Monday, 28 July 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil : 28 July 2014

#திருக்குறள்
#பொருட்பால் - #குடியியல் - #பெருமை

மு.வ உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

#Translation:
All men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth.

#Explanation:
All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

#TRADUIT DU #TAMOUL
La naissance est commune à tous les homMes, la grandeur ne l'est pas, à cause de la diversité de la conduite de chacun.

- Puducherry * புதுச்சேரி * Pondichéry


Posted: 28 Jul 2014 06:45 PM PDT
உன் வீட்டு உணவின் மணம் பசியுடன் இருக்கும் அண்டை வீட்டார்களின் நாசியையும் தொடும் என்பதால் அவர்களுக்கும் ஒரு பங்கை அளித்துவிட்டே உணவருந்து.

~ நபிகள் நாயகம்.
Posted: 28 Jul 2014 09:19 AM PDT
ஒவ்வொரு சராசரி மனிதனும் தனக்கு குடும்பம் மற்றும் சமூகத்தில் அங்கீகாரம் வேண்டுமென எதிர்பார்ப்பான்.வீட்டில் தாய்,தந்தைக்கு மகனாக,உடன்பிறந்தோரிடம் சகோதரனாக,மனைவியிடம் கணவனாக,பெற்ற பிள்ளைகளிடம் தகப்பனாக அவனுக்கு அங்கீகாரமும் உரிமையும் கிடைக்கனும்.அது கிடைக்கனைன்னா அவனால அந்த குடும்பத்தில் வாழவே முடியாது.

அதேபோல இனம் மற்றும் மொழியால் ஒன்றுபட்ட மக்கள் பலதரப்பட்ட இன,மொழி மக்களோடு ஒரே தேசத்தில் ஒன்றுபட்டு வாழும்போது ஒவ்வொருவரும் தங்களுக்கான அதிகாரத்தையும் உரிமையும் எதிர்பார்ப்பாங்க.அந்த உரிமை எதுவுமே கிடைக்காதபோது தேசபக்தி என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வார்த்தைதான்.
உதாரணத்துக்கு தமிழ் நாட்டையும்,இந்தியாவையும் எடுத்துக்குவோம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில தனித்த சிறப்புகள் இருக்கும்.அப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட ஒரு மாநிலம்தான் தமிழ் நாடு.

7 கோடி மக்கள் தொகைக்கு மேல் கொண்ட தமிழ் நாட்டில் புவியியல் ரீதியாக பாய்ந்தோடிக்கொண்டிருந்த காவிரி,பாலாறு நதிகள் மற்ற மாநிலங்களால் தடுக்கப்பட்டாலும் அதை தட்டிக்கேட்க 'இந்திய ஒருமைப்பாடு' பற்றி ஒப்பாரி வைக்கும் கூட்டத்திற்கு வக்கில்லை.

தமிழக மீனவன் நடுக்கடலில் சிங்கள ராணுவத்தால் சுடப்பட்டு செத்துக்கொண்டே இருக்கிறான்.ஆனால் பாராளுமன்றத்தில் பாரதத்தை கட்டிக்காக்கும் அமைச்சர் ஒருத்தன் எழுந்து அப்படி நடப்பதே இல்லைன்னு பொய் சொல்லுவான்.

7 கோடி மக்களின் பிரதிநிதியான தமிழ்நாடு சட்டசபை 'இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு.அந்நாட்டுடன் இந்தியா எந்த உறவும் வைத்துக்கொள்ள கூடாது ' என தீர்மானத்தை இயற்றும்.ஆனால் இந்தியா இலங்கை எனக்கு நட்பு நாடுன்னு சொல்லும்.

ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படும் இந்த தேசத்தில் எந்தவொரு மொழியையும் திணிக்க கூடாது.ஆனால் இந்திக்கு குடை பிடித்து அதை மற்ற மாநிலங்கள்மேல் திணிப்பாங்க.செத்துப்போன சமஸ்கிரத மொழிக்கு சம்பந்தமே இல்லாத மாநிலங்களில் 'மொழி வாரம் ' கொண்டாடுவாங்க.

தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு 1.4 லட்சம் கோடி நிதியை நேரடி வரி வருவாயாகவும்,பெட்ரோல்,டீசல்,VAT,ஏற்றுமதி,இறக்குமதி,சுங்கம் மூலமாக ஏறக்குறைய ஒரு லட்சம் கோடியை மறைமுக வரி வருவாயாகவும் வசூலித்துக்கொண்டு ஏதோ ஆண்டுக்கு 35,000 கோடி பிச்சை போடும் இந்திய சர்க்கார்.

இந்தி பேசும் வடநாட்டானை ரயில்ல டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணிக்க வைக்க வக்கில்லாம டிக்கெட் வாங்கி பயணிக்கும் தென்மாநில மக்கள் தலையில் மிளகாய் அறைப்பானுக

குஜராத்தில் பூகம்பம் வந்தாலும்,ஒரிசாவில் வெள்ளம் வந்தாலும் தமிழன் இந்தியனா ஓடிப்போய் உதவுவான்.ஆனால் இங்கே சுனாமி வந்தாலும்,தானே புயல் வந்தாலும் அங்கிருந்து ஒருபய எட்டிப்பார்க்க மாட்டான்,உதவி செய்ய மாட்டான்.

இதெல்லாம் கொஞ்சம்தான் இன்னும் நிறைய துரோகங்களை பட்டியல் போட்டு பேசலாம்.

நான் மேலே சொல்லியிருக்கும் எந்த இடத்திலுமே தமிழனை இந்தியனா பார்க்கலை.பிறகு எப்படி தமிழர்களுக்கு இந்தியன் என்ற உணர்வு வரும்?

@நம்பிக்கை ராஜ்
Posted: 28 Jul 2014 09:16 AM PDT
மோடி பிரதமரானால் தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று சொன்னார்கள் ஆனால் தமிழக மீனவர்களின் படகுகளைகூட இலங்கையிடமிருந்து இவர்களால் விடுவித்து கொடுக்க முடியவில்லை - தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்

# இதுதான் கரடியே காறி துப்பும் மொமண்ட்!

@நம்பிக்கை ராஜ்
Posted: 28 Jul 2014 09:04 AM PDT

Timeline Photos
துமி / பொருள் : சிறிய மழைத்துளி (பெண் குழந்தைகளுக்கு)...
Posted: 28 Jul 2014 09:01 AM PDT

Timeline Photos
மெல்வீ / பொருள் : மெல் என்றால் மென்மை என்றுப் பொருள். வீ என்றால் மலர் என்றுப் பொருள். மெல் + வீ = மெல்வீ ; மென்மையான மலரைப் போன்றவள் (பெண் குழந்தைகளுக்கு)...
Posted: 28 Jul 2014 08:57 AM PDT
தமிழனின் பெருமை மீண்டும் மறைக்கப்படுகிறதா? - இராசேந்திர சோழனை இருட்டடிப்பு செய்த இந்திய கடற்படை !

கடல் கடந்தும் படைசெலுத்தி சோழப் பேரரசை அகன்ற சாம்ராஜ்யமாக்கியவன் ராசேந்திர சோழன். அவன் அரியணை ஏற்று ஆயிரம் ஆண்டுகள் நிறைவுக்கு வருவதையொட்டி கங்கை கொண்ட சோழபுரத்தில் விழா எடுத்துள்ளனர் ஊர் மக்கள்.

இந்த விழாவை இந்திய அரசே எடுத்துச் செய்திருக்க வேண்டும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், சோழ மன்னர்களுக்கு விழா எடுத்தால் அரியணையில் இருப்பவர்களுக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையின் தாக்கமோ என்னவோ அரசுகள் இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை கொண்டாடி ஆவணப்படுத்த தவறிவிட்டன.

கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் கோமகன், ஆறு மாதங்களாக இந்த விழாவை நடத்த சிரமப்பட்டிருக்கிறார். இந்த விழாவை அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு ஆம் என்றோ, முடியாது என்றோ தமிழக அரசு தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.

அதன் பிறகுதான் ஊர்மக்களே விழா எடுத்துள்ளனர். பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற பயமோ என்னவோ சோழ மண்டலத்து அமைச்சர்கள்கூட இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனாலும் விழாவை சிறப்பாகவே நடத்தி முடித்துள்ளனர் கங்கைகொண்ட சோழபுரத்து மக்கள்.

இந்த ஆண்டு முழுமைக்கும் திருவாரூர், உடையாளூர், ராசேந்திர சோழன் சமாதி அடைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ந்து ராசேந்திர சோழன் விழா கொண்டாடப்பட இருக்கிறது. ராசேந்திர சோழன் வரலாறு என்ற குறும்படமும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இனி, ஒவ்வொரு ஆண்டும் இதே தேதியில் ராசேந்திர சோழனுக்கு விழா எடுக்கப் போவதாகக் கூறும் கோமகன், ''அலைகடல் நடுவே படைக் கலன் செலுத்தி போர் புரிந்து மற்ற நாடுகளையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்தவன் ராசேந்திர சோழன். அவன் காலத்தில் திறமையான கடற்படை இருந்துள்ளது. இதை நினைவுகூரும் விதமாகத்தான் இந்திய கடற்படையில் ஒரு போர்க் கப்பலுக்கு 'ராஜேந்திரா' என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால், சிதிலமடைந்து புதுப்பிக்கப்பட்ட அந்தக் கப்பலுக்கு 'சாணக்கியா' என்று பெயரை மாற்றிவிட்டனர். தமிழனின் பெருமை மீண்டும் மறைக்கப்படுகிறது. அந்தக் கப்பலுக்கு மீண்டும் ராசேந்திரன் பெயரைச் சூட்ட வேண்டும். அதற்கான முயற்சியை அனைவரும் முன்னெடுக்க வேண்டும்" என்கிறார்.

தொல்லியல் ஆய்வாளரான குடவாயில் பாலசுப்பிரமணியன் 'தி இந்து'விடம் பேசுகையில், ''ராசேந்திரனுக்கு அரசு விழா எடுப்பது ஒரு அரசுக்கு இன்னொரு அரசு செய்யும் மரியாதை. எனவே, இந்த விழாவை மத்திய - மாநில அரசுகள் நடத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது வருத்தமளிக்கிறது. சோழனுக்கு விழா எடுத்தால் ஆள்பவர்களுக்கு சிக்கல் வரும் என்பதெல்லாம் மூடநம்பிக்கை. மூடநம்பிக்கையில் கவனம் செலுத்திக் கொண்டிருந் தால் எதுவுமே செய்ய முடியாது. இன்னும் காலம் கடந்து விடவில்லை. இந்த ஆண்டின் இறுதிக்குள் ராசேந்திர சோழனுக்கு அரசு விழா எடுக்க அவகாசம் இருக்கிறது'' என்று கூறினார்.

இதனிடையே, சமூக சேவகரும் கல்வி நிறுவன தலைவருமான மணிரத்தினம் என்பவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராசேந்திரசோழனுக்கு தனது சொந்தப் பணத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப் போவதாக 'தி இந்து'விடம் தெரிவித்தார்.

'மக்களுக்காக நான் செய்து கொடுத்திருக்கும் இந்தக் கொடைகளை எதிர்காலத்தில் யார் அழியா மல் போற்றிப் பாதுகாக்கிறார்களோ அவர்களின் திருப்பாதத்தை என் தலை மீது வைத்துப் போற்றுவேன்' இப்படி கல்வெட்டில் செதுக்கி வைத்துவிட்டுப் போயிருக் கிறான் ராசேந்திர சோழன். அந்தப் பேரரசனுக்கு விழா எடுக்க நம்மவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

பிற்காலச் சோழர்கள் 476 ஆண்டுகள் சோழ மண்டலத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். இதில் 273 ஆண்டுகள் சோழப் பேரரசின் தலைநகராக கங்கை கொண்ட சோழபுரம்தான் இருந்திருக்கிறது. தனது புதல்வர் ராசேந்திர சோழனிடம் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த ஆண்டு 1012. ஆனால், அதன் பிறகும் இரண்டு ஆண்டுகள் இருவரும் இணைந்தே ஆட்சி செய்துள்ளனர்.

முறைப்படி 1014-ல்தான் ராசேந்திர சோழன் அரியணை ஏற்றார். அதன்படி பார்த்தால் இந்த ஆண்டு ராசேந்திர சோழன் அரியணை ஏற்று ஆயிரமாவது ஆண்டு தொடங்குகிறது. ராசேந்திர சோழன் ஆடி திருவாதிரையில் பிறந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனது பிறந்த நாளில் அவர் அரியணையை ஏற்றிருக்க வேண்டும் என்பதை ஒரு கருதுகோளாக கொண்டு ஆடி திருவாதிரை அன்று இந்த விழாவை நடத்தியுள்ளனர்.

கங்கைகொண்ட சோழபுரத் தில் 1982-ல் ராசேந்திரன் பெருவிழா நடத்த எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். விழா ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்திருந்த நிலையில் கடும் புயல் அடித்து அத்தனையையும் கலைத்துவிட்டது. இதனால் அந்த விழா நடக்காமலேயே போய்விட்டது. அரசுத் தரப்பில் விழா எடுக்கத் தயங்குவதற்கு இதுவும் ஒரு சென்டிமென்ட் காரணமாக சொல்லப்படுகிறது.

நன்றி - தமிழ் இந்து

Posted: 28 Jul 2014 08:17 AM PDT
ஆட்சியாளனை பிடித்திருந்தால் ஆயிரம் வருடம் கழித்தும் கொண்டாட மக்கள் கூட்டம் நிறையும்!.

Posted: 28 Jul 2014 05:00 AM PDT

ilovemynative: Facebook page wall posts in Tamil : 28 July 2014

0 comments:

Post a Comment