் அந்த வாய்ப்புக்கு வழியில்லை.

எப்படி?

சிவில் சர்வீஸஸ் தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஹிந்திக்காரர்களுக்கு மட்டும் அவர்கள் தாய்மொழியில் விளக்கம் எழுதப்பட்டிருக்கும். ஏனையோருக்கு இந்த சலுகை கிடையாது. ஒரு போட்டித்தேர்வில் மற்றவரை விட்டு விட்டு ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டும் பிட் அடிக்க அனுமதிப்பதற்குச் சமமான செய்கையாகும் இது.

இந்த நியாயமற்ற தன்மையை உணர்ந்து சிவில் சர்வீஸஸ் தேர்வினை நடத்தும் யுபிஎஸ்ஸி அமைப்பு, முதல் நிலைத்தேர்வினில் (CSAT- Civil Services Aptitude Test) ஹிந்தி மாணவர்களுக்கு குறைந்த பட்ச ஆங்கில அறிவை உறுதி படுத்தும் 8 கேள்விகளை இணைத்திருக்கிறது. இவைகள் காம்ப்ரிகன்சன் வகையிலானவை என்பதால் ஹிந்தி இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படும். ஹிந்திக்காரர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் சலுகையான இந்தியில் விளக்கம் கொடுக்கும் முறை இதில் நிறுத்தப்பட்டுள்ளது.

விடுவார்களா வடக்கத்தியர்?

இந்த உத்தரவினை எதிர்த்து தனக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வரும் நியாயமற்ற சலுகைகள் தொடர வேண்டும் எனக் கோரி வட இந்தியர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துகிறார்கள். அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

"ஆங்கிலம் தெரிந்த நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே எளிதில் வெற்றிபெறும் வண்ணம் தேர்வு முறை அமையக்கூடாது. இது கிராமப் புற எளிய மாணவர்களுக்கு எதிரானதாகும்" - என்ற இவர்களின் கவர்ச்சிகரமான பம்மாத்துக் கோரிக்கை இன்றைய வட இந்திய ஆட்சியாளர்களையும், மீடியாவையும்,பொதுமக்களையும் எளிதில் கவரக்கூடியதாகவும், அப்படியே சட்டமாகக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.

ஆனால் அடிப்படை நியாயமோ அடியோடு வேறு.

இவர்கள் கும்பல் கலாச்சாரத்தில் மூல்கி மெஜாரிட்டியான ஹிந்தி மாணவர்களுக்கு தனிச்சலுகை கொடுப்பது, ஹிந்தி தெரியாத ஏனைய கிராமப்புற மாணவர்களை அடியோடு நசுக்கும் காரியமாகும்.

ஹிந்தி தெரியாத கிராமத்து மக்கள் மட்டும் எளியவர்கள் இல்லாமல் எதிரிகளா? ஹிந்திக் காரர்களுக்கு தாய்மொழியில் விளக்கம் கொடுத்தால், தமிழ் உட்பட ஏனைய மொழியைத் தாய்மொழியாய் கொண்டவர்களுக்கும் அவரவர் மொழியில் விளக்கம் கொடுங்கள். போட்டி என்றால் சமதளப்போட்டி மட்டும் தானே நியாயமாய் இருக்க முடியும்? இதில் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது எப்படி சரியாக இருக்கும்?

ஒரு போட்டித்தேர்வில்- அதிலும் உலகிலேயே கடுமையான தேர்வுகளில் ஒன்று எனக் கருதப்படும் இந்திய சிவில் சர்விஸஸ் தேர்வில், தசம புள்ளிகள் கூட கட் ஆஃபாக நின்று ஆயிரக் கணக்கானோரின் தலை எழுத்தை மாற்றக் கூடிய கடும் போட்டித் தேர்வில், இந்தியாவின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகள் யாருக்கு என முடிவு செய்யும் தேர்வில், ஒரு சாரருக்கு அவருடைய தாய்மொழியில் விளக்கம் கொடுப்பதும் இன்னொரு சாரருக்கு அப்படி ஒரு வாய்ப்பு மறுக்கப்படுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான பிரிவு 14, "சமத்துவத்துக்கான உரிமைக"க்கு புறம்பானதும், அதனை மீறும் காரியமும் ஆகும்.

ஒரு தனி மனிதன் வேலை பெறுகிறானா இல்லையா என்பதோடு முடிந்து விடுகின்ற எளிய சங்கதி அல்ல இது. ஒரு கூட்டு தேசத்தின் நிர்வாகத்தில் ஒரு இனத்தின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகிறதா அல்லது மறுக்கப்படுகிறதா என்ற உரிமை தொடர்பான சங்கதி இது.

வல்லான் வகுப்பதே வாய்க்கால்கள் என்று எண்ணிக் கொண்டு தொடர்ந்து தமிழன் இளிச்சவாயன் களாகவே இருக்க வேண்டுமா என்பதை தமிழக அரசியல் தலைவர்களும், மீடியாவும், வழக்க றிஞர்களும், சமூக செயற்பாட்டாளரும், அதிகாரிகளும், பொதுமக்களும் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது.

( நண்பர்கள் இப்பதிவினைத் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து, இந்திய அதிகார அமைப்பில் கிராமத்துத் தமிழனுக்கு நேரும் புறக்கணிப்பினை கவனப்படுத்தி, சமூக நீதியை நிலை நாட்ட உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.)

- Ilangovan Balakrishnan.

<3
Posted: 29 Jul 2014 02:30 AM PDT


ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்...
Posted: 29 Jul 2014 02:10 AM PDT
ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார்..

ஒருவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான்.

அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார்.

பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள்.

அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.

இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர்.

இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.

காதல் அடையமுடியாத போது தெய்வீகமாகவும் , அடைத்தபின் சாதரணமாகவும் உணரப்படுகிறது .

;-)
"சாப்பிட்டேன்" என அம்மாவிடமும் "கவலைப்படவில்லை" என அப்பாவிடமும் "அடுத்த மா"தத்...
Posted: 29 Jul 2014 01:49 AM PDT
"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்

"கவலைப்படவில்லை" என அப்பாவிடமும்

"அடுத்த மா"தத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என அண்ணனிடமும்

"முதல் மாதச் சம்பளத்தில் உனக்கொரு மடிக்கணினி" என தங்கையிடமும் சொல்ல முடிந்தது..

"காலையிலிருந்து சாப்பிடல...
ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு"
என நண்பனிடம்
மட்டும் தான் கேட்க முடிந்தது.


"மனம் தொட்ட வரிகள்" - 2
:)
Posted: 29 Jul 2014 01:31 AM PDT
:)


இவர்கள் சொன்னவை

Relax Please: FB page daily Posts : 29/07/2014

0 comments:

Post a Comment