Monday, 28 July 2014

FB Posts by Araathu அராத்து : 28 July 2014

FB Posts by Araathu அராத்து

    பெண்கள் தோள் சாயத்தான் விரும்புகிறார்கள்.ஆண்கள்தான் மடியில் மல்லாந்துக்கணும்னு ஆசைப்படறாங்க :-)
    Posted: 28 Jul 2014 12:30 AM PDT
    பெண்கள் தோள் சாயத்தான் விரும்புகிறார்கள்.ஆண்கள்தான் மடியில் மல்லாந்துக்கணும்னு ஆசைப்படறாங்க :-)

    போட்டோ ஷாப்லாம் வர்ரதுக்கு முன்னாடியே கருப்பா இருக்கரவங்க கருப்பு வெள்ளை போட்டோ எடுத்து, கருப்பை மட்டும் வெள்ளையாக்கிடுவாங்க.
    Posted: 28 Jul 2014 12:15 AM PDT
    போட்டோ ஷாப்லாம் வர்ரதுக்கு முன்னாடியே கருப்பா இருக்கரவங்க கருப்பு வெள்ளை போட்டோ எடுத்து, கருப்பை மட்டும் வெள்ளையாக்கிடுவாங்க.
    என் ஆர் ஐ களின் இளகிய மனமும் , பிரபல பதிவர்களின் ஆட்டையைப் போடுதலும். ஒரு சில என் ஆர் ஐக்கள் சொல்லிய போது இந்த விஷயத்தை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து பலரும் சொல்லச்சொல்ல இதைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. சாரு பணம் கேட்கிறார் என்ற புலம்பல் நேற்று இணையத்தில் பிறந்த குழந்தைக்கு கூட தெரியும்.இதை வைத்து பலரும் அவரை கிண்டல் செய்தும் திட்டியும் வருகின்றனர்.அப்படி திட்டுபவர்களில் பலர் என் ஆர் ஐ களிடம் இருந்து குறைந்த பட்சம் 10 ஆயிரம் முதல் அதிக பட்சம் நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நிதி பெற்றிருக்கின்றனர் என்பதே உண்மை. சாரு வெளிப்படையாக இன்ன தேவைக்கு இவ்வளவு பணம் வேண்டும் என பகிரங்கமாக கேட்டு வாங்குகிறார். ரெமி மார்டின் குடிக்கிறேன், 2000 ரூவா ஜட்டி போடுகிறேன் என வெளிப்படையாக எழுதுகிறார். அதையும் தாண்டி பிடித்தவர்கள் மட்டும் அவருக்கு தெரிந்தே, எப்போதாவது பணம் கொடுக்கிறார்கள். பணம் கொடுத்த சில என் ஆர் ஐ நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் , தாங்களாகவே விரும்பி கொடுத்ததாகத்தான் சொன்னார்கள். என்ன விஷயம் என்றால் , பிளாகிலும் , ட்விட்டரிலும் , ஃபேஸ்புக்கிலும் இயங்கும் பிரபல பதிவர்கள் நேரிடையாக , வெளிப்படையாக , பலருக்கும் தெரியும் படி பணம் கேட்க மாட்டார்கள். ஜாடை மாடையாக கேட்பதற்கு பல வழிகள் உள்ளனவாம். உதாரணங்கள் :- புள்ளைய ஸ்கூல்ல சேக்கணும் , ஃபீஸ் ஜாஸ்தி கேக்கறாங்க , என்னா பண்றதுன்னு புரியலைன்னு ஒரு போஸ்ட் போட்டா........ ச்சே ....நம்ம ஃஃஃஃஃஃ க்கு புள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியலையான்னு அரை போதையில இருக்கும் என் ஆர் ஐக்கள் மனம் இளகி அடுத்த செகண்ட் ஆன்லைன்ல பணத்தை அனுப்பிடுவாங்களாம்.எத்தனை பேர் அனுப்புவங்கன்னு யாருக்கும் தெரியாது. எவ்ளோ பணம் போச்சின்னு யாருக்கும் தெரியாது என்பதுதான் இதில் உள்ள டெக்னிக். * குடும்பத்துல யாருக்காவது ஆபரேஷன் * வேலையை விட்டுட்டேன் , சொந்த தொழில் செய்யப்போறேன். *கடன் பிரச்சனையில மாட்டிட்டு இருக்கேன். * கிரடிட் கார்டு காரன் கழுத்தை நெருக்குறான் *அம்மா / அப்பா செத்துட்டாங்க - என்ன பண்றதுன்னே தெரியலை.கைல காசில்லை, நண்பர்கள்தான் எல்லாத்தையும் பாத்துக்கறாங்க. * கட்ன வீடு பாதியிலயே நிக்கிது *பதிப்பகம் தொடங்கப் போறேன் * சமூக சேவை செய்யப்போறேன் இதைப்போல தலைப்பில் அசத்தலாக செண்டிமெண்ட் பிழிந்து எழுதினால் எழுத்திற்கும் ஃபீலிங்குக்கும் ஏற்ப தொகை அக்கவுண்டில் செட்டில் ஆகுமாம். என் ஆர் ஐக்கள் சிலர் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள். அவர்கள் உனர்ச்சிக்கொந்தளிப்பான மனநிலையில் இருப்பார்கள். சுலபமாக அந்த உனர்ச்சிக்கொந்தளிப்பை உபயோகித்துக்கொள்ளலாம். குடும்பத்தோடு வெளிநாடுகளில் இருந்தாலும் , இந்த பதிவர்களின் இடுகைகளின் மூலம் சொந்த நாட்டின் தொடர்பில் இருப்பது போல ஒரு ஃபீலிங்க் வருவதால் , பதிவர்களின் மீது ஒரு செண்டிமெண்ட் அட்டாச்மெண்ட். ரஜினி கமல் திரிஷா கூடல்லாம் பேச முடியுமா ? அதற்கு பதில் இந்த பதிவர்கள் உடன் சாட் செய்ய முடியும் , பேச முடியும். இதெல்லாம் கலந்து கட்டி கடைசியில் பதிவர்கள் அக்கவுண்டில் பணமாக சென்று சேர்கிறது. மேற்கூரிய கேட்டகிரியில் போஸ்ட் போட்டு பணம் பார்ப்பதைத்தாண்டி , பல மடங்கு பணம் கொட்ட வேண்டுமென்றால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது புரட்சி :-) புரட்சிப்பாதையை தேர்ந்தெடுத்து , யாரையாவது எதிர்த்து இணையமாடிக்கொண்டு இருந்தால் பணம் பல நாடுகளில் இருந்தும் கொட்டுமாம். அப்படி ஏதேனும் காமடி புரட்சி செய்து , உங்களுக்கு எதிராக கம்ப்ளெயிண்டு கொடுத்தால் இன்னும் எகிறும். அரெஸ்ட் ஆயிட்டீங்கன்னா செம ஜாலியாம் ,பிச்சிக்குமாம். ஒரு என் ஆர் ஐ சொன்னதுதான் நிதர்சனம். என் அப்பா உடம்பு முடியாம படுத்திருப்பரு.அதை கண்டுக்க மாட்டோம். அராத்து அப்பா ஹாஸ்பிடல்ல அட்மிட்டுன்னு போஸ்ட் பாத்தா உடனே அக்கவுண்ட் நம்பர் வாங்கி பணத்தை போட்டுடுவோம்னு சொன்னாரு. உதவி செய்ய வேண்டியதுதான். அதில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.முதலில் பணம் வேண்டுபவர் நேரிடையாக எனக்கு இவ்வளவு பணம் இன்ன தேவைக்காக வேண்டும் என பகிரங்கமாக கேட்க வேண்டும். அந்த தொகை கிடைத்தவுடன் , தேவையான தொகை கிடைத்து விட்டது.இனி பணம் அனுப்ப வேண்டாம் என தெரிவிக்க வேண்டும். வந்த வரைக்கும் லாபம் என மர்மமாக எல்லாரிடமும் இருந்து வர வர சுருட்டிக்கொண்டு இருப்பது அயோக்கியத்தனம். என் ஆர் ஐ க்களும் பாத்திரம் அறிந்து பிச்சையிடுங்கள். உணச்சி வசப்பட்ட நிலையிலோ , போதையிலோ பணத்தை மாற்றாதீர்கள். தகுதியான நபருக்கு , வெளிப்படைத்தன்மை உள்ளவர்களுக்கு உதவுங்கள். இதைவிடக் கொடுமை , இந்த பதிவுகளைப் பார்த்து சில வெளி நாட்டுப் பெண்கள் இந்த பதிவர்களை திருமணம் வரை செய்ய முடிவெடுத்து , வெளி நாட்டில் இருந்து கிளம்பி இங்கே வர ரெடியாக இருப்பதுதான். அந்த விஷயத்தில் பதிவர்கள் இன்னும் அப்பா அம்மா பார்த்து வைக்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்ளும் பாரம்பரிய பழக்கத்தில் இருப்பதால் என் ஆர் ஐ பெண்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் , சில பல பண பரிமாற்றங்களோடு !
    Posted: 27 Jul 2014 09:59 PM PDT

    0 comments:

    Post a Comment